ஒவ்வொரு நாளிலும் அன்றாடம் சில காரியங்களை நாம் செய்ய வேண்டியது இருக்கும். எல்லாவற்றுக்கும் முகூர்த்த நேரத்தை முகூர்த்த நாளை பார்க்க வேண்டும் என்று கிடையாது. பொதுவாக ஒரு மாதத்தில் 4, 5 நாட்கள்தான் முகூர்த்த நாட்களாக வரும். மற்ற நாட்களில் ஒரு அவசர வேளையில் ஈடுபட வேண்டும் என்றால் அதனை ஹோரை பார்த்து செய்தால் நல்லது.
அப்படிப்பட்ட ஹோரையானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஹோரை உண்டு, அந்த ஹோரையின் அட்டவணையும் ஒவ்வொரு ஹோரையில் செய்யக்கூடிய பணிகளைப் பற்றியும் எது செய்தால் நற்பலனை தரும் என்பதனை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
சூரிய ஹோரை
அரசாங்க அதிகாரிகளை பார்க்க, அரசாங்கவழியில் உ
ஒவ்வொரு நாளிலும் அன்றாடம் சில காரியங்களை நாம் செய்ய வேண்டியது இருக்கும். எல்லாவற்றுக்கும் முகூர்த்த நேரத்தை முகூர்த்த நாளை பார்க்க வேண்டும் என்று கிடையாது. பொதுவாக ஒரு மாதத்தில் 4, 5 நாட்கள்தான் முகூர்த்த நாட்களாக வரும். மற்ற நாட்களில் ஒரு அவசர வேளையில் ஈடுபட வேண்டும் என்றால் அதனை ஹோரை பார்த்து செய்தால் நல்லது.
அப்படிப்பட்ட ஹோரையானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஹோரை உண்டு, அந்த ஹோரையின் அட்டவணையும் ஒவ்வொரு ஹோரையில் செய்யக்கூடிய பணிகளைப் பற்றியும் எது செய்தால் நற்பலனை தரும் என்பதனை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
சூரிய ஹோரை
அரசாங்க அதிகாரிகளை பார்க்க, அரசாங்கவழியில் உதவி பெற, புதிய வேலைக்கு முயற்சி செய்ய, பத்திரங்கள் ஒப்பந்தம் எழுத, தந்தைவழியில் அனுகூலம் பெற, பூர்வீக சொத்து பற்றி பேச, பிரபலமானவர்களை சந்திக்க, வியாதியஸ்தர்கள் மருந்து உண்ண, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள, வங்கி தொடர்பான பணிகளைப்பெற, அரசாங்கவழியில் மேற்கொள்ளக்கூடிய எந்த காரியம் என்றாலும் சூரிய ஹோரையில் மேற்கொண்டால் வெற்றி உண்டாகும்.
சந்திர ஹோரை
அனைத்துவகையான பயணங்கள் மேற்கொள்ள, தாய்வழி உறவினர்வகையில் அனுகூலம்பெற, வயது மூத்த பெண்கள்மூலமாக அனுகூலங்கள்பெற, முதலில் உணவு உண்ண, ஆடை, ஆபரணங்கள் வாங்க, கலை, கற்பனை சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் மேற்கொள்ள, பெண் பார்க்க, வெளிநாட்டுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் விசா போன்ற மனுக்கள் செய்ய, கல்வி கற்க, பசு கன்று கால்நடைகள் வாங்க, விற்க, உணவு தானிய பொருட்கள் வாங்க சந்தர ஹோரையானது சிறப்பு.
செவ்வாய் ஹோரை
வாங்கிய கடன்களை அடைக்க, நெருப்பு சம்பந்தப்பட்ட காரியங்கள் மேற்கொள்ள, பூமி சம்பந்தப்பட்ட காரியங்கள் மேற்கொள்ள, நிலம், பூமி வாங்க, விற்க பூமி சம்பந்தப்பட்ட பணிகள் மேற் கொள்ள, வழக்கு சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ள, சமையல் கூடம் சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ள, மருந்து உண்ண, உடன்பிறந்தவர்கள் தொடர்பான செயல்களை மேற்கொள்ள செவ்வாய் ஹோரையானது மிகவும் சிறப்பு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/horai1-2025-12-18-15-06-05.jpg)
புதன் ஹோரை
கல்வி சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ள, வங்கி கணக்கு தொடங்க, தேர்வுக்கு படிக்க ஆரம்பிக்க, பத்திரிகைக்கு கதை, கட்டுரைகள் எழுத, கமிஷன், வியாபாரம் தொடங்க, தாய்மாமன் வழியில் முயற்சிகள் மேற்கொள்ள, கூட்டுத் தொழில் தொடங்க, புகழ் பெற்றவைகளை சந்திக்க, பிறருக்கு தகவல் அனுப்ப, விஞ்ஞானம், ஜோதிடம் ஆராய்ச்சி பணியில் ஈடுபட, போட்டித் தேர்வுகளில் பங்குபெற, போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய, வியாபார தொடர்பான செயல்களை மேற்கொள்ள புதன் ஹோரையானது சிறப்பு.
குரு ஹோரை
பண சம்பந்தப்பட்ட காரியங்கள் மேற் கொள்ள, வங்கிப் பணி தொடங்க, புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க, கடன் வாங்க, அரசாங்கவழி உதவியைப்பெற, பிள்ளைகள் வழியில், சுப காரியங்கள் மேற்கொள்ள, பெரிய மனிதர்களை சந்திக்க, ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபட, கொடுக்கல்- வாங்கல் தொடர்புடைய செயல்கள் ஈடுபட, தெய்வ வழிபாடு மேற்கொள்ள, உபதேசம்பெற, தியான மந்திரங்கள் ஜெபிக்க குரு ஹோரை சிறப்பு.
சுக்கிர ஹோரை
திருமண சம்பந்தப்பட்ட செயல்களை மேற்கொள்ள, பெண் பார்க்க, பெண் நட்பைபெற, வண்டி, வாகனங்கள், வீடு, வாசல் போன்றவற்றினை வாங்க, சுப காரியங்கள் மேற்கொள்ள, மருந்து உண்ண, கலை இசை சம்பந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ள, ஆடை, ஆபரணங்கள் வாங்க, கிணறு வெட்ட, போர் போட, கடனை வசூல் செய்ய, கிரகப்பிரவேசம் செய்ய, புதிய வியாபாரம் தொடங்க, கணவன்- மனைவி ஒற்றுமைக்கு சுக்கிர ஹோரையானது சிறப்பு.
சனி ஹோரை
நிலம் குத்தகை ஈட, இரும்புப் பொருட்கள் விற்க- வாங்க, விவசாய பணிகள் செய்ய, வீடு, மனை போன்றற்றை பழுது பார்க்க இயந்திரங்கள் பராமரிக்க பழைய பொருட்கள் வாங்க கடன்களை பைசல் செய்ய ஹோரையானது சிறப்பு. எந்த ஒரு சுபகாரியத்திற்கும் சனி ஹோரை சிறப்பல்ல.
செல்: 7200163001
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us