இஸ்ரேல் - ஈரான் போர்

israel-iran

ஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இரு தரப்பிலி-ருந்தும் கோபமான வார்த்தைப் பிரயோகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்கஅதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரே-லின் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணையலாமா என்று பரிசீ-லித்து வருகிறார்.

ஈரானில் உள்ள அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கியபோது இது தொடங்கியது, பின்னர் ஈரான் இஸ்ரேலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது.
ஈரானின் சுகாதார அமைச்சகத்தின்படி, இதுவரை இஸ்ரேலிய தாக்குதல்களில் 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஈரானிய தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

ஜூன் 12 இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஒஉஎ- ஐடிஎஃப்), டெஹ்ரானின் மாவட்டம் 18-இல் உள்ள மக்களை வெளியேறுமாறு கூறியது. இதில் ராணுவ கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அடங்கும்.

சில மணி நேரத்திற்குப் பிறகு, டெஹ்ரானில் முதல் தாக்குதல்கள் நடந்த தாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 225 கி.மீ (140 மைல்) தொலைவில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தியது, இதனால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்று அழை

ஆபரேஷன் ரைசிங் லயன் என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் இதயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெதன்யாகு கூறினார். ஈரானின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்படா விட்டால், ஈரானால் மிகக் குறுகிய காலத்தில் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நெதன்யாகு கூறினார். ஈரான் தனது அணுசக்தித் திட்டம் ஆக்கப்பூர்வமானது என்று வலியுறுத்துகிறது. 

இஸ்ரேலில் உள்ள பல்வேறு இலக்குகள், ராணுவ மையங்கள் மற்றும் விமான தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி, ஈரான் தனது பதிலடியைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல் ட்ரூ ப்ராமிஸ் 3 என்று அழைக்கப்பட்டது. இஸ்ரேலை நோக்கி சுமார் 100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலின் இரும்புடோம் அமைப்பால் இடைமறிக்கப் பட்டதாகவும் ஐடிஎஃப் தெரிவித் துள்ளது.

israel-iran1

இத்தகைய பதிலுக்கு பதில் தாக்குதல்கள் பல நாட்களாகத் தொடர்ந்தன. இருப்பினும், ஈரானிய தாக்குதல்களின் அளவு சமீபத்தில் குறைந்துள்ளது. இது இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈரானின் ராணுவத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறிக்கலாம் என்று பிபிசியின் ஹ்யூகோ பச்சேகா தெரிவித்தார்.

ஈரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயிஇஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஒதஏஈ) தளபதி ஹொசைன் சலாமி உள்பட பல உயர்மட்ட ஈரானிய அதிகாரிகளும், ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாஸி உள்பட பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். ராணுவத்தினர் குழந்தைகள் உள்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் டிரோன் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது பல கட்டங்களாக தாக்குதல்களை நடத்தியதாகவும், டெல் அவிவ் மற்றும் வடக்கு இஸ்ரேலை இலக்காகக் கொண்ட ஏவுகணைகளின் தாக்குதலை இடைமறித்ததாகவும் ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவல்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக ஈரானியப் படைகள் தெரிவித்தன, மேலும் முக்கிய இஸ்ரேலிய நகரங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி யுள்ளன.

டெஹ்ரானில், ஈரான் அரசு செய்திமுகமையின் கட்டடம் தாக்கப்பட்ட போது, ​தொகுப்பாளர் ஒருவர் ஒளிபரப்பின் நடுவிலேயே ஸ்டுடியோவை விட்டு தப்பி ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்ட தாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

ஜூன் 17 அன்று இஸ்ரேலிய ராணுவம் டெஹ்ரானின் முழு வான்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், ஈரானின் ஏவுகணை லாஞ்சர்களில் மூன்றில் ஒரு பகுதியை அழித்ததாகவும் அறிவித்தது.

வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேலின் நான்கு வெவ்வேறு இடங்களில் ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஜூன் 13 முதல் குறைந்தது 224 பேர் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், இஸ்ரேல் 24 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் டெல் அவிவ், ஹைஃபா, தம்ரா, ரிஷோன் லெசியோன் மற்றும் பேட் யாம் ஆகிய இடங்களில் இருந்தனர், குறிப்பாக பேட் யாம் பகுதியில் 10 மாடி குடியிருப்பு ஒன்று தாக்கப்பட்டது.

ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை களில் இணைவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக, அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, பிபிசியின் அமெரிக்க கூட்டுச் செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கதேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பிறகு டிரம்பும் நெதன்யாகுவும் தொலைபேசியில் பேசினர். ஈரானின் 'நிபந்தனையற்ற சரணடைதல் குறித்து அமெரிக்க அதிபர் முன்னதாக சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்தார், மேலும் ஈரானின் ஆயதுல்லா அலி காமனேயி எங்கே இருக்கிறார் என்பது அமெரிக்காவிற்கு தெரியும், ஆனால் இப்போதைக்கு அமெரிக்கா அவரைக் கொல்லாது என்றும் கூறினார்.

israel-iran2

ஈரான் தலைவரைக் கொல்ல இஸ்ரேல் வைத்திருந்த திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகின. இதற்கு பதிலாக, அமெரிக்க ராணுவம் இந்த மோதலில் தலையிட்டால் சரிசெய்ய முடியாத அளவுக்கு பேரழிவு ஏற்படும் என்று காமனேயி டிரம்பை எச்சரித்தார்.

ஜூன் 16-ஆம் அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து முன்னதாகவே வெளியேறிய டிரம்ப், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வாஷிங்டனுக்கு தான் திரும்பச் செல்லவில்லை என்றும், போர் நிறுத்தத்தை விட சிறந்த ஒன்றை தான் விரும்புவதாகவும் கூறினார்.

ஒரு உண்மையான முடிவு வேண்டும் என்று விவரித்த டிரம்ப், அதில் முழுமையான சரணடைதலும் அடங்கும் என்றார். அணுசக்தி திட்டம் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈரான் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று டிரம்ப் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புதிய ஒப்பந்தம் ஈரானின் அணுசக்தி திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை நோக்கமாக கொண்டது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது.

ஈரானின் அணுசக்தி திட்டம் ஈரான் நீண்ட காலமாக தனது அணுசக்தி திட்டம் அமைதிக்கானது மற்றும் பொதுமக்கள் நலன்களுக்காக மட்டுமே என்ற பதிலையே தொடர்ந்து கூறி வருகிறது. ஈரானை சுற்றி பல அணுசக்தி வசதிகள் உள்ளன, அவற்றில் சில இஸ்ரேலிய தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டுள்ளன.

ஆனால் பல நாடுகளும், உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஒஆஊஆ-வும் (ஐஏஇஏ) இந்த அணுசக்தி திட்டம் பொதுமக்களுக்கானது மட்டுமே என்பதை நம்பவில்லை.

முந்தைய ஐஏஇஏ அறிக்கை, ஈரான் யுரேனியத்தை 60% தூய்மைக்கு, ஆயுத தரத்திற்கு நெருக்கமாக செறிவூட்டியதாகவும், ஒன்பது  அணுகுண்டுகளை தயாரிக்கும் திறனைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரானின் அணுசக்தி வளாகங்கள் மீது அமெரிக்காவின் விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படை நேரடியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் மூன்று அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில மணிநேரங்களில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா நகரங்களின் மீது 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இரண்டு கட்டங்களாக ஈரான் வீசியது.

gk010725
இதையும் படியுங்கள்
Subscribe