Advertisment

பணவரவை அதிகரிப்பது எப்படி? -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி   சென்ற இதழ் தொடர்ச்சி...

money

வறுமையில் வாடும் ஜாதகத்திற்கான கிரக அமைப்புகள்

ஒருவர் ஜாதகத்தில் 5-ஆமிடம் எனும் பூர்வீக புண்ணிய ஸ்தானம்  வலுத்திருந்தால், அங்கு லக்னரீதியான சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் ஆட்சி, உச்சம்பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்னாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால், அந்த வீட்டில் 6, 8, 12-க்குடையவன் அமராமல் இருந்தால், பாவகிரகங்கள் அமராமல் இருந்தால் இவர்கள் யோகசாலிகளே. இவர்களுக்கு பணத்தால் பெரிய பிரச்சினைகள் வராது.

Advertisment

ஜனனகால ஜாதகத்தில் 5-ஆமிடம் 5-ஆம் அதிபதி பலவீனமாகி 1, 2, 5, 9, 11 ஸ்தானங்கள் ராகு- கேதுக்களின் பிடியில் இருந்தால்  வாழ்க்கையில் ஏற்ற- இறக்கம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

Advertisment

1, 2, 5, 9, 11-ஆம் ஸ்தானங்களுடன் தன கிரகங்களான குரு, சுக்கிரன், சனி பாதிக்கப்பட்டால் பணத்தை கண்ணில் காண்பதே அரிதாகிவிடும். ஆகவே ஒருவருக்கு கிடைக்கின்ற எந்த யோகமும். அதிகமோ, குறைவோ எல்லாம் அவரவர் வாங்கிவந்த வரம். அதன்படி கிரகங்கள் அந்தந்த காலகட்டத்தில் உரிய யோக பாக்கியங்களைத் தருகின்றன.

2-ஆம் அதிபதி 6, 8, 12-ல் இருந்தால் ஜாதகர் வறுமையோடு வாழ்வார். என்னைப் பொறுத்தவரைக்கும் இது பொதுவான விதியாகவே உள்ளது. அனுபவரீதியாக எட்டாமிடத்தில் இருக்கும் கிரகம் சம சப்தம பார்வையாக இரண்டாம் இடத்தைப் பார்க்கும். இது ஜாதகருக்கு ஏதாவது ஒரு விதத்தில் பணப்புழக்கத்தை கொடுத்துவிடும். அதேபோல் 12-ஆமிடம் என்பது இரண்டாம் இடத்திற்கு லாப ஸ்தானமாகும். மறைமுக வருமானம், வெளிநாட்டு வருமானம், குடும்ப உறவுகள்மூலம்  மூலமாக ஜாதகருக்கு வருமானம் இருக்கும்.

6-ஆமிடம்

6-ஆமிடம் கடன், நோய் உத்தியோக ஸ்தானமாகும். வட்டி வருமானம், வாடகை வருமானம் 

இவற்றை கூறுவதும் 6-ஆமிடமாகும்.

2-ஆம் அதிபதி 6-ஆமிடத்தில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கடன் தொடரும்.

உற்றார்- உறவினர், நண்பர்களே எதிரியாக இருப்பார்கள். ஜாமீன் பெறுவதாலும், கொடுப்பதாலும் பொருளாதார பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவார்கள்.

நிலையான வேலை, உத்தியோகம் இருக்காது. இவருக்கு கேட்ட இடத்திலும், கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும்.  இவர்கள் இருக்கும் இடம் தேடி கடன் பணம் செல்லும். தனக்கு ஏற்படும் கடன் பிரச்சினைக்கு தானே காரணமாக இருப்பார்கள்.  தங்களுடைய நிதானமற்ற ஆசையால் கடன் வலையில் சிக்குகிறார்கள்.

கடனை வாங்கும்போதில் இருக்கும் ஆர்வம் திரும்பச் செலுத்தும் போது இருக்காது. அந்தஸ்து, ஆடம்பரம் என சுய செலவால் கடனை அதிகரித்துக்கொண்டே  இருப்பார்கள். எந்த தேவைக்கு கடன் வாங்கினாலும் சுய தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையை தட்டும்போது மட்டுமே கடனை பற்றிய சிறு கலக்கம் இருக்கும். இவர்களுக்கு சொல் புத்தியும், சுய புத்தியும் கிடையாது. நிலையற்ற பேச்சினால் வம்பு வழக்கு வரும்.

வாக்கில் நிதானமற்றவர்களிடம் யாரும் அன்பு செலுத்துவது இல்லை. எந்தத் தொழில் வாய்ப்பும் தேடி வருவது இல்லை. வரவிற்கு மீறிய செலவு வாட்டி வதைக்கும். வருமானம் குடும்ப தேவையை நிறைவு செய்ய முடியாமல் இருக்கும். உறவுகளின் தேவையை நிறைவு செய்ய கடன் வாங்கி வாழ்நாள் கடனாளியாகிறார்கள். 

குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்ற வரவுக்கு மீறி கடன் சுமையில் தவிப்பார்கள்.

வீட்டுச் செலவை சமாளிக்க அதாவது அடிப்படை தேவைகளான உணவு, உடை போன்றவற்றை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும். ஊஙஒ கட்டியே வாழ்க் கையை வெறுத்து விடுபவர்கள். கடனுக்கு பயந்து நோயாளியாகிறார்கள். இவர் களின் வாழ்க்கை கொடூரமான நரகத்தில் வாழ்வதைப்போல் இருக்கும். இது சென்ற ஜென்மத்தில் உழைத்த கூலியை வேலையாட்களுக்கு உரிய நேரத்தில் கொடுக்காத குற்றமாகும். நல்ல வருமானம் தரக் கூடிய தொழில், உத்தியோகம் இருந்தால்கூடஅடிப்படை தேவைக்கு அவசிய தேவைக்கு, திணறக்கூடிய நிலையே இருக்கும். இந்த அமைப்பிலுள்ளவர்கள் சிலர் வட்டி வருமானம், வாடகை வருமானம் வாங்குவார்கள். ஆனாலும் சொந்த தேவைக்கு அவ்வப்போது பணப்புழக்கம் இருக்காது. அதாவது-ஒரு பாவக அதிபதி எந்த பாகத்தில் அமர்கிறாரோ அந்த பாவக காரக ஆதிபத்திய உறவுரீதியான பலன்களை ஜாதகர் அனுபவிப்பார். இந்த விதி 12 பாவங்களுக்கும் பலன் எடுக்க பொருந்தும். ஒரு பாவகாதிபதி எந்த பாவகத்தில் அமருகிறாரோ அந்த பாவகக்காரக ஆதிபத்திய உறவுகளுக்கு சென்ற ஜென்மத்தில் பட்ட கடனை இந்த ஜென்மத்தில் தீர்ப்பார்கள்.

2, 8-ஆம் அதிபதிகள் இணைந்து பாதகஸ்தானத்தில் நின்றால் அவமானப்பட்டு சாப்பிடும் நிலை இருக்கும்.

2-ஆமிடத்தில் பாவ கிரகங்கள் நின்று லக்னாதிபதியும் 2-ஆம் அதிபதியும் கெட்டால் உண்ண உணவின்றி தரித்திரம் தலைவிரித்து ஆடும்.

ஒருவர் எந்த ராசியாக இருந்தாலும் எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்திற்கு முன்பின் ராசிகளிலும் பாவ கிரகங்கள் நின்றால் தரித்திரம் தாண்டவம் ஆடும். இதை பாவகர்த்தரி தோஷம் என்று சொல்லலாம்.

அதாவது ராசிக்கு 12-ஆமிடத்தில் அல்லது லக்னத்திற்கு 12-ஆமிடத்தில் பாவ கிரகங்கள் நின்றால் பிறந்தவுடன் வறுமை இருக்கும்.

ராசிக்கு 2-ஆமிடத்தில் பாவ கிரகங்கள் நின்றால் வாலிப வயதிற்கு பிறகு வறுமை உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் குருவும் கேதுவும் சேர்ந்து எந்த இடத்தில் இருந்தாலும் பணக் காரப் போர்வையில் வாழும் கடனாளிகள்.

லக்னாதிபதியும் ராகுவும் சேர்ந்திருந்தால் ஜாதகர் பாட்டனை விட அதிகம் சம்பாதிப் பார்.

லக்னாதிபதியுடன் கேது சேர்ந்திருந்தால் எவ்வளவு உழைத்தாலும் ஜாதகரால் மேன்மை பெறமுடியாது

குருவும் சனியும் சேர்ந்திருந்தால் எளிமையான உழைப்பில் அதீக வருமானம் உண்டாகும். குருவும் சனியும் 6, 8 ஆக இருந்தால் ஜாதகர் எவ்வளவு உழைத்தாலும் தன்னிறைவு பெறமுடியாது.

காலபுருஷ தத்துவப்படி பண பரஸ்தானம் 2, 5, 8, 11-ஆமிடங்கள்.காலபுருஷ 2-ஆம் அதிபதி சுக்கிரன். இங்கே சந்திரன் உச்சம். இது பெண் ராசியாகும்.

சனி வலுத்தவர் அதிகமாக உழைத்து குறைவாக சம்பாதிப்பார். புதன் வலுத்தவர் குறைவாக உழைத்து அதிகமாக சம்பாதிப்பார்.

பண வரவை அதிகரிக்கும் எளிய வழிமுறைகள்

1.  யாரிடமும் எந்த பொருளையும் இலவசமாக பெறக் கூடாது. ஒரு ரூபாய் பெற்றாலும் அதைவிட பல மடங்கு திருப்பி செலுத்தக்கூடிய சூழ்நிலையை பிரபஞ்சம் கொடுக்கும்.

2.  உடுத்தும் ஆடையில் வாசனை திரவியங்களை பயன்படுத்துவது சுக்கிர கடாட்சத்தை அதிகப்படுத்தும்.

3. அன்றாடப் பணிக்குச் செல்லும்முன்பு பசுவிற்கு ஆறு மஞ்சள் வாழைப்பழம் தானம் வழங்கிவிட்டு செல்ல தேவைக்கு மீறிய பண வரவு கிடைக்கும்.

4. சிறிய வெள்ளி துண்டு வாங்கி சங்கடஹர சதுர்த்தியன்று நடக்கும் ஹோமங்களில் அதை சேர்ப்பிக்க வறுமை ஏற்படாது.

5. பௌர்ணமியன்று ஒரு வெள்ளி நாணயம் வாங்கி அதை பணப் பெட்டியில் வைத்தால் எப்பொழுதும் பணத்தட்டுப்பாடு இருக்காது.

6. கண் சிகிச்சை செய்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்பொழுது எவ்வளவு கடன் இருந்தாலும் எளிதில் தீரும்.

7. மீன்களுக்கு இரையிடுவதால் உணவுக்கு பஞ்சம் இருக்காது.

8. ஆணும் பெண்ணும் தவறான நட்பில் ஈடுபட்டால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.

9. மழை பொழியும்போது அது தரையில் விழும்முன்பு ஒரு பாத்திரத்தில் சேகரித்து வீட்டில் தெளித்துவர தீய சக்திகள் அகன்று பண வரவு அதிகரிக்கும். 

10. தினமும் ராகு காலத்தில் வீட்டின் தென்மேற்கு பகுதியில் இலுப்பை எண்ணெயால் தீபமேற்றி மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் கேட்க வெகு விரைவில் கடன் சுமை குறைய துவங்கும்.

11. கிழிந்த ஆடைகள் அதிகம் பயன் படுத்துவது தரித்திரத்தை அதிகரிக்கும்.

12. தினமும் லலிதா சஹஸ்ரநாமம் கனக தாரா ஸ்தோத்திரம் கேட்பதால் வருமானம் பெருகும்.

13. வீட்டின்முன்பு மஞ்சள்  நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை, மங்களத்தை அதிகரிக்கும்.

14. பிச்சை கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் தர்மம் செய்யவேண்டும்.

15. நம்மிடம் உழைத்த கூலியை உடனே கொடுக்கவேண்டும்.

16. பசியால் வாடுபவர்கள்முன்பு சாப்பிடக்கூடாது.

17. பணப் பெட்டியில் தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க பணவரவு பெருகும்.

18. பாதயாத்திரை செல்பவர்களுக்கு பாதபூஜை செய்துவர தாராளமான பொருள் சேர்க்கை உண்டாகும்.

19. சுமங்கலி பெண்கள் அடிக்கடி தாலியை கழட்டக் கூடாது.

20. பஞ்சமி திதியில் ஐந்து விதமான எண்ணெய்களால் ஐந்து தீபமேற்றி வாராஹி அம்மனை வழிபட சுய ஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். ஐந்து எண்ணெயும் ஒன்றாகக் கலக்காமல் தனித் தனியாக தீபமிடவேண்டும்.    

செல்: 98652 20406

bala151125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe