நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மேஷ ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம், உங்களில் அனேகம் பேருக்கு திருமணம் நடக்கும். அது அனேகமாக விருப்பத் திருமணமாக இருக்கும். அந்த திருமணம் சற்று தடை, சண்டை, சச்சரவிற்கு பிறகு நடக்கும். பங்குவர்த்தகம் பணம் தரும். கலைஞர்கள் நல்வாய்ப்புகள் பெறுவர். அரசு வேலை சற்று செலவுகளுக்கு பிறகு கிடைக்கும். அரசுவகை கடன் கிடைக்கும். வீடு மாறுதல் உண்டு. ஒரு வீட்டை விற்று, வேறு வீடு வாங்குவீர்கள். இந்த மாதம், வீடு, வாகனவகையில் சுப முதலீடு உண்டு. அரசியல்வாதிகள், பிறமொழி, பிற இனத்தவர்மூலம், வெற்றிக்கு பாதை போட ஆரம்பித்துவிடுவர். சிலர் தங்கள் தொழிலை, பிறந்த இடத்தில் பெற்றோர் சார்ந்து செழிக்கச் செய்வர். உங்களில் சிலருக்கு சிறு விபத்து ஏற்பட இருந்து, பின் கடவுள் அருளாள் சரியாகும். சிராய்ப்போடு தவிர்க்கப்படும். கலை ஆர்வமுள்ளவர்கள், டி.வி., சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களுடன் தொடர்புகொள்வீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும், செம்பருத்தி மலர் கொண்டு துர்க்கையை வணங்கவும்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள். உங்களில் நிறைய ஜாதகர்கள் அரசுப்பணி, கிடைத்தும் சேர தாமதமானவர்கள். இந்த மாதம் அரசுப் பணியில் சேர்ந்துவிடலாம். மற்றும் வேறு சிலர், சில அரசியல்வாதிகளின் சிபாரிசினால் அரசு வேலை கிடைக்கப் பெறுவீர்கள். சில, பல சினிமா, டி.வி கலைஞர்கள் அரசு சார்ந்து செயல்படுவர். வீடு கட்ட, வாகனம் வாங்க, கடன் தவணை முறையைக் கடைபிடிப்பீர்கள். சில அரசியல்வாதிகள் தொண்டர்கள்மூலம் நன்மையும், இம்சையும் பெறுவர். உங்களின் பதவி உயர்வு, இடமாற்றம் தரும். திருமணம் முடிந்து வெளியூர், வெளிமாநிலம் செல்வீர்கள். சிலர் அடிவயிறு வலிப்பதாக சங்கடப்படுவீர்கள். இதற்கு உங்கள் உணவுமுறை காரணமாகும். தம்பதிகளுக்குள் அன்பும், அடியும் மாறி, மாறி வரும். உங்கள் மாமனார்- மாமியார்மூலம் நல்ல வரவும், கெட்ட பெயரும் சேர்ந்து ஒருங்கே கிடைக்கும். காதலில் சண்டை வரும். வாரிசுடன் மனபேதம் உண்டு. கட்டடம் சார்ந்த பங்குகள் பணம் தரும்.
பரிகாரம்: சிவனை வெள்ளை மலர்கொண்டு வழிபடுங்கள்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியை கொண்டவர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், மிகுதியான பணப்புழக்கம் பெறுவர். சிலர் வேறு பகுதியில் புதுக்கடை திறப்பார்கள். தொழில் விரிவாக்கம் கண்டிப்பாக சுபமாக உண்டு. இப்போது நடக்கும் திருமணம் தொழில் சார்ந்து நடக்கும். வணிகத்தில், பணியாளர் அல்லது அரசு சார்ந்த சிறு பிரச்சினை ஏற்பட்டு பின் சரியாகும். வீடு கட்டுமான செலவு ஏற்படும். சிலர் பழைய வீட்டை இடித்துவிட்டு, புதுவீடு கட்டுவர். இதற்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சிலர் சீருடை வேலை கிடைக்கப்பெறுவர். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தமான அதிர்ஷ்டம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிகமாக ஓடியாடி சேவை செய்ய வேண்டியதிருக்கும். இந்த சேவை இவர்களுக்கு பண செழிப்பும், யோகத்தையும் கொண்டுவந்து சேர்க்கும். கலைஞர்கள் டி.வி. நடிகர்கள், வீடு சம்பந்த முதலீடு அல்லது வெளியூர், வெளிநாடு பயணம் செய்வர்.
பரிகாரம்: திருப்பதி பெருமாள் அல்லது அருகிலுள்ள பெருமாளை வணங்கவும். துளசி மாலை கொண்டு சேவிக்கவும்.
ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கடக ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம் உங்களில் அனேக பேருக்கு, வேலை விஷயமாக ஒரு அதிர்ஷ்டமான நல்ல செய்தி கிடைக்கும். அது உள்நாடு, வெளிநாடு சார்ந்ததாகவும் இருக்கும். சிலரின் வழக்குகளில் நல்ல சுபமான தீர்ப்புகள் கிடைக்கும். வீடு மாற்றம் உண்டு. அரசு வகையில் வரவேண்டிய பணம், சற்று தடைக்குப்பிறகு கிடைக்கும். இரு சக்கர வாகனம் வாங்குவீர்கள். உங்கள் மூத்த சகோதரி இடம் மாறுவார். சினிமா கலைஞர்கள் நிறைய வேலை கிடைக்கப் பெறுவர
நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மேஷ ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம், உங்களில் அனேகம் பேருக்கு திருமணம் நடக்கும். அது அனேகமாக விருப்பத் திருமணமாக இருக்கும். அந்த திருமணம் சற்று தடை, சண்டை, சச்சரவிற்கு பிறகு நடக்கும். பங்குவர்த்தகம் பணம் தரும். கலைஞர்கள் நல்வாய்ப்புகள் பெறுவர். அரசு வேலை சற்று செலவுகளுக்கு பிறகு கிடைக்கும். அரசுவகை கடன் கிடைக்கும். வீடு மாறுதல் உண்டு. ஒரு வீட்டை விற்று, வேறு வீடு வாங்குவீர்கள். இந்த மாதம், வீடு, வாகனவகையில் சுப முதலீடு உண்டு. அரசியல்வாதிகள், பிறமொழி, பிற இனத்தவர்மூலம், வெற்றிக்கு பாதை போட ஆரம்பித்துவிடுவர். சிலர் தங்கள் தொழிலை, பிறந்த இடத்தில் பெற்றோர் சார்ந்து செழிக்கச் செய்வர். உங்களில் சிலருக்கு சிறு விபத்து ஏற்பட இருந்து, பின் கடவுள் அருளாள் சரியாகும். சிராய்ப்போடு தவிர்க்கப்படும். கலை ஆர்வமுள்ளவர்கள், டி.வி., சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களுடன் தொடர்புகொள்வீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும், செம்பருத்தி மலர் கொண்டு துர்க்கையை வணங்கவும்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள். உங்களில் நிறைய ஜாதகர்கள் அரசுப்பணி, கிடைத்தும் சேர தாமதமானவர்கள். இந்த மாதம் அரசுப் பணியில் சேர்ந்துவிடலாம். மற்றும் வேறு சிலர், சில அரசியல்வாதிகளின் சிபாரிசினால் அரசு வேலை கிடைக்கப் பெறுவீர்கள். சில, பல சினிமா, டி.வி கலைஞர்கள் அரசு சார்ந்து செயல்படுவர். வீடு கட்ட, வாகனம் வாங்க, கடன் தவணை முறையைக் கடைபிடிப்பீர்கள். சில அரசியல்வாதிகள் தொண்டர்கள்மூலம் நன்மையும், இம்சையும் பெறுவர். உங்களின் பதவி உயர்வு, இடமாற்றம் தரும். திருமணம் முடிந்து வெளியூர், வெளிமாநிலம் செல்வீர்கள். சிலர் அடிவயிறு வலிப்பதாக சங்கடப்படுவீர்கள். இதற்கு உங்கள் உணவுமுறை காரணமாகும். தம்பதிகளுக்குள் அன்பும், அடியும் மாறி, மாறி வரும். உங்கள் மாமனார்- மாமியார்மூலம் நல்ல வரவும், கெட்ட பெயரும் சேர்ந்து ஒருங்கே கிடைக்கும். காதலில் சண்டை வரும். வாரிசுடன் மனபேதம் உண்டு. கட்டடம் சார்ந்த பங்குகள் பணம் தரும்.
