Advertisment

பணமே வாழ்க்கையா? நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

money


ணம் இல்லாம 
நான் படுற கஷ்டம் 
கொஞ்ச நஞ்சம் இல்ல சாமி..

பணம் இல்லாம நான் படுற 
அசிங்க அவமானத்தை
தாங்கமுடியல..
செத்துடலாமான்னு தோணுது..
எவ்வளவோ 
மன அழுத்தம்
சில காலமாக எனக்கு...

Advertisment

"பணம் பணம்னு அலையாதீங்க
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை
பணத்தை தேடிப்போய் 
குடும்பத்தை தொலைச்சுடாதீங்க..
எனக்கு பணத்தால
நிம்மதியே இல்ல
அப்டின்னு சிலபேரோட
அட்வைஸ் மழைவேற
தாங்க முடியல...

Adv


ணம் இல்லாம 
நான் படுற கஷ்டம் 
கொஞ்ச நஞ்சம் இல்ல சாமி..

பணம் இல்லாம நான் படுற 
அசிங்க அவமானத்தை
தாங்கமுடியல..
செத்துடலாமான்னு தோணுது..
எவ்வளவோ 
மன அழுத்தம்
சில காலமாக எனக்கு...

Advertisment

"பணம் பணம்னு அலையாதீங்க
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை
பணத்தை தேடிப்போய் 
குடும்பத்தை தொலைச்சுடாதீங்க..
எனக்கு பணத்தால
நிம்மதியே இல்ல
அப்டின்னு சிலபேரோட
அட்வைஸ் மழைவேற
தாங்க முடியல...

Advertisment

"பணம் 
இல்லாததால்'' தான்டா
என்னை
குடும்பத்தை விட்டு விரட்டிட்டாங்க''ன்னு
நான் சொல்லணும்போல இருக்கு..

பணம் சம்பாதித்தாலும் பிரச்சினை 
பணம் சம்பாதிக்காம இருந்தாலும் பிரச்சினை...

ஆம்பளைங்க படுறபாடு 
ரொம்ப சித்தரவதை சித்தரே!  
சில நேரம் வீட்டைவிட்டு 
பல நேரம்
நாட்டவிட்டு ஓடிடலாம்னு தோணுது..

பணம் சம்பாதிக்க 
ஒரு வழியை காட்டுங்க
நையாண்டிச் சித்தரே...  

பண வரவை குறிக்கும் இடம் 
இரண்டாம் இடம்..
இரண்டாம் இடத்தை 
சுப கிரகங்கள் பார்த்தாலும்..
இரண்டாம் இடத்தில் சுபர்கள் இருப்பது
இரண்டாம் அதிபதியுடன்
சுபர்கள் இணைந்தாலும்
பண வரவு வாழ்நாள் முழுவதும் 
தொடர்ந்து இருக்கும்.. 

சுபர்கள் என்பது 
உன் லக்னத்தின் சுப கிரகம்
என்பதை மறந்துவிட வேண்டாம்..
எல்லோருக்கும் 
ஒரு கெட்ட நேரம் 
கட்டாயம் உண்டு..
அதில் பண வரவும் இருக்காது
குடும்ப உறவும் நிலைக்காது..

தனம், வாக்கு, குடும்பம் என்று 
அதற்குத்தான் இரண்டாம் இடத்தை 
சொல்- இருக்கிறார்கள்..
இரண்டு கெட்டால் 
இவையெல்லாம் கெடும்..
இல்லறம் நல்லறமாக 
இரண்டாம் இடத்தை 
கவனிக்க வேண்டும்..

நவகிரகங்களுக்கும் 
சாந்தி உண்டு
சுய ஜாதகத்தில்
கிரக நிலை அறிந்து
கிரகத்தின் வலுவைப் பார்த்து
கிரக பரிகாரம் செய்துகொண்டால்
உன் குடும்பமும் உன்னை கொண்டாடும்..

மீண்டும் சொல்கிறேன்..
உன் பணத்தால் மரியாதை கிடைக்காது 
உன் குணத்தால்தான் கிடைக்கும்...  

புரியாதவர்களுக்கு 
புரியவைக்க நினைக்காதே
பணம் கேட்பவர்களுக்கு பணத்தைக் கொடு
பாசம் கேட்பவர்களுக்கு பாசத்தைக் கொடு
புரியாமல் வாழாதே..
பிறரை புரியவைக்க முயற்சிக்காதே
பிரிந்து போகலாம்
உடைந்து போகக்கூடாது..

திருமணப் பொருத்தத்தில்
இரண்டாம் இடப் பொருத்தம் இல்லாதவருடன்
இணையாதே..
இனி எல்லாம் சுகமே...


செல்: 96003 53748 

bala060925
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe