Advertisment

அதிகாலை முகூர்த்தம் நல்லதா? -அம்சி விவேகானந்தன்

mukurtham

பொதுவாக மூல நட்சத்திரம் என்றாலும், ஆயில்ய நட்சத்திரம் என்றாலும், மாமன்- மாமியாருக்கு தீமையைத் தருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் ஆயில்ய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறக்கவும், மூல நட்சத்திரம் நான்காவது பாதத்தில் பிறக்கவும், எந்த தீமையை இல்லையென ஜாதக பாரிஜாத நூல்  கூறுகின்றது.

Advertisment

இவ்வாறு தீமையை தருகின்ற நட்சத்திரங்களில் குழந்தை பிறந்தாலும், அதற்குரிய கிரகசாந்தியை, நவகிரக சாந்தியை செய்வதன் மூலமாக அத்தகைய தீமையில் இருந்து நாம் விடுபட முடியும் என்பதனையும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

Advertisment

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங் களின் முதல் பாதமும் ஆயில்யம், கேட்டை, ரேவதியின் கடை பாதமும் ஆகிய நட்சத்திரங்களுக்கு கண்டாந்த நட்சத்திரங்கள் என்று சொல்கின்றார்கள். இந்த கண்டார்ந்த நட்சத்திரத்தில் குழந்தைகள் பிறந்தால் பகல் பிறக்க தந்தைவழி உறவினர்களுக்கும் இரவில் பிறக்க தாய்வழி உறவினர்களுக்கும் தீங்கு ஏற்படுவதாகவும் இந்த கண்டாந்த நட்சத்திரங்கள் பாவ கிரகத்தோடு இணைந்திருக்க குழந்தைக்கு கண்டத்தை உருவாக்குவதாகவும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதேவேளை இந்த நட்சத்திரங்களில் பிறந்து குழந்தை உயிரோடு இருந்தால் பிற்காலத்தில் மன்னனுக்கு சமமாக வாழ்வான் என்றும் சாஸ்

பொதுவாக மூல நட்சத்திரம் என்றாலும், ஆயில்ய நட்சத்திரம் என்றாலும், மாமன்- மாமியாருக்கு தீமையைத் தருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் ஆயில்ய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறக்கவும், மூல நட்சத்திரம் நான்காவது பாதத்தில் பிறக்கவும், எந்த தீமையை இல்லையென ஜாதக பாரிஜாத நூல்  கூறுகின்றது.

Advertisment

இவ்வாறு தீமையை தருகின்ற நட்சத்திரங்களில் குழந்தை பிறந்தாலும், அதற்குரிய கிரகசாந்தியை, நவகிரக சாந்தியை செய்வதன் மூலமாக அத்தகைய தீமையில் இருந்து நாம் விடுபட முடியும் என்பதனையும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

Advertisment

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங் களின் முதல் பாதமும் ஆயில்யம், கேட்டை, ரேவதியின் கடை பாதமும் ஆகிய நட்சத்திரங்களுக்கு கண்டாந்த நட்சத்திரங்கள் என்று சொல்கின்றார்கள். இந்த கண்டார்ந்த நட்சத்திரத்தில் குழந்தைகள் பிறந்தால் பகல் பிறக்க தந்தைவழி உறவினர்களுக்கும் இரவில் பிறக்க தாய்வழி உறவினர்களுக்கும் தீங்கு ஏற்படுவதாகவும் இந்த கண்டாந்த நட்சத்திரங்கள் பாவ கிரகத்தோடு இணைந்திருக்க குழந்தைக்கு கண்டத்தை உருவாக்குவதாகவும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதேவேளை இந்த நட்சத்திரங்களில் பிறந்து குழந்தை உயிரோடு இருந்தால் பிற்காலத்தில் மன்னனுக்கு சமமாக வாழ்வான் என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. நான் முன்பு தெரிவித்தது போன்று எந்த நட்சத்திர தோஷம் என்றாலும் கிரக தோஷம் என்றாலும் அதற்குரிய கிரகத்தால் சாந்தியை செய்வதன்மூலம் தீர்க்க ஆயுள் ஏற்படு வதோடு கிரக பாதிப்புகளும் விலகுகின்றன என்பதுதான் உண்மை நிலை.

ஜோதிட சாஸ்திரத்தில் ஆறுவகை பிரிவுகளாகிய ஜாதகம், கோளம், நிமித்தம், பிரஸன்னம், முகூர்த்தம், கணிதம் என்பனவற்றில் முகூர்த்தம் மிக இன்றியமையாவதாக விளங்குகின்றது. சாஸ்திரங்களில் தீமை விலகி நன்மை காலம் என்று வரையறுக்கப்பட்ட காலத்தில் நீங்கள் ஒரு சுபகாரியங்களை செய்தீர்கள் என்றால் அது மிகப் பெரிய வெற்றியைத் தரும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

எடுத்துக்காட்டாக பிரசன்னமாக நூலில் ஒரு தகவல் இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட ராஜகுலத்தைச் சார்ந்த மன்னனுக்கு குழந்தைகள் பிறக்கும் யோகம் அவர் ஜாதகத்தில் இல்லை எனவும் அதே வேளையில் ஜோதிடர் ஒருவர் உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று ஒரு சுப வேளையில் கூறியதாகவும், அந்த சுப வேளை, அந்த சுப முகூர்த்த தினம், அவர்களுக்கு குழந்தை செல்வத்தை வழங்கும் தன்மையோடு விளங்கிய காரணத்தினால், அவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் அதிகாலையில் முகூர்த்தங்களை வைக்கின்றார்கள். பிரம்ம முகூர்த்தம் எனவும் அதற்கு பெயர் சூட்டுகின்றார்கள். இந்த காலத்தில் நட்சத்திரங்கள்  திதிகளின் தீமைகள் வேலை செய்யாது என்றும், பாதிப்பை தராது என்றும் பிரச்சாரம் செய்வது என்பது சாஸ்திரத்திற்கு புறம்பானது.

அதிகாலையில்தான் முகூர்த்தம் வைக்க வேண்டும் என்று எந்த முகூர்த்த சாஸ்திர நூல்களும் சொல்லவில்லை. 

அதே வேளையில் அதிகாலையில் முகூர்த்தம் வைப்பதால் வருகின்ற விளைவை நாம் ஆய்வு செய்தோம் என்றால், ஒரு குறிப்பிட்ட கிழமையும், திதிகளும் இணைந்து வருகின்ற நாட்களை தத்தயோகம் என்று சொல்லப்படுகிறது. அந்த நாட்கள் கடுமையான தீமைகளையும் நோய்களையும் தீ விபத்துகளையும் உருவாக்குபவை என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவை இன்றைய பெரும்பான்மை ஜோதிட பெருமக்களுக்கு தெரிவதில்லை. அதோடு அத்தகைய தீமையான நாட்கள் அதிகாலையில் முகூர்த்தம் வைக்கும்போது கடுமையான விளைவு களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக புதன்கிழமையும் திதியை திதியும் கூடி வருகின்ற நாளும், செவ்வாய்க்கிழமையும் பஞ்சமி திதியும் கூடிவருகின்ற நாளும் வியாழக்கிழமையும் சஷ்டி திதியும் கூடிவருகின்ற நாளும் வெள்ளிக்கிழமையும் அஷ்டமி திதியும் கூடிவருகின்ற நாளும் சனிக்கிழமையும் நவமி திதியும் கூடிவருகின்ற நாளும், ஏகாதசி திதியும் திங்கட் கிழமையும் இணைந்து வருகின்ற நாளும் ஞாயிற்று கிழமையும் துவாதசி திதியும் இணைந்து வருகின்ற நாளை தத்தயோகம் நாட்களாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

இத்தகைய நாட்களில் எந்த சுப காரியங்களையும் செய்வது நலம் என்று அதே வேளையில் சூரிய உதயத்திற்குபின் ஒன்பது நாழிகை கழிந்தால் இத்தகைய தீமையான காலங்கள் நம்மை பாதிப்பை அடையச் செய்யாது என்று சாஸ்திரங்கள் சொன்னாலும்கூட இவை கடுமையான விளைவுகளைத் தருபவைத்தான் எனினும் தற்போது அதிகாலையில் முகூர்த்தங்களை நாம் வைக்கும்போது இத்தகைய நாட்களை கவனிக்காமல் முகூர்த்தங்கள் வைக்கும்போது அவை கடுமையான விளைவுகளை நமக்கு தருகின்றன என்பதனை பொதுமக்களும் ஜோதிட பெரியோர்களும் உணர்ந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். 

அதுபோன்று அஷ்டமி நவமியில் நாம் முன்னோர்கள் எந்த சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள். இன்று ஜோதிட பெருமக்களே அத்தகைய நாட்களில் முகூத்தங்களை சுப காரியங்கள் செய்வதற்கு நாட்களை தேர்வுசெய்து கொடுப்பதாக தெரியவருகின்றது. எனினும் தேய்பிறை அஷ்டமியில் திருமணமும் நவமியில் வித்யா ஆரம்பம் என்று சொல்லக்கூடிய கல்வி ஆரம்பங்களையும் செய்துகொள்ளலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமியிலும் நவமியிலும் எந்த சுப காரியங்களையும் நாம் செய்தல் கூடாது என்பதுதான் சாஸ்திரங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. அதுபோன்று சுப காரியங்களைச் செய்யும்போது நம் நட்சத்திரத்தில் இருந்து மூன்று, ஐந்து, ஏழாவது நட்சத்திரமாக அன்றையநாள் வருதல் கூடாது. அதுபோன்ற சந்திராஷ்டம தினமாக இருத்தல்கூடாது. நாம் நட்சத் திரத்தில் இருந்து 22-ஆவது நட்சத்திரம் மற்றும் 27-ஆவது நட்சத்திரங்களிலும் சுப காரியங்களை செய்தல் கூடாது. இதனைத்தான் தாரா பலன் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அவ்வாறு திருமண முகூர்த்தம் நாம் குறிக்கும்போது முகூர்த்த லக்னத்தில் சந்திரன், செவ்வாய், சனி, ராகு போன்ற கோள்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு முகூர்த்த லக்னத் திலிருந்து 8, 12-ல் சந்திரன் அமர்வதும் இருப்பது சிறப்பான முகூர்த்தம் இல்லை. மேலும் திதியின் கடைசி இரண்டு நாழிகை நேரமும் நட்சத்திர சந்தி காலங்களிலும் அதுபோன்று தமிழ் மாத கடைசி நாளிலும் முகூர்த்தம் வைக்காமல் இருப்பது மிக சிறப்பாகும் என்பதனையும் ஜோதிட நூல்கள் சொல்கின்றன. நட்சத்திர சந்திதிதி சந்தி, ராசி சந்தி, அம்சக சந்தி இவற்றில் முகூர்த்தம் வைத்தால் காலம் முழுவதும் தம்பதிகளிடையே ஒற்றுமை இல்லாத நிலை ஏற்படும் என்பதனையும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. எனவே தம்பதிகள் ஒற்றுமையோடு வாழ    இவ்வாறு அமையும் முகூர்த்தம் அமைப்பது சிறப்பைத் தரும்.

bala221125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe