Advertisment

பாரதத்தின் பழமையான சுஷ்வாணி மாதா ஆலயம்!

vinayagar


சுஷ்வாணி மாதா மந்திர்...

இந்த ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்த அன்னை துர்க்கையின் அவதாரம். இந்துக்களாலும் சமணர்களாலும் இந்த தேவி வணங்கப்படுகிறாள். சமணர்களுக்கு சுஷ்வாணி குலதெய்வமாக இருக்கிறாள்.

Advertisment

இந்த அன்னை அவதரித்த ஊர் நாகூர். தந்தையின் பெயர் சேட் சதிதாஸ். 

தாயின் பெயர் சுகன்யா கன்வார். இந்த ஆலயம் பிகானிர் மாவட்டத்திலுள்ள மோர்கானா என்ற இடத்தில் இருக்கிறது.

Advertisment

பாரதத்திலுள்ள பழமையான கோவில்களில் ஒன்று இது. 12-ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கூறுகிறது. 846 வருடங்களுக்கு முன்னால் இது கட்டப்பட்டதாக வரலாறு.

ஜெய் ஷால்மர் கற்களால் இந்த ஆலயம் உருவாகி இருக்கிறது. வெளிச்சுவரில் பல கடவுள்களின் சிலைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஜெய்ஷால்மர் கற்களால் ஆனவை.

இந்த ஆலயத்திற்கு அருகில் ஒரு மரம் இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் கைரா. அந்த மரத்திற்கு அருகில் சிங்கத்த


சுஷ்வாணி மாதா மந்திர்...

இந்த ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்த அன்னை துர்க்கையின் அவதாரம். இந்துக்களாலும் சமணர்களாலும் இந்த தேவி வணங்கப்படுகிறாள். சமணர்களுக்கு சுஷ்வாணி குலதெய்வமாக இருக்கிறாள்.

Advertisment

இந்த அன்னை அவதரித்த ஊர் நாகூர். தந்தையின் பெயர் சேட் சதிதாஸ். 

தாயின் பெயர் சுகன்யா கன்வார். இந்த ஆலயம் பிகானிர் மாவட்டத்திலுள்ள மோர்கானா என்ற இடத்தில் இருக்கிறது.

Advertisment

பாரதத்திலுள்ள பழமையான கோவில்களில் ஒன்று இது. 12-ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கூறுகிறது. 846 வருடங்களுக்கு முன்னால் இது கட்டப்பட்டதாக வரலாறு.

ஜெய் ஷால்மர் கற்களால் இந்த ஆலயம் உருவாகி இருக்கிறது. வெளிச்சுவரில் பல கடவுள்களின் சிலைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஜெய்ஷால்மர் கற்களால் ஆனவை.

இந்த ஆலயத்திற்கு அருகில் ஒரு மரம் இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் கைரா. அந்த மரத்திற்கு அருகில் சிங்கத்தின்மீது அமர்ந்த நிலையில் சுஷ்வாணி பூமிக்குள் சென்றதாக வரலாறு. அருகி லேயே ஒரு பழமையான சிவன் ஆலயம் இருக்கிறது.

பகவான் சிவன் தன் கையிலிருந்த ஆயுதத்தை விட்டெறிய, மரம் இரண்டாக பிளக்க, அந்த இடைவெளியில் பூமிக்குள் சென்றிருக்கிறாள் சுஷ்வாணி. இந்த ஆலயம் கி. பி. 1580-ஆம் வருடத்தில் ஹேமராஜா என்ற அரசனால் புதுப்பித்து கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த அரசன் சுரானா என்ற வம்சத்தைச் சேர்ந்தவன்.

அந்த வம்சத்தினர் சுஷ்வாணியைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர். ராஜஸ்தானிலுள்ள சமணமதத்தைச் சேர்ந்த டுகார், சங்க்ளா என்ற இரு பிரிவினருக்கும் இந்த அன்னைதான் குலதெய்வம்.

இந்துக்கள் இந்த கோவிலுக்கு ஏராளமாக வருகின்றனர். ஆலயத்தின் மேற்பகுதியைத் தாங்கிக்கொண்டு 16 தூண்கள் இருக்கின்றன. அவற்றில் 12 தூண்கள் பிரதான ஆலயத்தில் இருக்கின்றன.

ஸ்ரீதரா பாணியில் இந்த ஆலயம் கட்டப்பட்ட தாக தகவல். ஆலயத்திற்கு அருகிலுள்ள சிவலிங்கம் 5,000 வருடங்கள் பழமையானது. சமீபத்தில் இந்த ஆலயம் மீண்டும் புதிப்பிக்கப்பட்டது.

சுஷ்வாணி பூமிக்குள் சென்றவுடன், பூமி மூடிவிட்டது. மரம் மட்டும் அதே இடத்திலேயே இருந்துவிட்டது. இந்தச் சம்பவம் 1173-ஆம் வருடத்தில் நடந்தது.

அன்னை சுஷ்வாணி அழகான சிறுமியாக இருந்திருக்கிறாள். அவளின் அழகால் நாகூர் நவாப் ஈர்க்கப்பட்டு, அவள்மீது மனதிற்குள் காதல் கொண்டிருக்கிறான்.

தன் விருப்பத்தை அவன் சுஷ்வாணியின் தந்தையிடம் வெளியிட, அவர் அதற்கு மறுப்பு கூறியிருக்கிறார். அதனால் கோப மடைந்த நவாப், அந்தச் சிறுமியின் தந்தையை விஷம் கொடுத்து கொன்றிருக்கி றான்.

கவலையில் மூழ்கிய சுஷ்வாணி கடவுளை வழிபட்டிருக்கிறாள். அவளின் கனவில் தோன்றிய பெண் தெய்வம் "கவலைப் படாதே. நான் உனக்குத் துணையாக இருப் பேன். நவாப்பிடம் அவனைத் திருமணம் செய்துகொள்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூறு. ஒரே ஒரு நிபந்தனை... உன்னிடமிருந்து அவன் ஏழு அடி தூரத்தில் இருக்கவேண்டும். காலணி அணிந்திருக்கக்கூடாது. குதிரையில் இருக்கலாம்.''

தொடர்ந்து அந்தப் பெண் தெய்வம் சுஷ்வாணியின் நெற்றியில் திலகம் வைக்க, கனவு கலைந்திருக்கிறது.

காலையில் தான் கண்ட கனவை தன் தாயிடம் கூறியிருக்கிறாள் சிறுமி. அப்போது வீட்டிலிருந்த அனைவரின் நெற்றியிலும் திலகம் இருந்திருக்கிறது.

தகவல் நவாப்பிற்கு கூறப்பட்டிருக்கிறது.

நவாப் வந்தான்.

அந்தச் சிறுமி தன் இரு கைகளாலும் குங்குமத்தைத் தொட்டு, சுவரில் முன் கதவிற்கு அருகில் பதித்தாள்.

சிறுமி ஓடினாள்.

நவாப் விரட்டினான்.

சிறுமி மிகவும் வேகமாக ஓடினாள்.

நவாப் குதிரையின்மீது அமர்ந்து அவளை விரட்டினான்.

இறுதிவரை அவனால் சிறுமியை நெருங்கவே முடியவில்லை.

சிறுமி கடவுளைத் தொழுதாள்.

உடனடியாக சிங்கம் அவளுக்கு முன்னால் வந்து நின்றது.

அவள் சிங்கத்தின்மீது ஏறி அமர்ந்தாள்.

பிக்கானிர் மாவட்டத்திலுள்ள மோர்கான் என்ற இடத்தை அடைந்தாள்.

அங்கு அவள் ஒரு சிவன் ஆலயத்தைப் பார்த்தாள். அவள் சிவனை வழிபட்டாள். அவளுக்கு முன்னால் தோன்றிய சிவன், ஒரு கோடறியை விட்டெறிந்தார்.

எதிரே இருந்த மரம் இரண்டாக பிளக்க, உண்டான இடைவெளியின் வழியாக அவள் பூமிக்குள் சென்றாள்.

அந்தச் சிறுமியின் தம்பியின் கனவில் தோன்றிய கடவுள் அங்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கூற, அவன் அதற்கான பணம் இல்லை என்று கூறினான்.

"அருகிலுள்ள கோசாலைக்குப் போ. அங்கு பொக்கிஷம் இருக்கிறது'' என்ற அசரீரி வர, சிறுவன் அங்கு சென்றான். பொக்கிஷத்தை எடுத்தான். அதன்பிறகு கோவில் கட்டப்பட்டது. ராஜஸ்தானில் சுஷ்வாணி மாதாவிற்கு நாக்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களிலும் ஆலயங்கள் இருக்கின்றன.

மேற்கு வங்காளத்தில் ராஜர்ஹட், கர்நாடகத்தில் அத்திபேலா, மகாராஷ்டிரத்தில் ஆன்டர்சூல், ராஜஸ்தானில் கன்வாலியாஸ், ஆகிய இடங்களிலும் சுஷ்வாணி அன்னைக்கு ஆலயங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் விழுப்புரத்தில் சுஷ்வாணிக்குக் கோவில் இருக்கிறது.சென்னையில் புளியந்தோப்பில்... சுரானா பள்ளிக்கூடத்திற்கு அருகில் சுஷ்வாணிக்கு ஆலயம் இருக்கிறது.

செல்: 98401 11534

om010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe