Advertisment

எந்த அடையாளத்தில் உங்கள் கைரேகை? - ஜோதிட சாஸ்திர நூல்கள் தரும் விளக்கம்? - எஸ். விஜயநரசிம்மன்

kairegai

மது நாட்டில், சாமுத்திரிகா சாஸ்திரம் என்பது மிகப் பழமையானதாகும். பண்டைய நூல்களான வராஹ மிஹிரர், எழுதிய "பிருஹத் சம்ஹிதை'யில் மற்றும் "பிருஹத் சாமுத்ரிகா சிந்தாமணி' நூலில் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. பவிஷ்ய புராணத்தில், கருட புராணம் மற்றும் கந்தபுராணம் ஆகியவற்றிலும், கைரேகை மற்றும் கையிலுள்ள அடையாளச் சின்னங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ள விவரங்களில் ஒரு சிலவற்றைக் காண்போம்.  

Advertisment

ப் எவருடைய கையில் கங்கண ரேகையில் இருந்து, வலது கை ஆள்காட்டி விரலின் அடிப்பாகம் வரை ரேகை இருக்குமானால், அவர் நாடாள்பவராகவோ அல்லது குடியரசுத் தலைவர் ஆவர். பண்டைய காலத்தில் அவர் சக்கரவர்த்தி ஆவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே கையின் (வலது) மேற்புறத்தில், மீனின் வால் போன்ற சின்னம் இருக்குமானால், அறிவாளியாக, மேதையாகத் திகழ்வார். மிகப்பெரிய செல்வந்தர் அல்லது உலகப் புகழ்பெறுபவராக இருக்க வேண்டுமானால், மாலை அல்லது ஸ்வஸ்திக் சின்னம் அமைந்திருக்க வேண்டும்.

Advertisment

ப் செல்வந்தர்கள் கையில் முதலை, கோட்டைச் சின்னங்களும், மதத் தலைவராகவோ அல்லது மத பிரச்சாரகவோ இருக்க வேண்டுமானால், அவர்கள் கைகளில், கோவில், முக்கோணம், கிணறு ஆகிய வடிவங்களில் சின்னங்கள் இருக்கும்.

ப் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நாடாளும் தகுதிபெற இருக்க வேண்டிய

மது நாட்டில், சாமுத்திரிகா சாஸ்திரம் என்பது மிகப் பழமையானதாகும். பண்டைய நூல்களான வராஹ மிஹிரர், எழுதிய "பிருஹத் சம்ஹிதை'யில் மற்றும் "பிருஹத் சாமுத்ரிகா சிந்தாமணி' நூலில் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. பவிஷ்ய புராணத்தில், கருட புராணம் மற்றும் கந்தபுராணம் ஆகியவற்றிலும், கைரேகை மற்றும் கையிலுள்ள அடையாளச் சின்னங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ள விவரங்களில் ஒரு சிலவற்றைக் காண்போம்.  

Advertisment

ப் எவருடைய கையில் கங்கண ரேகையில் இருந்து, வலது கை ஆள்காட்டி விரலின் அடிப்பாகம் வரை ரேகை இருக்குமானால், அவர் நாடாள்பவராகவோ அல்லது குடியரசுத் தலைவர் ஆவர். பண்டைய காலத்தில் அவர் சக்கரவர்த்தி ஆவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே கையின் (வலது) மேற்புறத்தில், மீனின் வால் போன்ற சின்னம் இருக்குமானால், அறிவாளியாக, மேதையாகத் திகழ்வார். மிகப்பெரிய செல்வந்தர் அல்லது உலகப் புகழ்பெறுபவராக இருக்க வேண்டுமானால், மாலை அல்லது ஸ்வஸ்திக் சின்னம் அமைந்திருக்க வேண்டும்.

Advertisment

ப் செல்வந்தர்கள் கையில் முதலை, கோட்டைச் சின்னங்களும், மதத் தலைவராகவோ அல்லது மத பிரச்சாரகவோ இருக்க வேண்டுமானால், அவர்கள் கைகளில், கோவில், முக்கோணம், கிணறு ஆகிய வடிவங்களில் சின்னங்கள் இருக்கும்.

ப் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நாடாளும் தகுதிபெற இருக்க வேண்டிய சின்னங்கள், சிம்மாசனம், தேர், குதிரை வால் ஆகும்.

ப் அரசன் - தற்காலத்தில் அமைச்சர், அரசாள்பவர் ஆகியோரின் இல்லக் கிழத்திகள் கைகளில் என்ன சின்னங்கள் இருக்கும்? கொடி, சங்கு, சக்கரம், விஷ்ணுவின் அங்கி, யானை, அங்குசம், ஸ்வஸ்திக், வாள், பூர்ண கும்பம், தேர், வெண்கொற்றக் குடை, மகுடம், முத்துமாலை, குண்டலம், மயிலிறகு, தோரணம், ஆகிய சின்னங்கள் இருப்பின், அப் பெண் முக்கிய பிரமுகரின், செல்வந்தரின் மனைவியாக இருப்பாள் எனலாம். ஆனால், அதுவே, அச் சின்னங் கள், நெய்க் கரண்டி, தண்ட கமண்டலம், பாதுகை போன்றவையாக இருக்குமானால், அவள் எந்தக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சந்நியாசியாக, முனிவரின் மனையாளாகவோ அல்லது  படைத் தளபதியின் பத்தினியாக இருப்பாள் என்பது, பண்டைய நூல்களின் கூற்று.

ப் ஒரு பெண்ணின் கையில், உலக்கை, ஏர், உரல், கதிர் அறுக்கும் கத்தி ஆகிய அடையாளங்கள் இருக்குமானால் அவள் மிகப்பெரிய நிலச்சுவான்தார் மனைவியாகவோ, அநேக பூமிகளை உடைய பண்ணையார் பத்தினியாக இருப்பாள்.

தற்போது, நாம் பல புராதன நூல்களில், முக்கியமாக, சாந்தி விஜய முனிவர், எழுதிய நூல். "எவர் கையில், எந்த சின்னம் இருந்தால், அவர் எப்படி இருப்பார்?' எனக் குறிப் பிட்டுள்ளதை  கீழே காண் போம்.

ப் சிங்கம்- சிங்கத்தின் முழு உருவம் அல்லது அதன் சிரம் சின்னமானால், அவர் அரசாள்பவராகவும், ராஜ வைபவங்களுடன் வாழ்பவராகவும், பகைவரை வெல்பவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீரம் மிக்கவராகவும், நிதான புத்தி உள்ளவராகவும் இருப்பார்.

ப் யானை- அதிர்ஷ்டசாலி, புத்திசாலி, அரசனுக்கு ஒப்பானவர், எந்த வாணிபத்தில் ஈடுபட்டாலும் அதிக ஆதாயத்தை அடைபவராகவும், பொருளாதார நிலையில் உயர்ந்தவனாகவும் விளங்குவர்.

ப் குதிரைப்- படைத் தலைவர், உயர் காவல்துறை அதிகாரி, பிரதம மந்திரி ஆகியோர் கரங்களில் இச்சின்னங்கள் இருக்கக் காணலாம்.

ப் மீன்- வெளிநாடு சென்று வசிப்பவராகவும், என். ஆர். ஐ ஆகவும், தர்ம சிந்தனை மிக்கவராகவும், கருணையுள்ளம் கொண்டவராகவும், மெய்யே உரைக்கும் மேலானவராகவும் விளங்குவர்.

ப் பல்லக்கு- சின்னம் உடையவர்கள் பணக்காரர்களாய் இருப்பர். பல நவீன வாகனங்களை உடையவர், பலருக்கு பணி வழங்கும் முதலாளியாகவும், அரசு மரியாதைக்கு உரியவராகவும் இருப்பார்.

ப் பூமாலை- பெரிய மதத் தலைவர், மதத்திற்காக உழைப்பவர், ஆச்சாரியார், மடாதிபதி, ஆசார சீலர், ஆதீனம் மற்றும் மக்களிடம் மிக்க அன்பு கொண்டவராகவும் விளங்குவார்.

ப் திரிசூலம்- சன்னியாசி, அகோரி, சிவபக்தர், கபாலன், சித்தர், ஆகியோரைக் குறிக்கும். 

ப் தேர்- கோவில் தர்ம கர்த்தா, தக்கார், மடாதிபதி, சம்சாரம் உள்ளவர்கள், மத போதகர்கள், பேச்சாளர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ( உலகம் முழுக்க) மத பிரச்சாரம் செய்பவர்கள், இத்தகைய அடையாளத்தை உடையவர்கள் ஆவர்.

ப் சூரியன்- இது ஓர் அபூர்வமான சின்னமாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர், மகா பெரியவர் போன்றவர்கள் கைகளில் மட்டுமே இருக்கும்.

ப் அங்குசம்- பெரிய நிறுவனத் தலைவர்கள், வழக்குகள் மற்றும் எதிலும், எப்போதும் வெற்றிமேல் வெற்றி காண்பவர்கள், அரசியல் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், இராணுவம், சிறைத்துறை தலைவர்கள் ஆகியோர் ஆவர். 

ப் மயில்- இச்சின்னம் உள்ளவர்கள் இசை, நாட்டியம் ஆகியவற்றில் உலகப் புகழ்பெற்று, விளங்குவர். கம்பீரமும், வசீகரமும் மிக்கவராகவும், அன்பு மிக்கவர்களாகவும், அநேக நண்பர்களை உடையவராகவும் இருப்பார்.

ப் பதாகை- இது பட்டத்தைக் குறிக்கும். இச் சின்ன முள்ளவர்கள் தத்தமது ஊரிலோ, நாட்டிலோ, பகுதியிலோ தலைமைப் பதவியில் இருப்பர். அவர்கள் தயவில் நூற்றுக்கணக் கானோர் வாழ்வார்.

ப் கலசம்- அரசு அதிகாரிகளாக திகழ்வர். மக்கள் மனதில் இடம் பெறுவர். நன்மதிப்பும், நேர்மையும் உடையவர்களாக இருப்பர். சேவை செய்வதில் ஆனந்தம் அடைவர். கோவில்களிலும், மடங்களிலும் முதல் மரியாதைக்குத் தகுதி உடையவர்களாக இருப்பர்.

ப் வாள்- அதிர்ஷ்டசாலிகள், அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும், வெற்றிமேல் வெற்றி அடைவர். தனது குறிக்கோள்கள் எட்டுவதற்கு, தன்னை எதிர்ப்பவர்களை தைரியமாக எதிர்ப்பு தெரிவிப்பார். பகைவர் களை கூண்டோடு அழிப்பர். நினைத்ததை சாதிப்பவர்களாகத் திகழ்வர்.

ப் கப்பல்- இச்சின்னம் உள்ளவர்கள் சிறந்த வியாபாரிகள், வியாபார விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். வெளிநாடு சென்று செல்வம் திரட்டி, நம் நாட்டில் சேர்ப்பர். நீண்ட ஆயுளை உடையவர்கள்.

ப் ஸ்வஸ்திக்- தெய்வ பக்தியும், தெய்வ நம்பிக்கையும், சிறப்பான, நேர்மையான வாழ்க்கையும் உடையவர்கள். எதையும் ஆராய்ந்து செய்யும் செயல்பாடு அவர்கள் சிறப்பு.

ப் கமண்டலம்- ஏழைப் பங்காளியாகவும், கோவில் பூசாரி, மதப் பிரச்சாரகராகவும் இருப்பர். தன் தொழிலுக்காக வெளிநாடு சென்று சம்பாதித்து வெற்றியுடன் திரும்புவார். ஒரு கொள்கை உடையவர்.

ப் சிம்மாசனம்- அரசு உயர் அதிகாரி, பெரிய குடும்பத் தலைவர், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை உடையவர். மக்கள் போற்றக் கூடியவராகவும் இருப்பார்.

ப் கிணறு- பரோபகாரி, ஓரளவு பணக்காரர், பொறுமையற்றவர், பிறர் கஷ்டத்தை கண்டு இரக்கம் கொள்ளுபவர். பொதுச் சேவையில் ஆர்வம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்துபவராக இருப்பார்.

ப் ஏரி- இச்சின்னம் உடையவர்கள் தர்ம ஸ்தாபனம் நடத்துபவர்கள். அனைவரிடமும் சமமாக பழகக் கூடியவர்கள். துரோகம் செய்பவர்களையும் மன்னிக்கக் கூடியவர்கள்.

இதுபோன்று, இன்னும் ஏராளமான சின்னங்களுக்கு, ஏராளமான பலன்களை பண்டைய நூல்கüல் காணமுடிகிறது.

செல்: 97891 01742.

bala310126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe