மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம். வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம். வாழைபோல தன்னைத்தந்து தியாகம் ஆகலாம்.. உருகி ஓடும் மெழுகுபோல ஒளியை வீசலாம்..
இந்த பொன்னான வரிகள் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களுக்கே பொருந்தும். அதனால்தான் புரட்சி நடிகராக புகழோடு தமிழ் திரையுலகில் நாடோடி மன்னனாக பல ஆண்டுகள் வெற்றி பவனி வந்து "மக்கள் திலகம்' ஆன அவர் மக்களால் "தமிழக முதல்வர்' ஆக்கப்பட்டு, அவர் அமரர் ஆகி முப்பத்தி எட்டு ஆண்டுகள் ஆனபிறகும் அணையாத ஜோதியாக எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் மக்கள் மனதில் பட்டொளி வீச காரணம் புரட்சித்தலைவரின் மனித நேயமும், கொடை வள்ளல் குணமும், ஏழை களுக்கு உதவும் இதயமும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க அவரது புகழ் இன்றும் நிலைத்திருப் பதால் பலகோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவர் மீண்டும் வரமாட்டாரா? என்று ஏங்கி தவிக்கிறார்கள்.
அந்த ரசிகர்கüன் ஆவல் தீரும் வகையில் எம்.ஜி.ஆர் போலவே துபாயில் இருந்து வந்திருக்கிறார் எம்.ஜி.ஆர் அமர்நாத்.
அவரிடம் கேள்விகளை வீச, நம்மிடம் பதில்களை அளித்து பரவசம் அடையச் செய்தார்.
எம்.ஜி.ஆர்போலவே ஆகிவிட ஏன் நினைத்தீர்கள்?
"சிறுவயது முதலே புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்றால் எனக்கு உயிர்போல ஆகிவிட்டார். அவர் நடித்த படங்கள் அனைத் தையும் திரும்ப திரும்ப பல தடவை பார்த்து எம்.ஜி.ஆர் ரசிகராகிவிட்டேன் என்றே சொல்லலாம்.
நான் மருதமலை முருகப் பெருமானின் பரம பக்தன். அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வேன். அந்த முருகன் தான் என் மனதில் நீ எம்.ஜி.ஆர் போல் ஆகிவிடு என்று சொல்லிக் கொண்டே இருப்பதுபோல் உணர்ந்தேன்.
துபாயில் எம்.ஜி.ஆர்போல் தொப்பி, கண்ணாடி, வெள்ளை வேஷ்டி சட்டை தோளில் சால்வையுடன் நான் ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்கு போனபோது பலரும் என்னை சூழ்ந்துகொண்டு உண்மையிலேயே எம்.ஜி.ஆர் திரும்ப வந்து விட்டார் என்று வரவேற்பு தந்தபோது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.'
"தமிழ்நாட்டிற்கு வந்தபோது எனக்கு பல மடங்கு வரவேற்பை புரட்சி தலைவரின் ரசிகர்கள் தந்துவிட்டார்கள். என்னிடம் கை குலுக்கி மகிழ்ந்தார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். செல்பி எடுத்தும் சந்தோஷம் அடைந்தார்கள்.
எம்.ஜி.ஆரைப் போல பிறருக்கு உதவும் வகையில் நீங்கள் என்ன செய்துவருகிறீர்கள்?
"மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா கர்ணனிடம் தர்மபுண்ணியம் அனைத் தையும் பெற்றபிறகு அவருக்கே பிறருக்கு கொடுக்கும் எண்ணம் வந்துவிட்டது.கர்ணனிடம் "நீ விரும்புவதை கேள்' என்றா ராம். கர்ணனும் கிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனத்தை விரும்பிக் கேட்க அவரும் "விஸ்வரூபம்' எடுத்து காட்டினாராம்.
கர்ணனிடம் பெற்றதும் கண்ணனும் "கர்ணன்' ஆனதுபோல் நானும் எம்.ஜி.ஆர்.போல் உருவம் மாறியதும் அவரின் ஏழைகளுக்கு உதவும் "தர்ம சிந்தனை' பெற்று விட்டேன். அதனால் எம்.ஜி.ஆர். போல் உருவத்தில் மட்டுமின்றி உள்ளத்திலும் எம்.ஜி.ஆர் ஆகி வியர்வை சிந்தி நான் துபாயில் உழைக்கும் பணத்தை, என்னால் இயன்ற தர்ம காரியங்களுக்கும், ஏழைகளுக்கும் தந்து வருகிறேன்.
நீங்கள் சமீபத்தில் மெய்சிலிர்த்த அனுபவம் உண்டா?
"புரட்சித்தலைவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு சென்று அவர் சாப்பிட்ட டைனிங் டேபிளில் அமர்ந்தபோது மனம் புல்லரித்துப் போனேன்.
சென்னை தி.நகர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த அவரது நினைவு இல்லத்திற்கு சென்று புரட்சித்தலைவர் பயன்படுத்திய கார், உடைகள், கண்ணாடி, தொப்பி மற்றும் ஏராளமான எம்.ஜி.ஆரின் புகைப்படங்களை பார்த்தும் "அடிமை பெண் சிங்கம்' பார்த்தும் மனநிறைவு பெற்றேன்.
நடிகை லதா அம்மா இல்லம் சென்று அவரோடு உரையாடி மகிழ்ந்து வந்தேன்.
மதிப்பிற்குரிய சைதை துரைசாமியை சந்தித்து மனநிறைவு அடைந்தேன். பல அ.இ.அ.தி.மு.க தலைவர்களையும் சந்தித்து சந்தோஷம் அடைந்தேன். ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புரட்சித்தலைவரே மறுபிறவி எடுத்து வந்துவிட்டதாகக் கருதி என்னை வரவேற்று கைகொடுத்து, கட்டித்தழுவி, புகைப்படங்களை வீடியோ, செல்பி எடுத்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்ததும் என்னை மகிழவைத்தது.
ஏழை எளியோர், அனாதைகளுக்கு உதவும் திட்டம் உண்டா?
"பொன்மனச் செம்மல் காக்கும் கரங்கள் அறக்கட்டளை' அமைத்துள்ளேன். இதன்மூலம் வசதி உள்ளவர்கள் விரும்பித்தரும் நன்கொடைகள் பெற்று நிறைய ஏழை, எளியோர், அனாதை இல்லங்களுக்கு உதவ திட்டமிட்டு இருக்கிறேன்.'
மருதமலை முருகனின் அருளாசியோடு இவரின் எண்ணம் ஈடேற வாழ்த்தி விடை பெற்றோம்.
தொடர்புக்கு: 95444 55055
பேட்டி, படங்கள்: விஜயா கண்ணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/mgrfan-2026-01-03-18-04-25.jpg)