சந்தான ம்ருத் யோகம்
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில் சூரியன், ராகு, சனி அல்லது கேது இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களின் குழந்தை, பிறந்தவுடன் இறந்துவிடும். சிலருக்கு கர்ப்பப்பையில் இருக்கும்போதே இறந்துவிடும்.
மகாசாகர் யோகம்
ஒரு ஜாதகத்தில் 4-ஆம் பாவம், 7-ஆம் பாவம், 10-ஆம் பாவம் ஆகியவற்றில் புதன், குரு, சுக்கிரன், சந்திரன் இருந்தால், அதே ஜாதகத்தில் செவ்வாய் 6-ஆம் பாவத்தில், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்கு எலும்புருக்கி நோய் இருக்கும்.
பயாக்ரிதி யோகம்
ஒரு ஜாதகத்தில் 8-ஆம் பாவத்தில் புதன், சுக்கிரனுடன் சனி, செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்கு குழந்தை இருக்காது. பண வசதி இருக்காது. வறுமை நிறைந்த வாழ்க்கையை வாழ்வார்கள்.
மகிஷாகிரிதி யோகம்
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், கேது 10-ஆம் பாவத்தில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவரின் அண்ணனுக்கு குழந்தை இருக்காது. அண்ணனுக்கு அடிக்கடி நோய் வரும்.
மாத்ரகாத்திக் யோகம்
ஒரு ஜாதகத் தில் லக்னத்தில் குரு, 2-ஆம் பாவத்தில் சனி, 3-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவரின் தாய் சீக்கிரமே மரணமடைந்து விடுவார்.
தாரித்ர யோகம்
ஒரு ஜாதகத்தில் நான்கு கேந்திர ஸ்தானங்களிலும் பாவ கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்கு எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும்.
விகாத் யோகம்
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் அல்லது 11-ஆம் பாவத்தில் சனி இருந்தால், 6-ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பெற்றோரை இழந்துவிடுவார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/yogam-2026-01-22-12-43-38.jpg)