இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 13-வது சீசன் நடந்தது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன் எடுத்தது.
பிறகு ஆடிய தென் ஆப்ரிக்க அணி 45.3 ஓவரில், 246 ரன்னுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் தீபதி சர்மா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதன் மூலம் பெண்கள் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது.
முதலாவது உலகக்
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 13-வது சீசன் நடந்தது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன் எடுத்தது.
பிறகு ஆடிய தென் ஆப்ரிக்க அணி 45.3 ஓவரில், 246 ரன்னுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் தீபதி சர்மா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதன் மூலம் பெண்கள் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது.
முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்து 1997 மற்றும் 2000-இல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி, பின்னர்2005 மற்றும் 2017 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் இருந்தது இந்தியா.
இந்நிலையில், இந்த முறை உள்நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பட்டத்தை வென்று காட்டியுள்ளது.
இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) நாக்-அவுட் போட்டியில் அதிக ரன் குவித்த வீராங்கனையானார். இதுவரை 4 இன்னிங்சில், 331 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (330 ரன், 6 இன்னிங்ஸ்) உள்ளார்.
பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் 2-வது அதிகபட்ச ஸ்கோரை (298/7) பதிவு செய்தது இந்தியா. கடந்த 2022-இல் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 356/5 ரன் குவித்ததே அதிகம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/02/women-cricket1-2025-12-02-16-10-49.jpg)
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.39.50 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவுக்கு ரூ.19.50 கோடி பரிசு கிடைத்தது.
இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ., சார்பில் ரூ.51 கோடி பரிசு வழங்கப்பட்டது.
இம்முறை அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2-வது இடம் பிடித்தார். இவர், 9 போட்டியில், 434 ரன் எடுத்தார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வார்ட் (571 ரன், 9 போட்டி) கைப்பற்றினார்.
அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 9 போட்டியில், 22 விக்கெட் சாய்த்தார். அடுத்த இடத்தை ஆஸ்திரேலியாவின் அனாபெல் சுதர்லாந்து (17 விக்கெட்) தட்டிச் சென்றார்.
தவிர இது, ஒட்டுமொத்த உலக கோப்பை அரங்கில் (50 ஓவர், டி-20) இந்திய பெண்கள் அணிக்கு கிடைத்த முதல் உலக சாம்பியன் பட்டம். இதற்கு முன் 2020-இல் டி-20 உலக கோப்பையில் பைனல் வரை சென்றிருந்தது.
கபில்தேவ் (1983), தோனி (2007-இல் டி-20, 2011), ரோகித் சர்மாவுக்கு (2024-இல் டி-20) பின், உலக கோப்பை வென்ற 4-வது இந்திய கேப்டன் ஆனார் ஹர்மன்பிரீத் கவுர்.
உலகக் கோப்பையை வென்று தந்த பயிற்சியாளர்கள்இந்தியாவுக்காக உலக கோப்பை வென்று தந்த மூன்றாவது பயிற்சியாளர் ஆனார் அமோல் மஜும்தர்.
1983-இல் கபில் தேவ் தலைமையில் இந்தியா முதல் உலக கோப்பை வென்றபோது பயிற்சியாளர் யாரும் இல்லை.
2007-இல் தோனி தலைமையில் டி-20 உலக கோப்பை வென்ற போது, லால்சந்த் ராஜ்புத், மானேஜராக சென்றார்.
2011-இல் உலக கோப்பை வென்ற போது பயிற்சியாளராக கிறிஸ்டன் இருந்தார்.
2024-இல் டிராவிட் பயிற்சியில் இந்தியா டி-20 உலக கோப்பை கைப்பற்றியது.
தற்போது பெண்கள் அணி அமோல் மஜும்தர், பயிற்சியில் சாதித்துள்ளது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us