சென்ற இதழ் தொடர்ச்சி...
ஐந்தாம் அதிபதி ஆறில் இருந்தால் ஜாதகர் பூர்வீகத்தைவிட்டு வெகு தொலைவில் இருப்பார். முக்கிய விழா காலங்கள், பண்டிகை காலங்களில் மட்டும் பூர்வீகத்திற்கு வந்து செல்வார்கள். பூர்வீகத்தில் வாழவேண்டும் என்ற சிந்தனைகள் மிகைப்படுத்தலாக இருக்கும். குலதெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்புவார்கள்.
சிலர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குலதெய்வத் திற்கு வைத்த பணத்தை எடுத்து குடும்பத்திற்கு செலவு செய்வார்கள். அல்லது தங்களின் வாழ்வாதாரத்திற்கு பொருந்தாத, வருமானத்திற்கு பொருந்தாத தங்களால் நிறைவேற்ற முடியாத ஒரு வேண்டுதலை தெய்வப் பிரார்த்தனையாக வைப்பார்கள். தெய்வ குற்றம் மிகுதியாக இருக்கும்.
எதையும் உணர்வுபூர்வமாக யோசிப்பார்கள். ஆக்கபூர்வமாக யோசிக்க மாட்டார்கள். சமயோசித புத்தி குறைவாக இருக்கும். தங்கள் மேல் உள்ள குறை குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பார்கள். பூர்வீக சொத்தை காப்பாற்ற கடன் படுவார்கள். அல்லது பூர்வீகச் சொத்தை விற்று பிள்ளைகளுக்கு செலவு செய்வார்கள். சிலர் நோய்க்கு வைத்தியம் பார்ப்பதற்காக பூர்வீக சொத்தை விற்பார்கள். இவர்களின் பூர்வீக சொத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கும். அல்லது அடமானத்திற்கு வைத்த பூர்வீக சொத்தை பல வருடமாக மீட்க முடியாமல் இருப்பார்கள். பல தலைமுறையாக பாகம் பிரிக்கப்படாத பூர்வீகச் சொத்துகள் இருக்கும். பெற்ற பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டு. அதிர்ஷ்டம் அற்றவர்கள். காதலுக்காக கடன்படுவார்கள். காதலன்- காதலியே எதிரியாக, நம்பிக்கை துரோகியாக மாறுவார்கள்.
ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால்வெற்றி, செல்வம் இரண்டிற்கும் இவர்களே அதிபதிகள். குறைந்தது இரண்டு முறை காதல் வரும். நம்பிக்கையானவர்கள் மேல் மட்டுமே காதல் வரும். காதல் நினைவுகள் பல வருடங்களுக்கு ஆறாத வடுவாக மனதில் இருக்கும்.
தனிமையில் காதலை நினைத்து மனம் வருந்துவார்கள். இரண்டாவது காதல் நிச்சயம் வெற்றியைத் தரும்.
தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். ஈருடலும் ஓர் உயிருமாக வாழ்வார்கள். வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் காதலர்களாகவே வாழ்வார்கள். தம்பதிகள் விட்டுக்கொடுத்து வாழ்வதில் ஆர்வம் அதிகம். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் வயது வித்தியாசம் இருக்கும். இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும்.
மனைவி வந்தபிறகு அதிர்ஷ்டம் கூடும். திருமணத்திற்கு நல்ல வரதட்சணை கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்வார்கள். பல தொழில் ஞானம் உண்டு. இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு பூர்வீகத்தைவிட்டு வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வெளியேறுவார்கள். தெய்வ அனுக்கிரகம் நிறைந்த குழந்தைகள் பிறப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகவே வாழ்வார்கள். அதேபோல் எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் உதவிபெற்று வாழ்வதை விரும்ப மாட்டார்கள். யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டார்கள். தனது வாழ்க்கை கொடுக்கும் இடத்தில் இருக்கவேண்டும் பெறும் இடத்தில் இருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். தொழில் லாபத்தில் தெய்வத்திற்கு பங்கு கொடுப்பார்கள்.
நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். தொழில் கூட்டாளிகள் வாழ்க்கை துணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்வார்கள்.
ஐந்தாம் அதிபதி எட்டில் இருந்தால் குலதெய்வம் பூர்வீகம் தெரியாது. குலதெய்வ குற்றம் குலதெய்வ கோபம் நிறைந்த அமைப்பாகும். பெரும்பான்மையாக வெளியூர், வெளிநாட்டில் வாழக்கூடிய அமைப்புள்ளது. வாழ்க்கையில் பெரும் பகுதியை, பூர்வீகத்தையும் குலதெய்வத்தையும் கண்டுபிடிக்க செலவு செய்கிறார்கள். அல்லது தங்களது குல தெய்வமாக முருகன், பெருமாளை கும்பிடுபவர்களாக இருப்பார்கள். அதாவது முருகனும் பெரும் பாலும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் விருப்ப தெய்வம், இஷ்ட தெய்வம் என்பதை உணராமல் அதுவே தங்களது குலதெய்வம் என்று நம்பி வாழ்வார்கள். புத்திர சோகம் உண்டு. குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்கள். கடுமையான பிரார்த்தனைக்குபிறகு அதிக மன உளைச்சலுக்குப் பிறகு சிலருக்கு இயல்பாகவே குழந்தை பிறக்கும். அல்லது பெற்ற பிள்ளைகளால் பெற்றோருக்கு தீராத மன பாரம் இருக்கும். அல்லது ஆயுள், ஆரோக்கியப் பாதிப்பு நிறைந்த குழந்தைகள் பிறக்கும். இனம், மொழி, மதம் கடந்த காதல் உண்டு. காதலால் வம்பு, வழக்கு, அவமானம் வந்துசேரும். சிலர் காதலுக்காக தங்களையே இழப்பார்கள். அல்லது காதல் திருமணம் செய்துகொண்டபிறகு கருத்து வேறுபாட்டால் பிரிவினை உண்டாக்கும். எட்டாம் அதிபதி ஆட்சி, உச்சம்பெற்றால் இவர்களுக்கு விபரீத ராஜயோகமான பலன்கள் நடக்கும். பங்குச் சந்தை லாபம் அதிர்ஷ்ட சொத்து பிள்ளை இல்லா சொத்து அதிர்ஷ்ட லாபம் போன்றவைகள் கிடைக்கும்.
ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்பல மடங்கு புண்ணிய பலம் மிகுந்த ஜாதகம். விதிக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள். நாணயம் நம்பிக்கை நன்னடத்தை நிறைந்தவர்கள்.நீதி நேர்மை நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.நிதித்துறை நீதித்துறையில் வல்லுனராக இருப்பார்கள். நியாயத்தீர்ப்பு வழங்கு பவர்கள்.சாஸ்திரங்கள் கற்றவர்கள். தான் வாழப் பிறரை கெடுக்காதவர்கள். தன்னடக்கம் தைரியம் நிறைந்த குழந்தைகளை பெறுவார்கள். அதிர்ஷ்டம் மற்றும் யோகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தான தர்மங்கள் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியமற்றவர்கள் குலதெய்வ கோவில் நிர்வாகிகள் அல்லது வேறு ஏதேனும் பொதுக் கோவிலில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பார்கள்.பூர்வீகம் குலதெய்வம் அறிந்தவர்கள். சிலர் 5,9 சம்பந்தம் பூர்வீகத்தில் வாழ்வார்கள் என்று கூறுவார்கள். எனது ஆய்வில் 5 9 சம்பந்தம் உள்ளவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக வெüயூர் வெü மாநிலம் வெüநாடு சென்று விடுகிறார்கள். பிழைப்பிற்காக பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவிற்கு செல்வார்கள். நூற்றுக்கு மேற்பட்ட ஜாதக ஆய்வில் இது நான் கண்ட உண்மை 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் பூர்வீகத்திலேயே வாழ்ந்தார்கள். அவர்களுக்கு துணையாக வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் இருப்பார்கள். கணவன்மார்கள் தொழில் உத்தியோகத்திற்காக வெüயூர் சென்று விடுவார்கள். வருடத்திற்கு சில நாட்களோ, மாதத்திற்கு சில நாட்களோ சொந்த ஊருக்கு ஆண்கள் வருவார்கள். அதனால் நாங்கள் பூர்வீகத்திலேயே வசிக்கிறோம் என்று பெருமையாக சொல்லி வந்தார்கள்.
தற்போது ஆண் பெண் இருவரும் சம்பாதித்து குடும்பம் நடத்துவதால் தொழில் உத்தியோகம் நிமித்தமாக குடும்பத்துடன் வெüநாட்டில் வெüயூரிலேயே இருக்கிறார்கள் விதிகளை காலத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றி பலன் கூற வேண்டும்.
5, 9 சம்பந்தம் எத்தனை பிறவி எடுத்தாலும் ஒரே கணவன், மனைவியே தம்பதிகளாக பிறப்பார்கள். ஆதர்ஷன தம்பதிகளாக வாழ்வார்கள்.
ஐந்தாம் அதிபதிக்கும் பத்தாம் அதிபதிக்கும் சம்பந்தம் இருந்தால் அவர்களுக்கு அரசியல், அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஆதாயம் உண்டு. ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்க 5, 10 சம்பந்தம் நிச்சயம் இருக்க வேண்டும். ஒரு கேந்திராதிபதி மற்றும் திரிகோணாதிபதி சேர்க்கை. பிறரை அடக்கியாளும் எண்ணம் உள்ளவர்.
எதையும் பிரம்மாண்டமாக திட்ட மிடுவார்கள். பேராசை அதிகம் இருக்கும். லௌகீக உலகிலுள்ள அனைத்து இன்பங் களையும் அடைய ஆசைப்படுவார்கள். வெற்றி வீரர். லட்சியவாதிகள். முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம். சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றியடைவர். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் ஒரு சர்வாதிகாரியை போல் செயல்படுவார்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும். ஸ்திரமான சுகவாழ்வு வாழ்வார்கள். அடக்கம், அன்பு செலுத்துதல், புகழ் விரும்பாமை, பேராசையற்ற மனப் போக்கு ஆகிய குணங்கள் காணப்படும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு பூர்வீகத்திலும் தொழில், உத்தியோகத்திற்காக வாழும் இடத்திலும் சொந்த வீடு இருக்கும். சிலர் பரம்பரையாக அரசியலில் இருப்பார்கள். குடும்பத்தில் ஒரு கர்ம காரியம் நடந்தபிறகு குழந்தை பிறக்கும். இந்த அமைப்பு இருப்பவர்கள் சிலர் குழந்தைகளுக்கே கர்மம் செய்யவேண்டிய சூழ்நிலையும் உண்டு.
சிலர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்பவர்கள். குழந்தை பிறந்தபிறகு பண வரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. கௌரவமான தொழில் உண்டு. சிலருக்கு 50 வயதுக்குமேல் திடீர் தனலாபம், ஆயுள் அதிகமாகும். ஐந்தாம் அதிபதிக்கு 11-ஆம் அதிபதி சம்பந்தம் இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டமான அமைப்பாகும். 5, 11 இவை இரண்டும் பரபரஸ்தானங்கள். ஒரு திரிகோணாதிபதி லாப ஸ்தான அதிபதியுடன் சம்பந்தம் பெறுவதால் தொட்டது துலங்கும். எதிலும் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்படுவார்கள். அதிர்ஷ்டமும் பேரதிர்ஷடமும் ஒருங்கே இணையப் பெற்றவர்கள். ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் வந்து கொண்டே இருக்கும். நல்ல அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித கர்வம், ஈர்ப்புச் சத்தி உண்டு.
மற்றவர்களை நம்புவதைக் காட்டிலும் தன் கையே தனக்கு உதவும் என்ற எண்ணம் உண்டு. சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மிதமிஞ்சிய புத்திசாலி. கல்வி, தேர்வில் புலமை, பிரசித்திபெற்ற ஆசிரியர். சிலர் மதபோதகர்களாகவும் செயல்படுவார்கள். உயர் ஆராய்ச்சி கல்வி படிக்க 5, 11 சம்பந்தம் வேண்டும். பெரும்பாலும் பூர்வீக குலத் தொழிலை மட்டுமே செய்ய விரும்புவார்கள். எதிர்பாராத திடீர் திருப்பம் உண்டு.
ஜாதகருக்கு முயற்சியால் வளமான வாழ்வு நிச்சயம். எந்தவிதமான லாபம் வந்தாலும் அதனை சேமித்து வைத்துக்கொள் வார்கள். சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். காதல் திருமணம் அல்லது நெருங்கிய ரத்தபந்த உறவில் திருமணம் நடக்கும். திருமண விஷயத்தில் அவசரப்படக் கூடியவர்.
பெரும்பாலும் காதல் திருமணம் செய்து பிரச்சினையில் உழல்பவர்கள்ஏழாம் பாவகம் வலிமை குறைந்து 11-ஆம் பாவகம் வலுத்தால் நிச்சயமாக மறு விவாகம் உண்டு. அல்லது இரு மனைவியுடன் வாழ்வார்கள். முதல் குழந்தை பிறந்தபிறகு மறு திருமணத்தில் நாட்டம் உருவாகும்.
இவர்களுடைய குலதெய்வம் இரண்டு மனைவியுடைய தெய்வமாக இருக்கும். தர்ம காரியங்கள், புண்ணிய காரியங்கள் செய்ய விரும்புவார்கள். சிலர் வெளிப்படையாக எதிலும் ஈடுபடாமல் மறைமுகமாக ஸ்பான்சராக செயல்படுவார்கள்.
ஐந்தாம் அதிபதி 12-ல் இருப்பது நல்ல கிரக சம்பந்தம் அல்ல. காலம் தாழ்ந்த புத்திர பாக்கியம் உண்டு. பிள்ளைகளுக்காக தங்களை மிகவும் வருத்திக்கொள்வார்கள். தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்பதற்காக சக்திக்கு மீறி செலவு செய்வார்கள்.
பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துவிட்டு பிற்காலத்தில் வருந்து வார்கள். பிள்ளைகளால் நிச்சயமாக மன உளைச்சல் இருக்கும்.
சில குடும்பங்களில் பெற்றோர்களும் பிள்ளைகளும் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும். அல்லது சில பிள்ளைகள் பிறந்தது முதல் உறவினர்களின் வீடுகளில் வளருவார் கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விடுதியில் தங்கி படிப்பார்கள்.இவர்களுக்கு பூர்வீகம் குலதெய்வம் தெரியாது. குலதெய்வ குற்றம் நிரம்பியவர்கள். குலதெய்வ சாபம் உண்டு. தங்களது பூர்வீகம் எந்த இடத்தில் இருந்து தொடங்கியது என்று இவர்களுக்கு தெரியாது. இவர்களின் தங்களுடைய குலம் கோத்திரம் பற்றிய தகவல்களை எளிதில் அறிய முடியாது.
எல்லாத் துறையிலும் வேகம் மற்றும் விவேகத்துடன் செயலாற்றுவார்கள்.
இவர்கள் உழைப்பில் சுயநலம் இருக்காது. ஊருக்காக உழைக்கும் உத்தமர்கள். அதிர்ஷ்ட தேவதை இவர்கள் அருகில் இருந்தாலும் இவர்களால் அதை எளிதில் உணரமுடியாது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவந்தாலும் அதை பயன்படுத்தக்கூடிய மனப்பக்குவம் இருக்காது.
அதிகமாக உடல் உழைப்பு நிறைந்தவர்கள்.
உடலால் கடினமாக உழைப்பவர்களால் அதிகம் சம்பாதிக்க முடியாது. புத்தியை தீட்டுபவர்களால் மட்டுமே அதிகம் சம்பாதிக்க முடியும். தன்னால் யாரெல்லாம் நன்மை அடைந்தார்கள் என்று ஒரு பெரிய பட்டியல் வைத்திருப்பார்கள். நல்லவர்களையும், கெட்டவர்களையும் எளிதில் இனம் காணத் தெரியாது. சுயமாக சிந்திக்கும் திறன் இருக்காது. காதல் இவர்களுக்கு செட்டாகாது அல்லது காதலிக்கத் தெரியாது.
இனி அடுத்த வாரம் வேறு ஒரு புதிய தலைப்பில் உங்களைச் சந்திக்கிறேன்.