ஜோதிடம் 

அனுபவத்தால் மட்டுமே 
பலன்களைச் சொல்லமுடியும்..
வர்ன்ற்ன்க்ஷங்லில் நாலு வீடியோ பார்த்துவிட்டு 
அவ்வளவு எளிதாக 
பலன்களைச் சொல்லிவிட முடியாது..

இன்று பலன்கள் கேட்பவர்களைவிட 
ஜோதிடத்தை கற்றுக்கொள்ளவே
வீடியோக்களை அதிகம் பார்க்கிறார்கள்...

Advertisment

ஜோதிடத்தை 
எளிதாக கற்றுத் தருகிறேன்
வாருங்கள்...
தற்சமயம் நடக்கும்
குறுகிய காலப் பலன்களுக்கு 
கோட்சாரத்தை பார்க்கவேண்டும்..

நன்றாக இருக்கின்ற மனநிலை 
திடீரென்று குழப்பத்திற்கு ஆளாகிறது என்றால்
மூன்று நாட்கள் சந்திராஷ்டமாக இருக்கும்..
சில மாதங்களாக 
சரியில்லாமல் இருந்தால்
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய
மாதக் கோள்களால் 
பாதிப்புகள் ஏற்படும்..
தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படுகிறது என்றால்
வருட கிரகங்களான
குரு, ராகு, கேது பெயர்ச்சியையும்..
முக்கிய முடிவுகளை எடுக்க
இரண்டரை ஆண்டு பெயர்ச்சியாகும் 
சனியின் கோட்சார பலன்களை பார்க்கவேண்டும்..
சில வருடங்களாக 
தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டுக் 
கொண்டே இருக்கிறதென்றால் 
சுய ஜாதகத்தில் இருக்கும் 
தசாபுக்தி பலன்களை பார்க்கவேண்டும்...

ஏழரைச்சனியின் பாதிப்புகள் தவிர 
கோட்சாரத்தில் கெடு பலன்கள்
கொஞ்ச காலமே..
ஆனால் தசை சரியில்லாமல் இருந்தால் 
தொடர் துன்பங்கள், 
வறுமை, அவமானம்
இழிவான வாழ்க்கையைத்தான் தரும்..
ஆறு, எட்டு, பன்னிரண்டு அதிபதிகள் 
தசை தொடர்ந்து நடந்தாலும்,
பாதகாதிபதி, மாரகாதிபதி 
தசை நடந்தாலும்,
பாவ கிரகங்களால் 
பாதிக்கப்பட்டு தசை நடந்தாலும்
சொல்லமுடியாத கஷ்டங்களையே தருவார்...
எனக்கு மட்டும் 
ஏன் என்ற கேள்விக்கு 
கர்மா என்கிற பதிலைத் தவிர 
வேறு இல்லை மகனே...

Advertisment

பிறர்போல் வாழ நினைத்தால் 
உன் வாழ்க்கையை உன்னால் வாழமுடியாது..
கொடுக்கப்பட்டதை.. 
நடப்பதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால்தான் 
உன்னால் வாழவே முடியும்... 

தற்சமயம்
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு 
ஜென்மச்சனி..
கூடுதலாக தசாபுக்தி சரியில்லை என்றால்
கெடுபலன்கள் ஏராளம்..
குழந்தையாய் இருந்தால்
உடல்நிலை நன்றாக இருந்தால் 
கல்வி பாதிக்கப்படும்..
கல்வி நன்றாக இருந்தால் 
உடல்நிலை பாதிக்கப்படும்..
இரண்டும் நன்றாக இருந்தால் 
தாய்- தந்தையருக்கு பாதிப்பு ஏற்படும்..

பிரிவு, பிரச்சினை, கண்டம்..
பொருளாதார பாதிப்பு உண்டு..
இளமையில் காதல், 
தொழிலில் தோல்வி
திருமணம் தாமதம், வறுமை,
விவாகரத்து மறுமணம்..
ஏமாற்றம், நோய், எதிரி, 
கடனால் அவதி..
முதுமையில் நோயால் பாதிப்பு
தற்கொலை எண்ணம் 
தானாய் வரும்..
அனாதைபோல் 
தனித்து வாழ்தல்..
அவமான வாழ்க்கை 
அத்தனையும் தரும்..
மொத்த பலனும் இப்போதைக்கு இவ்வளவுதான்..

ஜாதக பலனை சொல்ல
பக்குவமான ஜோதிடர் வேண்டும்..
கெடுபலன்களால் பாதிக்கப்பட்ட 
ஜோதிடனால்தான் 
உண்மையான பலனை சொல்லமுடியும்...

அடுத்தவன் சாவு சந்தோஷமாகவே இருக்கும்..
தனக்கு வரும்போதே உலகம் இருண்டு போகும்..
ஏன்டா படைச்சன்னு கடவுளை திட்டும் காலம் 
எல்லோர் வாழ்விலும் உண்டு..
விதியும் மதியும் வேறென்றால் யார் நம்புவது?!..
எதிர்ப்புகளை போராடி வென்று வாழ்வதுதான்
வாழ்க்கையின் நியதி..
தொடர்ந்து போராடியதால்தான்
குரங்கில் இருந்து மனிதனாய் மாறி இருக்கிறான்..
அடுத்தவர் வாழ்க்கை நமக்கு எளிதாகத் தெரியும்
அவரவர் வாழ்க்கையை வாழும்போதுதான்
வலி தெரியும்.. வழிபிறக்கும்..

ஏதாவது ஒரு நிலையில்
நிலையாக இருக்கவேண்டும்..
கடவுள் உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் 
இல்லை என்பதில் 
உறுதியாக இருக்கவேண்டும்..

ஆற்றில் ஒருகால் 
சேற்றில் ஒருகால்
ஒருபோதும் வெற்றி தராது..
கூழுக்கும் ஆசை 
மீசைக்கும் ஆசை..
இரட்டை மனம்கொண்டு 
எதில் ஈடுபட்டாலும்
திருப்திகரமான வெற்றி 
என்றும் கிடைக்காது
முன்னோர்கள் சொல்லி வைத்ததுதான்
விதிப்படி நடக்குமென்று வாழ்பவனும் இறக்கிறான்..
விதியை வெல்ல 
நினைப்பவனும் இறக்கிறான்..
இறப்பு ஒன்றே நிச்சயமடா..
இறுதிவரை லட்சியத்துடன் வாழ்பவனே
இறந்தும் வாழ்கிறான்..
இறவா புகழோடு இறை 
ஆகிறான்...
ஒன்றுமில்லை என்பதுதான் வாழ்க்கை
ஒன்றுமே இல்லை என்பதுதான் ஆன்மிகம்...


செல்: 96003 53748