Advertisment

படைப்பாளிகள் சமூகத்தின் மனசாட்சியாக இருந்தாலே போதும்! - கவிஞர், பேச்சாளர் மதுக்கூர் இராமலிங்கம் நேர்காணல்  சந்திப்பு : புதுகை முருகுபாரதி

madakour

நீங்கள் பிறந்த விக்ரமம் கிராமத்தின் அந்த நாள் நினைவுகள் குறித்து...

நான் பிறந்த விக்ரமம் கிராமம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஓர் அழகிய கிராமமாகும். அன்றைய நாளில் நீர்வளம் மிகுந்த ஊரது. மழைக்காலங்களில் கிணற்றில் கைகளாலேயே தண்ணீர் அள்ளிக் குடிக்கும் அளவுக்கு நீர் ததும்பிக் கிடக்கும். மேலும் நல்ல மழை பெய்யும்போது, தெருவெங்கும் தண்ணீர் பாயும். 

Advertisment

அந்த தண்ணீரில், மீன்கள் துள்ளியபடி மிதந்துவரும். கையாலேயே மீன்களை அள்ளலாம். ஊரைச் சுற்றி ஏரி, குளங்கள், குட்டைகள் என்று ஒரு தீவுபோலவே எங்கள் கிராமம் காட்சியளிக்கும். 

Advertisment

1935-ஆம் ஆண்டுக்கு முன்பு எங்கள் ஊரில் காவிரி ஆற்றுப்பாசனம் கிடையாது. மழை நீரை மட்டுமே நம்பி விவசாயம் நடைபெற்றது என்பார்கள். கொள்ளு, கேழ்வரகு, கம்பு, தினை, மக்காச்சோளம் போன்ற சிறு தானிய வகைகள்தான் விளைந்தது. கல்லணைக் கால்வாய், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களுக்கு வந்த பிறகுதான் இந்தப் பகுதி செழிப்பாக மாறியது. இந்தப் பகுதியை புது ஆத்துப் பாசனம் என்றுதான் சொல்வார்கள். இப்போதும்கூட கல்யாண ஓடைக் கால்வாயில் தண்ணீர் வந்தவுடன் முதலில் ஏரி, குளம், குட்டையில்தான் நீர் தேக்குவார்கள். 

நூற்றாண்டு பழமைமிக்க தியாகராஜ சுவாமி மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்திருக்கும். ஒரு காலத்தில் சைவ,வைணவ மதங்களுக்கிடையே பெரும் சர்ச்சைகள், சண்டைகள் நிகழ்ந்த நிலையில் இரு கோவில்களும் அருகருகே அமைந்திருப்பது சிறப்பு. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலும் சிறப்புப் பெற்றது. 

ஒரு காலத்தில் விக்ரமம் கிராமத்தில் புத்த மதம் செழித்தோங்கி நிலைபெற்று இருந்திருக்கிறது. இப்போதும்கூட, எங்கள் ஊரில் ஒரு புத்தர் சிலை உண்டு. எங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில்தான் அந்த புத்தர் சிலை அமைந்துள்ளது. அந்தத் தென்னந்தோப்பைப் புத்தர் செட்டிக்கொல்லை என்றுதான் அழைப்பார்கள். 

பக்தி இயக்க காலத்தில் புத்த மதம் அடியோடு துடைத்தெறியப் பட்டிருக்க வேண்டும். இப்போதும்கூட வணிகம் மற்றும் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட மக்கள் கரூர் உட்பட தமிழ்நாட்டின் சில பகுதிகளிலிருந்து பொங்கலின்போது இங்கு வந்து தங்குவார்கள். ஆனால், அவர்கள் புத்த வழிபாடு செய்வதில்லை. கிராமத்தில் உள்ள கருப்பணசாமி கோவிலில் வழிபாடு நடத்திச்செல்வார்கள். இவர்கள் ஒரு காலத்தில் பூர்வ புத்தர்களாக இருந்து விரட்டப்பட்டிருக்கக்கூடும். எனினும், வேரைத் தேடி வருகிறார்கள் போலும். 

விக்ரமம் என்பது என்னுடைய அம்மா பிறந்த ஊர். எங்கள் அப்பா பிறந்த ஊர் அருகிலுள்ள புதுக்கோட்டை உள்ளூர். நான் பிறந்தது ராஜாமடத்தில் உள்ள ஒரு செவிலியர் இல்லம். நான் பெயருக்கு முன்னால் வைத்துக்கொண்டது மதுக்கூர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது எனக்கும் பொருந்தும்.

விக்ரமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்தான் 5-ஆம் வகுப்பு வரை நான் படித்தேன். அப்போதெல்லாம் மதிய உணவு என்பது அமெரிக்க நாட்டிலிருந்து கொடுத்ததாகச் சொல்லப்படும் கோதுமை உப்புமாதான். அந்த உப்புமாவைச் சாப்பிடுவதற்கு தட்டு கொண்டு போகிற பழக்கமெல்லாம் இல்லை. 

அருகிலுள்ள குளத்திலிருந்து தாமரை இலை அல்லது தேக்கு இலையைப் பறித்துச் சென்று, அமர்ந்து சாப்பிடுவோம். கோதுமையும் மாவாக மாற்றப்பட்டிருக்காது. முழு கோதுமைதான். 

அந்த கோதுமை உப்புமாவைச் சாப்பிடுவதற்கு சில தொழில்நுட்பங்கள் உண்டு. வரிசையாக அமரும் போது முதலிலும் அமராமல், கடைசியிலும் அமராமல் நடுவில் உட்காரவேண்டும். முதலில் உட்காருபவர் களுக்கு சரியாக வேகாததும், கடைசியில் உட்காருபவர்களுக்கு அடிபிடித்து கருகியதும் கிடைக்கும். நடுநிலையாக இருக்கும் பழக்கம் எனக்கு அப்போதுதான் உருவாகியது என்று நினைக்கிறேன். 

அடிபிடித்து இருந்தாலும், கோதுமை உப்புமா சமைக்கப்பட்ட அண்டாவைக் கழுவுவதற்கு அருகிலுள்ள குளத்தில் சென்று பெரும் அடிதடியே நடக்கும். அண்டாவில் மிச்சமிருக்கும் கோதுமை உப்புமாவைச் சுரண்டித் தின்பதற்குத்தான் அந்தப் போட்டி. பெரும்பாலும் கொஞ்சம் பெரிய பயல்களே அந்தப் போட்டியில் வெற்றி பெறுவார்கள். அவர்களோடு மோத தெம்பு இல்லாததால், இந்தச் சுரண்டல் முறையை என்னைப் போன்றவர்கள் எதிர்ப்போம். அண்டா சுரண்டலை எதிர்த்த போராட்டம் இப்போது சமூகச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் வரை என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. 

பள்ளியில் படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்கிற மாணவர்களில் நான் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவை ஒரு போர்டில் ஒட்டி, ஜன்னலுக்கு அருகில் வைத்திருப்பார்கள். அதில் என் பெயர் இருக்கிறதா என்று பார்க்கும்போது இதயமே நின்றுவிடும். எப்படியோ இதயம் நின்றுவிடாமல், பாசாகி அருகில் இருந்த மதுக்கூர் உயர்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு சென்றுவிட்டேன். 

எனக்குள் ஒரு பேச்சாளன் இருப்பதைக் கோவில் திருவிழாவிற்கு மைக் செட் போட வருபவர்தான் கண்டுபிடித்தார் என்று கருதுகிறேன். திருவிழாவின் போது, மாவிளக்கு போடுபவர்கள் உடனே வரவும், பால்குடம் எடுப்பவர்கள் பதறாமல் வரவும் என்றெல்லாம் மைக்கில் சொல்லச் சொல்வார்கள். 

விளையாட்டுப் போட்டிகளின்போது, கடைசியில் வருபவர்களுக்குப் பரிசு எதுவும் தரமாட்டார்கள் என்பதால், நான் எதிலும் பெயர் கொடுப்பதில்லை. ஆனால் மைக்கை பிடித்து நேர்முக வர்ணனை செய்வதுண்டு. 

மதுக்கூர் பள்ளியில் சேர்ந்த பிறகு, 8-ஆம் வகுப்பு வரை நடந்துதான் செல்லவேண்டும். அழுது அடம்பிடித்து, 8-ஆம் வகுப்பில்தான் சைக்கிள் கிடைத்தது. சைக்கிள் வாங்கிக் கொடுத்த முதல் நாளிலேயே எதிரில் வந்த ஐஸ் வண்டிக்காரர் என் சைக்கிளின் மீது மோதிவிட்டார். ஹேண்டில்பார் வளைந்துவிட்டது. பிளஸ் 2 முடிக்கிற வரை சர்க்கசில் சைக்கிள் ஓட்டுபவர்போல வளைந்த சைக்கிளை வைத்துத்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது. 

மதுக்கூர் பள்ளியில் படிக்கும்போது, எனக்கு நன்றாகப் பாட வரும் என்று நண்பர்கள் ஏற்றிவிட்டதை நம்பி, பாட்டுப்போட்டியில் பெயர் கொடுத்துவிட்டேன். அருகில் இருந்த கடையில், சீர்காழி கோவிந்தராஜன் பக்திப் பாடல்கள் பாட்டுப் புத்தகத்தை வாங்கி, "நீயல்லால் தெய்வம் இல்லை' என்ற பாடலைப் பாடி, முதல் பரிசு பெற்றேன். இதிலிருந்தே மற்ற பாடல்களின் லட்சணத்தைப் புரிந்துகொள்ள முடியும். அப்போது, சங்கராபரணம் படம் வந்து ஓடிக்கொண்டிருந்த நேரம். நண்பன் ஒருவன், சங்கரா என்ற பாடலைக் கடுமையாகப் பயிற்சி செய்து பாடினான். சங்கரா என்று துவங்கும்போது அளவுக்கு அதிகமாக வாயைத் திறந்துவிடவே மூடவே முடியவில்லை. பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போய்தான் வாயை மூடவைக்க முடிந்தது. அதன்பிறகு, அவன் பெயர் சங்கரா என்று மாறிவிட்டது. 

சமீபத்தில் அவனைச் சென்னை இரயில் நிலையத்தில் பார்த்தபோது, "என்ன சங்கரா... நல்லா இருக்கியா?' என்று நான் கேட்க, "இன்னுமா நீ அதை மறக்கவில்லை' என்று சிரிக்கிறானா? அழுகிறானா? என கண்டுபிடிக்க முடியாத ஒரு பாவத்தை வெளிப்படுத்தினான். 

நாங்கள் படித்தபோதுதான் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பிளஸ் 2 அறிமுகப்படுத்தப்பட்டது. கணக்கு

நாங்கள் படித்தபோதுதான் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பிளஸ் 2 அறிமுகப்படுத்தப்பட்டது. கணக்கு வாடை இல்லாத கலைப்பிரிவைத் தேர்வுசெய்தது, கல்விக்கடலைக் கடக்க உதவியது என்றே சொல்லவேண்டும். 

கவிதை எழுதும் ஆர்வம் எப்போது, யாரால் உருவானது?

பிளஸ் 2 முடித்தவுடன் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் இளங்கலை பொருளாதார வகுப்பில் சேர்ந்தேன். நான் சேர விரும்பியது பி.காம். படிப்புதான். பி.காம் முடித்தவுடன் வங்கிக்காரர்கள் வரிசையில் நின்று வேலைக்கு அழைத்துப்போய் விடுவார்கள் என்று ஒரு மூடநம்பிக்கை அப்போது இருந்தது. ஆனால், நான் வாங்கிய மதிப்பெண்ணிற்கு பி.காம் வகுப்பில் சேருவதற்கு மட்டுமல்ல, அந்த வகுப்பறை யின் பக்கமே போகக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். 

பொருளாதார மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பேச்சுப்போட்டிகளில் பெயர் கொடுத்து, ஒன்றிரண்டு பரிசுகளையும் வாங்கியுள்ளேன். நான் பொருளாதாரத் துறையில் இருப்பதைவிட, தமிழ்த்துறையில் இருப்பதுதான் அதிகமாக இருக்கும். நான் கல்லூரியில் சேர்ந்த 1981-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் காலமாகிவிட்டார். அதற்காக ஒரு இரங்கல் கவியரங்கம் ஏற்பாடுசெய்திருந்தார்கள். 

என்னுடைய தமிழாசிரியர் சொ.சிங்காரவேலன் என்னை அழைத்து, நானும் கவிதை படிக்க வேண்டும் என்றார். "எனக்கு கவிதை எழுதத் தெரியாது' என்றேன். அதற்கு அவர், "உனக்குத் தோன்றியதை எழுது. கண்ணதாசனும் இறந்துவிட்டார். எனவே, அவர் கோபித்துக் கொள்ளமாட்டார்' என்று நம்பிக்கை அளித்து, எழுதச் சொன்னார். நான் அந்த இரங்கல் கவியரங்கில், "கவியரசே! உன் நாக்கு ஒரு நாட்டியப் பள்ளி; அதில் வார்த்தைகளுக்கு நீ வகுப்பு எடுத்தாய்; இயேசு காவியம் எழுதிய கவிஞனே, விண்ணுக்கு எந்தக் காவியம் எழுதப் போனாய்?; தமிழ் அல்லவா தன் சொந்தக் காவியம்; 

சூறை போனதாய்ச் சொல்லி அழுகிறது' என்றெல்லாம் எழுதி வாசித்தேன். ஓரளவு என்னையும் கவிஞர் என்று சிலர் நம்பத் துவங்கிவிட்டனர். அதன்பிறகு துணிந்து கவிதைப் போட்டிகளிலும் பெயர் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். 

விடுதியில் தங்கியிருந்ததால், அறைத் தோழர்களிடம் அவ்வப்போது எதையாவது எழுதிக் காட்டுவது உண்டு. அதனால் அறையை மாற்றிக் கொண்டு போனவர்களும் உண்டு. அப்போது புதுக்கவிதை பிரபலமாக இருந்ததால், இலக்கணம் பற்றி யாரும் கேள்விகேட்காதது, மேலும் மேலும் எழுதும் தைரியத்தைக் கொடுத்தது.

உங்களது முதல் கவிதை பிரசுரமானபோது தங்களின் மனநிலை எப்படி இருந்தது?

கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தாலும், அதைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் தைரியமில்லை. 

கல்லூரி இறுதியாண்டில், "புள்ளியில்லா கோலங்கள்' என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வெளியிட முடிவு செய்தோம். அப்போது மயிலாடுதுறைக்கு கவிஞர் வைரமுத்துவும், அறிஞர் அவ்வை நடராஜனும் வந்திருந்தார்கள். வைரமுத்துவைச் சந்தித்து, இந்தக் கவிதை நூலுக்கு முன்னுரை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் சில கவிதைகளைக் கேட்டுவிட்டு, சென்னைக்குச் சென்று எழுதி அனுப்புவதாகச் சொல்லி கவிதை நோட்டை வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவரிடமிருந்து பதில் வராததால், துணிந்து நண்பர்களுடன் சென்னையில் அவருடைய வீட்டிற்கே சென்றுவிட்டோம். 

அநேகமாக, அவர் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரு மதிய நேரத்தில் பசியோடு வந்தார். 

எங்களை அவர் மறந்துபோயிருந்தார். நினைவுபடுத்தியவுடன் நோட்டை வாங்கி புரட்டிக்கொண்டே, நான் சொல்வதை எழுதிக்கொள்ளுங்கள்' என்றார். அவர் சொல்லச் சொல்ல எழுதினேன். 

வாங்கிப் பார்த்தவர், "கவிதை எழுதுவது முக்கியம்தான். க், ச், ப்  போன்ற ஒற்றெழுத்துக்களும் முக்கியம்' என்று திருத்திக் கொடுத்தார். "திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்று நூலை எழுதிய கவிப்பேரரசு, க், ச், ப்லியும் திருத்தவேண்டியதாயிற்று. அவரே முன்னுரைக்கான தலைப்பாக, "இவரை நான் வாழ்த்த மாட்டேன்' என்று எழுதிக் கொடுத்தார். யாருடைய வாழ்த்துகளும் இல்லாமலே வாழும் திறம் இவரின் எழுத்துக்கு இருக்கிறது என்று முடித்திருந்தார். 

அண்மையில், ஒரு விழாவில் சந்தித்தபோது இதை அவரிடம் நினைவுபடுத்தினேன். "நான் சொன்னது சரியாகப் போய்விட்டது பார்த்தீர்களா..?' என்று மகிழ்ந்தார். "புள்ளியில்லா கோலங்கள்' என்று பெயர் வைத்து, நூல் வெளியிட்டதால் கடுப்பான எதிரிகள் குழாம் ஒன்று, "வரப்பு ஓரத்து ஓலங்கள்' என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி ஒன்றை வெளியிட்டார்கள். அந்த நிகழ்வை நடத்திய நண்பனைச் சமீபத்தில் சந்தித்தபோது, கோலமும் ஓலமுமான பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம். 

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வைரமுத்துவின் ஆசிரியரான கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் வந்திருந்தார். அப்போதுதான், "அந்த ஏழு நாட்கள்' திரைப்படம் வந்திருந்த நேரம். அவரது பாடலான "கவிதை அரங்கேறும் நேரம்...' என்பதை வைத்தே அழைப்பிதழ் அச்சிட்டிருந்தோம். 

முதுகலை பொருளாதாரம் படிக்கும்போது, "காய்க்கத் தெரியாத காகிதப் பூக்கள்' எனும் 2-ஆவது கவிதை நூல் வெளியானது. கவிஞர் எஸ்.அறிவுமணி அந்த நூலை வெளியிட்டுப் பேசினார். இந்த இரு நூல்களும் வெளிவருவதற்கு நண்பர்களே பெரிதும் காரணமாக அமைந்திருந்தார்கள். முதல் கவிதை நூலின் விலை 3 ரூபாய். 2-ஆவது கவிதை நூல் 5 ரூபாய். பார்ப்பவர்களையெல்லாம் விரட்டி விரட்டிப் பணத்தை வாங்கிக்கொண்டு கவிதை நூலை தலையில் கட்டிவிடுவோம். பெரும்பாலும் விடுதி மாணவர்கள் என்பதால், அவர்களால் தப்பி ஓடவும் முடியாது. கல்லூரியில் இருந்து வெளியே வந்தபிறகு, கவிதை நூல் எதுவும் வெளியிடவில்லை. 

ஆனால், ஆங்காங்கே சந்திக்கும் நண்பர்கள் உங்கள் தன்னம்பிக்கை கவிதைகள் தான் எங்கள் வாழ்க்கையையே மாற்றியது என்று ஒரு சில வரிகளைச் சொல்வார்கள். நானும் உண்மையில்தான் சொல்கிறார்களா? அல்லது கிண்டல் செய்கிறார்களா? என்று புரிந்துகொள்ள முடியாமல் பொது வாகச் சிரித்துவிட்டு வந்துவிடுவேன். நண்பன் ஒருவனைத் துபாய் நிகழ்வு ஒன்றில் சந்தித்தபோது, நீங்கள் என்னிடம் அடித்துப் பிடுங்கிய அந்த 3 ரூபாயை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றான். என்றாலும், 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கிக்கொடுத்து வழியனுப்பி னான். இது நானாக விரும்பிக் கொடுத்தது என்று வேறு கூறினான். 

என்னுடைய கவிதை நூல் அவனை அந்தளவுக்குப் பாதித்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும்போதே தங்களோடு உடன் படித்த இலக்கிய நட்பு வட்டமொன்று உருவானதே. அதுகுறித்து...?

ஏ.வி.சி. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றிவரும் ய.மணிகண்டன் இளங்கலை அறிவியல் எங்கள் கல்லூரியில் படித்தார். 

அவர் தனித்தமிழ் இயக்கத்தில் அப்போது ஈடுபாட்டோடு இருந்தார். அருமையான மரபுக் கவிதைகளை எழுதுவார். முதுகலை பொருளாதாரம் படித்த போது, கவிஞர் மானா.பாஸ்கரன் என் வகுப்புத் தோழர். இருவரும் விடுதியில் தங்கியிருந்தோம். "விழுதுகள்' என்ற பெயரில் அவரை ஆசிரியராக வும், நான் சிறப்பாசிரியராகவும் பணியாற்றிய கையெழுத்து ஏடு ஒன்றை நடத்தினோம். மானாவின் கையெழுத்து அழகாக இருக்கும். அவர்தான் அனைத்துப் படைப்புகளையும் கையால் எழுதுவார். அவர், திருவாரூர்க்காரர்.

திருவாரூரில் ஒரு மிகப்பெரிய கவிஞர் பட்டாளமே இருந்தது. தமிழறிஞர் சரவணத் தமிழனார் தலைமையில் ஒரு பெரும் இளைஞர் குழாமே இயங்கியது. கவிஞர்கள் ஆரூர் தமிழ்நாடன் உள்ளிட்ட பலரும் மானா. பாஸ்கரன் வழியாக அறிமுகமானார்கள். அந்தப் பகுதியில் பல்வேறு கவியரங்குகளில் பங்கேற்றிருக்கிறேன். அப்போது, சரவணத்தமிழனார் எனக்கு "ஏறுநடைக் கவிஞர்' என்று பட்டம் கொடுத்தார். 

அதன்பின்பு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் எம்.பில்., படிப்புக்காக சேர்ந்தபோது, அருகிலுள்ள ஜமால் முகமது கல்லூரியில் கவிஞர் தங்கம்மூர்த்தி முதுகலை ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தார். திருச்சியில் பயின்ற காலத்தில்தான் த.மு.எ.க.ச.வோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. கவிஞர் நந்தலாலா, முகில் போன்றவர்கள் அறிமுகமானார்கள். அப்போது திருச்சியில் "சோலைக்குயில்கள்' என்ற பெயரில் மாதாந்திர கவிதைச் சந்திப்பு மலைக் கோட்டை அருகிலுள்ள இப்ராகிம் பூங்காவில் நடைபெறும். அந்தக் கவியரங்கில் வாசிக்கப்படும் கவிதைகள் "சோலைக் குயில்கள்' என்ற பெயரில் புத்தகமாகவும் வெளிவரும். கவிஞர் மனுஷ்யபுத்திரன் போன்றவர்களும் அங்கு வந்து கவிதை வாசிப்பார்கள். கவிஞர்கள் எட்வின், பிச்சினிக்காடு இளங்கோ போன்றவர்களும் திருச்சியில் அறிமுகமானார்கள். திருச்சியில் நடைபெற்ற த.மு.எ.க.ச. நான்காவது மாநாட்டில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த மாநாட்டையொட்டிதான் கவிஞர்கள் நா.முத்துநிலவன், ஜீவி போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் படிப்புகளின்போது நிறைய கவிஞர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. என்னை சீரமைத்துக் கொள்ளவும் செதுக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. 

கவிஞர் இராமலிங்கம், எப்போது மதுக்கூர் இராமலிங்கம் ஆனார்? 

எனக்கு இராமலிங்கம் என்ற பெயர் வந்ததே ஒரு வித்தியாசமான கதைதான். என்னுடைய பெற்றோர் எனக்கு முதலில் வைத்த பெயர் சுந்தரவடிவேலு. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கல்வித்துறை செயலாளராக இருந்து, அந்தத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்துகொண்டிருந்தவர் அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு. அவர் அப்போது பிரபலமாக இருந்ததால், அவரது பெயரைச் சூட்டியுள்ளனர். 

சிறுபிள்ளையாக இருந்தபோது, கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு, இனி இவன் தேறமாட்டான் என்று வெளியே உள்ள திண்ணையில் தூக்கிப் போட்டுவிட்டார்களாம். எடுத்துப் போட வசதியாக... அப்போது, வள்ளலாரின் சீடர்களில் ஒருவரான முருகானந்தம் சாமிகள் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஏன் இராமலிங்கத்தை இப்படி வெளியே போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மருத்துவர்கள் கைவிட்டதைச் சொல்ல, "இவனுக்கு ஒன்றும் ஆகாது. இராமலிங்கம் என்று பெயர் வையுங்கள்' என்று சொன்னாராம். இதுதான் இராமலிங்கம் என்று பெயர்வந்ததன் சுருக்கம்.

கல்லூரியில் எங்கள் வகுப்பில் எட்டு இராமலிங்கம் இருந்தோம். சில சிவன் கோவில்களில் 108 லிங்கம் சிலைகள் இருப்பதுபோல, ஆசிரியர்கள் இராம லிங்கம் என்று கூப்பிட்டால், எட்டு பேரும் எழுந்துநிற்போம். ஆசிரியர் ஒவ்வொருவர் ஊராக விசாரித்து, அவர்களது ஊரைச் சேர்த்து அழைத்தார். நான் அப்போது மதுக்கூர் என்று சொன்னதால், அப்போது முதல் பெயருக்கு முன்னால் ஊரும் ஒட்டிக்கொண்டது. கவிதை நூல் வெளியிட்டபோது ஊர்ப் பெயரையும் சேர்த்துக்கொண்டேன். 

madakour1

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் ஊர்கூட செங்கப்படுத்தான்காடுதான். அவர் அருகில் உள்ள பெரிய ஊரான பட்டுக் கோட்டையை சேர்த்துக்கொண்டார். இதுவொரு முன்மாதிரியாக இருந்தது. 

இயக்கத்தில் பல தோழர்கள் என்னைப் பெயர் சொல்லியே அழைக்க மாட்டார்கள். மதுக்கூர் என்றுதான் கூப்பிடுவார்கள். சில சமயங்களில் என்னை இராமலிங்கம் என்று கூப்பிட்டால்கூட யாரையோ சொல்வதாக நினைத்து, நான் பேசாமல் இருந்துவிடுவது உண்டு. இந்தப் பெயரை வைத்துக் கொண்டதால் கூட்டங்களில் அறிமுகப்படுத்தும் சிலர், "இவரது ஊரிலேயே மது இருப்பதால், இவரது பேச்சு போதையாக இருக்கும்' என்று சொல்வதற்கும் இது வசதியாக போய்விட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தது பற்றி...?

என்னுடைய தந்தை சந்திரன் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். எனவே, எங்களது குடும்பமே காங்கிரஸ்தான். அந்தக் கட்சி இரண்டாக உடைந்த போது, நான் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசில் இருந்தேன். அந்தக் கட்சி பின்னாளில் ஜனதா கட்சியில் இணைந்தது. பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கிறபோது, நான் ஜனதா கட்சி என்று சொல்லிக்கொண்டு பச்சை, சிவப்பு கரை வைத்த வேட்டி கட்டுவதோடு, ஏர் உழவன் சின்னம் பொறித்த மோதிரமும் அணிந்து விட்டேன். மாணவ ஜனதாவின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் இருந்திருக்கிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, பேராசிரியர் வெ.பா.ஆத்ரேயா என் ஆசிரியர். 

திருச்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான், தினமணியில் பணியாற்றிய இளைய பெருமாள் போன்றவர்கள் என் வகுப்புத் தோழர்கள். 

தோழர் ஆத்ரேயாதான் என்னிடம் மார்க்சிய நூல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லி, இடதுசாரி இயக்கத்தின் பக்கம் திருப்பினார். திருச்சியில் இயங்கிய த.மு.எ.க.ச. அமைப்பையும் அறிமுகப் படுத்தினார். அப்போது, மாநில மாநாடு நடந்ததால், அதில் கலந்துகொண்டேன். நான்காவது மாநாட்டில் துவங்கியது, 16-ஆவது மாநாடு வரை தொடர்கிறது. 

பொருளாதாரப் பட்டதாரியான நீங்கள் "தீக்கதிர்' நாளிதழில் பணியாற்றிட முடிவுசெய்தது ஏன்?

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தபிறகு, ஒன்றிய அரசு தொடர்புடைய ஒரு திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றினேன். அதற்குப்பின், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் ஆய்வாளராகச் சேர்ந்தேன். முனைவர் பட்டம் படிக்கவேண்டும் என்பது திட்டம்.

அந்தக் காலத்தில் மாலை வேளைகளில் "தீக்கதிர்' அலுவலகத்திற்கு வருவது வழக்கம். தோழர் கே.முத்தையா, ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அருணன் என்றழைக்கப்படும் பேராசிரியர் கதிரேசன் பல்கலைக்கழகத்தின் வணிகத் துறையில் பணியாற்றிக்கொண்டே தீக்கதிருக்கும் உதவுவார். 

ஒருநாள் தோழர் கே.முத்தையா ஒரு செய்தியைக் கொடுத்து, இதை தமிழில் மொழிபெயர்க்குமாறு கூறினார். எனக்கு அதில் பழக்கம் இல்லை. ஒவ்வொரு வரியாகப் படித்து, அகராதியை உருட்டி, ஒரு வார காலத்திற்குப் பின்பு அந்த செய்தியை எழுதிக்கொண்டு வந்து தோழர் கே.எம்.மிடம் கொடுத்தேன். அவர் என்னை எப்படியாவது வளைத்துப் போட்டுவிடவேண்டும் என்கிற திட்டத்தில் இருந்திருப்பார் போலும். மோசமாக எழுதப்பட்ட அந்தச் செய்தியை "ஆஹா... ஓஹோ' என்று புகழ்ந்து, "உங்களுக்குள் ஒரு பத்திரிகை யாளன் இருக்கிறான்' என்றார். நான் திரும்பிப் பார்த்தேன், வேறு யாரையோ சொல்கிறார் என்று. அடுத்தடுத்து பல செய்திகளைக் கொடுத்து எழுதச் சொன்னார். தீக்கதிரில் பணியாற்றிய தோழர் அ.குமரேசன் செய்தி எழுதுவதன் நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்தார். இடையில், இரண்டொரு கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான நேர்காண லுக்குச் சென்றுவந்தேன். ஒருநாள், தோழர் ஏ.நல்லசிவன் அழைத்து, "நீங்கள் தீக்கதிருக்கு முழுநேரமாக வந்துவிடவேண்டும்' என்று சொன்னார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு. எனினும், நான் தீக்கதிரைத் தேர்வுசெய்தேன். துணையாசிரியராகச் சேர்ந்து, பிறகு ஆசிரியராகவும் தற்போது சிறப்பாசிரியராக வும் பணியாற்றி வருகிறேன். தீக்கதிர் என்னை சிக்கெனப் பற்றிக்கொண்டது. 

உங்களுக்குள் ஒரு பேச்சாளரும் இருப்பதை எப்போது கண்டுகொண்டீர்கள். முதல் மேடை அனுபவம் எப்படி இருந்தது? 

நான் கவிதை எழுதுவது, கவியரங்கங்களுக்குச் செல்வது என்றுதான் இருந்துவந்தேன். ஒருநாள் அ.குமரேசன் அழைத்து, ஒரு வழக்காடு மன்றத்தில் பேசவேண்டும் என்று சொன்னார். நடுவர் வெ.சுந்தரம், மானாமதுரைக்கும் பரமக்குடிக்கும் இடையில் உள்ள பார்த்திபனூர் என்ற ஊரில் அந்த வழக்காடு மன்றம் நடந்தது. 

