மேஷம்
2026-ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு 2-ஆவது ராசியிலும், 6-ஆவது லக்னத்திலும் (கன்னி) பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாய் தொடக்கத்தில் 9-லும் பிறகு 10-ஆமிடமான மகரத்திலும் உச்சம் பெறுகிறது. ராசிநாதனுக்கு குருபார்வை. 11-ஆமிடத்துக்கும் குருபார்வை. எனவே இம்மாதம் சில நன்மைகளையும் காரிய அனுகூலங்களையும் எதிர்பார்க்கலாம். 3-ல் வக்ரமாக இருக்கும் குரு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகபடுத்துவார். என்றாலும் சில நேரம் கற்பனை பயத்தையும் எதிர்காலம் பற்றிய கவலைகளையும் தருவார். 15-ஆம் தேதிமுதல் 10-ல் வரும் சூரியன் உத்தியோகம் மற்றும் தொழில்துறையில் சில நன்மைகளை ஏற்படுத்துவார். 2, 7-க்குடைய சுக்கிரனும் 15-ஆம் தேதிமுதல் சூரியனுடன் சேர்க்கை. எனவே தன வரவு உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமையுணர்வு ஏற்படும். அதற்கு 7-ஆமிடத்தைப் பார்க்கும் குருவும் காரணமாக அமைவார். 11-ல் உள்ள சனி முன்னேற்றச் சூழ்நிலைகளை உருவாக்குவார். பிள்ளைகள் பற்றிய கவலை மாறும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.
ரிஷபம்
உங்கள் ராசியிலும், மிருகசீரிட நட்சத்திரத்திலும், 5-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது 2026-ஆம் ஆண்டு. எனவே இம்மாதம் மதிப்பு, மரியாதை, அஸ்தஸ்து உயருதல் போன்ற நன்மைகளை சந்திக்கலாம். ஒரேநாளில் ஒபாமா ஆக முடியாவிட்டாலும் உங்கள் முயற்சிக்கேற்ப பலன்கள் நற்பலன்களாக அமையும். 2-ல் உள்ள குரு பொருளாதார நிலையை மேம்படுத்தும். திருமணமாகாத இளைஞர்- இளைஞிகளுக்கு திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். 5-ஆவது லக்னம் என்பது திரிகோணம். எனவே எண்ணிய திட்டங்கள் செயல்வடிவம் பெறும். கருதிய காரியங்கள் கைகூடும். 2, 5-க்குடைய புதன் 11-ஆம் தேதிமுதல் 9-ல் மாறுகிறார். அதன்பின் ராசிநாதன் சுக்கிரனும் மாறுகிறார். அது ஒருவகையில் ப்ளஸ்தான். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடந்தாலும் கோட்சாரம் சாதகமாக அமைவதால் மிகப்பெரிய சங்கடங்களுக்கு இடம் ஏற்படாது. தகப்பனார்வழி உறவில் கடந்த காலத்தில் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் உங்கள் நடவடிக்கையில் பாதிப்பு நிகழாது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று வழிபடவும்.
மிதுனம்
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 12-ஆவது ராசியிலும், 4-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. இம்மாதம் ராசிநாதன் புதன் தொடக்கத்தில் 7-ஆமிடத்திலும், பிறகு 8-ஆமிடத்துக்கும் (மகரம்) மாறுகிறார். 12-க்குடைய சுக்கிரனும் அங்கு சேருகிறார். ஆக, வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. பூமி, மனை சம்பந்தப்பட்ட விரயமும்
மேஷம்
2026-ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு 2-ஆவது ராசியிலும், 6-ஆவது லக்னத்திலும் (கன்னி) பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாய் தொடக்கத்தில் 9-லும் பிறகு 10-ஆமிடமான மகரத்திலும் உச்சம் பெறுகிறது. ராசிநாதனுக்கு குருபார்வை. 11-ஆமிடத்துக்கும் குருபார்வை. எனவே இம்மாதம் சில நன்மைகளையும் காரிய அனுகூலங்களையும் எதிர்பார்க்கலாம். 3-ல் வக்ரமாக இருக்கும் குரு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகபடுத்துவார். என்றாலும் சில நேரம் கற்பனை பயத்தையும் எதிர்காலம் பற்றிய கவலைகளையும் தருவார். 15-ஆம் தேதிமுதல் 10-ல் வரும் சூரியன் உத்தியோகம் மற்றும் தொழில்துறையில் சில நன்மைகளை ஏற்படுத்துவார். 2, 7-க்குடைய சுக்கிரனும் 15-ஆம் தேதிமுதல் சூரியனுடன் சேர்க்கை. எனவே தன வரவு உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமையுணர்வு ஏற்படும். அதற்கு 7-ஆமிடத்தைப் பார்க்கும் குருவும் காரணமாக அமைவார். 11-ல் உள்ள சனி முன்னேற்றச் சூழ்நிலைகளை உருவாக்குவார். பிள்ளைகள் பற்றிய கவலை மாறும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.
ரிஷபம்
உங்கள் ராசியிலும், மிருகசீரிட நட்சத்திரத்திலும், 5-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது 2026-ஆம் ஆண்டு. எனவே இம்மாதம் மதிப்பு, மரியாதை, அஸ்தஸ்து உயருதல் போன்ற நன்மைகளை சந்திக்கலாம். ஒரேநாளில் ஒபாமா ஆக முடியாவிட்டாலும் உங்கள் முயற்சிக்கேற்ப பலன்கள் நற்பலன்களாக அமையும். 2-ல் உள்ள குரு பொருளாதார நிலையை மேம்படுத்தும். திருமணமாகாத இளைஞர்- இளைஞிகளுக்கு திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். 5-ஆவது லக்னம் என்பது திரிகோணம். எனவே எண்ணிய திட்டங்கள் செயல்வடிவம் பெறும். கருதிய காரியங்கள் கைகூடும். 2, 5-க்குடைய புதன் 11-ஆம் தேதிமுதல் 9-ல் மாறுகிறார். அதன்பின் ராசிநாதன் சுக்கிரனும் மாறுகிறார். அது ஒருவகையில் ப்ளஸ்தான். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடந்தாலும் கோட்சாரம் சாதகமாக அமைவதால் மிகப்பெரிய சங்கடங்களுக்கு இடம் ஏற்படாது. தகப்பனார்வழி உறவில் கடந்த காலத்தில் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் உங்கள் நடவடிக்கையில் பாதிப்பு நிகழாது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று வழிபடவும்.
மிதுனம்
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 12-ஆவது ராசியிலும், 4-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. இம்மாதம் ராசிநாதன் புதன் தொடக்கத்தில் 7-ஆமிடத்திலும், பிறகு 8-ஆமிடத்துக்கும் (மகரம்) மாறுகிறார். 12-க்குடைய சுக்கிரனும் அங்கு சேருகிறார். ஆக, வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. பூமி, மனை சம்பந்தப்பட்ட விரயமும் உண்டாகும். அல்லது சொத்து பரிவர்த்தனை ஏற்படலாம். ஜென்மத்திலுள்ள குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் அவ்வப்போது சோர்வு, ஆரோக்கிய குறைவு உண்டாகலாம். 3-ல் உள்ள கேது தைரியம், தன்னம்பிக்கை இவற்றைத் தந்தாலும், உடன்பிறந்த வகையில் நிலவும் சங்கடங்கள், பிரச்சினைகள் மனக் குழப்பத்தைத் தரும். ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் சிலர் வீடு அல்லது மனை வாங்கலாம். 14-ஆம் தேதிமுதல் 11-க்குடைய செவ்வாய் 8-ல் உச்சமாக மாறி 2-ஆமிடத்தைப் பார்ப்பது நல்லது. விரயத்திலும் ஒரு வரவு உண்டு. 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமண வாய்ப்பைத் தருவார்.
பரிகாரம்: புதன்கிழமையன்று சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
கடகம்
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 11-ஆவது ராசியிலும், (ரிஷபம்) 3-ஆவது லக்னத்திலும் (கன்னி) பிறக்கிறது. லக்னநாதன் புதன் தொடக்கத்தில் 6-ல் நின்றாலும் 11-ஆம் தேதிமுதல் கடக ராசிக்கு 7-ல் மாறி ராசியைப் பார்க்கிறார். சுக்கிரனும் அவருடன் பின்தொடர்ந்து இணைகிறார். எனவே, "கழுவின மீனில் நழுவின மீன்போல்' சில சந்தர்ப்பங்களில் தப்பிக்கலாம். அட்டமத்துச்சனி கடக ராசியினரை ஒரு புறம் வாட்டி வதைத்தாலும், 11-ஆவது ராசியில் பிறக்கும் புத்தாண்டு காரிய அணுகூலத்தைத் தரும். 12-ஆமிடத்து வக்ர குரு சிலருக்கு இடமாற்றத்தைத் தரும். அப்படி இடமாற்றம் ஏற்படாத சிலருக்கு தேக சுகத்தில் குறையை ஏற்படுத்தி ஒரே இடத்தில் உட்கார வைத்துவிடும். மேற்கூறிய பலன் நன்மையா- தீமையா என்ற சந்தேகம் வரலாம். அதாவது- 11-ஆவது ராசி நன்மை, 12-ஆமிடத்து குரு, அட்டமத்துச்சனி இவை சுமாரான பலனைத் தான் தரும். மேலும் மூல காரணகர்த்தா அவரவர் கர்மவினையைப் பொறுத்தது.
பரிகாரம்: சனிக்கிழமை கால பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடவும்.
சிம்மம்
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 10-ஆவது ராசியிலும், 2-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. மேலும் 11-ஆமிடத்தில் வக்ர குரு சஞ்சாரம். உத்தியோகம், தொழில் இயக்கம் இவை சீராக இயங்கும். ஒருசில நேரம் வேகம் இருந்தாலும் சிலநேரம் வேகம் குறைவாகக் காணப்படும். 11-ல் உள்ள குரு 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளுக்கு வேலை சம்பந்தமாகவோ அல்லது திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகளோ மாறும். உத்தியோக வாய்ப்பு கைகூடும். தொழில்துறையிலும் நல்ல சிப்பந்திகள் அமையும். ராசிநாதன் சூரியன் 5-ல் நிற்க குருவின் பார்வையும் அங்கு கிடைப்பது நன்மை. புதிய வேலையில் சேர்ந்தவுடன் நற்பெயரும் மதிப்பும் கிடைக்கப்பெறலாம். 4, 9-க்குடைய செவ்வாய் 6-ல் உச்சம் பெறுவதால் ரியல் எஸ்டேட், கட்டடத் தொழில் செய்வோருக்கு கடனுதவியும் கிடைக்கும். தந்தையாரால் ஆதரவும் உண்டாகும். 7-ல் உள்ள சனி கணவன் அல்லது மனைவிக்கு சில தொல்லைகளைத் தரலாம்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு செம்பருத்தி பூசாற்றி வழிபடவும்.
கன்னி
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 9-ஆவது ராசியிலும், ஜென்ம லக்னத்திலும் (கன்னியில்) பிறக்கிறது. 4, 7-க்குடைய குரு 10-ல் வக்ரமாக சஞ்சாரம். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மிக யாத்திரையும் மேற்கொள்ள நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வில்லாத உழைப்பு உண்டாகும். என்றாலும் அதற்கேற்ற தனவரவும் ஏற்படும். 12-க்குடைய சூரியன் 4-ல் நிற்பதால் தாயாருக்கு மருத்துச் செலவு, குடியிருக்கும் வீட்டில் வீண் விரயம் அல்லது மனையை விற்பது போன்ற பலன்களை சந்திக்கலாம். 12-ல் உள்ள கேது வெளிநாட்டு வேலைக்கு அல்லது வெளிமாநில வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு போட்டி, பொறாமையை ஏற்படுத்துவார். அதேசமயம் வக்ரம் என்பதால் அதற்குண்டான தீர்வும் அமையும். கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது சச்சரவு தோன்றி விலகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று பெருமாளுக்கு நெய்தீபமேற்றி வழிபாடு செய்யவும்.
துலாம்
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 8-ஆவது ராசியிலும், 12-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. லக்னநாதன் புதனும் ராசிநாதன் சுக்கிரனும் 3-ல் சஞ்சாரம். ராசிக்கு 9-ல் உள்ள குருவின் பார்வை 8-ஆமிடம், 12-ஆமிடம் மறைவு ஸ்தானம். எனவே விரயம் இல்லாமல் ஆதாயம் இல்லையென்ற சூழ்நிலை என்றா லும் குருபார்வை ராசிக்கு கிடைப்பதால் முயற்சியில் தளர்ச்சி இல்லை. ராசிநாதன் குரு பார்க்கிறார். முக்கிய அந்தஸ்துள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். அதன்மூலம், உங்களின் அந்தஸ்தும் உயரும். 3-ஆமிடத்தை 3-க்குடையவரே பார்ப்பதால் எந்தத் தடை வந்தாலும் எதிர்த்து நின்று போராடும் தன்னம்பிக்கை குறையாது. உடன்பிறந்தவகையில் எச்சரிக்கையுடனும் கவனமுடன் செயல்படுவது அவசியம். யாருக்கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்டாம். 5-ல் உள்ள ராகு சில நேரம் உங்களது திட்டத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் குரு 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். திட்டத்தில் தாமத பலனை சந்திக்கலாம். 11-ல் உள்ள கேது வழக்கு, வியாஜ்ஜியங் களில் சாதகமான பலன்களைத் தருவார். குடுப்பத்தில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் சரபேஸ்வரரை வழிபடவும்.
விருச்சிகம்
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 7-ஆவது ராசியிலும், 11-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 7- கேந்திரம். 11- என்பது ஜெய ஸ்தானம். 7-க்குடைய சுக்கிரனை குரு பார்க்கிறார். எனவே முயற்சி செய்யும் காரியங்களில் முன்னேற்றத் தையும், வெற்றியையும் எதிர்பார்க்கலாம். 8-ல் குரு வக்ரகதியில் நின்றாலும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தன ப்ராப்திக்கு இடமுண்டு. மாதப் பிற்பாதியில் 10-க்குடைய சூரியன் 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் அக்காலகட்டம் தர்மகர்மாதிபதி யோகம் சற்று வழிநடத்தும். தொழில், உத்தியோகம் நல்லமுறையில் நடப்பதை சந்திப்பவர்களுக்கு குடும்பத்தில் நிம்மதிக்குறைவு உண்டாகலாம். 5-க்குடையவர் 8-ல் மறைவதால் பிள்ளைகள்வழியில் மனக்கவலை, சஞ்சலம், அவர்களுக்கு நடக்க வேண்டிய சுபகாரியங்கள் தாமதமாவது இவையெல்லாம் மனதை வருத்தலாம். 4-ல் உள்ள சனி, ராகு தேக சுகத்தில் சௌகரியக் குறைவைத் தந்தாலும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. சிலர் குடியிருப்பு மாற்றத்தை சந்திக்கலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மனை வழிபடவும்.
தனுசு
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 6-ஆவது ராசியான ரிஷபத்திலும், 10-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. 6 என்பது ரோகம், ருணம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். 10 தொழில், ஜீவித ஸ்தானம், தொழில் துறையில் உள்ளவர்களுக்கு கடன் உண்டாகும். அது தொழிலுக்குண்டான சுபக்கடன் ஆகும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளும் செயல்படும். அதே சமயம் போட்டி, பொறாமைகளும் அதிகமாகும். உடல்நிலையில் சற்று கவனம் தேவை. 3-ல் உள்ள ராகு உடன்பிறந்தவழியில் கருத்து வேறுபாடுகளையும் தந்து விரிசலைத் தருவார். யார் நல்லவர்- கெட்டவர் என்ற சிந்தனையை விட்டுவிட்டு சற்று நிதானமாக ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. ராசியை ராசிநாதன் பார்ப்பது ஒரு பலம். 7-ல் வக்ரகதியில் செயல்படுவதால் கணவன் அல்லது மனைவியிடையே வாக்குவாதம் அல்லது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எழலாம். உத்தியோகத்தினருக்கு மதிப்பு, மரியாதை உயரும். மேலதிகாரிகளிடையே பாராட்டுப் பெறலாம். தர்மகர்மாதிபதி யோகம் நன்றாக வழிநடத்தும்.
பரிகாரம்: நவகிரக குருபகவானை வியாழக்கிழமை வழிபடவும்.
மகரம்
2026-ஆண்டு உங்கள் ராசிக்கு 5-ஆவது ராசி ரிஷபத்திலும், 9-ஆவது லக்னம் கன்னி லக்னத்திலும் பிறக்கிறது. ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 5-க்குடைய சுக்கிரனும், 9-க்குடைய புதனும் 12-ல் மறைவு. எவ்வளவு முயற்சி செய்தாலும், உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த புத்தாண்டு ஒரு விமோசனத்தைத் தரும். 5, 9-க்குடையவர்கள் மறைந்தாலும் குருபார்வையைப் பெறுவதால் மறைவு தோஷம் பாதிக்காது. ஏழரைச்சனி முடியும் நேரத்தில் நிச்சயம் நன்மையைத் தருவார். இதில் சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடப்பவர்களுக்கு விதிவிலக்கு. வீண் அவப்பெயர் சங்கடத்தை சந்திக்க நேரும். 15-ஆம் தேதிமுதல் 5-க்குடையவர் அவர் ஸ்தானத்திற்கு 9-ல் வருவது சிறப்பு. கேந்திராதிபதி திரிகோணம் ஏறுவது நன்மையல்லவா! தொழில்துறையில் திடீர்மாற்றம் நிகழும். அது முன்னேற்றத்திற்கான படியாக அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமை காலபைரவரை வழிபடவும்.
கும்பம்
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 4-ஆவது ராசியிலும், 8-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 4- தாய் ஸ்தானம், தன்சுகம், வீடு, மனை பூமி, வாகனம் சம்பந்தப்பட்ட ஸ்தானம். ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடந்தாலும் மேற்கண்ட வகையில் நற்பலன்கள் கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் அமைப்பும் உண்டாகும். இவையெல்லாம் குரு ராசியைப் பார்க்கும் பெருமையால் நடைபெறும். அதேசமயம் 8-ஆவது லக்னத்திலும் அல்லவா ஆண்டு பிறக்கிறது. எதிலும் நிதானமும் பொறுமையும் அவசியம். வாகனத்தில் கவனம் தேவை. ஜனன ஜாதகத்தில் 8-க்குடைய தசாபுக்தி நடந்தால் அபகீர்த்தி, அவமானம், இழப்பு இவற்றை சந்திக்கலாம். 14-ஆம் தேதிமுதல் 3, 10-க்குடைய செவ்வாய் 12-ல் உச்சம் பெறுகிறார். உடன்பிறந்த உறவுகளால் மகிழ்ச்சியும் ஆதரவும் உண்டாகும். உத்தியோகத்தினருக்கு இடமாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படலம். ஜென்ம ராகு சப்தம கேது திருமண தாமதத்தைத் தரும். தந்தையாருக்கு உடல்நலத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சனேயரை வழிபடவும்.
மீனம்
2026-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 3-ஆவது ராசியிலும், 7-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. ராசிநாதன் 4-ல் வக்ரம். கேந்திர லக்னத்தில் ஆண்டு பிறப்பதும் லக்னநாதனை குரு பார்ப்பதும் ஒரு வகையில் நன்மைதான் என்றாலும் புதிய ஒப்பந்தங்கள் முடிவாதில் தாமதம் ஏற்படும். அல்லது நடந்துகொண்டிருக்கும் தொழி-ல் சிப்பந்திகள் பிரச்சினைகளைச் சந்திக்கலாம். அவ்வப்போது உங்கள் உடல்நலனிலும் சௌகரியக்குறைவு, அசதி, சோர்வு போன்றவையும் ஏற்படும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் மாறி அங்கு உச்சமாக சஞ்சரிக்கும் செவ்வாயுடன் இணையும்போது காரிய அனுகூலத்தை எதிர்பார்க்கலாம். ஏழரைச்சனியில் விரயச்சனி. ஒருசிலருக்கு தொழில் விரயத்தை உண்டாக்கினா லும் நண்பர்கள்வகையில் சகாயம் ஏற்பட இடமுண்டு. ராசிநாதன் 4-ல் வக்ரம்பெற்று 12-ஆமிடத்தையும் அங்குள்ள சனியையும் பார்ப்பதால் சிலர் குடியிருப்பு அல்லது உத்தியோகம் சம்பந்தப்பட்ட வகையில் மாற்றம் நிகழும். படிக்கும் மாணவ- மாணவியருக்கு கவனச் சிதறல் உருவாகும். விடாமுயற்சி தேவை.
பரிகாரம்: காலபைரவர் மற்றும் ஆஞ்சனேயரை வழிபடவும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us