ரு காலத்தில் காற்றை சுவாசித்து வாழ்ந்த மனிதர்கள் தற்போது பணத்தை சுவாசித்து வாழத் தொடங்கிவிட்டார்கள். மனிதர்கள் சுவாசிக்க காற்று தேவையில்லை பணம் இருந்தால் போதும் என்ற சூழ்நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது.

Advertisment

ஹ்ர்ன்ற்ன்க்ஷங் மற்றும் தகவல் தொடர்பு மீடியாக்களில் வரும் அனைத்து வீடியோக்களிலும் வீட்டில் இந்த பொருளை வைத்திருந்தால் பணம் வரும், இந்த நம்பரை எழுதி னால்  பணம் வரும் என்ற பதிவுகளே அதிகமாக வெளி வருகிறது. அந்த வீடியோக்களை வெளியிடும் நபர்கள் அந்த நம்பர்களை எழுதி கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கலாமே. ஏன் அவர்கள் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்க முயலவேண்டும்.

Advertisment

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரின் பூர்வ புண்ணிய  பலத்திற்கு ஏற்பத்தான் பணம் வரும். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் விதி பயனுக்கு மீறிய பலன் யாருக்கும் நடக்கப்போவது இல்லை.எனினும் பொருளாதார தேவை அனைவருக்கும் மிகுதியாக இருக்கும்.  எனதுஆய்வின் மூலம் கண்டுபிடித்து என் வழிமுறைகளை இங்கு கூறியிருக் கிறேன்.

ஒருவர் ஜாதகத்தில் பணம் வரக்கூடிய அமைப்புகளை பார்க்கலாம்.

ஒரு ஜாதகத்தில் பணபர ஸ்தானம் என்பது 2, 5, 8, 11-ஆம் பாவகங்கள்.

2, 5, 8, 11-ஆம் அதிபதிகள் சர ராசியில் நின்றால் தடையில்லாத பண வரவு இருக்கும்.

Advertisment

2, 5, 8, 11-ஆம் அதிபதிகள் ஸ்திர ராசியில் நின்றால் மாத வருமானம் அல்லது வருட வருமானமாக இருக்கும்.

2, 5, 8, 11-ஆம் அதிபதிகள் உபய ராசியில் நின்றால் வரக்கூடிய வருமானம் நிலையற்றதாக இருக்கும்.

2, 5, 8, 11-ஆம் பாவக அதிபதிகளின் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகம் நின்றால் ஜாதகருக்கு பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

2, 5, 8, 11-ஆம் பாவகத்தை ஏதாவது ஒரு கிரகம் பார்த்தால் நின்றாலும் தேவைக்கு பணம் வரும்.

2, 5, 8, 11-ஆம் பாவக அதிபதிகள் யோகியின் நட்சத்திரத்தில் இருந்தால் சிறப்பான பொருளாதாரம் உண்டு.

2, 5, 8, 11-ஆம் அதிபதி கள் ஆட்சி உச்சம் பெற்றாலும் நல்ல வருமானம் வாய்ப்புகள் உண்டாகும்.

2, 5, 8, 11-ஆமிடத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற கிரகம் நின்றாலும் தாராள மான தனவரவு இருக்கும்.

லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் நீச்ச கிரகங்கள் பாவிகள் இருந்தால் சுமாரான பலன் உண்டு.

லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ராகு கேதுக்கள் நின்றாலும் வேறு ஏதேனும் வக்கிர கிரகங்கள் நின்றாலும் ஜாதகரின் 25 சதவிகித தேவைகள் நிறைவேறும்.

கிரகச் சேர்க்கையை பொருத்தவரைகுரு+சுக்கிரன், குரு+சந்திரன், சனி+ சுக்கிரன், சனி+குரு சேர்க்கை இருந்தாலும் ஜாதகருக்கு பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

அதேபோல் ஒரு ஜாதகத்தில், குருவும் சந்திரனும், சுக்கிரனும் சுபத்துவ நிலையில் இருந்தாலும் ஜாதகருக்கு பணம் உபரியாக புழங்கும்.

ஒருவருக்கு சுய ஜாதக ரீதியான பணம் வரக்கூடிய அமைப்பு இல்லை என்றாலும் கோட்சார கிரகங்கள் பணவரவை ஏற்படுத்தி தரும்.

ஒரு கேந்திராதிபதியும் ஒரு திரி கோணாதிபதியும் சேர்ந்து 2, 11-ஆம் பாவ கங்களில் சம்பந்தம் பெற்றால் அதன் தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு பணம்வரும். இதில் 11-ஆமிடம் பாதகஸ்தானமாக இருந் தால் தேவைக்கு பணம் இருந்தாலும் ஜாதக ரால் அதை பயன்படுத்த முடிவதில்லை.

9-ல் குரு 11-ல் சுக்கிரன் தனவானாக இருப்பான்.

9-ல் சந்திரன் குரு சுக்கிரன் பணம் நிறைய சம்பாதிப்பார். இதற்குப் பாவ கிரக சம்பந்தம் இருக்கக்கூடாது.

7-ஆம் ராசியில் சந்திரனும் செவ்வாயும் இருந்து 7-ஆம் அதிபதி பலம்பெற்று ஆட்சி, உச்சம். மூலத்திரிகோணம் தன் வீட்டை பார்த்தால் மனைவி மூலம் பணம் வரும்.

தனாதிபதி 11-ல் நின்றால் எப்பொழுதும் பணம் சம்பாதித்து கொண்டே இருப்பான். பணப்புழக்கம் இருந்து லக்னம் சுபர்கள் வீடாக நின்று அதில் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் நின்றால் கோடீஸ்வர யோகம் உண்டு.

இந்து லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் வெள்ளி தட்டில் சாப்பிடுவான். 

குரு இருந்தால் தங்கத் தட்டில் சாப்பிடு வான்.

ஒருவர் எந்த ராசியாக இருந்தாலும் லக்னத்திற்கும் தனஸ்தானத்திற்கும் முன்பின் ராசிகளில் சுப கிரகங்கள் இருந்தால் வாழ்நாள் முழுவதும் உபரி லாபம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

ராசிகளை ஒற்றைப்படை ராசி. இரட் டைப்படை ராசி என இரண்டாக பிரிக்கலாம். ஒற்றைப்படை ராசிகள் எல்லாம் உயிர் காரகத்துவ ரீதியான வளர்ச்சியை, வெற்றியை கூறும் பாவகம். இரட்டைப் படை ராசிகள் எல்லாம் பொருள் காரத்துவரீதியான பலனை வழங்கும் பாவகங்கள்.

உயிர் காரகத்துவ ரீதியான உறவுகளின் அன்பைப்பெற பணம் மிக அவசியம். பணம் சம்பாதிக்க உட-ல் உயிர்வேண்டும். ஆக மனிதன் ஜீவிக்க உயிர், பொருள் இரண்டும் வேண்டும். 

வறுமையில் வாடும் ஜாதகத்திற்கான கிரக அமைப்புகளை வரும் இதழில் பார்க்கலாம்.

செல்: 98652 20406