மகாவிஷ்ணுவிற்கு பாம்பு, படுக்கையாகும். அவர் உட்கார்ந்தால், அந்த பாம்பு சிம்மாசனமாகிவிடும். நடந்தால் குடைபிடிக்கும்.
ஒருநாள் விஷ்ணு, ஆதிசேஷன்மீது சயனித்துக் கொண்டிருக்கும்போது, அவர் மனதளவில் நடராஜரின் தாண்டவ தரிசனத்தை பார்த்தத்தில் மிக பூரிப்பு ஏற்பட்டது. அதனால் அதிக கனம் உண்டானது.
அந்த கனத்தை ஆதிசேஷனால் தாங்க முடியவில்லை.
அவர் விஷ்ணுவிடம், "என்ன இப்படி ஒரே கனமாகிவிட்டீர்களே. என்னால் தாங்க முடியவில்லை'' என்றார்.
விஷ்ணு, என் இருதயத்தில், சிவன் நர்த்தனம் பண்ணினார். அதுதான் பாரத்திற்கு காரணம் என்றார்.
ஆதிசேஷன் அவதாரம்
அத்ரிமகரிஷியின் மனைவி கோணிகா என்ற தபஸ்வினி இருந்தார். அகஷ்யப முனிவர் மற்றும் கத்ருவின் கதை: பிரம்மதேவரின் மகனான கஷ்யப முனிவருக்கு கத்ரு மற்றும் வினதை என இரண்டு மனைவிகள் இருந்தனர். கத்ரு நாகர்கüன் தாயாகவும், வினதை கருடன் மற்றும் சூரியன் (அருணன்) போன்றோரின் தாயாகவும் கருதப்படுகிறாள். ஒரு முறை கத்ரு தன் தாய் சொல்லைக் கேட்காததால், தன் பிள்ளைகளான நாகர்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தில் (பாம்புகளை அழிக்கும் யாகம்) விழுந்து இறக்கும்படி சாபமிட்டாள்.
இந்த யாகத்தில் பல நாகங்கள் அக்கினியில் விழுந்து இறந்தன. அப்போது அஸ்திக முனிவர் (ஜரத்காரு முனிவருக்கும், நாகராஜன் வாசுகியின் சகோதரி மானஸாவிற்கும் பிறந்தவர்) வந்து, மன்னன் ஜனமேஜயனின் யாகத்தை நிறுத்தி, நாகர்களுக்கு சாப நிவர்த்தி அüத்தார். நாகர்களுக்கு சாப விமோசனம் கிடைத்த இந்த நாள் நாக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.
ஜூலை 28 நாகசதுர்த்தியன்று நாகப்புற்றுக்கு பால் வார்ப்பதும் மஞ்சள், குங்குமம் இடுவதும் நன்று. உங்கள் ஊரில் பதஞ்ஜ- முனிவரின் சந்நிதி இருந்தால், அவரை வணங்குங்கள். அந்த ஆதிசேஷனை வணங்குவதற்கு ஈடாகும்.
தோல்வியாதி உள்ளவர்கள், அடிக்கடி பாம்பு கனவு வருகிறவர்கள் நாக சதுர்த்தியன்று, அரச மரத்தடி நாகங்களை வணங்குங்கள்.
-ஆர். மகா