நடந்து முடிந்த சனிப்பெயர்ச்சியில் திருக்கணித கணக்குக்கும், வாக்கிய கணக்குமிடையே ஒரு வருடகாலம் இடைவெளி உள்ளது.
வாக்கியப்படி சனி கும்ப ராசியில் உள்ளார். திருக்கணிதப்படி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துவிட்டார். சனி கும்ப ராசியில் இருந்து பலன் கொடுப்பதற்கும், மீன ராசியிலிருந்து பலன் தருவதற்கும் இடையே நிச்சயமாக மாறுபட்ட நிகழ்வுகள் நடக்கும்தான்.
உங்கள் பிறப்பு ஜாதகம், வாக்கியப்படி எழுதப்பட்டிருந்தால், அதன்படி சனிப்பெயர்ச்சி பலன்கள் நடக்கும்.
உங்கள் பிறப்பு ஜாதகம், திருக் கணிதப்படி எழுதப்பட்டிருந்தால், அது சார்ந்த சனிப்பெயர்ச்சி பலன் கிடைக் கும்.
12 ராசிக்கும், வாக்கியம், திருக்கணிதப் பெயர்ச்சி பலன்கள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம்
வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்
மேஷ ராசிக்கு சனி 10, 11-ன் அதிபதி. வாக்கியப்படி இப்போது 11-ஆமிடமான கும்பத்தில் அமர்ந் துள்ளார். இதன்படி உங்கள் தொழில் நன்றாகவே நடக்கும். மூத்த சகோதரன், உங்கள் தொழிலுக்கு உதவுவார். வெளிநாட்டில், ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் எண்ணங்கள், நல்லவிதமாக நிறைவேறும். அரசியல்வாதிகள் கட்சி மாறுவது, அடுத்த கட்சியை தன் கட்சியுடன் சேர்த்துக்கொள்வது பற்றி வெகு யோசனை கொள்வர்; கவனியுங்கள். யோசனை மட்டும்தான் செய்வார்கள். மாறுதலை தள்ளிப்போடுவார்கள்.
திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்
தொழிலில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும். அதன் பொருட்டு முதலீட்டு செலவுகள் உண்டு. உங்கள் மூத்த சகோதரன் வேறிடம் சென்றுவிடுவார். ஆராய்ச்சி மற்றும் மேல் கல்வி பொருட்டு, வெளிநாடு செல்ல முயற்சி செய்வீர்கள். அதன்பொருட்டு அதிக அலைச்சல் இருக்கும். உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், கவனமாக இருக்கவேண்டும். விரும்பத்தகாத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், தங்கள் கௌரவம் பாழாகிறது என்றோ, எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றோ தடாலடியாக கட்சி மாறிவிடுவார்கள். நோ யோசனை. ஒன்லி ஆக்ஷன்தான். திருக்கணிதப்படி, சனி நிறைய மாறுதல் தருவார். உங்களுக்கு எந்த சனி பலன் சரியாக
நடந்து முடிந்த சனிப்பெயர்ச்சியில் திருக்கணித கணக்குக்கும், வாக்கிய கணக்குமிடையே ஒரு வருடகாலம் இடைவெளி உள்ளது.
வாக்கியப்படி சனி கும்ப ராசியில் உள்ளார். திருக்கணிதப்படி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துவிட்டார். சனி கும்ப ராசியில் இருந்து பலன் கொடுப்பதற்கும், மீன ராசியிலிருந்து பலன் தருவதற்கும் இடையே நிச்சயமாக மாறுபட்ட நிகழ்வுகள் நடக்கும்தான்.
உங்கள் பிறப்பு ஜாதகம், வாக்கியப்படி எழுதப்பட்டிருந்தால், அதன்படி சனிப்பெயர்ச்சி பலன்கள் நடக்கும்.
உங்கள் பிறப்பு ஜாதகம், திருக் கணிதப்படி எழுதப்பட்டிருந்தால், அது சார்ந்த சனிப்பெயர்ச்சி பலன் கிடைக் கும்.
12 ராசிக்கும், வாக்கியம், திருக்கணிதப் பெயர்ச்சி பலன்கள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம்
வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்
மேஷ ராசிக்கு சனி 10, 11-ன் அதிபதி. வாக்கியப்படி இப்போது 11-ஆமிடமான கும்பத்தில் அமர்ந் துள்ளார். இதன்படி உங்கள் தொழில் நன்றாகவே நடக்கும். மூத்த சகோதரன், உங்கள் தொழிலுக்கு உதவுவார். வெளிநாட்டில், ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் எண்ணங்கள், நல்லவிதமாக நிறைவேறும். அரசியல்வாதிகள் கட்சி மாறுவது, அடுத்த கட்சியை தன் கட்சியுடன் சேர்த்துக்கொள்வது பற்றி வெகு யோசனை கொள்வர்; கவனியுங்கள். யோசனை மட்டும்தான் செய்வார்கள். மாறுதலை தள்ளிப்போடுவார்கள்.
திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்
தொழிலில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும். அதன் பொருட்டு முதலீட்டு செலவுகள் உண்டு. உங்கள் மூத்த சகோதரன் வேறிடம் சென்றுவிடுவார். ஆராய்ச்சி மற்றும் மேல் கல்வி பொருட்டு, வெளிநாடு செல்ல முயற்சி செய்வீர்கள். அதன்பொருட்டு அதிக அலைச்சல் இருக்கும். உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், கவனமாக இருக்கவேண்டும். விரும்பத்தகாத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், தங்கள் கௌரவம் பாழாகிறது என்றோ, எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றோ தடாலடியாக கட்சி மாறிவிடுவார்கள். நோ யோசனை. ஒன்லி ஆக்ஷன்தான். திருக்கணிதப்படி, சனி நிறைய மாறுதல் தருவார். உங்களுக்கு எந்த சனி பலன் சரியாக வருகிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
திருக்கணிதப்படி, மேஷ ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பித்துவிடும். யார் யாருக்கெல்லாம், மண்டை காய்ந்து, வெட்டி செலவும், வீண் அலைச்சலும் இருக்கிறதோ, அவர்களுக்கு திருக்கணிதம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு விரயச்சனி நடப்பதால் குச்சனூர் சென்று சனீஸ்வரரை வழிபடவேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சனி 9, 10-க்கு உரியவர்.
வாக்கியப்படி
சனி, வாக்கியப்படி 10-ல் ஆட்சியாக அமர்ந்திருப்பார். எனவே தொழில் லாபம், அதிர்ஷ்டம் வரும் நேரம், அதிர்ஷ்டம் வரும் நேரம் கொஞ்சம் இக்கட்டுக்களும் இருக்கும். எனினும் வெற்றிகள் தேடிவரும். கௌரவம், அந்தஸ்து இவை அதிகரிக்கும். சனி ஒரு தொழில் கிரகம். அவர் தொழில் ஸ்தானம் எனும் 10-ஆமிடத்தில் அமர்ந்துள்ளதால், நிறைய தொழில் வாய்ப்புகளை வாரி வழங்குவார். சில வழக்கறிஞர்கள் மிக மேன்மையாக இருப்பார்கள். அரசு பணியாளர்கள், அரசியல்வாதிகள் இருக்குமிடமே சௌக்கியம் என உணர்வோடு இருப்பார்கள். உங்கள் தந்தையின் நிலை பற்றி மட்டும் கவனம் எடுத்துக்கொண்டிருப்பீர்கள்.
திருக்கணிதப்படி
சனி லாப சனியாக 11-ஆமிடம் வந்து அமர்கிறார். இது ரிஷப அரசியல்வாதிகளை பரபரப்பாக்கும். அரசியலில் முதன்மை பெற, குறுக்கு வழிகளை தேட ஆரம்பித்து விடுவீர்கள். அரசு அதிகாரிகள் மற்றும் வேலை பார்க்கும் அனைத்து, ரிஷப ராசியாகும், ஏதோ ஒரு பதவி உயர்வு வந்தால்தான் ஆச்சு என அடமாய் அடம்பிடித்து, அதற்குரிய வழிகளை தேட ஆரம்பித்துவிடுவீர்கள். அட பள்ளி, கல்லூரி மாணவர்களும், இவ்வளவு சாக்லேட், என எதையேனும் கொடுத்து "தல' பொறுப்புக்கு வந்துவிடுவீர்கள். வழி அத்தனையும் குறுக்கு வழிதான். நாய் வித்த காசு குரைக்குமா லஞ்சம் கொடுத்து வந்த பதவி கசக்குமா என தத்துவம் சொல்லி ஜமாய்ப்பீர்கள். ஏனெனில், சனி இருக்குமிடம் லாப ஸ்தானம். எண்ணங்கள் நிறைவேறும் இடம். எனவே உங்களின் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
ரிஷப ராசிக்கு வாக்கியப்படி சனி பலன் நிதானமாகவும், திருக்கணிதப்படி பரபரப்பாகவும் இருக்கும்.
ஆஞ்சனேயரை வணங்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு சனி 8, 9-ன் அதிபதி.
வாக்கியப்படி
மிதுன ராசியின் 9-ஆம் வீட்டில் ஆட்சியாக அமர்ந்துள்ளார். சனி, உங்கள் எட்டாம் அதிபதியும் ஆவதால், வரவேண்டிய யோக, அதிர்ஷ்ட விஷயங்கள் சற்று பின்னடைவு காணும். அல்லது எதிர் மறைத் தன்மையோடு கிடைக்கும். தம்பதியர் சற்று சண்டையோடு காலம் தள்ளுவர். வியாபாரம் மேடும் பள்ளமுமாக ஓடும். அரசியல்வாதிகள் சற்று திருப்தியின்றி இருப்பர். உயர்கல்வி சற்று இடரும். கோவில் தரிசனம் முழுமை தராது.
திருக்கணிதப்படி
மிதுன ராசியின் 10-ஆமிடத்தில் சனி, தொழில் சனியாக சென்று விடுகிறார். நிறைய மிதுன ராசியார் திருமணம் செய்து கொள்வர்.
தொழில் மேன்மையை, லஞ்சம் கொடுத்து, வெற்றியின் பாதையை நோக்கி திருப்பி விடுவர். அரசியல்வாதிகள், தங்கள் உயர்வுக் காக, தோதான ஆட்களை பிடித்து, அவர்களை தங்கள் கூட்டணி கட்சியாக்கிக் கொள்வர்.
வணிகர்கள், தங்கள் கைக்கு அடக்கமான பங்குதாரரை அமைத்துக்கொள்வர். திருநறையூர் சென்று வணங்கவும்.
கடகம்
கடக ராசிக்கு சனி 7, 8-ன் அதிபதி.
வாக்கியப்படி
வாக்கியப்படி சனி, கடக ராசிக்கு அஷ்டமி சனியாக அமர்ந்திருப்பார். எனவே கடக ராசியார் கண் முழி பிதுங்கி போய் இருப்பர். எதைத் தொட்டாலும் தடை, தாமதம் ஆகும். வேலை ஸ்திரமாக இராது. எந்த நேரமும் வேலையைவிட்டு துரத்திவிடுவார்கள் எனும் பீதியோடு அலைவீர்கள். அரசியல்வாதிகளை, நீ விளையாட்டுக்கே வேண்டாம் என தனியாக துரத்திவிடுவர். வணிகர்கள் எதைச்செய்தால், வியாபாரம் நன்கு ஓடும் என மண்டை காய யோசிப் பார்கள். ஆக வாக்கியப்படி, கடக ராசி யாருக்கு அடுத்த வருடம்தான் அஷ்டம சனி முடியும். அதுவரை எட்டியத்தளி மற்றும் அருகிலிருக்கும் சனீஸ்வரரை கையை- காலை பிடித்து கெஞ்சி, ரொம்ப கஷ்டப்படுத்தாமல் இருக்கவேண்டி கேட்டுக் கொள்ளவும்.
திருக்கணிதப்படி
கடக ராசிக்கு சனி 9-ஆமிடத்தில், அதிர்ஷ்ட சனியாக மாறி அமர்வார். உங்களில் நிறைய பேர் வேலையில் அமர்ந்துவிடுவீர்கள். சிலர் தங்கள் தந்தையின் வேலையை பார்க்க நேரிடும். சிலர் தந்தை சுகவீனப்படுவதால், அவரின் வியாபாரத்தை எடுத்து நடத்தவேண்டிவரும். திருமணம் நடக்கும். உங்களில் வெளிநாட்டு ஏற்றுமதி செய்தால், அவ்விஷயம் செழிப்பாகும். கிரிமினல் வக்கில் வெகு சிறப்பு பெறுவார். வேலையில் லஞ்சப் பணம் கொட்டும். தொழில் சார்ந்த மேல்படிப்பு, வெளிநாட்டு கல்வி சற்று இடைஞ்சலுக்குப் பிறகு நல்லவிதமாக பலன் தரும். விவாகரத்து கேட்டு வழக்கு போட்ட சில தம்பதிகள் மனம் மாறி மீண்டும் சேர்ந்துவிடுவர்.
வாக்கியப்படி அஷ்டமி சனியாக கடக ராசியாரை பாடாய்படுத்திய சனி, திருக் கணிதப்படி, அதிர்ஷ்ட சனியாக யோகம் தருவார்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு சனிபகவான் 6, 7-க் குரியவர் ஆவார்.
வாக்கியப்படி
சனி, சிம்ம ராசியின் 7-ஆமிடம் எனும் ஸப்தமி ஸ்தானத்தில் உள்ளார். இப்போது நடக்கும் திருமணங்கள், சண்டை, சச்சரவுடன் நடக்கும். தம்பதிகளுக்குள் மன வேற்றுமை அதிகரித்து காணப்படும். காதல் கல்யாணம் சிலசமயம் காவல் நிலையக் கட்டுப்பாட்டில் நடக்கும். உங்களை சந்திக்கும் நபர்கள், சிலபல வில்லங்கங்களை செய்துவிட்டு போய்விடுவர். உங்கள் வணிக பங்குதாரர் உங்கள் எதிரியுடன், மறைமுகமாக கைகோர்த்து கொண்டிருப்பார். அரசியலில் உங்கள் ஆதரவாளர்கள் உங்களுக்கு அனு சரணையாக இருப்பது மாதிரி நடிப்பார்கள். ஆனால், உங்கள் எதிரியுடன் நல்ல அண்டர் சான்டிங் கில் திகழ்வர். இது தெரிந்தும், நீங்கள் ஒன்றும் சொல்லமுடியாது. ஏனெனில் 7-ல் அமர்ந்த சனி, உங்கள் ராசியை முறைத்து பார்ப்பதனால் இவ்விதம் இருக்கும். மந்திரி பதவியில் இருப்போர், "எவன் நம்மளை போட்டுக் கொடுக்கிறான் என்று தெரியவில்லையே' என புலம்புவர்.
திருக்கணிதப்படி
சிம்ம ராசிக்கு, சனி 8-ஆமிடத்தில் நகர்ந்து அஷ்டமி சனியாகி விடுகிறார். முதலில் உங்கள் எதிரிகள் மறைந்தவிடுவர். ஆனால் அவர்கள் உண்டாக்கி வைத்திருக்கும் தீங்குகள் தொடரும். உங்கள் யோசனைகள், உங்கள் வாரிசுகள் பங்கு வர்த்தகம், சினிமா கலைஞர்கள் என இந்த விஷயங்கள் பின்னடைவை சந்திக்கும். உங்களில் சிலருக்கு எதிரி, நோய் மறைவதோடு வேலையும் அகன்று விடும் அபாயம் உள்ளது. எனவே சிம்ம ராசிக்காரர்கள் வேலையை வெகு ஜாக்கிரதையாக தொடரவேண்டும். திருக்கணிதப்படி, சனிப்பெயர்ச்சி ஆனவுடன், சிம்ம ராசி மந்திரிகள் கண்டிப்பாக பதவி விலக நேரிடும். அதோடு அவமானத்தையும், வழக்குகளையும் சந்திக்க நேரிடும். சிம்ம ராசி கலை உலகைச் சேர்ந்தவர்கள், உடல் நலம் குறைவதால், ஒரு பக்கமாக ஓய்வெடுக்க நேரிடும்.
எப்போதும் அஷ்டமி சனி, ஜாதகரின் தொழில், பணம், யோசனைகள் என இந்த இடங்களைப் பார்ப்பதால், ஜாதகர்கள் திணறிவிடுகிறார்கள். எனவேதான் அஷ்டமி சனி எனும்போது அனைவரும் அச்சம் கொள்கிறார்கள்.
அஷ்டமி சனி பாதிப்பு, நீங்க, எட்டியத்தளி சென்று வணங்க வேண்டும். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, தீபமேற்றவும்.
கன்னி
கன்னி ராசிக்கு சனி 5, 6-ன் அதிபதி.
வாக்கியப்படி
சனி 6-ஆமிடத்தில் இருப்பார். வாரிசுகளின் கல்வி பற்றிய கவலை இருக்கும். உங்களுக்கு வயிறு சம்பந்தமான இம்சை உண்டு. வாடகை வீடு சம்பந்தமான பிரச்சினை ஓடும். வீடுகட்ட கடன் விஷயம் முடிவு தெரியாமல் இருக்கும். காதல் விஷயம். அடிதடி வழக்கில் கொண்டுவிடும். வேலை பார்க்கும் இடத்தில், சக தொழிலாளர்களின் இம்சை உண்டாகும். வாழ்க்கைத்துணை, வணிக பங்குதாரர் இவர்களுடன் மனஸ்தாபம் வரும். வாழ்க்கைத் துணையின் தொழில், அதில் ஏற்படும் கடன், வாரிசுகள் சொன்னதைக் கேட்காத நிலை, தாயாரின் உடல்நிலை என அனைத்து மன கஷ்டமும் உங்களை பாடாய்படுத்தும்.
திருக்கணிதப்படி
கன்னி ராசியின் 7-ஆம் வீட்டில், ஸப்தமி சனியாக மாறுவார். இதனால் அரேன்ஜ்டு மேரேஜ், காதல் திருமணம் எல்லாம் நடக்கும். உங்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் முதலில் வேலை செய்த பழைய கம்பெனிகளில் வேலைக்கு சேர்வீர்கள். வீடு வாங்க, வாரிசு களின் கல்வி இவை சார்ந்த கடன் கிடைக்கும். சில சினிமா கலைஞர்கள் வீடு வாங்குவர். உங்கள் வாழ்க்கைத்துணையின் தொழில் மேன்மைக்கு நீங்கள் அல்லது உங்கள் வாரிசு உதவி செய்வீர்கள். சிலருக்கு காதல் கனியும். வீடு, வயல், தோட்டம், மாடுகள் இவை சார்ந்த விஷயங்களுக்கு, நிறைய வெளி மனிதர்களை சந்திக்க நேரிடும். இந்த ஸப்தமி சனி, நிறைய ஆட்களை சம்பாதித்து தருவார். சனீஸ்வரர் சன்னிதிக்கு, முடிந்தால் ஒரு மின் விசிறி வாங்கிக் கொடுத்து வணங்கவும்.