மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். என்றாலும் சனியின் பார்வை யைப் பெறுகிறார். செவ்வா யும் சனியைப் பார்க்கிறார். உங்கள் திட்டம், எண்ணம் இவற்றில் முழுமை பெறாத சூழல்களைச் சந்திக்கலாம். 5-க்குடைய சூரியனும் 3-ல் மறைவு. பிள்ளைகள் பற்றிய எதிர்கால கவலையும் தோன்றும். 2-ல் சுக்கிரன் ஆட்சி என்பது ஒருவகையில் ஆறுதல். கடனோ உடனோ வாங்கி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். கடன் வாங்குவதிலும் ஒரு நியதியைக் கடைப்பிடிக்கவேண்டும். தராதரம் அறிந்து கடன் வாங்கவேண்டும். 2-ஆம் தேதிமுதல் 11-ல் உள்ள சனி வக்ரம் பெறுகிறார். வக்ரத்தில் உக்ரபலம். அது உங்களுக்கு சில சாதகமான சூழல்களைத் தரும். சில நேரம் வேலை அல்லது உத்தியோகத்தில் டென்ஷன், குறித்த நேரத்தில் முடித்துக்கொடுக்க முடியாத சங்கடங்கள் போன்றவை தோன்றலாம். 3-க்குடைய புதன் 4-ல் வக்ரகதியில் சஞ்சாரம். தேக ஆரோக்கியத்தில் மருத்துவச் செலவுகள் வந்து விலகும். 3-ல் உள்ள குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் ஏற்படும். விட்டுப்போன உறவுகளும் மீண்டும் வந்து இணையும். சகோதரர்களுக் குள் நிலவிய சங்கடங்கள் விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஜென்ம ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். 2-ல் குரு நன்மை என்றாலும், 2-க்குடைய புதன் 3-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். பொருளாதாரத்தில் அவ்வப்போது பற்றாக்குறை உண்டாகும். 10-ல் உள்ள சனி 2-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுகிறார். தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் வீண் கற்பனை மன பயம் தோன்றும். குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் சங்கட நிவர்த்திக்கும் இடமுண்டு. 12-க்குடைய செவ்வாய் 4-ல் நிற்கிறார். அவரை 11-ல் நிற்கும் வக்ர சனி பார்க்கிறார். தாயார் சுகம் அல்லது தன்சுகம் பாதிக்கப்படலாம். ஒருசிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் மனை வாங்கும் யோகம் அல்லது வாகன பரிவர்த்தனை யோகம் ஏற்படலாம். ஒருசிலர் வீடு மாறும் நிகழ்வுகளையும் சந்திக்கலாம். மாத பிற்பாதியில் 2-க்குடைய புதன் 2-ல் மாறி ஆட்சி பெறுகிறார். அக்கால கட்டம் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். 8-க்குடைய குரு 8-ஆமிடத்தைப் பார்ப்பதால் அபகீர்த்தி, அவமானம் ஏதும் ஏற்படுமோ என்ற மனபயம் தோன்றலாம். ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் இந்த சோதனைகளை முறியடிக்கலாம். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தொழில் போட்டி, பொறாமைகளை ஏற்படுத்தி விலக்குவார்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 2-ஆமிடமான கடகத்தில் சஞ்சாரம். மாதத் தொடக்கத்தில் வக்ரகதியும் பெறுகிறார். தனவகையில் முன்னேற்றம் உண்டாகும். என்றாலும் சுக

மிதுன ராசிநாதன் புதன் 2-ஆமிடமான கடகத்தில் சஞ்சாரம். மாதத் தொடக்கத்தில் வக்ரகதியும் பெறுகிறார். தனவகையில் முன்னேற்றம் உண்டாகும். என்றாலும் சுக ஸ்தானாதி பதி வக்ரம பெறுவதால் தேகநலத்தில் சிறுசிறு தொந்தரவுகள் வந்து விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றலாம். குடும்ப முன்னேற்றம் கருதி செய்யும் முயற்சிகள் நற்பலன் தரும். ராசியில் குரு நின்று 5-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் ஜூலை 6 முதல் அஸ்தமன நிவர்த்தி அடைவதாலும் பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமான ஏற்பாடு செய்திருந்தால் அது கைகூடும். கணவன்- மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். தொழில் கூட்டணியில் இருப்பவர்களுக்கும் ஒருமித்த கருத்துகள் உருவாகும். உத்தியோகத்தில் ஏதேனும் சங்கடங்கள் நேர்ந்தால் அதுவும் நிவர்த்தி ஆகும். 8-க்குடைய சனி 9-ல் வக்ரம் பெறுகிறார். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற ஜோதிட மொழிக்கேற்ப சில நன்மைகள் உண்டு; தீமைகளும் உண்டு. செவ்வாய், சனி பார்வை உடன்பிறந்தவர்களுக் குள் சங்கடங்கள் நேரலாம். 12-ல் சுக்கிரன் ஆட்சி என்பதால் விரயங்கள் சற்று அதிகமாகக் காணப் படும். மாதப் பிற்பாதி யில் கட்டுக்குள் வரும். ஜென்ம குரு அலைச்சலைத் தந்தாலும் ஆதாயத்தையும் தருவார்.
கடகம்
கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் 12-ல் சஞ்சரிக்கிறார். 6, 9-க்குடைய குருவும் 12-ல் இருக்கிறார். எனவே பகீரதப் பிரயத்தனம் எடுத்தே ஒவ்வொரு செயல்பாடுகளையும் செய்யமுடியும். "ஒன்று நினைக்கின் அது ஒழிந்து மற்றொன்று வரும்'' என்ற பாடலுக்கேற்ப நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து உங்கள் காரியங்களை திசை திருப்பும். வீண் விரயங்கள், மருத்துவச் செலவுகள் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். 12-க்குடைய புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்கலாம். 2-ல் செவ்வாய், கேது அவர்கள் சனியும் பார்க்கிறார். குடும்பத்தில் தேவையற்ற குழுப்பங்கள் சகோதர- சகோதரிகளால் மனவருத்தங்கள் ஆகிய வற்றை சந்திக்க நேரும். 12-ல் நிற்கும் குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு குடியிருப்பு வகையில் இடமாற்றம் உண்டாகும். அட்டமத்துச் சனியும் நடப்பதால் சிலர் உத்தியோக வகையிலும் இடமாற்றம் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் நல்ல மாற்றமாகவும் அமையும். 11-ல் உள்ள சுக்கிரன் ஆடை, அலங்காரப் பொருட்கள் சேர்க்கையைத் தருவார்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 11-ல் சஞ்சாரம். உடன் குருவும் சேர்க்கை. 10-ல் சுக்கிரன் ஆட்சி. எதையும் திட்டமிட்டபடி செய்து அதில் நற்பலனை எதிர்கொள்ளலாம். உத்தியோகம் அல்லது தொழில் சார்ந்தவகையில் முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். என்றாலும் ஜென்மத்திலுள்ள செவ்வாயை சனி பார்ப்பதால் (7-ஆமிடத்தில் சனி) தேகநலனில் அக்கறை காட்டுவது அவசியம். யாரையும் முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. எவற்றிலும் உங்கள் பங்களிப்பு அதிகமாக இருப்பது அவசியம். 11-க்குடைய புதன் 12-ல் சஞ்சரிப்பதால் விரயங்களைத் தவிர்ப்பது சற்று கடினம். "கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே' என்று ஒரு படத்தில் டணால் தங்கவேலு பாடியிருப்பாரே அது மாதிரியான சங்கடங்களும் உண்டாகும். 11-ல் நிற்கும் குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை, துணிவுக்கு குறைவு நேராது. பிள்ளைகளுக்கு நற்காரியங்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நன்மைகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
கன்னி
1-10-க்குடைய புதன் 11-ல் சஞ்சரிக்கிறார். 3-ஆம் தேதிமுதல் வக்ரகதியும் பெறுகிறார். உத்தியோகத்தில் உயர்வு, தொழி-ல் வெற்றி, வளர்ச்சி உண்டாகும். பத்தாமிடத்து குரு பதிமாறச் செய்யும் என்பதற்கேற்ப ஒருசிலர் உத்தியோக மாற்றம் அல்லது உத்தியோகத்தில் இடமாற்றம் போன்றவற்றையும் சந்திக்கலாம். வேலையில் தலைவ-யாக இருந்த மேலதிகாரிகள் மாற்றப்படலாம். 3, 8-க்குடைய செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பது சனி பார்வை நல்லதல்ல. சற்று செலவுகள் கூடுதலாக காணப்படும். 6-ஆமிடத்தை குருவும் பார்ப்பதால் திடீர் மருத்துவச் செலவுகளை தன்வகையிலோ தாயார்வகையிலோ சந்திக்க நேரும். 10-ல் உள்ள சூரியன் அரசு சம்பந்தப்பட்ட வழியில் ஆதாயம் தரும். 9-க்குடைய புதன் 10-ல் மாதக் கடைசியில் மாறுவது தர்மகர்மாதிபதி யோகத்தைத் தரும். அக்கால கட்டம் வாழ்க்கை, தொழில் இரண்டிலும் நன்மைகள் ஏற்படும். 7-ஆமிடத்தை செவ்வாய் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் வாக்குவாதத்தை ஏற்படுத்தலாம்; பிரிவினை நேராது.
துலாம்
துலா ராசிக்கு 9-ல் குரு நின்று ராசியைப் பார்த்தும் பிரயோஜனம் இல்லையே என்ற சங்கடங்கள் கடந்த மாதத்தில் பலரது அனுபவமாக இருந்தது. காரணம் ராசிநாதன் 8-ல் மறைவு. குரு அஸ்தமனம். எனவே எந்தவொரு காரியத்தையும் நினைத்தபடி முடிக்க முடியாமல் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஜூலை 6 முதல் குரு அஸ்தமன நிவர்த்தி. அதன்பிறகு மடை திறந்த வெள்ளம் போல் உங்கள் காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். நீண்ட காலமாக வாங்கிப் போட்ட மனை அல்லது கட்டடங்கள் வகையில் விற்பனைக்காக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். அதன்மூலம் தனவரவுக்கும் யோகமுண்டு. 9-க்குடைய புதன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். மேலும் 3-ஆம் தேதிமுதல் வக்ரகதியில் செயல்படுவது தொழி-ல் புது உத்வேகத்தையும் தரும். வாழ்க்கை, தொழில் இவற்றில் நிலவிய சங்கடங்கள் தீரும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கி மனமகிழ்வுகள் ஏற்படும். திருமணமாகி ரிசு யோகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வாரிசு யோகம் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் திக்பலம் பெறுகிறார்; ராசியையும் பார்க்கி றார். 10-க்குடைய சூரியன் 8-ல் மறைந்த காரணத்தால் உத்தியோகஸ்தர்களுக்கு பளு அதிகமாகக் காணப்படும். தொழில் சார்ந்தவகையில் சந்தேகம், மனபயம் போன்றவை உண்டாகும். என்றாலும் ராசியை பார்க்கும் ராசிநாதனும் 2-க்குடைய குரு 2-ஆமிடத்தையே பார்ப்பதும் உங்கள் மனபயத்திற்கு மருந்திடுவார்கள். தனஸ்தானத்தைப் பார்க்கும் குரு தனவரவைத் தருவார். 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் முதலீட்டு விரயத்தையும் உண்டு பண்ணுவார். மேலும் உத்தியோகத்தினர் அல்லது அரசு அலுவலர்கள் நீண்டநாட் களாக எதிர்பார்த்த இடமாற்றங்களையும் சந்திக்கலாம். 4-ல் உள்ள சனியும் ராகுவும் தேக ஆரோக்கியத்தில் வைத்தியச் செலவுகளை ஏற்படுத்தும். 7-ல் சுக்கிரன் இருப்ப தால் திருமணப் பேச்சுவார்த்தைகள் தாமதப்படலாம். 5-க்குடைய குரு 8-ல் மறைவு. பிள்ளைகளின் நடவடிக்கையால் மனதில் ஆறாத ரணங்களை சந்திக்க நேரும். மனமகிழ்ச்சியும் குறையும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒருவகையில் நன்மை என்றாலும் ஜூலை ஆறு வரை அஸ்தமனமான கதியில் சஞ்சரித்ததால் தேக ஆரோக்கியத்தில் பிரச்சினை, கால் சம்பந்தப்பட்ட உபாதைகள், மனரீதியான பயம் போன்ற பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம். குரு அஸ்தமான நிவர்த்திக்கு பிறகு மேற்கண்டவகையில் சங்கட நிவர்த்தியும் ஏற்படும். குரு ராசியைப் பார்ப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். 3-ல் உள்ள சனியை, ராகுவை, 9-ஆமிடத்து செவ்வாயும் கேதுவும் பார்க்கிறார்கள். சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பார்த்துக்கொள்கிறார்கள். சில புதிய பிரச்சினைகள் உண்டாகலாம். குறிப்பாக பிள்ளைகள்வழியில் மனத் தொந்தரவுகள் ஏற்படலாம். அதற்கு உங்களின் அணுகுமுறையும் ஒரு காரணமாக அமையலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவெடுப்பது நன்மை தரும். 6-ல் சுக்கிரன் ஆட்சி. போட்டி, பொறாமை ஆகியவற்றை சந்திக்கலாம். 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு இவற்றை சமாளிக்கும் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் தருவார்.
மகரம்
மகர ராசிநாதன் 2-ல் சஞ்சாரம். ஜூலை 2-ஆம் தேதிமுதல் வக்ரகதியில் சஞ்சாரம். 7-ல் உள்ள புதனும் வக்ரகதியில் 3-ஆம் தேதிமுதல் சஞ்சாரம். ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடைபெறுகிறது. சாண் ஏற முழம் வழுக்கிய நிலையாக எதிர்பார்த்த காரியங்களில் ஏமாற்றம். ஒரே வேலை இரண்டுமுறை செய்வதால் ஏற்படும் கால நேர விரயம், பொருளாதார விரயம் போன்றவை உண்டாகலாம். 11-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு. சனி செவ்வாய் பார்வை. குடும்பத்தில் குழப்பம், பொருளாதாரத்தில் பற்றாக்குறை, ஆதாயமற்ற அலைச்சல், தவளை தன்வாயால் கெடும் என்பது மாதிரியான உங்கள் பேச்சே உங்களுக்கு பிரச்சினைகளைத் தருதல் முதலான சங்கடங்கள் ஏற்படலாம். 12-க்குடைய குரு 12-ஆமிடத் தைப் பார்ப்பதால் திடீர் செலவுகள் வந்துபோகும். ஏழரைச்சனி நடப்பதால் உத்தியோகவகையில் வெளியூர் அல்லது வெளிமாநில, வெளிநாட்டு யோகம் ஏற்பட்டால், தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். மேற்கூறியவகையில் ஏழரைச்சனிக்கு பரிகாரமாகவும் அமையும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் சஞ்சாரம். என்னதான் சனி ராசி நாதன் என்றாலும் அவர் விரயாதிபதி யுமாக அல்லவா இருக்கிறார். எனவே நன்மை- தீமைகளில் பாரபட்சம் பார்க்க மாட்டார். "அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்'' என்பதற்கிணங்க உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்து நன்மைகளைத் தருவார். என்றாலும் 2-க்குடைய குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் புத்தி சாதுர்யத்தால் பல காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம். ஜென்மச்சனியை செவ்வாயும் பார்ப்பதால் சனியும் செவ்வாயைப் பார்ப்பதால் உடல்நலத்தில் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம். ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் திருமண யோகத்தைத் தாமதப்படுத்தலாம். ஜெனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் திருமண வாய்ப்புகள் உண்டாகும். கணவர்வழி உறவினர்களால் பனிப்போர் ஏற்படும். 11-க்குடைய குரு 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் காரிய அனுகூலம் கிட்டும். கடந்தமாதம் நடைபெறாமல் இருந்த காரியங்கள் இம்மாதம் நடைபெறும். ஊர்மாற்றத்தையும் எதிர்பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்கும் ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. ராசிநாதன் குரு 4-ல் சஞ்சாரம். அஸ்தமனம். எனவே வாகனம் சார்ந்த விரயம், குடியிருப்பு சம்பந்தமான விரயம் போன்றவை ஏற்படலாம். 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உத்தியோகம், வேலை இவற்றில் இடமாற்றங்களைச் சந்திக்கலாம். 2-க்குடைய செவ்வாய் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத்தினருக்காக ஒருசில வகையில் செலவுகள் உண்டாகும். அது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகவும் அமையும். அதேசமயம் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் அமையும். 9-க்குடைய செவ்வாய் 9-ஆமிடத்தையே பார்ப்பதால் பூர்வீகம் மற்றும் தகப்பனார்வழியில் அவர் விட்டுச் சென்ற பணிகளை நீங்கள் முயற்சி எடுத்து நிறைவேற்ற அதிகாரம் உண்டு. அதேசமயம் பிள்ளைகள்வகையில் தள்ளிப்போகும் நற்காரியங் களால் மனமகிழ்ச்சி குறைபாடுகள் தோன்றலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலை விரிவுபடுத்தும் சிந்தனைகள் மேலோங்கும். அதற்கான முயற்சியும் கைகூடும்.
செல்: 99440 02365