இறை நம்பிக்கை என்ற இந்த ஒரு பெரிய யானையை எப்படி இருபது நிமிடம் இந்த குட்டி பானைக்குள் அடைக்கப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இந்த வேளையிலே இறை நம்பிக்கை குறித்து என்னுடைய தமிழாசிரியரோடு சிறு வயதில் பேசிய ஒரு பேச்சுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. பக்தி, புத்தி என்று சொல்லைக் கொண்டு என்னுடைய தமிழாசிரியர் சொன்னது. புத்திக்கு கொம்பு முளைச்சிருக்கு.
இந்த பூவுக்கு கீழே இருக்கக்கூடிய கொம்பை ஒடித்துவிட்டால் பக்தி என்று அவர் சொன்னபொழுது நான் கேட்டேன். அப்படின்னா புத்தி உள்ளவர்களெல்லாம் கொம்பு முளைத்தவர்கள். பக்தி உள்ளவர் களெல்லாம் அப்படியல்ல என்று பொருளா சார் என்று கேட்டேன் அப்படியல்ல; புத்தி சமயத்திலே ஆணவம் கொள்ளும். பக்தி இருந்தால் அவ்வாறு ஆணவம் கொள்ளாது. அது தடுத்து நிறுத்தப்படும். தொடர்ந்து எனக்குள்ளே பல கேள்விகள் என்றால் பக்தியோடு ஆணவமானவர்கள் இந்த உலகத்தில் இல்லையா சார் என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். என்ன வளைத்து வளைத்து கேட்கிறாய் என்று கேட்டபோது நான் சொன்னேன். இந்த உலகத்தினுடைய மில்லியன் டாலர் கேள்வியே கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பதுதானே. உடனே அவர் சொன்னார். மில்லியன் டாலர் கேள்வியும் அதுதான். அதற்கான பதிலும் மில்லியன் டாலர்தான். நீ என்ன கடவுள் இல்லை என்கிற கூட்டமா அல்லது இருக்கு என்கிற கூட்டமா என்று கேட்டார்.
இந்த இரண்டுக்கும் நடுவில் தடுமாறிக்கொண்டு இருக்கும் ஒருவன் என்று சொன்னேன். என்றால் உனக்கு நான் சிறிய அளவிலே எனக்குத் தெரிந்த ஒரு தெüவை உனக்குள்ளே நான் தரப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் அடுத்து என்னைக் கேள்வி கேட்கத் துவங்கினார். உனக்கு தாத்தா இருக்கார்தானே என்று கேட்டார் இருக்கிறார். அந்த தாத்தாவுக்கு தாத்தா இருக்காரா என்று கேட்டார். ஆனால் நான் பார்க்கவில்லை என்று சொன்னேன். அந்த தாத்தா வுக்கு தாத்தா, ந
இறை நம்பிக்கை என்ற இந்த ஒரு பெரிய யானையை எப்படி இருபது நிமிடம் இந்த குட்டி பானைக்குள் அடைக்கப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இந்த வேளையிலே இறை நம்பிக்கை குறித்து என்னுடைய தமிழாசிரியரோடு சிறு வயதில் பேசிய ஒரு பேச்சுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. பக்தி, புத்தி என்று சொல்லைக் கொண்டு என்னுடைய தமிழாசிரியர் சொன்னது. புத்திக்கு கொம்பு முளைச்சிருக்கு.
இந்த பூவுக்கு கீழே இருக்கக்கூடிய கொம்பை ஒடித்துவிட்டால் பக்தி என்று அவர் சொன்னபொழுது நான் கேட்டேன். அப்படின்னா புத்தி உள்ளவர்களெல்லாம் கொம்பு முளைத்தவர்கள். பக்தி உள்ளவர் களெல்லாம் அப்படியல்ல என்று பொருளா சார் என்று கேட்டேன் அப்படியல்ல; புத்தி சமயத்திலே ஆணவம் கொள்ளும். பக்தி இருந்தால் அவ்வாறு ஆணவம் கொள்ளாது. அது தடுத்து நிறுத்தப்படும். தொடர்ந்து எனக்குள்ளே பல கேள்விகள் என்றால் பக்தியோடு ஆணவமானவர்கள் இந்த உலகத்தில் இல்லையா சார் என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன். என்ன வளைத்து வளைத்து கேட்கிறாய் என்று கேட்டபோது நான் சொன்னேன். இந்த உலகத்தினுடைய மில்லியன் டாலர் கேள்வியே கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பதுதானே. உடனே அவர் சொன்னார். மில்லியன் டாலர் கேள்வியும் அதுதான். அதற்கான பதிலும் மில்லியன் டாலர்தான். நீ என்ன கடவுள் இல்லை என்கிற கூட்டமா அல்லது இருக்கு என்கிற கூட்டமா என்று கேட்டார்.
இந்த இரண்டுக்கும் நடுவில் தடுமாறிக்கொண்டு இருக்கும் ஒருவன் என்று சொன்னேன். என்றால் உனக்கு நான் சிறிய அளவிலே எனக்குத் தெரிந்த ஒரு தெüவை உனக்குள்ளே நான் தரப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் அடுத்து என்னைக் கேள்வி கேட்கத் துவங்கினார். உனக்கு தாத்தா இருக்கார்தானே என்று கேட்டார் இருக்கிறார். அந்த தாத்தாவுக்கு தாத்தா இருக்காரா என்று கேட்டார். ஆனால் நான் பார்க்கவில்லை என்று சொன்னேன். அந்த தாத்தா வுக்கு தாத்தா, நிச்சயமாக எப்படி அந்த தாத்தா இல்லாமல், அந்த தாத்தா வந்திருக்க முடியும்.
அந்த தாத்தா இல்லாமல் எப்படி என் தாத்தா வந்திருக்க முடியும் என் தாத்தா இல்லாமல் நான் எப்படி வந்திருக்க முடியும் என்று நான் சொன்னேன். இல்லை உன்னுடைய ஆயுள் காலத்தில் நீ எத்தனை தாத்தாவை பார்க்கமுடியும் என்று கேட்டபொழுது அதிகபட்சம் 80- 90 ஆண்டுகüலேயே இரண்டு தாத்தாவை நான் பார்த்துவிட்டால் அதிகம் என்று சொன்னால் அதற்கு முந்தைய தாத்தாக்களை எல்லாம் பார்க்கமுடியாத நிலையிலே அவர்கள் இல்லையென்று பொருளா அல்லது பார்க்கமுடியாத நிலை யிலே இருக்கிறார்கள் என்று பொருளா என்று கேட்டார். நானும் எனக்குப் புரிகிறது,
கடவுளை நாம் முயன்றால் என்றால் பார்க்கலாம். மற்றபடி தினந்தோறும் பக்தியாலே உணரலாம் என்று நீங்கள் சொல்ல வருகிறீர் களா என்று கேட்டபொழுது இதற்கு நான் பதிலை ஒரு விஞ்ஞானியின் மூலமாக உனக்குச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு தாமஸ் ஆல்வா எடிசனிடம் போய்விட்டார்.
நான் ஒரு தமிழ் வாத்தியார் என்பதால் இப்படித்தான் பேசுவேன் என்று நீ நினைக்கக்கூடும். ஆகையினாலே நான் வாசித்த ஒரு விஷயத்தை உனக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு தாமஸ் ஆல்வா எடிசனுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். தாமஸ் ஆல்வா எடிசன் ரயிலில் பயணம் செய்துகொண்டு இருக்கிறார். கையிலே பைபிள் இருக்கிறது. பைபிள் வாசித்தபடி பயணம் செய்கின்ற அவரை அவருக்கு எதிரிலே இருக்கக்கூடிய ஒரு விஞ்ஞானி பார்க்கிறார், பார்த்துவிட்டு சிரிக்கிறார்.
சிரித்துவிட்டு என்ன எடிசன்உங்கள் கைகüலே பைபிள் இருக்கிறது என்று கேட்கும்போது சொல்கிறார்.
சிரிப்பதற்கு என்ன இருக்கிறது. நான் இறை நம்பிக்கையாளன் என்று சொல்லும்போது, ஒரு விஞ்ஞானி நீங்களா இப்படிச் சொல்லுகிறீர்கள் என்று அவர் கேட்கும்போது, ஓஹோ கடவுளை மறுக்கிறவன்தான் பகுத்தறிவுவாதியா என்னைப் பொறுத்தமட்டிலே கடவுளை நம்புவதற்குத்தானே நிறைய அறிவு தேவை. கடவுளை மறுப்பதற்கு இல்லையென்று ஒரு வார்த்தை போதும்.
அடுத்து அவர் கேட்டார், விஞ்ஞானக் கூடத்திலே கண்டறிகின்ற உண்மைகளையெல்லாம் நிரூபிப்பதைப்போல கடவுள் இருப்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா எடிசன் என்று கேட்டபோது எடிசன் பதில் சொல்லாமல், சிரித்துக்கொண்டே போய்விட்டார். இந்தக் கேள்வி கேட்ட விஞ்ஞானிக்கு மகிழ்ச்சி அவருடைய வாயை அடைத்துவிட்டோம் என்று...
எவன் பாத்திருக்கான். கடவுளை நம்ம கண்முன்னால் காட்டுவதற்கு என்கிற ஒரு செருக்கோடு போயிட்டார் அவர். சில நாட்களுக்குப்பிறகு அதே விஞ்ஞானி எடிசனை அவருடைய வீட்டில் பார்க்க வரும்போது அங்கே ஒரு கருவி விண்ணிலே இருக்கக்கூடிய நட்சத்திர மண்டலங்களை எல்லாம் பிரதிபலிக்கக்கூடிய கருவி ஒன்றை எடிசனுடைய வீட்டில் பார்க்கிறார். பார்த்துவிட்டு அந்த விஞ்ஞானி கேட்கிறார் எடிசன், இதை யார் செய்தது என்று கேட்கும்போது எடிசன் சொல்கிறார்.
நிச்சயமாக நான் செய்யவில்லை; நீங்கள் செய்யவில்லை என்று சொன்னால் வேறு யார் செய்தது? தெரியவில்லை? செய்த நபரை தெரியவில்லையா? இது இங்கே எப்படி வந்தது என்றே தெரியவில்லை என்று எடிசன் சொல்கிறார். உடனே அது எப்படி ஒருவர் செய்யாமல் இது எப்படி இங்கே வரமுடியும் என்று அவர் கேட்கும்போது சொல்கிறார். இந்த கருவி நட்சத்திர மண்டலத்திலே இருக்கக்கூடிய ஒரு சாதாரண கருவி. இந்தக் கருவியே ஒருவன் செய்யாமல் வரமுடியாது என்று சொன்னால் இந்த கருவி யைக்கொண்டு பிரதிபலிக்கின்ற கோடான கோடி நட்சத்திரங்களையும் வெண் மண்டலங்களையும் கொண்டிருக்கக்கூடிய அதுவே உங்களைப் பொறுத்தமட்டில் தானாக வந்தது என்று சொன்னால் இது தானாக வந்திருக்கக்கூடாதா என்றார் எடிசன். என்னதான் கடவுள் நம்பிக்கை பற்றி விடிய விடிய பேசினாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மூடநம்பிக்கையுள்ளவர்கள். இவர்கள் வலது சார்பாளர்கள் என்கிற கருத்தெல்லாம் இருக்கத்தானே செய்கிறது என்று நான் சொன்னபோது என்னுடைய தமிழாசிரியர் சொன்னார்.
கடவுள் நம்பிக்கை என்பது நம்மிடம் கபடி விளையாடும், நமக்குள்ளே ஆழ்ந்த பக்தி இருந்தால் இதை நாம் ஏறி பற்றிக்கொள்ள முடியும்.
யாரிடம் மூட நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னாரோ அந்த மூட நம்பிக்கையை தகர்ப்பதுபோல ஒரு கருத்து ஆசாரியர் வினோபா பாவேவின் வாழ்க்கையிலே நடந்தது. ஆசாரியர் வினோபா பாவே ரயிலில் பயணம் செய்துகொண்டு இருக்கிறார். அந்த ரயில் கங்கை ரயில் பாலத்தின் மீது சென்று கொண்டு இருக்கிறது. வினோபா பாவே பார்க்கிறார் பொங்கி பாய்த்து ஓடிக்கொண்டு இருக்கிறாள் கங்கை. உடனே தன்னுடைய சட்டை பாக்கெட்டிலே இருந்து 25 பைசா நாணயத்தை எடுத்து கைகளை குவித்து வணங்கிவிட்டு அந்த காசை கங்கையிலே வீசியெறிகிறார். அப்படி வீசியெறிந்ததை எதிரில் இருப்பவர் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வினோபா பாவேவை பார்த்து கேட்கிறார், நீங்கள் இப்படி இந்த காசை வீசியெறிந்ததை ஒரு ஏழைக்கு கொடுத்திருந்தால் அவனுக்கு ஒருவேளை பசியாருமே. இது என்ன மூடத்தனம் என்று கேட்கும்போது வினோபா நிதானமாக அவருக்கு பதில் சொல்கிறார்.
