முதாயத்தில் அதிகப்படியாக நிலவிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணத்தடை அல்லது திருமண பிரிவினையாக உள்ளது. திருமணம் நடக்கவில்லையென்று ஒரு பிரிவினர் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதே நிலையில் மற்றொரு பிரிவினர் ஏன் திருமணம் நடந்தது என்று பிரிவினையை நோக்கி செல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது காதல் கலப்பு திருமணம் அல்லது பெற்றோர்கள் நிச்சயம் திருமணம்ஒரே வயதில் பிறந்தவர்கள் அல்லது  அதிகபட்சம் ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்களின் திருமணம் அதிகரித்துவருகிறது.

Advertisment

ஒரே வயது திருமணம் நல்லதா? ஒரே வயதில் திருமணம் செய்யலாமா போன்ற கேள்விகளுக்கு இப்போது விடை காணலாம்.

Advertisment

ஒருகாலத்தில் கணவன்- மனைவிக்கு அதிகபட்சம் 5 முதல் 15, 20 வயது வரைக்கும் வித்தியாசத்தில் திருமணம் செய்தார்கள்.  ஒரே வயது திருமணம் வெகுசிலருக்கு மட்டுமே நடந்தது. திருமணத்தில் நோக்கமே வம்ச விருத்தியாகும். பெண்கள் 12, 13 வயதில் பருவம் அடைவதால் அவர்களின் உடல் ரீதியாக 16 வயதில் இனப் பெருக்கத்திற்கு தயாராகி விடுகிறார்கள். அதாவது ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஹார்மோன் மாற்றம் விரைவில் நிகழ்கிறது. இதன்காரணமாக, ஆண்களைவிட அவர்கள் விரைவில் உடல் ரீதியாக  தகுதியானவர்களாக மாறுகிறார்கள். எவ்வளவு வேகமாக அவர்கள் இல் வாழ்க்கைக்கு தயாராகிறார்களோ, அவ்வளவு விரைவில் இல்வாழ்க்கையில் இருந்து மனரீதியாக உடல்ரீதியாக விடுபடவும் விரும்புகிறார்கள். அதிகபட்சமாக பெண்களுக்கு 45 முதல் 50 வயதிற்குள் மாதவிடாய் சுழற்சியில் நின்றுவிடும். அதன்பிறகு அவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் நாட்டம் குறைந்துவிடும். ஆனால்  ஆண்களுக்கு அதிக காலம் குடும்ப வாழ்க்கை தேவைப்படும். இது போன்ற காரணங்களால் நமது முன்னோர்கள் 10 முதல் 12 வயது வித்தியாசத்தில் திருமணத்தை நடத்தினார்கள். அதாவது- ஆணைவிட பெண் குறைந்தது 10 முதல் 12 வயது குறைவாக இருந்தால் வாழ்க்கை பாதை சிறப்பாக இருக்கும்.

தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகமாக இருக்கும். மேலும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும்போது தன்னைவிட சிறிய வயது பெண் என்று ஆண் அனைத்து விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து செல்வார்கள். ஆணின்மீது பெண்ணுக்கு பரஸ்பர மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இதிலும் ஒரு குறைபாடும் உள்ளது. ஆணின் வயது அதிகமாக இருக்கும்போது அவர் 10, 15 ஆண்டுகாலம் பின்னோக்கி இருப்பார். கால சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். நவீன கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வயது குறைந்த பெண்களுக்கு நவீன காலத்திற்கு ஏற்ப அழகு, ஆடம்பரம் மற்றும் இல்வாழ்க்கை நாட்டம் மிகுதியாக இருக்கும். காலமாற்றத்திற்கு ஏற்ப கணவர் மாறாமல் பழமையை விரும்புவதால் மனக்கசப்பு வரலாம். அதேபோல் வயது குறைந்த ஆண் வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்வது புரட்சிகரமாக இருக்கலாம்.

Advertisment

வயது முதிர்ந்த பெண் எளிமையாகவும் கணவரின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தன்மை குறைந்தவராகவும் இருப்பார். வயது மூப்பும் அனுபவ ஞானமும் அதிகமாக இருப்பதால் கணவரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது. வயது குறைந்த ஆண்  முடிவெடுக்கும் திறன், திட்டமிட்டு செயல்படும் தன்மை, புத்திக் கூர்மை அதிகமாக இருக்கும். ஓரிரு வருடங்கள் வித்தியாசமாக இருந்தால் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். ஆனால் ஐந்து ஆண்டுக்கு மேல் வயது வித்தியாசம் இருக்கும்போது வயது அதிகம் உள்ள பெண்ணுக்கு ஆளுமை திறன் அதிகமாக இருக்கும். உடல் மற்றும் மனரீதியான சோர்வுகள் அதிகமாக இருக்கும்.

கல்வி அறிவு, எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை, திட்டமிட்டு செயல்படும் புத்திக்கூர்மை, சிறப்பான முடிவெடுக்கும் திறன் குறையும். தம்பதிகளுக்கு வாழ்க்கைத் துணையைப் பற்றிய எதிர்பார்ப்பு, மனக் கற்பனை அதிகம் இருக்கும். ஒருவரின்  எதிர் பார்ப்பை மற்றவர் புரிந்துகொள்ளாமல் இருப்பது தம்பதிகளுக்குள் இணக்கமற்ற மனநிலையை உருவாக்கும். உதாரணமாக தம்பதிகளுக்குள் அதிக வயது வித்தியாசம் இருக்கும் போது அதிக வயது உள்ளவர் பழைய பாடலை கேட்க விரும்புவார். வயது குறைந்தவர் புதிய பாடலை கேட்க விரும்பு வார்கள். மற்றபடி ஜாதகத்திலுள்ள கிரகங் களின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கை பயணத்தில் மாற்றம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கால அளவு வயது வித்தியாசம் இருக்கும்போது ஜாதகம் அவர்களை இயக்கும். அதிகமான வித்தியாசமும் இருக்கக் கூடாது மிகக் குறைவான வித்தியாசமும் இருக்கக்கூடாது.

பழமையும் புதுமையும் ஒன்றுசேர முடியாது. குறைந்தபட்சம் ஒரு ஐந்து வருடகாலம் வித்தியாசம் இருந்தால் ஒருவரின் தவறை மற்றவர் திருத்த முடியும். எல்லா விதத்திலும் புதுமையாக இருந்தால் பழமைக்கு மதிப்பு இல்லை. காலத்திற்கு ஏற்ப மாற்றம் தேவைப் பட்டாலும் சமுதாயத்திற்கு தேவையான கட்டுப்பாடும் அவசியமானது. 

வயது வித்தியாசம் குறைவாக உள்ளவர் களுக்குள் ஈகோ அதிகமாக தலை தூக்கும்.

தற்போது ட்ரெண்டிங்காக சம வயது திருமணம் மிக அதிகமாகிக் கொண்டிருக்கி றது. கடந்த வாரத்தில் ஒரு வாரம் பத்து நாள் ஒரு மாதம் வித்தியாசத்தில் பிறந்து திருமணம் முடித்த நான்கு ஜாதகம் பார்த்தேன். அதில் மூன்று ஜாதகம் குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் விவாகரத்து வழக்கு பதிவாகியுள்ளது. ஒருவர் மட்டும் பொருளாதாரரீதியான பிரச் சினைக்காக  பார்த்த ஜாதகம்.

சம வயதில் திருமணம் செய்யும்போது இருவரின் மனநிலையும் ஒன்றுபோல் இருக்கும். இருவருக்கும் ஒரே வயது என்பதால் காலத்திற்கு ஏற்பபோல் அவர்களின் மனநிலை இருக்கும். உணவு பழக்க வழக்கம் நண்பர்களோடு பழகும் தன்மை மாறுபடாது. ஜாதகத்தில் வருட கிரகங்கள் ஒரே நிலையில் இருக்கும். சம வயது என்பதால்  இருவருக்கும் ஒரேவிதமான என்ன ஓட்டம் மனநிலை இருக்கும். வருட கிரகங்கள் மாத கிரகங்கள் ஒரே நட்சத்திர பாதத்தில் பயணிக்கும் வாய்ப்பு அதிகமுண்டு. சில மாதங்கள் வித்தியாசம் இருந்தால் வருட கிரகங்கள் வேறு நட்சத்திர பாதங்களில் சஞ்சரிக்கும் தம்பதிகளின் ஜாதகத்தில் வருட கிரகங்கள் ஒரே இடத்தில் சஞ்சரித்தால் ஒரே ராசி கட்டத்தில் சஞ்சரித்தால் எந்த ஒரு முடிவு எடுக்கும்போதும் தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை இருக்கும். சில நேரங்களில் தம்பதிகள் தங்களுக்குள் சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதுபோல் தோன்றினா லும், உண்மையில் அவர்களுக்குள் 

அன்யோன்யம் அதிகமாக இருக்கும். பரஸ்பரம் புரிந்து கொள்ளும் தன்மையும் பிறரைவிட அதிகமாகக் கொண்டிருப்பார்கள்.சுய ஜாதகத்திலுள்ள கிரகங்களை கோட்சார கிரகங்கள் கடக்கும் போது சுபவிதமான சம்பவங்கள் நடந்தால் இரட்டிப்பான மகிழ்ச்சி இருக்கும்.

அசுபவிதமான சம்பவங்கள் நடந்தால் கடன், நோயால் குடும்பத்தில்  நிம்மதியின்மை, அதிர்ஷ்ட குறைவு, சிந்தனை குறைபாடு, வம்பு, வழக்கு, வாழ்க்கை துணையிடம் இணக்கமற்ற சூழல், புத்திரப் பேரின்மை, தொழில்ரீதியான பிரிவினை, கருத்து வேறுபாட்டால் பிரிவினை போன்றவற்றை உண்டாகும். ஒரு குறிப்பிட்ட வயதை கடக்கும்போது ஆண் தன்னை இளமையாக உணருவான். பெண்களுக்கு வயது கூடியது போன்ற உணர்வு வரும். திருமணமான குறுகிய காலத்தில் சில இன்பங்களை கொடுத்தாலும் வயது கூடகூட முதிர்ச்சியும் பக்குவமும் பெண்ணுக்கு வெகுவிரைவில் கிடைக்கும். ஆணுக்கு காலதாமதமாகவே முதுமை வரும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குபிறகு இருவரிடம் சகிப்புத்தன்மையை விட்டுக் கொடுத்தும் தன்மை இல்லாமல் ஒத்துப் போக முடியாது.இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.

பெண் ஜாதகம்

12-10-1992, காலை 4.07 மணி, மதுரை, ராசி: ரேவதி 4- மீனம் (கண்டாந்த நட்சத்திர பாதம்) லக்னம்: சிம்மம் நடப்பில் சூரிய தசை (மார்ச் 2029 வரை) குரு புக்தி (ஜனவரி  2026 வரை).

ஆண் ஜாதகம் 

10-10-1992, மாலை 5.27 மணி, மதுரை. ராசி: உத்திரட்டாதி 2- மீனம். லக்னம்: மீனம், நடப்பில் கேது தசை ஜனவரி 2027, சனி புக்தி 2026. ஜனவரிவரை இருவரும் ஒரே ராசி என்பதால் கோட்சார கிரகங்கள் ராசியை கடக்கும்பொழுது சுபம்- அசுபம் இரண்டும்  இருவரையும் சம விகிதத்தில் தாக்கும். தற்போது மீன ராசிக்கு ஜென்ம சனி என்பதால் கருத்து வேறுபாடு அதிகமாக உள்ளது.

ஆண்- பெண் இருவரின் லக்னமும் சஷ்டாஷ்டக லக்னமாக உள்ளது. எண்ணங்களில் வேற்றுமை உணர்வு உண்டாகிறது.

