தனுசு
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை

தனுசு ராசியின் 4-ஆமிடத்தில் சனி, 7-ல் குரு, 3-ல் ராகு, 9-ல் கேது என கிரக கோட்சாரம் உள்ளது. 


சனி தனுசு ராசியின் 6-ஆமிடம், 10-ஆமிடம், ராசி இவற்றை பார்க்கிறார். குரு 11-ஆமிடம், ராசி மற்றும் 3-ஆமிடத்தையும், 3-ல் அமர்ந்துள்ள ராகுவையும் அவதானிக்கிறார்.

Advertisment


3-ஆமிடம் என்பது வீர, தீர, தைரிய இடம். இது நல்ல காலத்திலேயே ஒரு மாதிரியான இடம். இதில் ராகு எனும் பெரும் போக்கு கிரகம் அமர்ந்தால் கேட்கவேண்டுமா, பக்கத்து ஊர் போய் ஜல்சா பண்ணவா என துறுதுறுவென ஒரு மின்சாரம் உடம்பு முழுவதும் பரவும்; பரவசமாகும். ஆனால் அந்தோ பரிதாபம். குருபகவான் தனது ஒன்பதாம் பார்வையால், 3-ஆமிட ராகுவை முறைத்து பார்க்க ஆரம்பித்துவிடுவார். எடு விளக்கு மாத்தை என கர்ச்சிக்க, நம்ம ஆள் அம்பேல். கப்சிப் வென்று, அனைத்தும் மூடிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். சரி நடைமுறை வாழ்வில், குரு யார்மூலம் இவர்களை அணை போடுவார் எனில் இடங்கொடுத்த சனி 4-ல் இருப்பதால் தாயார்மூலமும், பார்த்த குரு 7-ல் இருப்பதால், மனைவிமூலமும் தடுப்பணை கட்டப்பட்டு, ஆள் நல்ல பிள்ளையாக இருப்பார். மேலும் வெளிமாநில பணியாள், இளைய சகோதரனுடன் சேர்ந்து குடிப்பது, கைபேசியில் கண்டப்படி வதந்தி பரப்புவது, வெளிநாட்டு கள்ள கடத்தல் சார்ந்த ஒப்பந்தம் என அனைத்தையும் குருவின் பார்வை கட்டுக்குள், சட்டத்திற்குள் கொண்டுவந்துவிடும்.


உங்கள் தனுசு ராசியை குருவும், சனியும் ஒருசேர பார்க்கிறார்கள். எப்போதுமே, குருபகவான் ராசி, லக்னத்தைப் பார்ப்பது மிக விசேஷ பலன் தரும். எனவே குரு பார்வையால் ரொம்ப சுறுசுறுப்பு, புத்திசா-த்தனம், விவேகம் எல்லாம் வரும். சனி பார்வை சுறுசுறுப்பை குறைக்கும். மூளையை மந்தமாக்கும். சற்று கேனத்தனமாக நடக்கச் செய்யும். குரு பார்வை செழிப்பை பெருக்க, சனி பார்வை கஞ்சத்தனம் தரும். குரு நல்ல ஆரோக்கியம் தர, சனி சற்று வாத சம்பந்த நோய் தருவார். எனில் இருவர் பார்வையும் ஒரு நன்மையும் கொடுக்காதா என்று கேட்டால், ஒரு பயன் கண்டிப்பாக கிடைக்கும். குரு, சனி இருவர் பார்வையும், உங்கள் மண்டையில் நன்கு மயிர், முடி வளரச் செய்யும். இதன் எதிரொ-யாக, தனுசு ராசி முடி வெட்டும் கடை வைத்திருப்போர், கோவில் முடி ஏலம் எடுப்போர், பொய் முடி எனும் விக் தயாரிப்போர் என இவர்கள் மிக மேன்மை அடைவர். இந்த வருடத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

திருவிடை மருதூர் மகா-ங்க சுவாமியை வழிபடவும்.

Advertisment

மகரம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை

மகர ராசியின் 3-ஆம் வீட்டில் சனி, 6-ல் குரு 2-ல் ராகு, 8-ல் கேது என இவ்வித கிரக கோட்சாரம் அமைந்துள்ளது.


சனி 3-ஆம் வீட்டில் அமர்ந்து, 5-ஆமிடம், 9-ஆமிடம், 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். குரு 6-ஆமிடத்தில் நின்று, 10-ஆமிடம், 12-ஆமிடம் மற்றும் 2-ஆமிடமும், அதில் அமர்ந்துள்ள ராகுவையும் நோக்குகிறார்.


2-ஆமிடம் என்பது வாக்கு ஸ்தானம். எனவே ஒரு ப்ளோவில் நிறைய கெட்ட வார்த்தைகள் மகர ராசியாருக்கு சரளமாக வர, குரு பார்வை நோ நோ என்று தடுத்துவிடுவார். 2-ல் அமர்ந்த ராகு, கண்டிப்பாக சட்டபுறம்பான லஞ்ச பணம் கொடுத்தே தீருவேன் என ஒத்தக்கா-ல் நிற்க, பார்த்த குரு, காலை உடைத்துவிடுவேன் என மிரட்டுவார். சட்டப்படியான வெளிநாட்டு பண வரவிற்கு, குரு அனுமதி அளிப்பார். நிறைய பொய் சொல்லும் ஆசையை ராகு கொடுக்க, குரு தடுப்பார். குடும்பத்தை பெருக்க ராகு ஆர்வம் காட்ட குரு, ஒன்- ஒன் குடும்பம் போறும் என மண்டையில் தட்டிவிடுவார். பூர்வீக சொத்தை முழுமையாக அபகரிக்கும் ஆசையை ராகு கொடுக்க, குரு தடை போட்டுவிடுவார். மகர ராசியாரின் 12-ஆம் வீட்டை குருவும், சனியும் அட்டடைம் அதிர நோக்குகிறார்கள். 


நிறைய செலவுசெய்ய குரு தூண்ட, சனி பணத்தை வீணாக செலவளித்தால், சாமி கண்ணை குத்திவிடும் என்பார். வெளிநாட்டுக்கு போகலாம் என குரு ஆசைகாட்ட, சனியே உள்ளூரில் பார்த்தாலே போதும் எனக் கூறிவிடுவார். குரு, நிறைய முதலீடு செய்யலாம் என விறுவிறுப்பாக, சனி உள்ளதை வச்சு சந்தோஷப்படு என பாடம் எடுப்பார். தூங்குவதற்கு நல்ல விலை அதிகமான மெத்தையை குரு செலக்ட் செய்ய, சனியோ பாயில் படுத்தாலும் அதே தூக்கம்தான் வரும் என கண்டிப்பார். மகர ராசியினர் விலை உயர்ந்த செருப்பு அதுவும் வெளிநாட்டி-ருந்து வரவழைத்த செருப்புக்கு குரு ஆசைப்பட வைக்க, செம காண்டாகும் சனி, அவனவன் கால் இல்லாம இருக்கான், காஸ்ட்- செருப்பு, நோ என அலறுவார். இந்த வருடம், திருமணமான தம்பதிகள் ரொம்ப நெருக்கம் காட்ட, சனியோ புள்ளைதான் பெத்தாச்சே இன்னும் என்ன வேண்டிக்கிடக்கு என வெகு எரிச்சல் அடைவார். திருவாரூர் தியாகராஜரை வழிபடவும். 

கும்பம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை

கும்ப ராசியின் 2-ல் சனி, 5-ல் குரு, ராசியில் ராகு, 7-ல் கேது என கோட்சாரம் உட்கார்ந்து உள்ளது. 2-ல் அமர்ந்த சனி, கும்ப ராசியின் 4-ஆமிடம், 8-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். 


குரு 9-ஆமிடம், 11-ஆமிடம் ராசி மற்றும் ராசியில் அமர்ந்துள்ள ராகுவையும் பார்க்கிறார்.

ராசியில் அமர்ந்த ராகு, கும்ப ராசியாருக்கு எதிர்மறை எண்ணங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும், உயிர் பயத்தையும் கொடுப்பார். 

ஆனால் குரு பார்வை இதனை போக்கி இவர்களை ஆசுவாசப்படுத்தும். மிகுந்த சுயநல எண்ணம், யோசனைகளை ராகு கொடுக்க, குரு அதனை மட்டுப்படுத்துவர். ராகு ஒரு போக காரகர். எனவே அது சம்பந்தமான ஆசையும், மது குடிக்கும் போதை சமாச்சார வெறியும் ஏற்படுத்த குரு அதனை தட்டி, கொட்டி சரிப்படுத்தி வெளிநாட்டுக்கு போனால்தான் ஆச்சு என ராகு அடம்பிடிக்க, குருவும் ஒழியுது போயிட்டு வா என அனுப்பிவைப்பார்.  இந்த உலகின் அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கும் ஆசையை ராகு கொடுக்க குரு நோ வே என்று மறுத்துவிடுவார். கும்ப ராசியின் 11-ஆமிடத்தை குருவும், சனியும் ஒருசேர பார்க்கிறார்கள். 11-ஆமிடம் லாப ஸ்தானம் மட்டுமல்ல; ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறுமிடம் ஆகும். அரசிய-ல் நுழைந்து, ஒரு மந்திரிப் பதவியை பிடித்தே தீருவேன் என கும்ப ராசியார் அடம்பிடிக்க, குருவும் கொடுக்கத் தயாராக, சனியோ இவன் மந்திரியானால் ஊர் வௌங்குமா என உடனே தடை போட்டுவிடுவார். கையில் கிடைத்தது கை நழுவி போய்விடும். உங்கள் பகுதி தலைவராகும் வாய்ப்பு வந்து, பின் கழன்றுவிடும். உங்கள் மூத்த சகோதரன் குடும்பத்திற்கு வாரி இறைக்க குரு அனுமதிக்க, சனி சுவிட்சை ஆஃப் பண்ணிவிடுவார். வேலையில் பதவி உயர்வு ஓடிவர, சனி அதை தாமதப்படுத்துவார். மறுமணத்தை குரு நடத்திக்கொடுக்க முயல, சனி கொஞ்சம் யோசிப்போம் எனக் கூறிவிடுவார். நிறைய தங்க நகை சேர்க்கும் எண்ணத்தை குரு தூண்டிவிட, சனி தங்கவிலையை கண்ணில் காட்டி, மயங்கி விழச் செய்வார். கும்ப ராசியினர் பெரிய சொஸைட்டி போன்ற இடங்களில் சேர்ந்து, மக்கள் சேவைக்கு தயாராக, சனி வீட்டில் குரு என்று கூறுவார். வழக்கின் வெற்றிகள் தாமதமாகும்.

இராமேஸ்வரம் சென்று வணங்கலாம்.

மீனம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை

மீன ராசியில் சனியும், 4-ல் குருவும், 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் உள்ளனர். சனி, 3-ஆமிடம், 7-ஆமிடம், 10-ஆமிடத்தை முறைக்கிறார். குரு 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடம் இவற்றை பார்ப்பதோடு, 12-ஆமிடத்திலுள்ள ராகுவையும் பார்க்கிறார்.

12-ஆமிடத்தில் அமர்ந்த ராகு மீன ராசியினரை நிறைய இரகசிய செயல்கள் செய்ய தூண்ட, குரு தனது பார்வையால் அதனை தடுத்து விடுவார். 12-ஆமிட ராகு, கள்ளத்தோணி ஏறி வெளிநாடு போனால்தான் ஆச்சு என அடம்பிடிக்க, குரு நேர்மையான முறையில் வெளிநாடு அனுப்பிவைப்பார். ராகு, மானாவாரியாக முதலீடு செய்யும் யோசனை தர, குரு முதலீடு விஷயத்தை கட்டுப்படுத்துவார். பிறமத, பிற நபர்களுடன் மறைமுக நட்பு ஏற்படுத்த ராகு முயல, குரு அதனை கண்டித்து தடுப்பார். சில மீன ராசியார், பிறரை வஞ்சிக்கும் பொருட்டு, எதிர்மறை வினைகளாற்ற ராகு வழிகாட்ட, குரு பார்வை அதற்கு தடை போடும். போதை வஸ்துக்களுக்கு, போக விஷயம், சிறையி-ருந்து தப்பிப்பது போன்ற விஷயம் சார்ந்த செலவுகளுக்கு ராகு அடிபோட, குரு அடி பிய்த்து எடுத்துவிடுவார்.


மீன ராசியின் 10-ஆமிடத்தை குருவும், சனியும் ஒரே நேரத்தில் உற்று நோக்குகின்றனர். இதில், குரு 10-ஆமிடம் எனும் தொழிலை பெருக்க, சனி அவை சார்ந்த உழைப்பை பெருக்குவார். குரு, மீன ராசியினரின் புகழ் கௌரவத்தை திசையெங்கும் பரப்ப, சனி அவ்வளவு புகழ் எல்லாம் தேவையில்லை என கட்டுப்படுத்துவார். குரு உங்கள் வழக்கின் வெற்றியை உறுதிசெய்ய, சனியோ அது உங்கள் கைக்கு கிடைக்க தாமதம் செய்வார். உங்கள் லட்சியம், குறிக்கோள் நிறைவேற்றி, உங்களை முக்கியமான சாதனையாளர் ஆக்குவதற்கு, குரு எல்லாவிதத்திலும் முயற்சி செய்ய சனியோ மெதுவா, மெதுவா என்று தாமதப்படுத்துவார். அரசாங்கத் தொடர்பை, அரசியல் அனுகூலங்களை பெற்றுதர குரு முனைப்பு காட்ட, சனி இதெல்லாம் இப்போ அவசரமா, அவசியமா என தடை, ஸ்பீடு பிரேக்கர் போட்டுவிடுவார். எனினும் குருவும், சனியும் 10-ஆம் வீட்டை ஒரே பார்வையாக பார்ப்பதால் உங்கள் தொழில் நிலை ஏற்றம் பெறும். உழைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு கர்மச் செயல் தடுக்கப்பட்டு, குடும்பத்தில் ஒருவர் காப்பாற்றபடுவார். இது வெகு முக்கியமான விஷயமாகும்.


கடல் அருகிலுள்ள சிவஸ்தலம் சென்று வணங்கவும்.