Advertisment

கங்கையில் குளித்தால் முக்தியா? -அகத்தியரின் நாடிஜோதிட விளக்கம்

gangai

சுமார் 70 வயதுடைய ஒருவர் நாடியில் பலனறிய வந்திருந்தார். அவரை அமரவைத்து "என்ன விஷயமாகப் பலன்கேட்டு வந்துள்ளீர்கள்' என்றேன்.

Advertisment

"ஐயா, எனது மனைவியும், நானும் மட்டுமே உள்ளோம். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது.  நாங்கள் இறந்தபின்பு, எங்களை எப்படி? அடக்கம் செய்ய வேண்டும் என்பதை நாடியில் அறிந்துகொள்ள வந்தேன்.

Advertisment

இந்தக் கேள்வி என் மனதில் ஏன் தோன்றியது எனக்குத் தெரியவில்லை. சடலத்தை எரிப்பதற்கு ஒரு காரணம், புதைப்பதற்கு ஒரு காரணம் என இரு வேறு காரணங்கள் இருக்க வேண்டும். இதைப் பற்றிய விளக்கத்தை சாஸ்திரம், வேதம் படித்தவர்கள், ஆகம விதிகளை அறிந்தவர்கள், குரு பீடத்தைச் சேர்ந்தவர்கள், தர்ப்பணம், திதி, பிண்டம் கொடுப்பவர்கள், கோவில் குருக்கள் என பலரிடம் கேட்டேன். நாடியில் சரியான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தங்களை நாடி வந்தேன்'' என்றார்.

உங்கள் கேள்விக்கு, ஓலையில் அகத்தியர் ஏதாவது பதில் கூறினால் அதைக் கூறுகின்றேன் என்று சொல்லிவிட்டு, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இந்த மகன் கேட்ட கேள்வி

இந்த மகன் கேட்ட கேள்வி இவனுக்கு மட்டும் அல்ல, மண்ணுலகில் மனிதர்களாக பிறந்த அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது, இந்த பூமியில் இனி பிறவியில்லை, இதுவே கடைசிப் பிறவியென்ற நிலையில், மோட்சப் பிறவியாக பிறப்பார்கள் ஒரு பிரிவினர், அடுத்தடுத்து தொடர்ந்து பல பிறவிகள் பிறப்பவர்கள் என இரண்டுவிதமான மனிதர்கள் உண்டு.  இதில் திருமணமே ஆகாமல், திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாதவர்கள், ஆண் குழந்தை இல்லாமல், பெண் குழந்தைகளை மட்டும் பெற்றெடுத்தவர்களுக்கு இதுவே கடைசிப் பிறவி. இனி இந்த பூமியில் பிறப்பில்லாத மோட்சப் பிறவிகள் ஆவார்கள்.

திருமணம் செய்து ஆண் குழந்தைகளைப் பெற்று, வம்சத்தில் வாரிசுகள் உள்ளவர்கள் பல பிறவிகள் இந்த பூமியில் தொடர்ந்து பிறக்கும் ஆன்மாக்கள் மோட்சப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஞானிகள், மகான்கள், சந்நியாசிகள் நிலை பெற்றவர்கள். மனைவி, குழந்தைகள், குடும்பம், ஆண் வாரிசுகள் என எதுவும் இல்லாமல் வாழ்ந்து மடியும் ஆண்கள்- பெண்கள்தான்.  இவர்கள் இறந்தால் அவர்களை பூமியில் புதைத்து விடவேண்டும். இவர்களை நெருப்பிட்டு எரிக்கக் கூடாது. இவர்களை இறந்துவிட்டார்கள் என்று கூறக்கூடாது.  இவர்களின் ஆன்மாக்கள், பல பிறவிகளில் உண்டான பாவ- சாப- புண்ணிய கர்மவினைக் கணக்கினை தீர்த்து முடித்து அடங்கிவிட்டது. அதனால் பிறவியை முடித்து அடக்கமாகி விட்டார்கள் என்று கூறவேண்டும்.

மண்ணில் இவர்களைப் புதைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு.  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (மாயை) என்ற ஐந்து சக்திகளால்தான் மனிதன் உடல், உயிர், ஆன்மா உருவாகி செயல்படுகின்றது.  இதில் நீரும், மண்ணும் மட்டுமே பூமியிலுள்ள சக்திகள்.  காற்று, நெருப்பு, ஆகாயம் இந்த மூன்றும் அண்ட வெளியில், பூமியின் ஆதிக்கத்திற்கு அப்பால் வெட்ட வெளியில் உள்ளது. நீர், மண் இவற்றால் உருவாக்கப்படும். விளைந்த தானியங்களைக் கொண்டே உடல், வளர்ச்சி பெறுகின்றது. உடலுக்கு வெப்பமும், உயிரும், அதனால் அசையும் சக்தியும், ஆன்மாவின் செயலும், அண்ட வெளியிலுள்ள காற்று, நெருப்பு, ஆகாயம் இவை தருகின்றன.

மோட்சப் பிறவிகள் இறந்துவிட்டால், அவர்கள் உடலில் இருந்து காற்று, நெருப்பு, ஆன்மா இவை, உடலை விட்டுப் பிரிந்து, அண்ட வெளிக்கு சென்று விடும். மண்ணும், நீர் சக்தியும், உடலிலேயே தங்கி விடும். உடலில் உயிர் உள்ளவரை, ஆன்மா செயல்படும் வரைதான், உடலில் நீர் வெப்பத்தால் ஆவியாகி வெளியேறும். உயிர் பிரிந்துவிட்டால், உடலிலேயே தங்கி, மண்ணுடன் கலந்துவிடும்.

மோட்சப் பிறவிகளுக்கு வாரிசுகள் இல்லாததால், அவர்களின் விந்து இரத்த தொடர்பு பூமியில் இல்லாமல் போய்விடுகின்றது.  மனிதன் இறப்பிற்குப்பின் காற்று, காற்றுடன் கலக்கும், நீர் நீருடன் சேரும். மண், மண்ணுடன் சேரும். வெப்பம் நெருப்புடன் சேரும். ஆத்மா வெட்ட வெளியில் இணையும். வாரிசு இல்லாதவர்களின் உயிர் ஆன்மாவை இயக்கும். பஞ்சபூதங்களில் மண்ணும் நீரும் பூமியில் தங்கும். மற்றவை அதனதன் இடத்தை அடைந்துவிடும். அதனால் இவைகள் ஒன்றுடன் ஒன்று இணைய முடியாது. இவர்களின் சரீரம் மண்ணிலுள்ள உயிரினங்களுக்கு உணவாகும். இவர்களை மண்ணில் அடக்கம் செய்வது சமாதி நிலையாகும்.

இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து, ஆண் வாரிசு உள்ளவர்களை நெருப்பிட்டு எரித்துவிட வேண்டும். இவர்களின் உடல், உயிர், ஆன்மா மூன்றும் இவற்றுக்கு காரணமான பஞ்சபூத சக்திகள், ஒன்றுபட்டு அழிந்து அண்ட வெளியை அடையும். இவை ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல், முற்பிறவி பாவ- சாப- புண்ணியங்களை அனுபவித்து தீர்க்கும் நிலையில் அதே வம்சத்தில், தங்கள் விந்து சக்தியால் உருவான வாரிசுகளின் மூலம், தொடர்ந்து பல பிறவிகள் பிறப்பார்கள். சரீரத்தை சிதையில் வைத்து தீயிட்டு எரிப்பது, யாக குண்டத்தில் ஈடுபடுவது போன்ற நிலையாகும் என்று கூறி ஓலையில் இருந்து மறைந்தார்.

இன்னும் ஒரே ஒரு கேள்வி, காசியில் இறந்தால் முக்தி, கங்கையில் குளித்தால் முக்தி என்று கூறுகின்றார்கள். இதன் உண்மை நிலைதான் என்ன?

காசியில் குளித்தால் முக்தி கிடைக்காது. கங்கைநீர் மட்டும் அல்ல, மற்ற எல்லா நீரும், உடல் அழுக்கைத்தான் நீக்குமே தவிர, ஒரு ஆன்மாவின் பாவ- சாபத்தை நீக்க முடியாது, தீர்க்க முடியாது. கங்கை நீருக்கென்று தனித்த சக்தி கிடையாது.  வம்ச வாரிசுகள் இல்லாதவர்கள், கங்கை நீரில் மூழ்கி இறப்பார்கள். வாரிசு இல்லாதவர்கள் உடலை, கங்கையில் விட்டு விடுவார்கள்.  இவர்களின் உடல்கள், நதியிலுள்ள உயிரினங்களுக்கு உணவாகும், நதி நீரில் அடக்கமாகிவிடும். மண்ணில் புதைப்பது போன்று நீரில் சமாதி நிலை.

காசியில் சென்று வாரிசுகள் உள்ளவர்கள் இறந்தாலும், அவர்கள் உடலை மயானத்தில் நெருப்பிட்டுத்தான் அழிக்கவேண்டும். எந்த சக்திக்கும் முக்தி, மோட்சம் தரும் சக்தி கிடையாது.  அவரவர் பிறப்பின் விதிப்படி தான், வாரிசுகளின் நிலைப்படிதான் முக்திநிலை அமையும் என்று கூறி அனுப்பி வைத்தேன்

செல்: 99441 13267

bala070326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe