செயல்படாத தோஷங்கள்! பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

thosangal

 

னித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும். ஒரு ஜாதகத்திற்கு பலன் எடுத்துரைக்க தோஷங்களுக்கும் சாபங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு ஜாதகத்திலுள்ள தோஷங்களை செயல்படும் தோஷம் செயல்படாத தோஷம் என இரண்டாகப் பிரிக்கலாம். தோஷம் என்றால் ஒருவரின் ஜாதகத்திலுள்ள கிரக நிலவரம் அல்லது கிரகங்களின் சேர்க்கையால் ஜாதகரின் வாழ்வில் நிகழும் சுப- அசுப பலன்களாகும். ஒருசில தோஷங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பாதிப்பை தரலாம். ஒருசில தோஷங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பாதிப்பே தராமல் போகலாம். பொதுவாக ஜாதகத்திலுள்ள அனைத்து கிரக நிலவரங்களும் செயல்படும் தோஷம் என்ற கண்ணோட்டத்திலே பலன் கூறப்படுகிறது. ஜோதிடருக்கு ஜோதிடர் பலன் மாறுபடுவதற்கு இதுதான் பெரும்பான்மையான காரணமாக அமைகிறது. 

ஜோதிடரை சந்திப்பவர்களில் பலருக்கு தங்கள் ஜாதகத்திலுள்ள தோஷங்கள் பாதிக்குமா- பாதிக்காதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 

உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் ஐந்தில் குரு இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். எந்த லக்னமாக இருந்தாலும் ஐந்தில் குரு நின்றால் காரகோ பாவக நாஸ்தியாகும். அதாவது குழந்தைக்கு காரக கிரகமான குருபகவான் காரக வீட்டில் நிற்பது சுப பலனல்ல.  அதனால் குழந்தை பிறப்பு கால தாமதமாகும் என்று பலன் கூறுவார்கள். ஜாதகர் நல்ல குணம், நல்ல சிந்தனை உள்ளவராக இருப்பார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்

 

னித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும். ஒரு ஜாதகத்திற்கு பலன் எடுத்துரைக்க தோஷங்களுக்கும் சாபங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு ஜாதகத்திலுள்ள தோஷங்களை செயல்படும் தோஷம் செயல்படாத தோஷம் என இரண்டாகப் பிரிக்கலாம். தோஷம் என்றால் ஒருவரின் ஜாதகத்திலுள்ள கிரக நிலவரம் அல்லது கிரகங்களின் சேர்க்கையால் ஜாதகரின் வாழ்வில் நிகழும் சுப- அசுப பலன்களாகும். ஒருசில தோஷங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பாதிப்பை தரலாம். ஒருசில தோஷங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பாதிப்பே தராமல் போகலாம். பொதுவாக ஜாதகத்திலுள்ள அனைத்து கிரக நிலவரங்களும் செயல்படும் தோஷம் என்ற கண்ணோட்டத்திலே பலன் கூறப்படுகிறது. ஜோதிடருக்கு ஜோதிடர் பலன் மாறுபடுவதற்கு இதுதான் பெரும்பான்மையான காரணமாக அமைகிறது. 

ஜோதிடரை சந்திப்பவர்களில் பலருக்கு தங்கள் ஜாதகத்திலுள்ள தோஷங்கள் பாதிக்குமா- பாதிக்காதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 

உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் ஐந்தில் குரு இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். எந்த லக்னமாக இருந்தாலும் ஐந்தில் குரு நின்றால் காரகோ பாவக நாஸ்தியாகும். அதாவது குழந்தைக்கு காரக கிரகமான குருபகவான் காரக வீட்டில் நிற்பது சுப பலனல்ல.  அதனால் குழந்தை பிறப்பு கால தாமதமாகும் என்று பலன் கூறுவார்கள். ஜாதகர் நல்ல குணம், நல்ல சிந்தனை உள்ளவராக இருப்பார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கௌரவம் உள்ளவராக இருப்பார். மதிநுட்பம், சமயோஜித புத்தியுடன் செயல்படுவார். பூர்வீகச் சொத்துகளையும் குல கௌரவத்தையும் கட்டிக் காப்பார். ஆத்மஞானம் நிறைந்தவராகவும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவராகவும் வாழ்வார்கள். இப்பொழுது இவருக்கு ஐந்திலுள்ள குரு அதாவது பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்நாள் முழுவதும் சுபப் பலன்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் குழந்தை பிறப்பு ஏற்படும் காலமான 20 முதல் 35 வரை மட்டுமே குரு தசை, குரு புக்தி காலங்களில் மட்டுமே குழந்தை பிறப்பு சம்பந்தமான மன உளைச்சல் இருக்கும். மற்ற காலங்களில் இந்த குருபகவானால் ஜாதகருக்கு நற்பலன்கள் மிகுதியாக இருந்துகொண்டே இருக்கும்.

அதேபோல் செவ்வாய் தோஷத்தை ஒரு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளலாம். தான் விரும்பிய ஒன்றை அடைய மற்ற அனைத்தையும் அழிக்கும் குணமுள்ள கிரகம் என்பதால் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 4, 7, 8-ல் அமர்வது தோஷம் என்று கருதப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும்  செவ்வாய் தசை வராத ஜாதகமாக இருந்தால் அது செயல்படாத செவ்வாய் தோஷமாகும். அதேபோல் செவ்வாய்க்கு குரு மற்றும் சுக்கிரன் சம்பந்தம் இருந்தாலும் தோஷத்தால் கெடு பலன்கள் ஏற்படாது. அதிகப்படியான திருமணங்கள் தடைப்படுவதற்கு இதுவே பிரதானமான காரணியாக உள்ளது. 

ஜாதகம் பார்க்கவருபவர்கள் தோஷம் வீரியம் அற்றது என்று கூறினாலும் அச்சப்படுகிறார்கள். வீரியம் உள்ளது என்று கூறினாலும் இது பரிகார செவ்வாய் என்று ஏதோ ஒரு காரணத்தை அவர்கள் கூறி திருமணத்தடையை உருவாக்குகிறார்கள்.

அடுத்தபடியாக பித்ரு தோஷத்தை எடுத்துக்கொள்ளலாம். ஜோதிடரீதியாக லக்னம் (ஜாதகர்) பூர்வபுண்ணிய ஸ்தானம் (ஐந்தாமிடம்) பாக்கிய ஸ்தானம் (ஒன்பதாமிடம்) போன்ற இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்தும் பித்ரு தோஷத்தை தெளிவாக உணரமுடியும். குறிப்பாக சூரியன், ராகு- கேது, மாந்தி சம்பந்தம், 9-ஆம் அதிபதி ராகு- கேது, மாந்தி சம்பந்தம், சூரிய, சந்திர கிர கணத்திற்கு ஏழு நாட்களுக்குமுன், பின் பிறக்கும் குழந்தைகளுக்கு கடுமையான பித்ரு தாக்கம் உண்டு. 

சூரியன் ராகு சேர்க்கை தந்தைவழி பித்ரு தோஷத்தாலும், சூரியன்  கேது சேர்க்கை தாய்வழி பித்ரு தோஷத்தாலும் ஏற்படுகிறது. 

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு- கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேதுக்களுடன்  சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷமுள்ள ஜாதகமாகக் கருதப்படும். 

பித்ருக்கள் தோஷம் வெளிப்படும் காலம்

ஜனனகால ஜாதகத்திலுள்ள சூரியன், சந்திரன், சனிபகவானை கோட்சார ராகு- கேது சந்திக்கும் காலத்திலும் ஜனனகால ராகு மற்றும் கேதுவை கோட்சார சூரியன், சந்திரன், சனி சம்பந்தம் பெறும் காலங்களில் பித்ரு தோஷம் மிகுதியாக வெளிப்படும். மேலும் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி கண்டகச்சனி, அர்த்தாஷ்டமச்சனி காலங் களிலும் கீழ்க்கண்ட தசாபுக்திகளிலும் பாதிப்பு வெளிப்படும்.

சூரிய தசை ராகு புக்தி
ராகு தசை சூரிய புக்தி
சனி தசை ராகு புக்தி
ராகு தசை சனி புக்தி
சனி தசை கேது புக்தி
கேது தசை சனி புக்தி
கேது தசை ராகு புக்தி
சந்திர தசை ராகு புக்தி
ராகு தசை சந்திர புக்தி
சந்திர தசை கேது புக்தி
கேது தசை சந்திர புக்தி

ஒருவருக்கு பித்ருக்களிடமிருந்து கிடைப் பது நல்லாசியா அல்லது கர்மவினை சார்ந்த பாதிப்பா  என்பதை நிர்ணயிப்பது திதிசூனிய பாதிப்பு. தோஷம் தொடர்பான பாகங்கள் திதி சூனிய பாதிப்பு இருந்தால் நிச்சயமாக அது தோஷமாகச் செயல்பட்டு ஜாதகருக்கு கர்மவினை சார்ந்த பாதிப்புகளைத் தரும். அதேபோல் தோஷம் தொடர்பான பாவங்களுக்கு சுபர்களின் சம்பந்தம் இருந்தால் அது ஜாதகருக்கு சுபப் பலன்களை வழங்கும்.

ஒரு மனிதன் பூமியில் பிறப்பதற்கு காரணம் தோஷங்களும் சாபங்களுமாகும். தோஷங்களும் சாபங்களும் இல்லாமல் ஒரு மனிதன் பிறக்க முடியாது. மனிதன் மட்டுமல்ல; ஓரறிவுமுதல் ஆறறிவுள்ள மனிதன்வரை அனைவரின் பிறப்பிற்கும் ஒரு தோஷமே காரணமாக இருக்கமுடியும். முன்வினை தோஷத்தை களையவே இப்பிறவி உருவாகியுள்ளது. இப்பிறவியில் செய்யும் நல்ல- தீய செயல்களுக்கு ஏற்ப கர்மாக்களின் பாதிப்பு குறையும். ஒரு ஜாதகத்திலுள்ள எத்தகைய தோஷமாக இருந்தாலும் அது எல்லா காலத்திலும் வேலை செய்யாது. குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே வேலை செய்யும். அதனால் எந்த காலத்தில் எந்த தோஷம் பாதிக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால் அந்த பாதிப்புகளில் இருந்து மீளக்கூடிய வழிபாட்டுகளைக் கடைபிடிக்க முடியும். ஒரு ஜாதகத்திலுள்ள எந்த தோஷமாக இருந்தாலும் லக்னம் லக்னாதிபதியுடன்  சம்பந்தப்படாத எந்த தோஷமும் ஜாதகரை தாக்காது; பாதிக்காது. கிரக தோஷங்களை வெளிப்படுத்தக்கூடிய தசாபுக்தி வராத காலங்களிலும் பாதிப்பு வராது.

ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிக்கக்கூடிய தோஷங்கள் அனைத்திற்கும் இதே முறையில் பலன் எடுக்கவேண்டும். மேலே கூறிய முறையில் பலர் பயப்படும் ராகு- கேது தோஷத்திற்கும் பார்க்கலாம். தசாநாதன் அல்லது புக்திநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் சுபத்துவ நிலையில் இருந்தாலும் தோஷங்களால் பாதிப்பு வராது. அதே நேரத்தில் நமது வாசகர்கள் தசை வராவிட்டால் என்ன; புக்தி வருமென்று கூறுவது எனக்குக் கேட்கிறது. அதிக வருடங்கள் கொண்ட தசாவின் புக்திகள் நடப்பில் வரும் காலங்களில் கோட்சார கிரகங்கள் சாதகமாக இருந்தாலும் புக்திநாதனுக்கு சுபக் கோள்களின் பார்வைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை கூறலாம். சிறிய தசைகளின் புக்தியாக இருந்தால் குறுகிய காலம் கண்ணிமைக்கும்முன் கடந்துவிடும். எனவே எந்த தோஷமாக இருந்தாலும் அது செயல்படுமா- செயல்படாதா என்பதைத் தெளிவாக முடிவுசெய்து பலன் கூறவேண்டும்.

bala020825
இதையும் படியுங்கள்
Subscribe