ஐயப்பனை வேண்டி நின்றால் அகிலத்தை வெல்லலாம்...

iyappan


நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

 

சாமி சரணம் 
ஐயப்ப சரணம்
சாமியே ஐயப்பா.. 

எட்டு அவதாரம் எடுத்து வந்தவனே 
எட்டாத காரியத்தையும் 
எட்டிப் பிடித்து
வெற்றிபெறச் செய்பவனே..
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவனே
ஆக்கவும் அழிக்கவும் 
உன்னால் மட்டுமே முடியும்..
உன்னை நம்பி வந்தவர்களை 
எப்போதும் நீ கைவிடுவதில்லை..

அய்யனாரும் இவனே 
பதினெட்டாம்படி கருப்பும் 
அவனே
எத்திசையிலும் 
காவல் தெய்வமாய் 
நீ அருள்கிறாய்..

உன்னுடைய 18 படிகளில் 
மந்திரம் உண்டு, 
தந்திரமும் உண்டு.. 
எண்ணிய காரியத்தை எண்ணியபடி
18 படி ஏறி நின்றவுடன் 
எண்ணியதெல்லாம் கை கூடுமப்பா..
உனக்காய் தவமிருந்து வரம்பெற
நித்தம் நினைத்தாலே போதும்..
நிலையற்ற செல்வத்தை 
வாரி வழங்குபவனே..
சாமியே ஐயப்பா
சரணம் சரணம் உன் திருவடி சரணம்...

ஏதாவது ஒரு தொல்லையால் 
உங்கள் குழந்தைகள் 
பாதித்துக் கொண்டே இருந்தால்
பகவான் ஐயப்பன் பெயரை உச்சரிக்க


நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

 

சாமி சரணம் 
ஐயப்ப சரணம்
சாமியே ஐயப்பா.. 

எட்டு அவதாரம் எடுத்து வந்தவனே 
எட்டாத காரியத்தையும் 
எட்டிப் பிடித்து
வெற்றிபெறச் செய்பவனே..
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவனே
ஆக்கவும் அழிக்கவும் 
உன்னால் மட்டுமே முடியும்..
உன்னை நம்பி வந்தவர்களை 
எப்போதும் நீ கைவிடுவதில்லை..

அய்யனாரும் இவனே 
பதினெட்டாம்படி கருப்பும் 
அவனே
எத்திசையிலும் 
காவல் தெய்வமாய் 
நீ அருள்கிறாய்..

உன்னுடைய 18 படிகளில் 
மந்திரம் உண்டு, 
தந்திரமும் உண்டு.. 
எண்ணிய காரியத்தை எண்ணியபடி
18 படி ஏறி நின்றவுடன் 
எண்ணியதெல்லாம் கை கூடுமப்பா..
உனக்காய் தவமிருந்து வரம்பெற
நித்தம் நினைத்தாலே போதும்..
நிலையற்ற செல்வத்தை 
வாரி வழங்குபவனே..
சாமியே ஐயப்பா
சரணம் சரணம் உன் திருவடி சரணம்...

ஏதாவது ஒரு தொல்லையால் 
உங்கள் குழந்தைகள் 
பாதித்துக் கொண்டே இருந்தால்
பகவான் ஐயப்பன் பெயரை உச்சரிக்கச் 
சொல்-ப் பழக்குங்கள்..
தேவனே அருகில்வந்து 
உங்கள் பிள்ளையை பாதுகாப்பான்..
பாதகாதிபதி, மாரகாதிபதி
கிரக பாதிப்பு கொடுக்கும் 
தசை நடந்து
திக்கற்று நிற்பவர்களுக்கு
நல்ல திக்கு திசையை காட்டுவான்..
பகவான் பாதம் பகவதி பாதம் 
சாமியே ஐயப்பா..
கார்த்திகை மாதம்
ஐயப்பனுக்கு விரதமிருந்து
சபரிமலை சென்றுவர 
சகலதோஷமும் நீங்குமப்பா..
பக்திக்கு மாதமும் இல்லை, கிழமையும் இல்லை
அனுதினமும் ஐயப்பனை வேண்டி நின்றால்
அகிலத்தையே வெல்லலாம்..
வருடம் முழுவதும் 
இறைவனை நினைக்கலாம்..
விசேஷ நாட்களில்
வருடம் ஒரு முறையேனும் 
ஐயப்பனை தரிசிக்கவும்..

மண்டல காலத்தில் 
மனம் ஒத்து 
மனம் உருக
மனதார மண்டியிட்டு வழிபட
மரண தேதிகூட மாறுமப்பா..
மனக்கட்டுப்பாடு அவசியமப்பா
ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்
ஐயப்பனுக்கு நிகர் ஐயப்பனே..
செய்த பாவங்களை தீர்ப்பான்..
பாவங்கள் செய்யவிடாமல் 
தடுப்பவன் சபரிநாதன்..
தன்னை தஞ்சம் புகுந்தவர்க்கு  
சகல வெற்றியும் தருவார்..
நேர்மையற்றவரை தன்னிடம் 
ஒருபோதும் நெருங்க விடமாட்டார்  
தவறி வந்தால் தண்டிக்கவும் 
தயங்க மாட்டார்..

ஐயப்பனை ஆராதிக்க
ஐயப்பனை வழிபட 
ஐயப்பனை நினைக்க
ருத்ராட்சத்தில் அடக்கி
ஐயப்பனுக்கு பூஜைசெய்து வழிபட 
ஐயப்பனின் அருள் மிகுதியாய் கிடைக்கும்.. 
அகிலத்தைக் காக்கும் 
ஐயப்பனை ஏமாற்ற 
நினைப்பவர்கள்
ஐயோ அப்பா என்று 
கதறி அழத்தான் வேண்டும்... 

வாழ்கையே பாதாளத்தில் 
போய்க் கொண்டிருக்கும் 
பாலவக் கரணத்தில் 
பிறந்தவன்.. 
சபரிமலை மகர சங்கராந்தி
தைப்பொங்கலன்று
ராஜ அலங்கார தரிசனம் பார்க்க வந்தால் 
உன்னையும் 
ராஜாவாக்குவாரப்பா..
ராகு தோஷம் 
பெற்றவர்களுக்கு
நடுநடுங்கும் வாழ்க்கையப்பா..
நம்பி நீ இங்கு வந்தால்
தோஷம் நீங்கி நலம் பெறுவாய்..
ஆடம்பரத்தைக் காட்டி
அதல பாதாளத்தில் தள்ளி
அழித்துவிடும் ராகு பகவானுக்கு 
தோஷம் நீக்கி யோகம் தந்து.. 
அரசனாக்கி அழியா புகழ் தருபவரே 
அப்பன் ஐயப்பன்...  

கழுத்தில் மணி போன்ற 
அடையாளம் இருந்ததால்
மணிகண்டன் ஆனவன்..
எட்டுத்திக்கும் மணியோசை
ஏழு கடல் தாண்டி கேட்கும்
அவனின் அற்புதங்கள்..
அவதார புருஷன் 
ஐயப்பனை தரிசிக்க
அத்தனை கட்டுப்பாடு வேண்டும்..
அறியாதவன் பேச்சைக் கேட்டு
அவமானப்படுத்தினால்
உன் குலம் நாசமாகுமப்பா..
மணிகண்டனை தரிசிக்க
மாதவம் செய்திருக்க வேண்டும்..
நினைத்தவனெல்லாம் 
நினைத்த நேரம்
மலையேற முடியாதப்பா..
மனம் கெட்டவன் 
மலையேறி வந்தால்
மரணத்தை பரிசளிப்பான்...

தர்மத்தின் காவலர் 
தர்ம சாஸ்தா
பூத கனங்களுக்குத் 
தலைவனான
பூதநாதனே.. ஹரிஹரசுதனான
ஆண்டவனின் பிள்ளையே..
பம்பா வாசனே..
பந்தள நாட்டு அரசனே..
சபரிநாதனே..
க-யுகத்தில் பக்தர்களை காத்து
அருள் செய்யும் க-யுக வரதனே..
எருமே- வாசனே..
கருணாகரனே
ஜோதி சொரூபனே..
உன் பெயரை உச்சரித்தால்
உயிர் உருக்கும் ஐயனே
என் குலம் காக்க வந்தவனே
எல்லாமும் நீ என
உன்னை சரணடைந்தால்
உள்ளமே மகிழுமப்பா...   

சபரி மலையில்
கார்த்திகை ஒன்றாம் தேதி 
கோவில் கட்டடம் துவங்கி
தை ஒன்றாம் தேதி 
தரிசனம் கொடுத்தாய் அப்பா..
இந்த இரு நாளில்
உன்னைக் காணவந்தால்
இரு மடங்கு இன்பம் கிடைக்குமப்பா..
ஐயனே உன் பாதம் பணிகிறேன்
நெய் அபிஷேகப் பிரியரே
பொய் பேசுவது பிடிக்காதவனே..
உனதருள் இருந்தால்தான்
உன்னைக் காணமுடியும்..
1,008 சரண கோஷங்கள் கேட்க
சகலத்திலும் வெற்றி கிட்டுமப்பா... 
  
சபரிக்கு முக்தி கொடுத்த சபரிமலை
அழுதா நதியில்
நீராடும்போதே..
உன் கவலை, கண்ணீர் 
கரைந்து போய்விடுமப்பா..
மகிஷாவின் அராஜகத்தை 
அழிக்க பிறந்த ஐயப்பன்.. 
உன் குடும்பத்தில் 
அரக்க குணங்கொண்டு..
உன்னையே அழிக்க 
நினைப்பவர்களையும் அழிப்பார்
கவலை வேண்டாம்...
 
மந்திரமும் வேண்டாம் 
எந்திரமும் வேண்டாம்..
சபரிமலைக்கு சென்று 
சாமியை கண்டால்.. 
தேவனே தேவியே..
பகவதி சரணம்... பகவான் சரணம்..
பாவம் தீரும்.. மோட்சம் கிட்டும்...

செல்: 96003 53748.                

bala110725
இதையும் படியுங்கள்
Subscribe