நான் பயணிக்குமுன் வரும் வழியிலேயே என் கண்ணிலே கண்ட என்னிடம் கையேந்திய பிச்சைக்காரர்களுக் கெல்லாம் தந்து விட்டுத்தான் ரயில் ஏறினேன்.
அதேசமயம் ஓடுகின்ற ஆற்றிலே நான் வீசியெறிந்த இந்த காசு இருக்கிறதே இது என்னுடைய பூமி மண்டலத்தையெல்லாம் பசுமையாக வைத்துக் காப்பாற்றும். கங்கை மாதாவிற்கு நான் காட்டுகின்ற நன்றி. பாவம், உங்களைப் பொறுத்தமட்டிலே இது ஓடுகின்ற வெறும் தண்ணீர். எங்களைப் பொறுத்த மட்டிலே கங்கை எங்களுக்கு கடவுளுக்கு நிகர் என்று சொல்லிவிட்டு, இந்த ஓடுகின்ற கங்கையை மட்டும் நாங்கள் கடவுளாக நினைக்கவில்லை. பசுவை நினைக்கின்றோம்.
அவ்வளவு ஏன், தரையிலே பொசிந்து பூக்கிறதே பொருட்கள் அதைக்கொண்டு கூட நாங்கள் எங்களுடைய இறைவனை பூஜிக்கலாம். அதிலேயேகூட நாங்கள் இறைவனைப் பார்க்கிறோம். அதனாலே பாவனை முக்கியம் என்று வினோபா பாவே சொன்னபொழுது அவரால் எதுவுமே பேச முடியவில்லை. இந்த இடத்தில் இன்னொரு கருத்தைச் சொன்னார்.
இதை வெறும் ஓடுகின்ற தண்ணீராக பார்க்கின்ற காரணத்தினால்தான் இன்றைக்கு ஆறுகளே திருடப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்தக் காலத்தில் படிகம்போல் தண்ணீர் ஓடிய ஆறெல்லாம் இன்றைக்கு கண்ணங்கரேலென்று ஓடிக்கொண்டு இருக்கிறது என்று சொன்னால் இந்த ஆற்றையெல்லாம் வெறும் தண்ணீர் என்று பார்த்ததனுடைய விளைவு.
ஒரு ஆலயம் என்று இருக்கிறது என்று சொன்னால் அந்த ஆலயத்தில் ஒரு ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த ஆயிரம் பேரும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிக்கை யிலேயேதான் அந்த ஆலயத்திற் குள்ளே வந்திருக்கிறார்கள்.
இந்த அரங்கத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள். இதிலே பல மாறு பட்ட கருத்துகொண்டவர்கள் இருக்கலாம். நீங்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்கு வந்திருக்கலாம். கருத்துச் சுதந்திரத்தோடு இங்கே நீங்கள் எல்லோரும் வந்திருக்கலாம்.
ஆனால் ஒரு ஆலயத்துக்குள்ளே அத்தனை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே வருகின்றார்கள். அதனால்தான் ஆலயத்திற்குப் போய் விட்டு வந்தால் ஒரு புத்துணர்ச்சி. அங்கே போய் இறைவன் இருக்கிறான் என்று சுற்றி வணங்கவேண்டிய அவசியம்கூட இல்லை.
அந்த பிராந்தியத்தில் இருந்துவிட்டு வந்தாலே போதும். நம்பிக்கை உள்ளவர்கள் விடுகின்ற மூச்சுக் காற்றை வாங்கி விடுகிறோமே அது போதும். எதனால் திருப்பதியில் இப்படி ஒரு கூட்டம்? முட்டாள்தனமான விஷயங்கள் அரசியல்வாதிகüடம் இல்லையா? விஞ்ஞானியிடம் இல்லையா? தினந்தோறும் குüக்கி றோம். அழுக்காகின்ற காரணத்தினாலேதானே. அதுபோல பல்வேறுபட்ட செயல்பாடுகளும் இயக்கங்களும் கொண்ட இடத் திலே அங்குமிங்குமாக சில தவறான விஷயங்கள் இருக்கலாம். அதற்காக ஆதிமூலத்தையே ஒன்றுமே இல்லையென்று சொல்லி தூக்கிப் போட்டுவிடுவது எந்த வகையிலே சரி என்றார் வினோபா.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us