பரிகாரம்: சிவனை வெள்ளை மலர்கொண்டு வழிபடுங்கள்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியை கொண்டவர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், மிகுதியான பணப்புழக்கம் பெறுவர். சிலர் வேறு பகுதியில் புதுக்கடை திறப்பார்கள். தொழில் விரிவாக்கம் கண்டிப்பாக சுபமாக உண்டு. இப்போது நடக்கும் திருமணம் தொழில் சார்ந்து நடக்கும். வணிகத்தில், பணியாளர் அல்லது அரசு சார்ந்த சிறு பிரச்சினை ஏற்பட்டு பின் சரியாகும். வீடு கட்டுமான செலவு ஏற்படும். சிலர் பழைய வீட்டை இடித்துவிட்டு, புதுவீடு கட்டுவர். இதற்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சிலர் சீருடை வேலை கிடைக்கப்பெறுவர். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தமான அதிர்ஷ்டம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிகமாக ஓடியாடி சேவை செய்ய வேண்டியதிருக்கும். இந்த சேவை இவர்களுக்கு பண செழிப்பும், யோகத்தையும் கொண்டுவந்து சேர்க்கும். கலைஞர்கள் டி.வி. நடிகர்கள், வீடு சம்பந்த முதலீடு அல்லது வெளியூர், வெளிநாடு பயணம் செய்வர்.
பரிகாரம்: திருப்பதி பெருமாள் அல்லது அருகிலுள்ள பெருமாளை வணங்கவும். துளசி மாலை கொண்டு சேவிக்கவும்.
ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கடக ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம் உங்களில் அனேக பேருக்கு, வேலை விஷயமாக ஒரு அதிர்ஷ்டமான நல்ல செய்தி கிடைக்கும். அது உள்நாடு, வெளிநாடு சார்ந்ததாகவும் இருக்கும். சிலரின் வழக்குகளில் நல்ல சுபமான தீர்ப்புகள் கிடைக்கும். வீடு மாற்றம் உண்டு. அரசு வகையில் வரவேண்டிய பணம், சற்று தடைக்குப்பிறகு கிடைக்கும். இரு சக்கர வாகனம் வாங்குவீர்கள். உங்கள் மூத்த சகோதரி இடம் மாறுவார். சினிமா கலைஞர்கள் நிறைய வேலை கிடைக்கப் பெறுவர். பங்கு வர்த்தகம் பணவரவு தரும். உங்கள் வாரிசுகள் குணம் மாறி கோபமும் குணமுமாக அலைவர். சில தொழில்களை, பூர்வீக விஷயங்களோடு சம்பந்தப்படுத்துவீர்கள். சிலருக்கு மிக நல்ல முதலாளி, ஹெச் ஆர். ஓ கிடைப்பார். தம்பதிகள் சண்டை வந்தாலும் உடனே சமாதானமாகிவிடுவர். பெண் அரசியல்வாதிகள், அரசு சார்ந்து, தங்கள் தொண்டர்களின் விருப்பபடி, ஒரு பதவி பெறுவர். உங்கள் காதல் விஷயத்தில் அன்பும் அடியும் சகஜம்.
பரிகாரம்: உங்கள் இஷ்ட அம்பாளை வெள்ளை மலர்கொண்டு வணங்கவும்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் சிம்ம ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம் சில கைபேசி செய்திகள், கொஞ்சம் குழப்பம் தரும். பின் சீர்செய்து கொள்வீர்கள். பணவரவு நல்ல செழிப்பாக அமையும். பணவரவு சம்பந்த தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களில் பலர், கைபேசியில் பேசியே, தகவல் வெளியிட்டு, நல்ல பணம் சம்பாதித்து விடுவீர்கள். உங்கள் இளைய சகோதரி தொழில் பயிற்சி பெறுவார். உங்கள் பெற்றோர்மூலம் நன்மையும், சிறு வருத்தமும் கிடைக்கும். பூர்வீக நிலம் விற்று, எதிர்பாராத நன்மை கிடைக்கும். தனியார் துறை, வேலை வேறு ஊரில் கிடைக்கும். பங்கு வர்த்தகம் இன்ப அதிர்ச்சி தரும். சினிமா கலைஞர்கள் புகழ், பட்டம், பதவி பெறுவர். சொந்தத் தொழில்புரிபவர்கள் நல்ல பெண் பணியாளர்கள் கிடைக்கப் பெறுவர். தொழில் சார்ந்த அரசு வரிகட்ட வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள், தகவல்களின் சாதுர்யமான பேச்சால், புகழ், பதவி பெறுவர். உங்களின் சிலரின் வாரிசுகள் வெளிநாட்டு பயணம் செல்வர். நீங்கள் அல்லது உங்கள் மாமனார், மாமியார் வீடு மாற்றுவீர்கள்.
பரிகாரம்: சிவனை நெய் விளக்கேற்றி வணங்கவும்.
ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கன்னி ராசியை சேர்ந்தவர்கள். உங்களில் திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் இந்த மாதம் கல்யாண வைபோகமே எனக் கொண்டாடுவீர்கள். இன்னும் சிலர், வீடு வாங்கும் எண்ணம் பலிக்கக் காண்பீர்கள். சிலரின் மறுமணம் கைகூடும். சிலர் வேலையில் பதவி உயர்வு அடைவீர்கள். சிலர், தங்களின் பழைய வேலைக்கு திரும்புவீர்கள். சேவை சார்ந்த பங்குகள் வெகு லாபம் கைகளில் கொட்டும். உங்களில் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள், அவை சார்ந்த மனிதர்களை சந்திப்பீர்கள். ஏற்கெனவே அரசியலில் இருப்பவர்கள் உங்கள் பிறந்த ஊரில் நிறைய மனிதர்களுடன் தொடர்புகொள்வீர்கள். இதன்மூலம் அரசியலில் புதிய உயர்வை பெறுவீர்கள். உங்கள் பணியாளர் அல்லது கைபேசி மூலம் தொல்லை வரும். உங்களில் சிலர், பெற்றோரின் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவீர்கள். சிலர் வங்கிப் பணி, ஆசிரியப்பணி அதுவும் அரசு ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்புண்டு. அரசு அதிகாரிகள் இடமாறுதல் பெறுவர். சொந்தத் தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் கொண்டவர்கள், இந்த மாதம் ஆரம்பித்துவிடுவீர்கள்.
பரிகாரம்: சங்கரநாராயணருக்கு நெய் தீபமேற்றி வணங்கவும்.
செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் துலா ராசியை சேர்ந்தவர்கள் உங்களில் அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள், சிறிது தடை, செலவுக்குப்பின் இடமாற்றத்துடன்கூடிய பதவி உயர்வு பெறுவீர்கள். பலர், இதுவரையில் அலைபேசியில் பதிவிட்ட தரவுகளின் அடிப்படையில், சொந்தத் தொழில் தொடங்கிவிடுவீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். சிலர் திருமணம் செய்வார்கள். சிலருக்கு ஆலயங்களில் வேலை அல்லது சேவை செய்யும் அரியதொரு வாய்ப்பு கிடைக்கும். கல்வி, கட்டடம், வாகனம் இவை சம்பந்த பங்குகள், மேன்மை தரும். உங்களில் சிலரின் வாரிசு, சேவை சம்பந்த தொழில் ஆரம்பித்துவிடுவார். நீங்கள் எங்காவது, கால் இடறி விழுந்துவிடும் வாய்ப்புண்டு; கவனம் தேவை. அரசு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும். உங்கள் மாமனார், மாமியார் வெகு கௌரவம் பெறப் போகிறார்கள். பூர்வீக நிலத்தில் ஒரு நல்ல மாறுதல் செய்வீர்கள். வியாபாரிகள், ஒரு நன்மை, ஒரு விசனம் இரண்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பரிகாரம்: பெருமாளும்- மகாலட்சுமி தாயாரும் சேர்ந்த ஸ்தலத்தில் துளசி மற்றும் ஜாதிப்பூ மாலை வாங்கி சாற்றி வழிபடவும்.
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம் பணவரவு ரொம்ப செழிப்பாக அமையும். அது வாரிசுகளால் இருக்கலாம். அல்லது பங்கு வர்த்தகத்தால் அமையலாம். கலையுலகம்மூலம் பணம் கொட்டும் வாய்ப்பு உண்டு. மந்திரியாகி, பணச் செழிப்பு பெறலாம். சொந்த அறிவு அல்லது பூர்வீக சம்பந்த நீதிமன்ற தீர்ப்பு பணவரவு தரும். உங்கள் பெற்றோர் கணிசமான தொகையை உங்களிடம் தருவர். அது பணமாக மட்டுமல்ல, தங்க நகையாகவும் இருக்கும். வீடு கட்ட அல்லது வாங்க கடன் கிடைக்கும். சிலருக்கு திருமணமாகி வேறிடம் செல்வர். அரசியல்வாதிகள் இடமாற்றமும், எதிர்பாராத நன்மையும் பெறுவர். அரசு ஊழியர்கள், பதவி உயர்வும், இடமாற்றமும் பெறுவர். இந்த மாதிரி இடமாற்றத்தால் சில தம்பதிகள் பிரிந்துவாழ நேரிடும். தொழில் செய்பவர்கள், அரசுவகையில் மறைமுகமாக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். சீருடை பணியாளர்கள் நன்மையும், சிறு எரிச்சலும் ஒருசேர கிடைக்கப் பெறுவர். உங்கள் மாமியார் ஒரு வில்லங்கத்தை, போகிற போக்கில் கொளுத்தி போட்டுவிடுவார்.
பரிகாரம்: பெருமாளை துளசி, தீபமேற்றி வணங்கவும்.
நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம், நீங்கள் நினைத்த நிறைய விஷயங்கள் பிரமாதமாக நடக்கும். என்னவொன்று அதில் சின்னதாக வில்லங்கம் ஒளிந்திருக்கும். வீடு விற்று, வேறு வீடு வாங்கும்போது, டாக்குமெண்ட் சின்ன எரிச்சல் தரும். பங்கு வர்த்தகம் செய்யும்போது, சின்ன விரயமும், நிறைய லாபமும் கிடைக்கும். வாரிசுகள் வெளியூர், வெளிநாடு போகும்போது, சின்ன அலைச்சல் வரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்போது, உங்கள் மேலதிகாரியின் இன்னலை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் வியாபாரம், சொந்தத் தொழிலில், விரிவாக்கம் செய்யும்போது, கடன் பிரச்சினை சற்று மிரட்டும். உங்கள் மூத்த சகோதரி ஏதேனும் சண்டை இழுப்பார். அரசியல்வாதிகள் வெகுஜன தொடர்புபெற்று புகழும், கௌரவமும் பெறுவர்! கலைஞர்கள் முன்னேற்றம் காணும்போது, இடமாற்றம் உண்டாகும். உங்களுக்கு வரும் கைபேசி தரவுகளில் வரும் நன்மை, உள்ளே சில சங்கடங்களை மறைத்திருக்கும். எனவே இந்த மாதம் நன்மைகள் பல நடக்கும். கூடவே சின்ன சின்ன இம்சையும் இருக்கும்.
பரிகாரம்: சிவனுக்கு வஸ்திரம் சார்த்தி வணங்கவும். வில்வ தளம் காணிக்கை செலுத்தவும்.
டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மகர ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாத பணவரவு, உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர், வெளிநாட்டிலிருந்தும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை சதா அலைந்துகொண்டே இருக்க நேரிடும். சிலர் இளைய சகோதர திருமண விஷயமாக அல்லது வியாபார விஷயமாக அலைவர். தாயார்வகையில் லாபமுண்டு. வீடு, மனை, விஷயமாக, நீங்கள் நினைத்தது நடக்கும். வாரிசுகளால் கௌரவம் உண்டாகும். கலைஞர்கள் சொந்தத் தொழிலுக்கு முன்னேற்பாடு செய்வர். அரசியல்வாதிகள் வெகு அலைச்சல்மூலம் நினைத்ததை சாதித்துவிடுவர். திருமணமாகி வெளியூர், வெளிநாடு செல்வர். வேறு சிலர் வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்புவர். மறுமணம் நினைத்தபடி நடக்கும். உங்கள் மூத்த சகோதரன், வீடு விஷயமாக முதலீடு செய்வார். உங்களில் சிலர் ஒரு வீட்டை விற்று, இன்னொரு வீடு வாங்குவீர்கள். சிலருக்கு மருமகன் வரும் நேரமிது. பங்கு வர்த்தகத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.
பரிகாரம்: விநாயகருக்கு விளக்கேற்றி வணங்கவும். அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம் உங்களுக்கு, கண்டிப்பாக வேலையில் பதவி உயர்வும், அதன்காரணமாக, பணப் பெருக்கமும் கிடைக்கும். இதன்படி, இடமாற்றம் செலவும் உண்டு. உங்கள் தொழில் சார்ந்த விளம்பரங்கள் அல்லது அலைபேசியில் பதவிவிடுவது, பணியாளர்கள் தேர்வு, தொழில் ஒப்பந்தம் இவை மேற்கொள்வீர்கள். உங்கள் பெற்றோர், பூர்வீக சம்பந்தமான அதிர்ஷ்டம் தருவர். உங்கள் சொந்தத்தில் திருமண வரன் அமையும். கலைஞர்கள், நன்மையை சிறு எரிச்சலுடன் பெறுவர். பங்கு வர்த்தகம் நன்மை தரும். வாரிசுகளின் திருமணம் ஈடேறும். உங்கள் தந்தை சிறு உடல்நலக் குறைவை சந்திப்பார். அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு, கடன் கொடுக்கும் விஷயத்தில், ஏதோ ஒருவகையில் மிக பிரபலமாக, செல்வாக்காக விளங்குவர். சீருடை பணியாளர்கள், சிறு தூர இடமாற்றம் பெறுவர். உங்கள் மூத்த சகோதரர், நல்ல வேலை கிடைக்கப்பெறுவார். உங்கள் மாமனார்- மாமியார் சிறு நெருடலோடு சிறப்பு பெறுவர்.
பரிகாரம்: பெருமாளையும்- மகாலட்சுமி தாயாரை யும் துளசி மாலை கொண்டு வணங்கவும்.
பிப்ரவரி 21 முதல் மார்ச் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மீன ராசியை சேர்ந்தவர்கள். இந்த மாதம் உங்கள் பூர்வீகம் சார்ந்த அல்லது பரம்பரையாக செய்யும் தொழில் மிக உன்னதம் பெறும். இதனால் பணவரவு செழிப்பு பெறும். இந்த எண்ணம் நிறைவேறுவதால், அது சார்ந்த சுப செலவும் இருக்கும். வாழ்வின் முன்னேற்றம் காரணமாக, உங்களைப் பற்றி கீழ்த்தரமான வதந்திகள், அலைபேசியில் அலைபாயும். இதனால் உங்கள் தாயாரும், வாழ்க்கைத் துணையும் சற்றே மன சுணக்கம் பெறுவர். எனினும் உங்கள் வாரிசுகளும், வந்த மருமகன்- மருமகளும் தோள் கொடுத்து உதவுவர். பணவரவால் கடன் விஷயம் தீரும். திருமண விஷயத்தில் சற்று தடை வரும். உங்கள் இளைய சகோதரியின் நிலை கவனிக்கப்பட வேண்டும். சீருடை பணியாளர்கள் வெகு நலம் பெறுவர். அரசியல்வாதிகள் தங்களின் அதிக அலைச்சல் மற்றும் வாரிசுகள்மூலம் பெரும் கௌரவம் பெறுவர். சினிமா கலைஞர்கள் நிறைய வாய்ப்பு பெறுவர். பங்குவர்த்தகம் ஜொலிக்கும்.
பரிகாரம்: சிவனுக்கு வஸ்திரம் சாற்றி வணங்கவும். வில்வ மாலை சாற்றவும்.
_____________
கார்த்திகை மாத கிரக நிலைகள்
சூரியன்
நவம்பர் மாத ஆரம்பத்தில் சூரியன் துலா ராசியில் உள்ளார். அங்கு அவர் நீசம்பெறுவார். எனினும், ஆட்சிபெற்ற சுக்கிரன் உடனிருப்பதால், நீசபங்கம் ஆகிறார். கூடவே எதிர்கட்சியைக் குறிக்கும் புதனும் உள்ளார். சூரியன், அரசு அதிகாரிகளை, அரசாட்சியைக் குறிக்கும். இந்த அமைப்பு, அரசு நிர்வாகத்தை யும், அரசு அதிகாரிகளையும் சற்று இம்சை கொடுக்கும். எதிர்கட்சிகள், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து, அரசு துறைகளை வறுத்தெடுப்பர். இதனால் சற்றே ஜெர்க்காகும் அரசு. சூரியனின் நீசபங்கத்தால், அனைத்தையும் சமாளித்துவிடும். இது மட்டுமல்லாது. அரசு அதிகாரி கள், தொழிலாளர்கள், மாணவர்கள், போக்குவரத்து துறையில் வேலைச் செய்பவர்கள் என இவ்வகையினரையும் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும். நில விற்பனை விஷயம் அரசு அதிகாரிகளை மண்டை காயச்செய்யும்.
செவ்வாய்
செவ்வாய், ஆட்சி செய்யும் கட்சியைக் குறிப்பார். இந்த மாதம் செவ்வாய் ஆட்சியாகி விருச்சிகத்தில் அமர்ந்துள்ளார். எப்போதும் ஆட்சிபெற்ற கிரகம் தனிப்பலத்தை தரும். அதுபோல் இந்த மாதம் ஆளுங்கட்சி நல்ல செல்வாக்கோடு, திறமையாகவும் நடக்கும். இதில் என்னவொரு இக்கன்னா என்றால், இந்த செவ்வாயை, சனிபகவான் தனது 10-ஆம் பார்வையாலும், குருபகவான் தனது 5-ஆம் பார்வையாலும் பார்க்கின்றனர். குருபார்வை நல்லது தான். அதனால் நீதிமன்ற தீர்ப்புகளும், உத்தரவுகளும் ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக இருக்கும். சனிப்பார்வை சற்று தொல்லை தரும். இதனால் தொழிலாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவார். செவ்வாயும், சனியைப் பார்க்கிறார். எனவே ஆளும் கட்சி, அவர்களுடன் தொடர்புகொண்டு, ஒருமாதிரி சமாதானம் செய்துவிடும். செவ்வாய் ஆட்சியாக இருப்பதால் எதையும் திறமையாக சமாளித்துவிடும்.
புதன்
இவர் எதிர்கட்சிகளைக் குறிப்பார். இந்த நவம்பர் மாத ஆரம்பித்தில், துலா ராசியில் உள்ளார். அங்கு அவர் அரசு கிரகம் சூரியனுடனும், கூட்டணி கிரகம் சுக்கிரனுடனும் உள்ளார். எனவே எதிர்கட்சியினர், அரசு அதிகாரிகளுடனும், கூட்டணி கட்சியினருடனும், நல்ல நன்மையான தொடர்பில் இருப்பர். எதிர்கட்சியினர், சில மந்திரிகளை, மிக கேவலமாக திட்டி, நோகடிப்பர். இதற்கு காரணம், சூரியன் சற்று பலம்குன்றி இருப்பதும் ஆகும். மேலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவும் ஆகும்.
குரு
இந்த மாதம், ஆகப்பெரிய கல்வியாளர் ஒருவர், மிகப்பெரிய பதவியில் அமர்வார். அந்த பதவி வெளிநாடு சம்பந்தம் உள்ளதாக அல்லது தாய்நாட்டில் கல்வி மற்றும் பயிலும் மாணவர் சம்பந்தமாக அமையும். நீதிமன்றம் கல்வி, மனை, ஆளுங்கட்சி, காவல்துறை சார்ந்த மிக நல்ல தீர்ப்புக்களை வெளியிடும். நீதிமன்றம், மடாதிபதிகள், கல்வியாளர்கள் தனிப்பெரும்பான்மை சக்தியுடன், எழுச்சிபெற்று, நாட்டின் நலனை பேணிக்காப்பர். குருபகவான் செவ்வாயைப் பார்ப்பதால், இராணுவம், காவல்துறை சார்ந்த சட்டமுடிவுகள் வெளியிடும்.
சுக்கிரன்
இது கூட்டணி கட்சிகளைக் குறிக்கும். சுக்கிரன் துலாத்தில் ஆட்சிபெற்று அதிக பலத்துடன் உள்ளது. எனவே கூட்டணிகளின் மதிப்பு சற்று தூக்கலாகவே இருக்கும். மேலும் கூடவே இருக்கும் சூரியனின் நீசபங்கப்படுத்துவதால், அரசாங்கத்தின் கண்ணில் கொஞ்சம் விரலைவிட்டு ஆட்டும். உடனிருக்கும் எதிர்கட்சி புதன், இதற்கு அதிக சப்போர்ட் கொடுக்கும். ஆக, இந்த மாதம் கூட்டணி கட்சிகள் சற்று குத்தாட்டம் போடத்தான் செய்யும்.
