பொதுவாக வேலை வாய்ப்பினை பல கோணங்களில் நிச்சயிக்கலாம். ஜோதிடரீதியாக பிறந்த நட்சத்திரம், ராசி, லக்னம் இதனை மூலமாக வைத்து தெரிவு செய்யலாம். அது தெரியாதோர் கையில் காணப்படும் உள்ளங்கை ரேகையை ஆய்வுசெய்து சாஸ்திரரீதியாக அறிந்து செயல்படலாம். இதன் உபயோகம் யாதெனில் நமக்கு பிறவிப்பயனாக ஒத்துவராத வேலையில் ஈடுபட்டு பல வருடங்களை வீணாக்கிவிட்டு மனம்போன போக்கில் பணிகளை தெரிவுசெய்து இறுதியில் கால விரயத்தை மட்டும் எண்ணி எண்ணி பெருமூச்சு விடுவதைத் தவிர்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டைவிட இருபதாம் நூற்றாண்டில் பலவிதமான வேலைகள் உருவாகி, விஞ்ஞானம் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இங்கே நாம் ஆய்வு செய்யப்போவது மாதர்களுக்கு (பெண்கள்) உடல்ரீதி யாகவும் அவர்களின் மனோதிடம் மூலமாகவும் செயல்பாட்டிற்கு ஏற்றவை எந்தெந்த வேலைகள் என பார்ப்போம்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு...
கணிதம் சார்ந்த வேலைகள், ஆடிட்டிங்- ஓவியம், நீர்சார்ந்த இலாக்காக்களில் வேலை, அறநிலையத்துறை, மால்களில், வியாபார இடங்களில், சேல்ஸ், அந்நிய நாட்டு வியாபார தொடர்பு, வைத்தியத்துறை இவையாவும் பலன் தரும்.
பரணியில் பிறந்தோர்
கலைத்துறை, சினிமா, நாட்டியம், சங்கீதம், நடனம், பேன்சி பொருள் விற்பனை, பியூட்டி பார்லர், துணி வியாபாரம், துரித உணவு, கேண்டீன், ஆபரணஷோ பொருட்கள் விற்பனை கூடம் பொருத்தமானது.
கார்த்திகையில் பிறந்தோர்
நீதிமன்ற, உத்தியோகம், அரசு உத்தியோகம், வன பரிபாலனம், கல்லூரி, பள்ளிகள், காவல்துறை, கஸ்டம்ஸ், ஆடிட்டிங், ரயில்வே, தபால் தந்தி, உத்தமம்.
ரோகிணியில் பிறந்தோர்
குளிர்பான தொழிற்சாலை, ஐஸ்கிரீம் வியாபாரம். பயிர் தோட்டம், ஆர்கானிக் காய்கள், கனிகள், நவரத்தினம், கதை, கட்டுரை, வெண்மை நிற பொருட்கள் உற்பத்தி லாபமானது.
மிருகசீரிடத்தில் பிறந்தோர்
சென்னிற பொருட்கள் வியாபாரம், ரீயல் எஸ்டேட், கால் நடைகளுக்கான உபகரண பொருட்கள், ஹேண்ட் பேக் போன்ற தோல் பொருட்கள் பொருத்தமானது.
திருவாதிரையில் பிறந்தோர்
வெளிநாட்டு பொருட்கள், (எக்ஸ்போர்ட், இம்போர்ட்) மூலிகை எண்ணெய், வாகன பராமரிப்பு, உபகரணம், தேவாலயம் கோவில்களுக்கு உகந்த பொருள் விற்பனை, வீட்டில் டியூஷன் நடத்தலாம்.
புனர்பூசத்தில் பிறந்தோர்
ஈடுவாங்கி பைனான்ஸ் கம்பெனி, பர்னிச்சர், சிறுதானிய வியாபாரம், பால் பண்ணை, பட்டு, பருத்தி விற்பனை, பீதாம்பரம், குடைகள், தெய்வீக பொருட்கள், சமையல் உபகரணம் வாடகைக்கு விடலாம்.
பூசத்தில் பிறந்தோர்
கறுப்பு நிற பொருட்கள், ஏற்றுமதி- இறக்குமதி, மருந்து பொருட்கள், மெடிக்கல் ஷாப், ஆயில் கம்பெனி, டிரான்ஸ் போர்ட், துரீத உணவு கடைகள், டெயிலரிங், பிரிவும் பொருத்தமானது.
ஆயில்யத்தில் பிறந்தோர்
பத்திரிகை, அலுவலக வேலை, அச்சு எந்திர வேலைகள், ஆடிட்டர், வழக்கறிஞர்கள், அயல்நாட்டு தூதரகம், பச்சைநிறப் பொருட்கள் தயாரிப்பு விற்பனை, முத்து விற்பனை ராசியானது.
மகத்தில் பிறந்தோர்
கம்ப்யூட்டர் துறை, கணிதம், லீகல் அட்வைசர், ஷேர் மார்க்கெட், அலுவலக வேலை பிரசுரம், பிரசுரம், கம்பளி விற்பனை தயாரிப்பு, மூலிகை, சித்த வைத்தியம் நடத்தலாம்.
பூரத்தில் பிறந்தோர்
கேன்டீன், வீட்டு உபகரணம் விற்பனை, வெள்ளி, அலுமினிய பொருள் விற்பனை, கல்யாண மண்டபம், விளம்பர ஸ்தாபன வேலை, புண்ணிய ஸ்தல, சுற்றுலா அழைத்து செல்லல், அரசியல் புகழ் தரும்.
உத்திரத்தில் பிறந்தோர்
நீதிமன்றம், கருவூலம், கஸ்டம்ஸ், வருமானவரிதுறை, ஆடிட்டிங், சி.பி.ஐ ரெவன்யூ, பள்ளி, கல்லூரி விரிவுரையாளர் பயிற்சி, உடற் பயிற்சி ஆசிரியர் நலம் தரும்.
அஸ்தத்தில் பிறந்தோர்
உணவு பண்ட உற்பத்தி, தரகர், ஜூவல்லரி, பொது நலத்தொண்டு, சுகர் இண்டஸ்ரியல் வேலை வாய்ப்பு, லாட்டரி போன்ற திடீர் பணவரவு ஆலோசனை கூறல்.
சித்திரையில் பிறந்தோர்
எஸ்டேட், மரவியாபாரம், செந்நிற பொருட்கள் விற்பனை, ஏலக்காய், கிழங்கு வகைகள், கால்நடைக்கு தேவையான பொருள் விற்பனை, தெய்வீகப் பொருட்கள் உற்பத்தி வியாபாரம் செய்யலாம்.
சுவாதியில் பிறந்தோர்
எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர், வினோதமான வேடிக்கை பொருட்கள் உற்பத்தி விற்பனை, விளையாட்டு துறை, நீச்சல் நெடுஞ்சாலைத்துறை, அறநிலையம், தேவாலைய வேலைகள் செய்யலாம்.
விசாகத்தில் பிறந்தோர்
வங்கி, எல்.ஐ.சி, தியேட்டர் கலை நிறுவனம், போட்டோ கிராபி, சின்னத்திரை சீரியல் தயாரிப்பு, பண்ணை பயிர், சுபகாரிய பொருட்கள் சப்ளை, கல்வி, ஜோதிட வழிகாட்டல் நன்று.
அனுஷத்தில் பிறந்தோர்
கருப்புநிறப் பொருள் விற்பனை, தயாரிப்பு, அயல்நாட்டு பொருள் விற்பனை, சிறு தானிய வியாபாரம், ஆட்களை வேலைக்கு அனுப்புதல் துரித உணவும் தயாரிக்கலாம்.
கேட்டையில் பிறந்தோர்
பச்சைநிறப் பொருட்கள் விற்பனை, பப்ளிசிட்டி, எழுத்து வேலை, கேபிள் டி.வி., தூதுவர், கொடுக்கல்- வாங்கல், நீதிமன்ற பணி, சித்த வைத்தியம், நர்சரி செடி வியாபாரம் நன்று.
மூலத்தில் பிறந்தோர்
ஓவியம், கணிதம், ஞான மார்க்க வழிகாட்டல், கண்ணாடி பொருட்கள், கறுப்புநிற கூலிங்கிளாஸ், பிளாஸ்டிக் பொருட்கள், கம்ப்யூட்டர், கைபேசி, வியாபாரம் செய்யலாம்.
பூராடத்தில் பிறந்தோர்
வெண்ணிறப் பொருட்கள் வியாபாரம், கட்டில், மெத்தை வியாபாரம், பழவகைகள் டிரை புரூட்ஸ், மொத்த வியாபாரம் கியாஸ் ஏஜென்ட், கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ், பியூட்டி பார்லர் செய்யலாம்.
உத்திராடத்தில் பிறந்தோர்
மண்ணெண்ணை டீலர், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடலாம். பொதுநல சேவை, சிற்றுண்டி கடை, தபால் துறை, டிரான்ஸ்போர்ட், ரயில்வே, டிக்கெட் புக் செய்தல் போன்றவை நன்று.
திருவோணத்தில் பிறந்தோர்
ஓவியம், வாசனை பொருள் வியாபாரம், ஏற்றுமதி- இறக்குமதி பர்னிச்சர், தயாரிப்பு, லவ் பேர்ட்ஸ் வளர்ப்பு, வீடு தரகு, ரியல் எஸ்டேட், குடை, காலணி வியாபாரம்.
அவிட்டத்தில் பிறந்தோர்
மின்சார உபகரணம், கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ், மெடிட்டேஷன் கற்று கொடுத்தல், யோகா, மேனேஜ்மெண்ட், முதலாளிக்கு (பி.ஏ.) ஆலோசகர் செய்யலாம்.
சதயத்தில் பிறந்தோர்
பிளாஸ்டிக் ஷீட், மொத்த வியாபாரம், ஏற்றுமதி- இறக்குமதி கப்பல்துறை சர்வேயர், நீச்சல் பயிற்சி, ஆசிரியர் ஸ்பெகுலேஷன், நவீன பொருட்கள் உற்பத்தி வியாபாரம் செய்யலாம்.
பூரட்டாதியில் பிறந்தோர்
கல்யாண மண்டபம், நெல் அரிசி மாவு விற்பனை, சுப காரியங்களுக்கான பொருட்கள் தயாரிப்பு, பால்பண்ணை, நறுமண பொருட்கள், பர்னிச்சர் வாடகைக்கு தருதல் மால் பொருத்தமானது.
உத்திரட்டாதியில் பிறந்தோர்
சிவப்புநிறப் பொருட்கள், வெண்கல பித்தளை, அலுமினிய பொருள் விற்பனை, கால்நடை வளர்ப்பு, விற்பனை, பனம் பொருட்கள் விற்பனை உணவு பண்டம் தயாரிப்பு விற்பனை நன்று.
ரேவதியில் பிறந்தோர்
ஜோதிடம், வழக்கறிஞர், லீகல் அட்வைசர், மருத்துவப் பொருட்கள் விற்பனை, மெடிக்கல் ஷாப், வெளிநாட்டு தூதுவர், அச்சு எந்திர வியாபாரம், பிரச்சார போதகர் நன்று.
செல்: 93801 73464