கடகம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை
கடக ராசியின் 9-ல் சனி, 12-ல் குரு, 8-ல் ராகு, 2-ல் கேது அமர்ந்துள்ளனர். 9-ல் அமர்ந்த சனி, கடக ராசியின் 11, 3, 6-ஆமிடங்களை அவதானிக்கிறார். கடக ராசியின் 12-ல் அமர்ந்த குரு, 4, 6, 8-ஆமிடமிடங்களை வருடுகிறார். மேலும் குரு, 8-ஆமிட ராகுவையும் பார்க்கிறார்.
8-ஆமிடம் என்பது ஒரு துயர ஸ்தானம். இதில் ராகு அமர்ந்திருப்பது, "கெட்டவன் கெட்டிடில், கிட்டிடும்' நன்மை என்ற விதிப்படி, நன்மை கிடைக்கும். ஆனால் குருபார்வை பெருக்கும் தன்மை கொண்டது. எனில் ராகு கெட்டவற்றை அழிக்க, குருபார்வை அதனை பெருக்கும் நிலையாக உள்ளது. அப்படியானால் கடக ராசியார் இந்நிலையை எவ்விதம் எதிர்கொள்ள வேண்டும். முத-ல் கடக ராசியார் தங்கள்மீதுள்ள வீண் அபவாதம், வழக்குகள், தண்டனைகள், நிலத்தகராறு, ஜப்தி, வாரண்டு, சில நிர்ப்பந்தங்கள் என இவை சார்ந்த விஷயங்களி-ருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள், நடவடிக்கை எடுங்கள். அடமான சொத்துகளை மீட்க ஆவன செய்யுங்கள். உங்கள் வேகமான முயற்சி, விரைவான விடுதலையைத் தரும். மேலும் சில தம்பதிகளுள் ஒருவர், மற்றவர்களிடம் வெகு இம்சைபட்டுக் கொண்டிருப்பர். அவர்களும் அந்த இம்சையி-ருந்து வெளிவர முயற்சிக்கவும். உங்கள் வணிக நஷ்டம் குறித்து தீர்மானமான முடிவு எடுங்கள். அதுபோல் உங்கள் கடன்களைத் தீர்க்க ஒரு அடி எடுத்து வைத்தால், பல படிகள் முன்னேறி, கடன் தொல்லையி-ருந்து விடுபடலாம். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்வோர், பூமி ஆழத்தில் இருந்து தொழில் மேற்கொள்வோர் கிரிமினல் வழக்கறிஞர்கள், இருட்டு சம்பந்தமான எடிட்டிங், போட்டோ எக்ஸ்ரே போன்ற தொழில் செய்வோர் இந்த வருடத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். ராகு 8-ஆமிட இன்னல்களை அழிக்க, குரு பார்வை 8-ஆமிடம் சம்பந்தமான நன்மைகளை அள்ளித் தருவார். மாங்கல்யம் மாற்றும் எண்ணம் உடையோர், இந்த வருட நன்னாளில் அதனை மாற்றலாம்.
கடக ராசியின் 6-ஆமி டத்தை குருவும், சனியும் ஒருசேர பார்க்கிறார்கள். இது ஒரு நல்ல கிரக கோட்சாரம்தான். சனி ஒரு உழைப்புக் கிரகம். குரு ஒரு பெருக்கத்துக்குரிய கிரகம். எனவே கடக ராசியார், அவரவர் வாழ்வு நிலைக்கேற்ப வேலையை கண்டிப்பாக பெறுவார்கள். 6-ஆமிடம் ருண, ரோக, எதிரி ஸ்தானம். குரு பெருக்க, சனி சுருக்க, இந்த ஸ்தான பலன் சமநிலையாகிவிடும். உழவாரப்பணி நிறைய செய்வீர்கள். வட்டி, சிறைவாசம், மருத்துவமனை செலவு இவை தடுக்கப்படும். திருட்டுபோன பொருள் மீட்கப்படும். போட்டி பந்தயத்தில் கலந்துகொண்டால், முதல் பரிசு கிடைக்காவிட்டாலும், ஆறுதல் பரிசு கண்டிப்பாக கிடைக்
கும். நல்ல வீடு வாடகைக்கு கிடைக்கும்.
பௌர்ணமிதோறும் சாந்தமான அம்பாளை வணங்கவும்.
சிம்மம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை
சிம்ம ராசியின் 8-ஆமிடத்தில்
அமர்ந்த சனி, ராசியின் 10, 2, 5-ஆமிடங்களை பார்க்கிறார். சிம்ம ராசியின் 11-ல் அமர்ந்த குரு 3, 5, 7-ஆமிடங்களையும், 7-ஆமிடத்தில் அமர்ந்த ராகுவையும் பார்க்கிறார்.
குருபகவான் 7-ஆமிட ராகுவை, தனது
9-ஆம் பார்வையால் ரட்சிக்கிறார். கூடவே அவர் 5-ஆமிடத்தையும் பார்க்கிறார். எனவே, சிம்ம ராசியினரில் பலர் காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள்.
குரு பார்வையின் பங்கென்ன? என்னதான் 7-ல் ராகு இருந்து காதல், கலப்பு மணம் கொடுத்தாலும், குரு அதிகமான வித்தியாசம் வேறுபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வார். உதாரணமாக ஒரு ஐயரும், ஐயங்காரும் திருமணம் செய்து கொள்வர். ஒரே இனத்தில் வேறு வேறு மொழி பேசுபவர்களாக அமைவர். இனத்தில் வேறு வேறு பிரிவைச் சேர்ந்தவர்களாக சேர்வர்.
7-ஆமிட ராகு ஒரு அந்தணரையும், இஸ்லாமியரையும் சேர்க்க முற்படுவார். ஆனால் இங்கு ஏற்படும் குரு பார்வை, அந்தளவு வித்தியாசம் இல்லாமல், எல்லாரும் ஏற்கக்கூடிய அளவில் மணமக்களை சேர்த்து வைப்பார். இது பெரிய விஷயமல் லவா எனவே இந்த வருடத்தில் சிம்ம ராசியை வாரிசாக பெற்ற பெற்றவர்கள், வாரிசுகளின் காதலை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
வெளி நாட்டு வர்த்தகம், வியாபார பங்குதாரர், வழக்குகள், விவாதங்கள் என இவற்றிலும் எதிர்மறைத் தன்மை இருப்பினும், அதனாலும் உங்களுக்கு உன்னதமான நன்மை கிடைக்கவே குரு வெகு முயல்வார்.
சிம்ம ராசியின் 5-ஆமிடத்தை குருவும்.சனியும் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள்.
5-ஆமிடம் என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும். சிம்ம ராசியாரை, சனி டாஸ்மார்க் நோக்கி தள்ள, குருபகவான் ஒரு அறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார். நிறைய காதல் பண்ண சனி ஐடியா கொடுக்க, குரு அதற்கு அணை கட்டுவார். 5-ஆமிடம் வாரிசை விருத்தி பண்ண குரு முயல, சனி தடை விதிப்பார். இதனால் சிம்ம ராசி கர்ப்பஸ்திரிகள் கவனமாக இருக்க வேண்டும். குரு, சிம்ம ராசியாரை, மந்திரியாக உயர்ந்த, சனி பிடரியை பிடித்து தள்ளி கீழே விழச் செய்வார். இந்த வருடம் சிம்ம ராசியாருக்கு மந்திரி மற்றும் உயர் பதவி கிடைத்தாலும், சற்று யோசித்து முடிவெடுங்கள் பங்கு வர்த்தகத்தை குரு பரபரப்பாக்க, சனி ப்யூஸை பிடுங்கிவிடுவார். கலைத் தொழிலுள்ள நடிக, நடிகையர் வெகு முன்னேற்றத்தின் அறிகுறி காண, சனி அப்புறம் பாத்துக்கலாம் என்று கூறிவிடுவார்.
மற்ற ராசிகளுக்கு சனி, எட்டாமிடத்தில் மறையும்போது, 8-ஆமிட துர்பலன்களை அழித்து விடுவார். ஆனால் சிம்ம ராசிக்கு மட்டும் இதனை விதிவிலக்கு பண்ணிவிடுகி றார். சிம்ம சூரியன் சனிபகவானின் முதல் தர எதிரியாவார். எனவே, சிம்ம ராசிக்கு மறந் ததும்கூட நல்லது செய்யமாட்டார். எப்படி இருப்பினும் சனி பார்வை பலன் கெடுதல் மட்டுமே செய்யும்.
எனவே சிம்ம ராசியார், இந்த ஒரு வருடத்துக்கு, உங்கள் உயர்வுகளை அமைதியாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் கை கொண்டால், ஓரளவு நீடித்து வரும்.
மலைமீதுள்ள அல்லது மலை சார்ந்த சிவனை வணங்கவும்.
கன்னி
2025 மே 14 2026 ஜூன் 1 வரை
கன்னி ராசியின் 7-ஆமிடத்தில் சனி, 10-ஆமிடத்தில் குரு, 6-ஆமிடத்தில் ராகு, 12-ல் கேது என கோட்சாரம் உள்ளது.
சனி 7-ஆமிடத்தில் இருந்து, கன்னி ராசியின் 9, 1, 4-ஆமிடத்தை பார்க்கிறார்.
குரு 2, 4, 6-ஆமிடத்தை பார்க்கிறார்.
6-ஆமிடத்தில் அமர்ந்த குருவையும் நோக்குகிறார்.
கன்னி ராசியின் 6-ஆமிடத்தில் அமர்ந்த அசுப கிரகமான ராகு, அதன் காரகமான நோய், கடன், எதிரி என இவைகளை அழிக்கிறார். ஆனால் குருபகவான் தனது ஒன்பதாம் பார்வையால் இந்த ராகுவை பார்க்கிறார். குரு பார்வை பெருக்கும். எனில் கடன் பெருகுமா என்றால் ஆம் பெருகும் தான். ஆனால் குருவின் பார்வை சுபத்தன்மையுடையது. எனவே திருமண கடன், வீடு கட்ட கடன், வாரிசுகளின் வேலையில் சேர கடன் என இம்மாதிரி நல்ல விஷயங்களுக்கு கடன் வாங்குவீர்கள். வீட்டில் இருந்தபடியே வெளிநாட்டு சம்பந்தமான வேலைகளை செய்ய இயலும். உங்கள் வீட்டில் முன்பு திருட்டு போன பொருள் திரும்பக் கிடைக்கும். இப்போது வாங்கும் கடனுக்கும், வட்டி விகிதம் ரொம்ப குறைவாக இருப்பதால், வட்டி சார்ந்த பிரச்சினை இராது.
கன்னி ராசியின் 4-ஆமிடத்தை குரு பார்த்து பெருக்க, சனியும் அதே இடத்தைப் பார்த்து, சுருக்குவார். இதனால் கன்னி ராசி குழந்தைகள் நன்றாக படித்தாலும், பரீட்சையின்போது மறந்துவிடுவர். உங்கள் தாயார் மிக கௌரவம் பெறும்போது, அவரின் உடல்நிலை சீர்கேடு அடையும். உங்கள் வாழ்க்கைத் துணை தொழில் மிக மேன்மை அடையும் நேரத்தில், சனி பார்வை அதனை கீழ்மை அடையச் செய்யும். தண்ணீர் வசதி பெருகி நிற்கும்போது, ஏனோ நீர் மட்டம் ரொம்ப குறைந்துவிடும்.