சனி
சனிபகவான், வாக்கியப்படி கும்ப ராசியில் இருந்து, செவ்வாயை தொடர்புகொள்கிறார். கூடவே ராகுவும். எனவே இந்த மாதம், ஆளுங்கட்சியை சற்று பாடாய்படுத்தியெடுப்பார். அதற்கு தீவிரவாதம், போதைப் பொருட்களால் பின் விளைவாக அமையும். சனி காலபுருசனின் 11-ஆம் வீட்டில் உள்ளதால், நிறைய அரசியல்வாதிகளின், வீடு, சொத்துக்கணக்கு வெளியே வரும்.
ராகு
இவர் கும்பத்தில் சனியோடு, செவ்வாயின் பார்வைபெற்று அமர்ந்துள்ளார். இந்த அமைப்பு சற்று ஏடாகூடாமாக கவலை அளிப்பதாக உள்ளது. இதனால் சனி+ராகு+கேது+செவ்வாய் இணைகிறார்கள். இந்த சேர்க்கை காற்று ராசியில் அமைந்துள்ளது. எனவே புயல், சுழல் காற்று, மேக வெடிப்பு போன்ற காற்று சார்ந்த தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது; கவனம் தேவை. ராகு தனது சுய சாரத்தில் சென்றுகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேது
இவர் சிம்மத்தில், சுக்கிர சாரம் பெற்று நகர்ந்து கொண்டுள்ளார். எனவே, கூட்டணி கட்சிகளை கிள்ளிவிட்டு, அரசுக்கு எதிராக கோஷம் போடச் செய்வார். நிறைய மந்திரிகளின் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். இவரின் சாரநாதர் சுக்கிரன், 7-ல் இருப்பதால், நிறைய காதல் பெருகும், காதல், கல்யாணத்தில் முடியுமா எனில், அதெல்லாம் நடக்கிற கதை இல்லை. உடனிருக்கும் நீசபங்க சூரியனும், புதனும், இந்த காதலர்களை செமத்தியாக அடிவாங்க வைத்து, பின் காவல்துறையிலும் புகார் கொடுக்க வைத்துவிடுவர். 5-ஆமிட கேது இதனை நன்கு செய்வார்.
வானிலை
நவம்பர் மாதத்தில் 2, 3, 4-ஆம் தேதிகளில் சந்திரன் மீன ராசியில் சஞ்சாரம். மழை பெய்யும் வாய்ப்புண்டு.
நவம்பர் மாதத்தில் 7-ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் செல்லும்போது மழை பெய்யும்.
நவம்பர் மாதத்தில் 10, 11, 12-ல் கடக ராசியில் சந்திரன். அங்குள்ள குருவுடன் பயணிப்பார்.அப்போது மழை அளவு அதிகமிருக்கும்.
நவம்பர் மாதத்தில் 17, 18, 19-ல் துலா ராசியில் சந்திரன் செல்லும்போது, அங்குள்ள நீர்க்கிரகம் சுக்கிரனோடு செல்வார். அதனால் மழை பொழியும்.
நவம்பர் மாதத்தில் 20, 21, 22-ல் விருச்சிகம் எனும் நீர் ராசியில் சந்திரன் செல்லும்போது, குரு பார்வை பெறுவதால், கன மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் மாதத்தில் 26-ல் சந்திரன், திருவோண நட்சத்திரத்தில் செல்லும்போது மழை வரும். 29, 30-ல் மீன எனும் நீர் ராசியில் சந்திரன், குரு பார்வையில் செல்லும்போது கனமழை கொட்டும்.
இந்த மாதம் குருபகவான் கடகம் எனும் நீர் ராசியில் இருந்து, விருச்சிகம், மீனம் எனும் மற்றைய நீர் ராசிகளை பார்ப்பதால், கண்டிப்பாக மழை, கனமழையாக கொட்டித் தீர்க்கும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us