தம்பதிகளுக்கு பகை கிரகங்களின் தசைகள் பகையை அதிகப்படுத்தும். கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று தனிமையை விரும்புகிறார்கள்.

தற்போது திருமணப் பிரிவினைக்கு குழந்தை பாக்கியம் இன்மையே அதிக காரணமாக உள்ளது.

ஒரு தம்பதிகளுக்கு கரு உருவாக சூரியனின் தயவு வேண்டும். கரு உருவாகியபிறகு அதை குழந்தையாக உருமாற குருவின் அருள் வேண்டும். அத்துடன் 1, 5, 9 எனக்கூடிய திரிகோணங்கள் பலம் பெறுவது அவசியமாகும்.

இவர்களின் ஜாதகத்தில் சூரியன் குரு இரண்டும் ராகு- கேதுக்களின் மையப் புள்ளியில் உள்ளது. ராகு- கேதுக்களின் மையப் புள்ளியில் உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அது சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு தீராத- தீர்க்க முடியாத சங்கடங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இருவர் ஜாதகத்திலும் சூரியன் மற்றும் குருவிற்கு செவ்வாயின் பார்வை உள்ளது. சூரியன் மற்றும் குருவிற்கு திரிகோணத்தில் சனிபகவான் உள்ளார்.

பெண் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் உள்ளார்.

ஆண் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார்.

இப்படி எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாமல் விருப்ப விவாகம் செய்துகொண்டவர்கள். கண்டாந்தர நட்சத்திர பாதத்தில் ஒரு பெண் பிறந்தால் தனக்குத்தானே அழிவை ஏற்படுத்திக் கொள்வார். பிடிவாதமாக காதல் திருமணம் செய்துகொண்டதன் வினையை அனுபவிக்கிறார்.

ஒரு ஆணுக்கு பெண்ணுக்கோ கடவுள் வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனை வாழ்க்கை துணையாகும்.

மேலும் ஒரு ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தை நிர்ணயிப்பதில் சப்தமாம் சத்தின்  உ7 பங்கு அளப்பரியது. என்னைப் பொறுத்தவரை நம்மை நம்பிவரும் வாடிக்கையாளர்களுக்கு. ஆகாது முடியாது இல்லையென்ற பதில் கூறுவதை நான் விரும்புவதில்லை.

பிரச்சினை நடந்தபிறகு தீர்வுகாண முயல்வதைவிட ஒருசெயலை செய்வதற்கு முன்பு அதன் நன்மை- தீமைகளை பகுத்தாய்வது உத்தமம்.

குழந்தை பாக்கியம் பற்றி அறிய உதவும் வர்க்க சக்கரம் சப்தாம்சம் உ7. ஒரு ராசியை ஏழு சம பாகங்களாகப் பிரித்து சப்தாம்ச சக்கரம் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தை பாக்கியத்திற்கான பலனை துல்-யமாக அறியமுடியும்.

கரு உருவாகுதல், குழந்தையின் பா-னம், பிறப்பு மற்றும் கடந்த கால கர்ம வினைகளின் தாக்கங்களை அறிய உதவுகிறது.

திருமணம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வாகும். இரு உறவுகளின் நட்பு நிலையை நிர்ணயிப்பதில் திருமணப் பொருத்தம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. 

அதாவது- லக்னம் என்பது ஜாதகரின் குணாதிசயத்தையும், ஏழாம் இடம் என்பது அவரது தொடர்பாளர்களின் குணங்களையும் குறிக்கும். இந்த இருவர் ஜாதகத்திலும் இயலாமை ஒருவர்மேல் ஒருவருக்கு  வெறுப்ப வர காரணமாக அமைந்துவிட்டது. 

சப்தமாம்சம் என்ற வர்க்கச் சக்கரம்மூலமாக இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய காலத்தை நிர்ணயம் பண்ணி கூறப்பட்டுள்ளது. 

அதுவரை பொறுமையாக இறை வழிபாட்டில் ஆர்வம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்: 98652 20406