பால் கறக்க நிறைய மாடுகளை வாங்கி, தொழுவத்தை நிறைக்கும் நேரம். பால் வளம் குறைந்தாற்போல் அமையும். நீங்கள் இந்த வருடம் நிறைய புது துணி வாங்கினாலும், அது சீக்கிரம் பழசு மாதிரி ஆகிவிடும். நீங்கள் விதவிதமாக சமைத்தாலும், காரணமில்லாமல் சீக்கிரம் அது கெட்டுவிடும். இந்த வருடம் வீடு வாங்க முடியும். ஆனால் அது பழசாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட விஷயங்களை வெளியில் பகிர்ந்துகொள்ள நினைத்தாலும், அது முடியாமல் போய்விடும். வாகனம், பழசு வாங்கினாலும் அது பாட்டுக்கு ஓடும்.
உங்கள் வயல் நல்ல செழிப்பான பலன் தரும்.
அதற்கு நீங்கள் பழமையான தானியங்களை, பயிரிட வேண்டும். அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டு. அதில் பழமை இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் வணிக, வியாபார ஸ்தலங்களை, மாடர்னாக மாற்றுகிறேன் என்று முயற்சி செய்தால், முதலுக்கே மோசமாகிவிடும். ஒரு வருடம் பழசாகவே இருக்கட்டும்.
சென்னை திருவல்-க்கேணி, பார்த்தசாரதி பெருமாள் போன்று, குடும்பத்துடன் கோவில் கொண்ட பெருமாளை வணங்கவும்.
துலாம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை
துலா ராசியின் 6-ல் சனி, 9-ல் குரு 5-ல் ராகு, 11-ல் கேது என கோட்சாரம் உள்ளது.
சனி 8-ஆமிடம், 12-ஆமிடம், 3-ஆமிடத்தை பார்க்கிறார் குரு துலா ராசி, 3-ஆமிடம், 5-ஆமிடத்தை கூடவே 5-ஆமிடத்தில் ராகுவையும் நோக்குகிறார்.
5-ஆமிடம் என்பது வாரிசைக் குறிக்கும். அதில் அமர்ந்த ராகு, உங்கள் வாரிசை ஒழுக்கக் கேட்டுக்கு திருப்ப முயல, குரு தன் பார்வையால் தடுத்து விடுவார். 5-ஆமிடம் ஒழுக்கத்தைக் குறிக்கும்.
துலா ராசியின் 3-ஆமிடத்தை குருவும், சனியும் ஒரே இடத்தில் பார்க்கிறார்கள். 3-ஆமிடம் என்பது தைரிய, வீரய ஸ்தானம் குரு பார்ப்பதால், வீரம் அதிகரிக்க சனியின் பார்வையால், தைரியம் குறையும். எனவே துலா ராசியாரின் தைரியம் மத்திமமாக இருக்கும்.
உங்கள் கைபேசியை அதிகம் பயன்படுத்த குரு ஊக்குவிக்க, சனியோ அதை பழுதாக்கி விடுவார். உங்கள் குத்தகை, ஒப்பந்தம் பெருகுவதற்கு குரு ஆதரவு தர, சனி அதனை மட்டுப்படுத்துவார். சனி 3-ஆமிடத்தை பார்த்து, துலா ராசியினரை கொஞ்சம் ஜா-யாக இருக்கலாமா என கண் சிமிட்ட, குரு மூச் என தடுத்துவிடுவார். உங்கள் இளைய உடன்பிறப்புக்களுக்கு வாரி வழங்க குரு தூண்ட சனியோ ஆத்திலே, போட்டாலும் அளந்து போடு என தடுத்துவிடுவார். சிறுதூர பயணங்களுக்கு குரு ஆசை காட்ட, சனி சும்மா என்ன அலைஞ்சுக்கிட்டு. ஒரு பக்கமாக இரு என அதட்டுவார். நிறைய வேலையாட்களை குரு அழைத்து வர, சனியோ இவ்வளவு பேருக்கும் காசு கொடுத்தா வௌங்கினாப்புலதான் என்று கோபிப்பார். 3-ஆமிடம் என்பது ஒரு உபஜய ஸ்தானம் எனவே வெற்றிகள் கிடைக்கும். தாமரைப்பூவில் இரண்டு யானைகள் இருக்கும். கஜலட்சுமியை வணங்கவும்.
விருச்சிகம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை
விருச்சிக ராசிக்கு 5-ல் சனி, 8-ல் குரு, 4-ல் ராகு, 10-ல் ராகு, 10-ல் கேது என கோட்சார கிரக நிலை உள்ளது.
சனி, 7-ஆமிடம், 11-ஆமிடம், 2-ஆமிடம் இதனை பார்க்கிறார். குரு, 12-ஆமிடம், 2-ஆமிடம், 4-ஆமிடம் என இவைகளையும், கூடவே 4-ல் இருக்கும் ராகுவையும் பார்க்கிறார்.
குரு 4-ஆமிட ராகுவை, தனது ஒன்பதாம் பார்வையால் பார்க்கிறார். 4-ஆமிடத்தில் அமர்ந்த ராகு, விருச்சிக மாணவர்களை கள்ளக் காப்பி அடித்து பரீட்சை எழுத தூண்டுவார். ஆனால் பார்க்கும் குரு அதனை தடுத்துவிடுவார்.
4-ஆமிடத்தில் அமர்ந்த ராகு, உங்களை ஏறுக்கு மாறாக சிந்திக்கச் செய்ய, குரு ரொம்ப கோபத்தோடு தூக்கி போட்டு மிதித்து விடுவார். ஜாக்கிரதை.
விருச்சிக ராசியினரின் 2-ஆம் வீட்டை, குருவும், சனியும் ஒரு சேர பார்க்கிறார்கள். 2-ஆமிடம் என்பது வாக்கு ஸ்தானம்.
குரு ஜாதகரை தெளிவாக பேச வைக்க முயற்சிக்கும்போது, சனி சரியான பாயிண்டில் குழப்பி விடுவார். கம்பர் என சொல்ல வந்து, திருவள்ளுவர் என உளறச் செய்வார். குரு காசு பணத்தை செழிப்பாக கொடுக்க ஆவன செய்யும்போது, சனியோ, இவ்வளவு பணத்தை மொத்தமாக கொடுத்தால், நம்ம பயலுக்கு கையாளத் தெரியாது. பிட்பிட்டா கொடுக்கவும் என ஆணை பிறப்பித்துவிடுவார். அசையும் சொத்துகளான வண்டி, டிராக்டர், மாடு, ஆடு, கோழி என இவைகளை குரு வாரி வழங்க முற்பட சனி, ரொம்ப புதுசு வாங்கி செலவளிக்க வேண்டாம். எல்லாம் செகண்ட் ஹாண்ட் போதும் எனக்கூறி விடுவார். கோழி வாங்கினால் செலவு என்று, முட்டையை அடைகாத்து குஞ்சாக வளர்க்கலாம் என செம ஐடியா தருவார். குரு, ஞாபக சக்தியை அதிகரிக்க, சனி குறிப்பிட்ட சொற்களை மறக்கடித்து விடுவார். குரு உண்மை மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்த, சனியோ உண்மை பேசி ஒண்ணும் வௌங்கலை என உறுதியாக கூறிவிடுவார். இந்த பார்வைகளால் விருச்சிக ராசியார் ஒரு பெரிய நன்மை பெறுவர். குரு 2-ஆமிடத்தை பார்த்து, வாரி வழங்க, சனியோ தம்படி பணம் செலவளிக்கவிட மாட்டார். அத்தனையும் சேமிப்பில் சேர்ந்து விடும். குரு அன்பாக பேச செய்ய சனி பேசினது போதும் என்று கூறிவிடுவார்.
திருச்செந்தூர் முருகரை வணங்கவும்.