சுமார் 58 வயதுடைய ஒருவர், 28 வயதுடைய தன் மகளுடன் நாடியில் பலன்
தெரிந்துகொள்ள வந்திருந்தார். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன் அறிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன்.
ஐயா, "இவள் எனது மகள். கடந்த மூன்று வருடங்களாக, இவளுக்கு திருமணம் செய்ய வரன் தேடிவருகின்றேன். நிறைய பையன்களைப் பார்த்தோம். ஆனால் எங்களுக்கு பையனைப் பிடித்தால், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்கு பிடித்தால், என் பெண்ணிற்குப் பிடிக்கவில்லை. எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் பிடித்திருந்தால், ஜோதிடர்களுக்கு பிடிக்கவில்லை. பொருத்தம் இல்லையென்று கூறிவிடுகின்றார்கள். மேலும் ஏதேதோ தோஷம் உள்ளது என்று கூறி பரிகாரங்களைச் சொன்னார்கள்.
அனைத்துப் பரிகாரங்களையும் செய்து விட்டோம். ஆனால் திருமணம் மட்டும் தடையாகிக்கொண்டே வருகிறது.
மகளின் திருமணத்தடை பற்றி எனது நண்பர் ஒருவரிடம் கூறி வருத்தப்பட்டேன். அவர் "பாலஜோதிடம்' வாசகர். அகத்தியர் ஜீவ நாடி பற்றிக் கூறி, அவர் வைத்திருந்த "பாலஜோதிடம்' புத்தகத்தை என் கையில் கொடுத்து, உன் மகள் திருமணம் பற்றி ஜீவநாடியில் பலன் கேட்டுப்பார். தடைக்கு காரணத்தையும், தடை விலகி திருமணம் தடைபெற நல்ல வழியும் கூறுவார் என்றார்.
அதனால் தான் நாடியில் பலன்கேட்டு வந்தேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறத் தொடங்கினார்.
இவன் மகள் பட்டம் படித்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றாள். இதுவரை வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும். அதன்பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்ற பிடிவாதத்துடன் இருந்தாள். ஆனால் இவள் ஆசை நிறைவேறவில்லை. அதனால் இப்போது வெளிநாட்டில் வேலை செய்பவனை மணந்துகொள்கிறேன். அதுபோன்ற மாப்பிள்ளையைப் பாருங்கள் என்று கூறுகிறாள். இதுவரை திருமணமே வேண்டாம் என்று கூறிய மகள், இப்போது அயல் நாட்டில் வேலை செய்பவனை திருமணம் செய்துகொள்கின்றேன் என்று கூறியதே பெரிது என மகிழ்ந்து, வெளிநாட்டில் வேலை செய்யும் வரன்களின் ஜாதகத்தை தேடித்தேடி வாங்கி பொருத்தம் பார்க்கின்றான். ஆனால் ஜோதிடர்கள் பொருத்தம் சரி இல்லையென்று கூறி விடுகின்றார்கள். ஒரு பையனின் ஜாதகம் பொருந்தி இரண்டு வீட்டாரும் சம்மதித்து நிச்சயதார்த்தம்வரை சென்று, இறுதியில் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது. நான் கூறியது உண்மையா என்று கேள்.
இவளுக்கு இந்த மகள் ஒருத்திதான். வேறு குழந்தைகள் இல்லை. இவளின் குடும்ப சூழ்நிலையில் உண்டான அனுபவத்தால், இந்த நாட்டில் தன் உறவுகள், குடும்பத்தாருடன் வாழ விரும்பாமல், பணி நிமித்தமாகவோ அல்லது வெளிநாட்டில் வேலை செய்பவனை மணந்துகொண்டு கண்காணாத தேசத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று தீர்மானமாக உள்ளாள். இவள் திருமணத்தடையை இவளே உருவாக்கிக்கொள்கின்றாள். இவளின் இந்த மனநிலைக்கு ஒரு காரணமும் உண்டு. இவள் வம்சத்தில் ஒரு பெண்விட்ட சாபம்தான் காரணம். அதையும் கூறுகின்றேன். இவனை அறிந்துகொள்ளச்சொல்.
இவன் வம்சத்தில் இவன் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவள், அதாவது இவளுக்கு அத்தை அவள் தனது சாதியைவிட்டு, வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவனை விரும்பிப்பழகி அவனையே திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தாள். ஆனால் இவள் குடும்பத்தினர், அவள்விருப்பத்திற்குச் சம்மதிக்கவில்லை. தனது சாதியிலே, உறவுப்பையன் ஒருவனுக்கு அவளைத் திருமணம் செய்துவைத்தார்கள். பெற்றவர்களின் பிடிவாத திருமணத்தால், மணந்தவனு டன் வாழ விருப்பம் இல்லா மல், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனாள்.
அந்தப் பெண் மரணம் அடையும்போது, என் விருப்பப்படி, நான் விரும்பியவனுடன் மகிழ்ச்சியாக வாழ என் குடும்பத்தார் தடை செய்துவிட்டார்கள். நான் விரும்பிய வாழ்க்கை தடையானது. இதனால் என் வாழ்வும் பூமியில் முடிந்து போனது. நான் பட்ட துன்பம்,
துயரங்களை இனி இந்த குடும்பத்தில் வாழவந்த பெண்களும், என்னைப் போல் பிறந்த பெண்களும், நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியாது, விரும்பியபடி திருமணம் செய்து, கணவனுடன் வாழக் கூடாது என்று மனம் வெறுத்து சாபமிட்டு இறந்தாள். அந்த ஆத்மாவின் கோபமும், சாபமும் வம்சத்தில் தொடர்ந்து பாதிப்பைத் தருகின்றது.
இவன் வாழ்க்கையில், பெண் சாபம் பாதிப்பைத் தந்ததையும் கூறுகிறேன். இவனுக்குத் திருமணம் செய்ய, இவன் குடும்பத்தார், இவன் சாதியிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்ய முடிவுசெய்தார்கள். ஆனால் இவன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை விரும்பி குடும்பத்தினரை எதிர்த்து அவளையே திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு பெற்றோர்களால் குடும்ப உறவுகளால் ஒதுக்கப்பட்டு, தன் மனைவி யுடன் வீட்டைவிட்டு வெளியேறி, தன் மனைவி யுடன் தனித்து வாழ்ந்தான். இவன் குடும்ப வாழ்வில் இந்த மகள் மட்டும் பிறந்தாள்.
மகள் பிறந்த சில வருடங்களில், இவன் மனைவி இறந்து போனாள். மனைவி இறந்தவுடன் தன் மகள் வாழ்க்கையை எண்ணி வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. வம்ச பெண் விட்ட சாபம், இவன் விரும்பி மணந்த மனைவியுடன் முழுமையாக வாழ விடாமல் இல்லற வாழ்வை தடுத்துவிட்டது.
வம்சத்தை தொடர்ந்து வரும் பெண் சாபம், இப்போது வம்ச வாரிசான இவன் மகள் வாழ்க்கையிலும் செயல்பட்டு இவளின் விருப்பப்படி வாழ்க்கை அமையவிடாமல் தடை செய்கின்றது. நடக்காத, கிடைக்காத வாழ்க்கைக்கு இவள் மனதை தூண்டி அவள் விரும்புவதுபோல், திருமணம் அடைய விடாமல் தடைசெய்து வருகின்றது. இவள் விரும்பியபடி, வெளிநாட்டில் பணி புரிபவ னுக்கு, மகளைத் திருமணம் செய்துவைத்தால், அவனுடன் வாழ்க்கை முழுமையாக வாழ முடியாது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு, அல்லது இழப்பு ஏற்படலாம். அவனை விட்டுப்பிரிந்து தாய் நாடு வந்து வாழும் சூழ்நிலை அமையும். இவளுக்கு வெளிநாட்டு வாழ்க்கை யோகம், மோகம் சிறிது காலம்தான் என்றார்.
வம்சத்தில் உண்டான பெண் சாப நிவர்த்தியாகி, என் மகள் திருமணத்தடை விலகி, நல்ல வாழ்க்கை அமைய அகத்தியர் தான் வழிகாட்ட வேண்டும். என் மகளுக்கு வரும் மாப்பிள்ளை பற்றிய விவரங்களையும் தெளிவாக கூறி அடையாளம் காட்ட வேண்டும் என வேண்டி நின்றார்.
இவளுக்கு கணவன் இந்த நாட்டிலேயே வேறு சாதியைச் சேர்ந்தவன் கணவனாக அமைவான். இவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து, மேற்கு, தென் மேற்கு, வடமேற்கு சார்ந்த திசையில் பத்து மைல் தொலைவிற்குள் வரன் அமையும். அவன் பிறந்த வீடு கிழக்கு, மேற்கு வீதியில், தெற்கு, வடக்கு வாசலுள்ள வீடு, அது ஒரு வியாபார ஸ்தலம். அருகில் வியாபாரக் கடைகள் இருக்கும். அவன் கணக்கர் (ஆடிட்டர்) வங்கியில் பணி, வட்டி தொழில், வழக்கறிஞர் போன்ற தொழில் செய்பவராக இருக்கக்கூடும் என்றவர், வம்சத்தில் உண்டான பெண் சாபம் நிவர்த்தியாக ஆத்ம சாந்தி பிரார்த்தனை முறைகளைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடி பாவ- சாப- நிவர்த்தி பிரார்த்தனைகளை செய்து வரன் தேடி திருமணம் செய்துவைக்கின்றேன் என்று கூறி என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.
ஒவ்வொருவர் திருமணமும் அவரவர் நிர்ணயித்தபடிதான் நடக்கும் என்பதை நானும் புரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us