திரைப்படம் தொடர்பான தலைப்பு அது. நான் அதற்காக பல நூல்களைப் படித்து, குறிப் பெடுத்துக்கொண்டு சென்றேன். ஒரு வயலுக்குள் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மைக் செட் போடுவோரையும் சேர்த்து ஐந்தாறு பேர் இருப் பார்கள். அதில் மூன்று பேர் ஏற்கெனவே தூங்கிவிட்டார்கள். இரண்டு பேருக்காக மூன்று பேர் பேசிய வழக்காடு மன்றம் அது. 

அதன்பின்பு, வேதாரண்யத்தில் ஒரு நெல் காயவைக்கும் களத்தில் நா.முத்துநிலவனை நடுவராகக் கொண்ட வழக்காடு மன்றத்தில், நானும் கவிஞர் நந்தலாலாவும் பேசினோம். பேச்சுத் திறமை வயலுக்குள்ளிலிருந்து களத்துமேட்டுக்கு மாறியது. அப்போதெல்லாம், என்னுடைய பேச்சு கொஞ்சம் கொடூரமாகத்தான் இருக்கும். மேடைக் கலைவாணர் நன்மாறன் தலைமையில் பேசத் துவங்கிய பிறகு, அவரிடமிருந்த நகைச்சுவையும் எளிமையும் எனக்கும் ஓரளவு கைவரப்பெற்றது. த.மு.எ.க.ச.வின் கலை இரவு மேடைகள் பேசுவதற்கான பெரும் தளத்தை அமைத்துக்கொடுத்தது. 

விடுதலைப் போராட்டத்தின் பொன்விழாவின் போது, நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனியோடு இணைந்து பேசத்துவங்கினோம். 

அது ஒரு பெரும் பாய்ச்சலாக அமைந்தது எனலாம்.

பல்லாயிரக்கணக்கான மேடைகளில் உரையாற்றி இருக்கிறீர்கள். உங்களால் மறக்கவே முடியாத மேடை அனுபவம் எது?

ஒவ்வொரு மேடையும் ஓர் அனுபவம்தான். சிங்கப்பூரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையிலும், ஐ.லியோனி தலைமையில் பேசியிருக்கிறோம். ஆட்களே இல்லாத முட்டுச்சந்துக்குள்ளும் பேசியிருக்கிறோம். மதுரை சிம்மக்கல்லில் ஒரு கூட்டத்தில் என்னை அழைத்துச் சென்றவரை தவிர வேறு யாருமே அந்தப் பகுதியில் இல்லை. "என்ன யாரையுமே காணவில்லை' என்று கேட்டதற்கு, "எல்லோரும் வீட்டில்தான் இருக்கிறார்கள். நீங்கள் தைரியமாகப் பேசுங்கள்' என்றார் 

என்னை அழைத்துச்சென்றவர். நான் பேசத் துவங்கிய கொஞ்ச நேரத்தில், அவரும் நைசாக டீ குடிக்கச் சென்றுவிட்டார். 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேச்சுக் கலைக்கு இலக்கணம் வகுத்தவர். அவருடைய முன்னிலையில் நான்கைந்து முறை பேசும் வாய்ப்பு அமைந்தது. நெல்லையில் முரசொலி அறக்கட்டளை சார்பில் நடந்த பட்டிமன்றத்தில் பேசும்போது முதல்வராக இருந்த கலைஞர், நான் சொன்ன ஒரு நகைச்சுவையை கவனிக்கவில்லை. அரங்கமே ஆர்ப்பரித்தது. நான் என்ன சொன்னேன் என்று பக்கத்தில் இருந்தவரை கலைஞர் கேட்டார். பிறகு அவரே நான் சொன்னதை திரும்பச் சொல்லுமாறு கேட்டு, பலமாகச் சிரித்தார். 

சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் கலைஞர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சொன்னேன். 

கலைஞர் சிறு குழந்தையாக இருந்தபோது, அவரது பெற்றோர் ஒரு கோவிலுக்கு மொட்டை அடிப்பதாக நேர்ந்திருக்கிறார்கள். ஏதோ காரணத்தால், அது தள்ளிக்கொண்டே போக, முடி சடைபோல வளர்ந்துவிட்டது. உள்ளூரிலேயே முடியை வெட்டி, ஒரு மண் கலயத்தில் போட்டு வீட்டுக் கூரையில் அந்தக் கலயத்தை கட்டி வைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு திருட வந்த ஒருவன், அந்தக் கலயத்தில்தான் நகை இருப்பதாகக் கருதி அந்தக் கலயத்தைக் கழற்றிக்கொண்டு போய்விட்டான். 

இந்தச் சம்பவத்தைச் சொல்லி, "அன்று கள்வன் களவாடிய முடியை, இன்று காலம் களவாடி விட்டதே...' என்று சொன்னேன். வெகுவாக ரசித்த கலைஞர், "என் தலைமீது இருக்கும் முடியை வேண்டுமானால் காலமோ மத்திய அரசோ கழற்றலாம். ஆனால், என் பேனாவை யாரும் களவாட முடியாது' என்றார். அரங்கம் அதிர்ந்தது. 

பாராட்டப்பட்ட பல மேடைகள் உண்டு. பட்டுக்கோட்டையில் ஒரு கலை இரவில் பேசிவிட்டு, மேடையை விட்டு இறங்கி, சிறுநீர் கழிக்கச் சென்றபோது, ஒரு சங்கி ஒரு பெரிய செங்கல்லை எடுத்து என் முதுகில் பலமாகத் தாக்கினான். திரும்பிப் பார்ப்பதற்குள் மின்னல் வேகத்தில் ஓடிவிட்டான். பிறகு அவன் பிடிபட்டான் என்றாலும்கூட என்னுடைய பேச்சு கருத்தியல் எதிரிகளை எந்தளவுக்கு ஆத்திரப்படுத்தி இருக்கிறது என்ற வகையில் அதுவும்கூட ஒரு பாராட்டு என்றுதான் எடுத்துக்கொண்டேன். 

எப்போதும் உங்களது உரைகளில் வெகுசரளமாக நகைச்சுவை இடம்பெறுகிறது. இதற்காகவென்றே ஏதாவது முன்தயாரிப்பு செய்வதுண்டா?

நகைச்சுவை இயல்பாக வருவதற்கு காரணம் வாழ்க்கையை ரசிப்பதுதான். புதுக்கோட்டையில் ஒரு கூட்டத்தில் பேசி முடித்தபிறகு, கவிஞர் கந்தர்வன், "உன்னைச் சுற்றி இருக்கிற மனிதர்களை எப்போதும் பார்த்துக்கொண்டே இரு. அவர்கள் பேசுவதைக் கவனி. ஒரு பேச்சாளனுக்கு அதுதான் இலக்கணம்' என்றார். அதை எப்போதும் பின்பற்றுகிறேன். 

சுற்றி நடப்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தால் நகைச்சுவை இயல்பாக வரும். விருதுநகரில் ஒரு கலை இரவைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தேன். வாழ்த்திப் பேச வந்த மாவட்ட ஆட்சியர், கருப்பாக இருந்தார். கலெக்டர் கருப்பாகக்கூட இருப்பாரா என்றேன். அவரும் சிரித்தார்; மக்களும் சிரித்தார்கள். 

எந்தவொரு சிக்கலான பிரச்சினையையும் நகைச்சுவையாகச் சொல்லும்போது எதிராளிகளும் ரசிப்பார்கள். ஒரு விவாத மேடையில் நான் பேச வந்தபோது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு தலைவர், "நீங்கள் பேசுகிற மேடை உண்டியல் போலவே இருக்கிறது' என்றார். "நீங்கள் பேசுகிற மேடை சூட்கேஸ் போலவே இருக்கிறது' என்றேன். 

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு கலை நிகழ்வு இயக்குநர் சமுத்திரக்கனி, "கம்யூனிஸ்ட்கள் கடவுளைப்போல; எல்லோருக்கும் பொதுவானவர்கள்' என்றார். நான் பேசும்போது, "இது உண்மைதான். இருவரிடமும் உண்டியல் இருக்கிறது' என்றேன். 

இன்றைய காலச்சூழலில் சமூக மாற்றத்திற்காக இலக்கியத்தினால் ஏதாவது பங்காற்ற முடியுமென்று நம்புகிறீர்களா..?

நிச்சயமாக... மனித குல வரலாற்று மாற்றங் களுக்கு இலக்கியம் ஒரு உந்துசக்தியாக இருந்து வந்திருக்கிறது. வாழ்க்கைக்கு நெருக்கமாக இருந்த சங்க இலக்கியம், மனித அறம் பேசிய திருக்குறள் தொடங்கி, இன்றைய ஹைக்கூ கவிதைகள் வரை சமூக மாற்றத்தை பேசியே வந்திருக்கின்றன. இனியும் பேசும்.

ஒன்றிய அரசின் மதவாத போக்குகளுக்கு எதிராக இன்றைய எழுத்தாளர்கள் செய்யவேண்டிய மிக முக்கியப் பணியாக எதைச் சொல்வீர்கள்?

இன்றைய ஒன்றிய அரசு வெறுப்பு அரசியலை வளர்த்துவருகிறது. படைப்பாளிகள் என்பவர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இருந்தாலே போதும், அநீதியைப் பார்க்கும்போது, அறச்சீற்றம் வேண்டும். 

ஆனால், பல்வேறு துறைகளைச் சீரழித்து வரும் ஒன்றிய அரசு இலக்கியத் துறையையும் விட்டுவைக்க வில்லை. இந்தாண்டு சாகித்ய அகாடமி விருது முற்போக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு வரவிருந்த நிலையில் ஒன்றிய அரசு தலையிட்டு நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகாரம் தருகிற விருதுகளைவிட மக்கள் தருகிற அங்கீகாரமே பெரும் விருதாகும். மக்களின் பக்கம் படைப்பாளிகள் நின்றாலே, இயல்பாக அது மதவெறியர்களுக்கு எதிராகத்தான் இருக்கும். 

பொன் விழா கண்ட இலக்கிய அமைப்பான த.மு.எ.க.ச.வின் மாநிலத் தலைவர் நீங்கள். தற்போது த.மு.எ.க.ச. முன்நிற்கும் மிகப்பெரிய சவாலாக எதைக் கருதுகிறீர்கள்? 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருள் சூழ்ந்த அவசர நிலை காலத்தில்தான் வெளிச்சக் கீற்றாகப் பிறந்தது. நல்ல இலக்கியத்தை வளர்க்கவும், நச்சு இலக்கியத்தை எதிர்க்கவும் தொடர்ந்து களமாடி வருகிற அமைப்பு இது. காலத்தின் தேவை கருதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமாக உருவானது. தற்போது, பண்பாட்டுத் துறையில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறோம். த.மு.எ.க.ச. நடத்திய கலை இரவுகள் தமிழ்நாடு முழுவதும் வெளிச்ச விதைகளை விதைத்தது. இன்றைக்கு ஒன்றிய அரசு கருத்துரிமையைப் பறிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அதைச் சந்தித்து முறியடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால், நிச்சயம் த.மு.எ.க.ச. கருத்துரிமை காப்புப் பணியை தனது தலையாய பணியாக மேற்கொள்ளும்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதிமத வெறியர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில், ஒரு எழுத்தாளன் மாண்டுவிட்டான் என்று விரக்தியுடன் கூறி மவுனமாகிவிட்டார். த.மு.எ.க.ச. தான் வழக்காடு மன்றம் சென்று, படைப்புரிமையை மீட்டுக்கொடுத்தது. நீதிமன்றத்திலும் வீதிமன்றத்திலும் நிச்சயமாகத் தொடர்ந்து போராடுவோம்.

இன்றைய பட்டிமன்றங்கள், பாட்டு மன்றங்களாக மாறிவருவது ஆரோக்கியமான போக்கா? 

பட்டிமன்றங்கள் ஒரு காலத்தில் சிந்தனை மன்றங்களாக இருந்தன. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அதை மக்கள் மன்றமாக மாற்றினார். தமிழறிஞர் சாலமன் பாப்பையா, முனைவர் கு.ஞானசம்பந்தன் போன்றவர்கள் அந்த வடிவத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றார்கள். 

நகைச்சுவை தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி இந்தத் துறைக்கு வந்த பிறகுதான், பட்டிமன்றம் பாட்டுமன்றமாகவும் மாறியது எனலாம். இதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அதே நேரத்தில் பாடுவதோடு கொஞ்சம் பேசவும் வேண்டும் என்பதை பேச்சாளர்களுக்கு சொல்லவேண்டியுள்ளது.

ஒருமுறை தோழர் நன்மாறன், ஒரு பட்டிமன்றத் தில் "பாடுவதோடு ஆடவும் வேண்டும் போலிருக்கிறதே...' என்று வேடிக்கையாகச் சொன்னார். 

இன்றைக்கு சிலர் அதையும் செய்யத் துவங்கிவிட்டார்கள். பாட்டுப் பட்டிமன்றத்தை மக்கள் நிப்பாட்டு என்று சொல்லும் அளவுக்கு கொண்டுபோய்விடக்கூடாது.

இந்திய மாநிலங்களில் முன்னைவிட இடதுசாரிகளின் அரசியல் பலம் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறதே..? 

இடதுசாரிகளின் பலம் என்பது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உள்ள பிரதிநிதித்துவத்தை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. பல்வேறு கட்சிகளும் இடதுசாரி கருத்தியல்களைப் புறந்தள்ள முடியாத சூழல்தான் உள்ளது. நான் ஒரு மேடையில் பேசும்போது, ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலையே இங்கும் சொல்ல விரும்புகிறேன். 

இந்தியாவில் பொதுவுடமை இயக்கமும் நூற்றாண்டைத் தாண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் நூற்றாண்டைத் தாண்டியுள்ளது. 

அவர்கள் அளவு நீங்கள் வளரவில்லையே என்று கேட்டதற்கு, பாலும் வெள்ளைதான், பாலிடாயிலும் வெள்ளைதான். பால் குடித்தால் நிச்சயமாக அது உடலில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் உடனடியாக அதன் பலன் தெரியாது. பாலிடாயில் குடித்தால், உடனே வேலை செய்யும். அதற்காக பாலிடாயில்தான் வேகமாக வேலை செய்கிறது. அதுதான் நல்லது என்று மூளை உள்ள யாரும் சொல்லமாட்டார்கள் என்றேன்.

வசதி உள்ளவனுக்கும் வயிறு பசித்தவனுக்கும் இடையிலான போராட்டம் என்பது நடக்கும்வரை இடதுசாரி அரசியலும் இருந்தே தீரும்.

2021-இல் தமிழக அரசு வழங்கிய "சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது' பெற்ற கணம் எப்படி இருந்தது?

தமிழ்நாட்டில் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்தவுடன் அறிவிக்கப்பட்ட விருதாளர் கள் பட்டியலில் என்னுடைய பெயரும் இருந்தது. அந்த அறிவிப்பு தொலைக்காட்சியில் வரும்வரை எனக்குத் தெரியாது. நான் நெஞ்சுக் கூட்டுக்குள் வைத்து நெகிழ்ந்து நேசிக்கிற சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலான விருதை முதல்வர் எனக்கு வழங்கியது மகிழ்ச்சியாக இருந்தது. 

இதிலும் ஒரு காமெடி நடந்தது. என்னுடைய உறவினர் ஒருவர், "உன்னுடைய தாய் ஒரு முருக பக்தர். 

அதனால்தான் அந்த சிங்காரவேலன் பெயரிலான விருது உனக்கு கிடைத்திருக்கிறது' என்றார். நான், "இது அந்த சிங்காரவேலன் அல்ல; இவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்' என்று விளக்கம் கொடுத்தேன். அதற்கு அவர், "எல்லாம் ஒன்றுதான்' என்று கூறி சென்றுவிட்டார். சரி... அவருடைய நம்பிக்கையைக் கெடுக்கவேண்டாம் என்று நானும் விட்டுவிட்டேன்.

திரைப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தால், எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று விரும்புவீர்கள்?

சில அழைப்புகள் வந்தன. ஆனால் அதை ஏற்கும் சூழல் இல்லை. சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் கம்யூனிஸ்ட்டாக நடிக்கவேண்டும் என்று அந்த இயக்குநர் கேட்டார். அவர் பல மாதங்கள் உடனிருக்க வேண்டும் என்றதாலும், ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்வதைவிட நடிப்பது கஷ்டம் என்பதாலும் ஏற்க முடியவில்லை. இன்னொரு இயக்குநர், உங்களுக்காக ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றார். 

அப்படி அவர் சொன்னதுதான் கதை என்பது பிறகுதான் தெரிந்தது. 

கிராமங்களில் நடந்த நாடகங்களிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடந்த கிழக்கு கடற்கரைச் சாலை கலைப் பயண கலைக்குழுவிலும் இடம்பெற்றிருக்கிறேன். நாடகவியலாளர் பிரளயன், 

"நீ அடிப்படையில் ஒரு நடிகன்தான்' என்று அடிக்கடி சொல்வார். 

இன்றைக்கும் கவிதைகளை எழுதுவதுண்டா...?

கவிதை குறித்த ஒரு பட்டிமன்றத்தில் எனக்கு எதிரணியில் பேசிய கவிஞர் மு. முருகேஷ், "அண்ணன் ஒரு முன்னாள் கவிஞர்' என்றார். பலரும் சிறப்பாக எழுதுவதாலும், பேச்சு மற்றும் கட்டுரையின் பக்கம் திரும்பிவிட்டதாலும் கவிதை எழுதுவது குறைந்துவிட்டது. அவ்வப்போது, சமூக ஊடகத்தில் கவிதை மாதிரி எழுதுவது உண்டு. சமீபத்தில் எழுதிய சில வரிகள் பெரிதும் பேசப்பட்டன. 

வெனிசுலா ஜனாதிபதி தோழர் மதுரோவை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அடாவடியாக கைது செய்த அன்று, "நக்கும் நாய்க்கு செக்கும் தெரியாது சிவலிங்கமும் தெரியாது என்பார்கள். அமெரிக்காவும் அப்படித்தான். எண்ணெய் கண்ட இடமெல்லாம் வாயை வைக்கும்' என்று எழுதினேன். 

"இனிய உதயம்' இதழ் குறித்த தங்களின் பார்வை...

"இனிய உதயம்' நான் தேடிப் படிக்கிற கருத்துந்க் கருவூலங்களில் ஒன்று. நக்கீரன் குழுமம் தமிழ் இலக்கியத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்துவரும் தொண்டு இது. குறிப்பாக, சில அபூர்வமான மொழிபெயர்ப்பு கதைகளை விரும்பிப் படித் திருக்கிறேன். ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் காலத்தில் "இனிய உதயம்' ஒரு முழுநீள இலக்கிய ஏடாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இலக்கிய இதயங்களைக் கவர்ந்த "இனிய உதயம்' சர்க்கரை நோய் உள்ளவர்களும் விரும்பிப் படிக்கிற இனிப்பாக இருக்கிறது.

uday010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe