ஆன்மிகம் என்பது வேறு. அது மெய்ஞ்ஞானம். ஜோதிடம் என்பது வேறு. இது விஞ்ஞானம் என்றும் சில பேராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும்கூட ஜோதிடர்கள் பரிகாரத்தின் பெயரில் இரண்டையும் இணைத்து பயணம் செய்வார்கள்.
ஆன்மிகத்தின் வழியாக ஜோதிடத்தை கொண்டுசென்றாலும் அது கர்மாவின் வழியையே சுட்டிக்காட்டுகிறது.
கர்மா என்பது இயற்கையின் சுழற்சியில் வரும், அதனை நாம் அறிவதோ... அறிந்து அதனுடன் போட்டி போடுவதோ அல்லது அதனை மாற்றுவது என்பதோ சித்து விளையாட்டாகும்.
ஆன்மிகம் என்பது நாம் வந்தவழி அறிவது. மீண்டும் அங்கேயே சென்று சேர்வது நதி கடலை நோக்கி ஓடுவதுபோல. ஜீவன்கள் அனைத்தும் பரமாத்மாவை நோக்கியே ஓடுகின்றன.
அதை அடைந்த பின்னர் அவற்றிற்கு பிறவிகள் இல்லை. துயர்கள் இல்லை. சலனம் இல்லை. கர்ம வினைகள் இல்லை. இவை அனைத்துக்கும் அடிப்படையான மனமானது இந்த நிலையில் அவற்றுக்கு இருப்பதில்லை. சச்சிதானந்தத்தின் உட்பொருளான சத்தும் மறைந்து சித்தும் மறைந்து ஆனந்தம் மட்டுமே எஞ்சி நிற்கும் நிலை அது, ஆன்மிகம் எனும் இந்த சத் சித் ஆனந்தப் பரம் பொருளை பேரின்பப் பெருவீட்டை அடைவது சில விநாடிகளிலும் நடக்கலாம். அல்லது அதற்கு பல ஜென்மங்களும் ஆகலாம், சச்சிதானந்தம் எப்படியிருக்கும். அது எதை குறித்து உள்ளது சத் மற்றும் சித் எனும் மாயையிலிருந்து விடுபட்டு ஆனந்தம் என்ற பொருளின் நிலை என்
ஆன்மிகம் என்பது வேறு. அது மெய்ஞ்ஞானம். ஜோதிடம் என்பது வேறு. இது விஞ்ஞானம் என்றும் சில பேராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனாலும்கூட ஜோதிடர்கள் பரிகாரத்தின் பெயரில் இரண்டையும் இணைத்து பயணம் செய்வார்கள்.
ஆன்மிகத்தின் வழியாக ஜோதிடத்தை கொண்டுசென்றாலும் அது கர்மாவின் வழியையே சுட்டிக்காட்டுகிறது.
கர்மா என்பது இயற்கையின் சுழற்சியில் வரும், அதனை நாம் அறிவதோ... அறிந்து அதனுடன் போட்டி போடுவதோ அல்லது அதனை மாற்றுவது என்பதோ சித்து விளையாட்டாகும்.
ஆன்மிகம் என்பது நாம் வந்தவழி அறிவது. மீண்டும் அங்கேயே சென்று சேர்வது நதி கடலை நோக்கி ஓடுவதுபோல. ஜீவன்கள் அனைத்தும் பரமாத்மாவை நோக்கியே ஓடுகின்றன.
அதை அடைந்த பின்னர் அவற்றிற்கு பிறவிகள் இல்லை. துயர்கள் இல்லை. சலனம் இல்லை. கர்ம வினைகள் இல்லை. இவை அனைத்துக்கும் அடிப்படையான மனமானது இந்த நிலையில் அவற்றுக்கு இருப்பதில்லை. சச்சிதானந்தத்தின் உட்பொருளான சத்தும் மறைந்து சித்தும் மறைந்து ஆனந்தம் மட்டுமே எஞ்சி நிற்கும் நிலை அது, ஆன்மிகம் எனும் இந்த சத் சித் ஆனந்தப் பரம் பொருளை பேரின்பப் பெருவீட்டை அடைவது சில விநாடிகளிலும் நடக்கலாம். அல்லது அதற்கு பல ஜென்மங்களும் ஆகலாம், சச்சிதானந்தம் எப்படியிருக்கும். அது எதை குறித்து உள்ளது சத் மற்றும் சித் எனும் மாயையிலிருந்து விடுபட்டு ஆனந்தம் என்ற பொருளின் நிலை என்ன..? இது குறித்து பல மகான்கள் ஆய்வுசெய்து கூறுவது...
ஆதிசங்கரர் முதல் இராகவேந்திரர் வரை இந்த மண்ணில் ஆயிரமாயிரம் மகான்கள் தோன்றியுள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடைத்தேற்றத்துக்கான வழிகளை கண்டறிந்துள்ளனர்.
இயேசு நாதர் ஒருமுறை தமது சீடர்களிடம் கூறுகிறார். உங்களை நான் ஆண்டவரின் ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று....சீடர் கேட்கிறார். உங்கள் ஆண்டவரின் ராஜ்ஜியம் எப்படியிருக்கும்..?
அங்கே காலம் என்பது கிடையாது என்கிறார் இயேசு. உலகில் நடக்கும் அனைத்து செயல்களும் காலத்தை அடிப்படையாகக் கொண்டே அளக்கப்படுகின்றன. அந்த காலத்தினால் விளைவது சலனம், சலனங்களின் விளைவாகவே செயல்கள் நடைபெறுகின்றன. மரணத்துடன் ஒருவனுடைய காலம் முடிவடைகிறது, ஊஞ்சல் ஒரு கோடிக்கு இழுத்து விடப்படும் நிலை இது. அந்த கோடிவரை அது சென்றாகிவிட்டது. இப்போது அது சென்றுள்ள இறுதிப் புள்ளிதான் மரணம் என்பது. அதன்பின் ஊஞ்சல் தானாக எதிர்க் கோடியை நோக்கி செல்லும். அதுவே சலனங்களின் விளைவான செயல்களின் கர்மா, அதுதான் மறுபிறவி. இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா ஊஞ்சல் அலைவதுபோல் பிறவியும் அதன் கர்ம வினையால் மறுபிறவியும் அப்பிறவியின் செயல்பாடுகளால் அடுத்த பிறவியுமாக எண்ணற்ற பிறவித் தளைகளில் கட்டுண்டு ஆன்மாவானது தொடர்ந்து பயணம் செய்கிறது. கர்மாவின் வினைப்பயனை ஒருவன் முழுமையாக அனுபவம் செய்யாமல் ஆத்மாவை கடைத்தேற்ற முடியாது. இதற்கு பல மகான்கள் உதாரணம் கூறலாம்.
"காதற்ற ஊசியும் வாராது
காண் உம் கடைவழிக்கே'
என்ற மருதவாணனின் ஓலை பண ஆசை நிரம்பிய வணிகரை பட்டினத்தாராக மாற்றியது. விலைமாதர் தொடர்பால் உடலில் ஏற்பட்ட நோய் பெண் பித்தரான அருணகிரியாரை பெரும் யோகீசுவரராக மாற்றியது, மனைவியின் களவொழுக் கத்தை அறிந்த ராஜா பர்த்ருஹரி அரசை உதறி துறவியானான், பத்ரகிரியார் என்ற பெயருடன் பட்டினத்தாரின் சீடராக மாற்றியது.
கர்மாவே இப்படி ஒவ்வொருவருக்கும் திருப்புமுனை ஏற்படுத்துகிறது அந்த திருப்புமுனை (Turning Point) இல்லையேல் அவர்கள் தங்களது இன்ப போக வாழ்வில்தான் தொடர்ந்து நீடித்திருப்பார்கள். அசோகச் சக்கரவர்த்திகூட கலிங்கப் போரின் கொடுமைகளை கண்டு மனம் நொந்துதான் அகிம்சாவாதி ஆனார்.
புத்தர் ஒரு நாட்டின் இளவரசர்.
நெடுங்காலமாக அரண்மனையைவிட்டு வெளியே செல்லாதவர். முதன்முதலாக நகர்வலம் சென்றார். நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் இவற்றை கண்டார்.
அதுவரை புத்தர் வாழ்வில் எந்த திருப்பு முனையும் ஏற்படவில்லை. எந்த ஏமாற்றமோ, விரக்தியோ, அதிர்ச்சியோ அவர் வாழ்வில் ஏற்படவில்லை. மனித வாழ்வின் அவலங்களுக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடிவுசெய்தார். இரவோடிரவாக அரண் மனையைவிட்டு வெளியேறினார்.
விசுவாமித்திரரைப்போல் பிரம்மரிஷி பட்டம் பெறவேண்டும் என்ற முனைப்பு அவரிடமில்லை. ஆனால் மூலத்தை கண்டறியும் ஞான வேட்கை அவரிடமிருந்தது.
அதனையே "புத்த தேடல்' என்று வர்ணிக்கப் படுகிறது. ஆன்மிக உலகம் அத்தகைய புத்தரைப் போற்றாதவர்களில்லை. அவர் மீண்டும் கபிலவஸ்து வந்தபோது அரசன், அமைச்சர்கள், பிரதானிகள், மக்கள் என எல்லோரும் சென்று அவரை வணங்கி அருளுரை கேட்டனர். எண்ணற்றவர்கள் அவரை பின்பற்றவும் செய்தனர். ஆனால் அவரை தூற்ற ஒரு நபர் இருந்தார். அது அவர் மனைவி யசோதை. நீங்கள் ஞானம் தேடினீர்கள். ஞானத்தை அடைந்தீர்களோ, வேறு எதையாவது அடைந்தீர்களோ, அது ஒரு புறமிருக்கட்டும் எனக்கு என்ன வழி..?
கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணை நட்டாற்றில் விட்டுச் செல்வதுதான் சரி என்றால், கெடுக நின் தவம் அழிக நின் ஞானம் என்று சீறினார் அந்தப் பெண்மணி. ஞானம் பெற்ற புத்தர் அவளுக்குப் பதில் கூறமுடியாமல் திணறி, உண்மைதான். நான் உனக்கு அநீதி இழைத்துவிட்டேன் என்று வருந்தினார்.
புத்தர் ஆசையை இழந்தார். ஞானம் பெற்றார்.
கர்மாவை அவரால் இழக்க முடிந்ததா..?
எது ஆன்மிகம்...?
ஆத்ம ஞானம், ஆத்ம ஈடேற்றம், ஆத்ம விழிப்புணர்வு இவை எல்லாவற்றிற்கும் தன்னைத்தானே அறிவது என்பதுதானே பொருள். உன்னையே நீ அறிவாய் என்ற சித்தர் வாக்கியமும் நான் யார்..? என்ற ரமணரின் ஞானக்கேள்வியும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். ஞானம் பெறுதல், கடவுளை உணர்தல், ஆத்மாவின் விழிப் புணர்வு. இப்படிப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இவையனைத்தின் பொருளும் ஒன்றுதான். ஆனால், இந்த ஆத்ம ஞானத்தை அடைவது எப்படி? என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை அறியமுடிகிறது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும்தான் அறிய முடியவில்லை என்கிறார் ஒரு ஞானி. இதை உணர்ந்தவர்கள் இது பற்றி சொன்னதில்லை. அப்படி அவர்களில் சிலர் சொன்னதும் யாருக்கும் புரியவில்லை. ஞானிகள் கூறுவதிலுள்ள பொருளை உணர்ந்து கொள்ளாமல் அவர்களின் செய்கைகளை மட்டும் அப்படியே பின்பற்றும் மூடத்தனத்தை மட்டும் நாம் செய்கிறோம்.
ஒரு ஜோதிடம் கூறி ஒருவரின் கர்மாவை கண்டறிந்து ஆன்மிகத்தில் அவர் வாழ்வை கர்மாவை மாற்றம் செய்து காட்ட முடியுமா..? கிரகங்கள் சொன்னபடி கேட்குமா..? எதிர்கால நிகழ்வுகள் அப்படியே கூறமுடியுமா..? அதிலுள்ள தீமைகளை மாற்றுவது என்பது முடியுமா..? ஜோதிடம் ஆன்மிகத்தில் என்ன கூறுகிறது....
ஆன்மிகமும் - ஜோதிடமும்...! ஆன்மிகம்- ஜோதிடம் இரண்டும் ஒன்றல்ல; வேறு வேறு பாதைகள் என்று ஒருசிலர் கூறுவர். ஆனால் மனிதனை ஆள்வது கிரகங்களே என்று பலர் கூறுகிறார்கள்.
எது உண்மை..? ஆன்மிகத்தில் ஜோதிடம்
எவ்வாறு தொடர்பு கொள்கிறது..? மனிதனை ஆள்வது... ஆன்மிக தேவர்களா..? ஜோதிட கிரகங்களா... எனும்போது ஆன்மிகமும் ஜோதிடமும் இரண்டும் இரண்டு ரயில் தண்டவாளம் போன்றதே. மனிதனுக்கு உயிரும் உடலும் போன்றது. இரண்டையும் இணைத்தே மனிதனுக்கு வாழ்க்கை அமைகிறது. இரண்டையும் பிரித்து கூறமுடியாது..!
செல்: 96599 69723
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us