இஸ்ரேல் - காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எகிப்தில் நடைபெற்ற அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவுடன் இஸ்ரேல் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - காசா போர் முடிவுக்கு வந்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் மற்றும் மாநாட்டின் 10 முக்கிய அம்சங்கள்
ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இதை மத்திய கிழக்கு நாடுகளின் விடியல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைத்தார்.
காசாவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 20 பிணைக்கைதிகள் உயிருடன் இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 2 ஆண்டு கால அவர்களின் துயரம் முடிவுக்கு வந்துள்ளதோடு, பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய 4 பெட்டிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்துள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களுக்கு பின்னர், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 250 பாலஸ்தீனிய கைதிகளையும், எவ்வித குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு இருந்த காசாவைச் சேர்ந்த 1700-க்கும் அதிகமான கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்தித்த தருணங்கள், வீடியோ காட்சிகள் உலக நாடுகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காசா மற்றும் மேற்கு கரையில் பஸ் மூலம் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிய பாலஸ்தீன கைதிகளை அங்குள்ளோர் ஆரத்தழுவி வரவேற்றனர்.
அமைதி ஒப்பந்தத்தை நினைத்து பார்க்க முடியாத ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார். இதை சாத்தியமாக்க உதவிய எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.
கெய்ரோவில் நடைபெற்ற ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில், டிரம்புடன், எகிப்து, துருக்கியைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் பங்கேற்றனர். இதில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த எகிப்து வந்த டிரம்ப், பிராந்திய நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஒரு திருப்புமுனை என்றும், பிணைக்கைதிகள் நாடு திரும்பியதையும் வெகுவாக பாராட்டினார்.
100-கணக்கான லாரிகள் மூலம் நிறைய உணவு பொருட்கள், அத்தியாவசியமான மருந்துகள் உள்ளிட்டவை காசாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அமைதி ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலான நாடுகள் அவற்றை அளித்ததாக டிரம்ப் கூறினார்.
எகிப்தில் அந்நாட்டு அதிபர் அப்தெல்பட்டா எல் சிசி, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜெர்மனி அதிபர் மெர்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோரும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்றது, சர்வதேச அளவில் நாடுகளின் ஆதரவை வெளிக்காட்டியது.
போரின் போது காசாவில் மட்டும் 68,000 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது வடக்கு காசாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பஞ்சம் நிலவுவதால், அனைத்து நிவாரணநடவடிக்கைகளும் இனி வேகம் பெறும் சூழல் உருவாகி இருக்கிறது.
மறுபுறம், இதுவரை காசாவில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று பாலஸ்தீன உரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருவதும் கவனிக்கத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/05/casa1-2025-11-05-10-56-35.jpg)
நெதன்யாகு பங்கேற்கவில்லை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மத விடுமுறையை காரணம் காட்டி யிருந்தாலும், மாநாட்டின் சூழல் காரணமாக மற்ற அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் வலுவான எதிர்ப்பு காரணமாகவே, அவர் பங்கேற்பது தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் போன்ற பிற தலைவர்கள் பங்கேற்ற சூழலில், இஸ்ரேலிய பிரதமரின் மாநாட்டு வருகை பல தரப்பினரைசங்கடப்படுத்தும் என்பதால், அவர்கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது. இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றமான உறவுகள் காரணமாக, அனைத்து முக்கிய தலைவர்களும் கூடும் இடத்தில் நெதன்யாகு கலந்து கொள்வது விரும்பத்தக்கதாக இல்லை என்பதால், வராமல் இருக்குமாறு எகிப்து கேட்டுக்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது.
அமெரிக்காவின் 20 அம்ச திட்டங்கள்
அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இஸ்ரேலும் ஹமாசும் ஒப்புதல் அளித்துள்ளன.
எகிப்தின் ஷர்ம் - எல் - ஷேக்கில் நடந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்சிசி இணைந்து தலைமை வகித்தனர்.
அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தின் முதல் கட்டத்தை ஆதரிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். உச்சி மாநாட்டின் கவனம் போர் நிறுத்தத்திற்கான சர்வதேச ஆதரவு, காசாவின் எதிர்கால நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் இருந்தது.
குறிப்பாக, போரில் ஈடுபட்ட இஸ்ரேல், ஹமாஸ் பங்கேற்காத நிலையில், உச்சி மாநாடு பெரும்பாலும் போர் நிறுத்தத்தின் ஆரம்ப கட்டத்திற்கான அடையாள கையெழுத்து விழாவாகவே இருந்தது.
மிக முக்கியமான கேள்விகளுக்கு இம்மாநாட்டில் பதில் இல்லை. பின் எதற்காக இந்த மாநாடு; யாருக்காக இந்த மாநாடு என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.
சமாதான ஆவணமான இந்த அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் எல் சிசி மற்றும் கத்தார், துருக்கி தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
நம்பிக்கை இருப்பினும், தீர்க்க வேண்டிய முக்கியமான பிரச்னைகள் கேள்விக் குறியாக உள்ளன. அதில் ஒன்று காசாவின் நிர்வாகம், மற்றொன்று ஹமாஸ் மற்றும் பிற ஆயுத குழுக்களின் ஆயுத குறைப்பு நடவடிக்கை. ஆனால், இவை குறித்து எதுவும் இடம்பெறவில்லை.
மாநாட்டில் நடந்தவை பெரும்பாலும் டிரம்பை பற்றியதாக மட்டுமே இருந்தது. மாநாட்டுக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும், நிரந்தர தீர்வுக்கான எந்த அம்சமும் இல்லை.
ஆழமான அரசியல் பிரச்னைகளை நிவர்த்தி செய்வதை விட போர்நிறுத்தம் செய்வது மட்டுமே மிக முக்கியமானதாக இருந்தது.
இஸ்ரேலிய படைகளை முழுமையாக திரும்ப பெறுதல், காசா மறுசீரமைப்பு, போருக்கு பிந்தைய நிர்வாகம் ஆகிய விஷயங்கள் இனி வரும் பேச்சுகளில் தீர்க்கப்படும் என தெரிகிறது.
எகிப்து உச்சி மாநாட்டின் சாதனை என்னவென்றால், போர் நிறுத்தத்துக் கான சர்வதேச சமூகத்தின் ஒப்புதலை பெறுவதன் வாயிலாக, அதை இருதரப்பும் கடைப்பிடிக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே.
சுருக்கமாக சொல்வதென்றால், தற்போது காசா ஒரு பலஹீனமான அமைதி பெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/casa-2025-11-05-10-56-24.jpg)