திருத்தம்
சென்ற வார உதாரண ஜாதகத்தில் ஜாதகியின் ஜென்ம ராசி கும்பம் என்று திருத்தம் செய்து படிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.
திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் பல வருடங்கள் தம்பதிகளாக வாழும் எண்ணத்துடனே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒருவரின் எண்ணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்க லாம். ஆனால் அவர்களின் விதி கொடுப்பினை அவர்களை சேர்ந்துவாழ விட வேண்டும். திருமண வாழ்க்கையில் மிகக் கொடூர மான அமைப்பாக நான் கருதுவது 7, 12 சம்பந்தமாகும். அதாவது-
7-ஆம் அதிபதி 12-ல் இருப்பது அல்லது 12-ஆம் அதிபதி 7-ல் இருப்பது. 7-ஆம் அதிபதி 12-ஆம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் இருப்பது அல்லது 12-ஆம் அதிபதி 7-ஆம் நட்சத்திர சாரத்தில் நிற்பது.
7, 12-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது. 2-ஆம் அதிபதி 12-ல் அல்லது 12-ஆம் அதிபதி 2-ல் இதுபோன்ற கிரக சம்பந்தம் இருப்பவர்கள் திருமண வாழ்க்கையில் வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள். 2, 12 சம்பந்தத்தைவிட 7, 12 சம்பந்தம் மிக கொடூரமான அமைப்பாகும். என் அனுபவத்தில் 7, 12 சம்பந்தம் இருப்பவர்கள் 2 குழந்தைகள் பிறந்தபிறகு பிரிந்து வாழ்கிறார்கள். கஷ்டமோ- நஷ்டமோ சேர்ந்து வாழவேண்டும். அல்லது விட்டு பிரிந்து வாழவேண்டும். ஆனால் தானும் வாழ்வதில்லை.
வாழ்க்கைத் துணையையும் வாழ விடுவதில்லை. 7, 12 சம்பந்தம் உள்ள ஜாதகங்களையும் சனி செவ்வாய் சம்பந்தமுள்ள ஜாதகங்களை யும் நான் பொருத்தம் போடுவதில்லை.
அதே போல் 3, 12-ஆம் அதிபதி தசா புக்தி நடப்பில் இருந்தாலும் அந்த ஜாதகங்களைப் பொருத்தம் செய்வதில்லை. ஒருவர் திருமண வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்தால் பொருத்தம் செய்துகொடுத்த ஜோதிடருக்கு தங்க பதக்கம் வழங்கப் போவதில்லை. அதே போல் தம்பதிகள் திருமண வாழ்க்கையில் பிரிந்தால் அதற்கு ஜாதகமும் ஜாதகரும் காரணமல்ல, ஜோதிடமே காரணம
திருத்தம்
சென்ற வார உதாரண ஜாதகத்தில் ஜாதகியின் ஜென்ம ராசி கும்பம் என்று திருத்தம் செய்து படிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.
திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் பல வருடங்கள் தம்பதிகளாக வாழும் எண்ணத்துடனே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒருவரின் எண்ணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்க லாம். ஆனால் அவர்களின் விதி கொடுப்பினை அவர்களை சேர்ந்துவாழ விட வேண்டும். திருமண வாழ்க்கையில் மிகக் கொடூர மான அமைப்பாக நான் கருதுவது 7, 12 சம்பந்தமாகும். அதாவது-
7-ஆம் அதிபதி 12-ல் இருப்பது அல்லது 12-ஆம் அதிபதி 7-ல் இருப்பது. 7-ஆம் அதிபதி 12-ஆம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் இருப்பது அல்லது 12-ஆம் அதிபதி 7-ஆம் நட்சத்திர சாரத்தில் நிற்பது.
7, 12-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது. 2-ஆம் அதிபதி 12-ல் அல்லது 12-ஆம் அதிபதி 2-ல் இதுபோன்ற கிரக சம்பந்தம் இருப்பவர்கள் திருமண வாழ்க்கையில் வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள். 2, 12 சம்பந்தத்தைவிட 7, 12 சம்பந்தம் மிக கொடூரமான அமைப்பாகும். என் அனுபவத்தில் 7, 12 சம்பந்தம் இருப்பவர்கள் 2 குழந்தைகள் பிறந்தபிறகு பிரிந்து வாழ்கிறார்கள். கஷ்டமோ- நஷ்டமோ சேர்ந்து வாழவேண்டும். அல்லது விட்டு பிரிந்து வாழவேண்டும். ஆனால் தானும் வாழ்வதில்லை.
வாழ்க்கைத் துணையையும் வாழ விடுவதில்லை. 7, 12 சம்பந்தம் உள்ள ஜாதகங்களையும் சனி செவ்வாய் சம்பந்தமுள்ள ஜாதகங்களை யும் நான் பொருத்தம் போடுவதில்லை.
அதே போல் 3, 12-ஆம் அதிபதி தசா புக்தி நடப்பில் இருந்தாலும் அந்த ஜாதகங்களைப் பொருத்தம் செய்வதில்லை. ஒருவர் திருமண வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்தால் பொருத்தம் செய்துகொடுத்த ஜோதிடருக்கு தங்க பதக்கம் வழங்கப் போவதில்லை. அதே போல் தம்பதிகள் திருமண வாழ்க்கையில் பிரிந்தால் அதற்கு ஜாதகமும் ஜாதகரும் காரணமல்ல, ஜோதிடமே காரணம் என்று மன நிலைக்கு பெற்றோர்கள் வந்துவிடுகிறார்கள். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்வது மிக எளிது. ஆனால் பொருத்தம் போடுவது மிக கடினம். நான் சில கிரக சம்பந்தங்கள் இருந்தால் சில பாவக சம்பந்தங்கள் இருந்தால் சில தசாபுக்திகள் நடந்தால் பொருத்தம் செய்வதில்லை. திருமணப் பொருத்தத்தை பொறுத்தவரை கட்டப் பொருத்தம் மட்டுமே நல்ல ஒரு தீர்வாகும். ஆனால் ஒரு நட்சத்திரப் பொருத்தத்திற்கு இரண்டு பிறந்த தேதி, நேரம் மட்டுமே தேவை. தற்போது ஆன்லைன் மூலமாகவே திருமணப் பொருத்தத்தை அறிந்துகொள்ள முடியும். தகவல் தொடர்பு சாதனங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதனுக்கு அது ஈடாகாது. அதற்கு 1+1=2 என்று மட்டுமே கூறத்தெரியும். ஆனால் திறம் பெற்ற ஒரு ஜோதிடர் திருமணப் பொருத்தத்திற்கு தனக்கென்று ஒரு விதியை நிர்ணயிப்பது மிக கடினம்.
அனுபவமே சிறந்த ஆசானாகும்.
ஜோதிட விதிகள் மாறாது. ஆனால் அனுபவத்தில் அந்த விதிக்குள் ஆயிரம் கருத்துக்கள் இருக்கும். அந்தக் கருத்துக்களை உணர்ந்து ஜாதகருக்கு பலன் கூறுவதே சிறப்பானதாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான அனுபவக் கருத்தை உணர்த்துவது தான் ஜோதிடம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு ஒருவருக்கு திருமணப் பொருத்தத்தில் இந்த இரண்டு ஜாதகங்களும் பொருந்தும். ஆனால் ஜாதகரின் சம்மதத்தை திருமணத்திற்குமுன்பு கேட்க வேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.
பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு ஜாதகரை சம்மதிக்க வைத்துள்ளார்கள். மூன்று மாதங்களுக்குமேல் அந்தப் பையன் திருமண பந்தத்தில் வாழவில்லை.
பெற்றோர்கள் ஜாதத்துடன் என்னை சந்தித்தார்கள். திருமண பொருத்தத்திற்கு கீழ் நான் எழுதிய வாசகத்தை கவனிக்க வில்லை.
அந்த வாசகத்தை அன்று நான் எழுதாமல் இருந்தால் தம்பதிகளின் பிரிவினைக்கு நான் என்ன பதில் சொல்லமுடியும். சமீபகாலமாக நான் ஜோதிடத்தை சுவாசிக்க தொடங்கிவிட்டேன். ஜோதிடம் என்னை ஆட்கொண்டு விட்டது. இன்று ரிட்டயர்மென்ட் இல்லாத தொழில் என்று பலர் ஜோதிடத்தை கற்றுக்கொள்ள முன்வருகிறார்கள். ஒரு ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் சொல்லத் தெரியாதவர்கள் ஜோதிடர் என்ற போர்வையில் வாழ்ந்துவருகிறார்கள்.
ஆனால் இது ஒருவரின் தலை விதியை நிர்ணயிக்கும் தொழில் என்பதால் பலன் சொல்ல பல வருட அனுபவம் தேவை. குறைந்தது 12 ஆண்டுகள் ஜோதிடத்திற்குள் வாழ்ந்தால் மட்டுமே அதை தனது சுவாசமாக மாற்றிக்கொள்ள முடியும்.
இந்தக் கட்டுரையின் முகப்பில் நான் ஒரு தம்பதியர்களின் அன்யோன்யம் பற்றி எழுதியிருந்தேன். அந்த தம்பதிகளின் ஜாதகத்தை இங்கே பதிவுசெய்து இருக்கிறேன். ஒரு ஜாதகத்தில் 7, 12 சம்பந்தம் இருந்தால் கணவனும் மனைவியும் தமது தாயுடன் வாழ்கிறார்கள். அல்லது தனிமையில் வாழ்கிறார்கள்.
கணவனும் மனைவியும் ஆளுக்கு ஒரு நாட்டில் வாழ்கிறார்கள். ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் பல வருடங்களாக பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். பல வருடங் களாக விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் ஜாதக அமைப்பாகும்.
ஆண் ஜாதகம்
29-9-1989, 10.30 ஹம், சேலம்
ஜென்ம லக்னம்: விருச்சிகம்
ஜென்ம ராசி: கன்னி
ஜென்ம நட்சத்திரம்: உத்திரம்
நடப்பு தசா: ராகு 23-2-2027 வரை
நடப்பு புக்தி: சந்திரன் 5-2-2026 வரை
லக்னாதிபதி செவ்வாய்க்கு ஏழாம் அதிபதி சுக்கிரனுக்கும் சம்பந்தமில்லை. ராகு- கேதுவின் மையப்புள்ளியில் களத்திரகாரகன் சுக்கிரன் மாந்தியுடன் நெருங்கிய பாகையில் உள்ளார். ஏழாம் அதிபதி சுக்கிரன் 12-ல் நிற்கிறார்.
லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்க தோஷ பாதிப்பில் உள்ளது.
இரண்டாம் இடமான குடும்பஸ்தானத் திற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருக்கிறது.
பெண் ஜாதகம்
23-5-1994, 7.10 ஹம், சேலம்
ஜென்ம லக்னம்: ரிஷபம்
ஜென்ம ராசி: துலாம்
ஜென்ம நட்சத்திரம்: சுவாதி
நடப்பு தசா: சனி, 16-10-2044 வரை
நடப்பு புக்தி: சனி, 19-10-2028 வரை
லக்னாதிபதி சுக்கிரனுக்கும் ஏழாம் அதிபதி செவ்வாய்க்கும் சம்பந்தமில்லை.
ஏழாம் அதிபதி செவ்வாய் 12-ல் கேதுவுடன் நிற்கிறார். செவ்வாய்க்கும் கேதுக்கும் பாக இடைவெளி 24 என்பதால் இதை செவ்வாய் கேது சேர்க்கையாக எடுக்கவேண்டிய அவசியமில்லை.
ரிஷப லக்னத்திற்கு பாதகாதிபதியான சனிபகவானின் தசை நடப்பில் உள்ளது. கோட்சாரத்தில் ராகு தசாநாதன் சனி பகவானை நெருங்கிக் கொண்டிருக் கிறார்.
ஏழாம் அதிபதி சுக்கிரன் இரண்டாம் இடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத் தில் சஞ்சரிக்கிறார்.
பலர் ஏழாம் அதிபதி இரண்டில் குடும்ப ஸ்தானத்தில் நிற்பது சுபம் என்றே கூறுகிறார்கள். அது ஏழாமிடத்திற்கு 8 என்பதால் களத்திர விரோதத்தை ஏற்படுத்தும்.
அதேபோல் குடும்பஸ்தானாதிபதி புதன் லக்னாதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனையில் உள்ளார். நல்ல குடும்பம் அமைந்தும் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாததால் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. லக்னத்தில் நிற்கும் சூரியன் ஜாதகிக்கு ஈகோ வினை ஏற்படுத்தும். தசநாதன் சனி பகவானை அஷ்டமாதிபதி குரு பார்க்கிறார்.
பெண்ணின் ஜாதகத்திலுள்ள செவ்வாய் ஆணின் ஜாதகத்தில் உள்ள சுக்கிரனை பார்வை செய்கிறது. பெண் ஜாதகத்தில் மேஷ ராசியிலுள்ள செவ்வாயை ஆண் ஜாதகத்தில் துலா ராசியில் நிற்கும் சனி பகவான் பார்க்கிறார்.
பெண் ஜாதகத்திலுள்ள சுக்கிரன் மேல் ஆண் ஜாதகத்தில் உள்ள குருபகவான் இருக்கிறார். பெண் ஜாதகத்தில் மிதுன ராசியிலுள்ள சுக்கிரன் மேல் ஆண் ஜாதகத்தில் மிதுன ராசியிலுள்ள குரு பகவான் நிற்கிறார்.
இந்தப் பிணைப்பு தம்பதிகளுக்குள் ஒருவித பிடிப்பை ஏற்படுத்தும். தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களை மனதில் அசைபோட வைக்கும். விவாகரத்து வழக்கு நடந்தாலும் பிரிவினை வராது. இருவருக்கும் பாதகாதிபதி புக்தி நடத்துகிறார்.
விவாகரத்து ஆனாலும் தம்பதிகளுக்குள் "தலைவன்- தலைவி' படம் கதாநாயகன்- கதாநாயகி போன்ற இனக்கவர்ச்சி இருக்கும்.
ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ விரும்ப மாட்டார்கள்.
ஆனால் இருவரும் பெரும்பான்மையாக பிரிந்தே வாழ்வார்கள். சேர்ந்துவாழும் ஆவல் உள்ளது.
பொதுவாக 2-ஆம் அதிபதியைவிட 11-ஆம் அதிபதி வலுத்தால் நிச்சயம் மறு திருமணம் நடக்கும்.
திருமணத்திற்குப்பிறகு 11-ஆம் அதிபதி தசை நடந்தால் மறு விவாகம் நடக்கும்.
11-ஆமிடத்தில் அதிக கிரகங்கள் தொடர்புகொண்டு அந்த கிரகங்களுக்கு ஏழாம் பாவக சம்பந்தம் இருந்தாலும் இருதார யோகம் உண்டாகும்.
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் 3, 5, 7-ஆவது நட்சத்திர மாக இருக்கக்கூடாது. ஆணும் பெண்ணும் ஏக நட்சத்திரமாக இருக்கக் கூடாது. ஆண்- பெண் யோனிகள் பகையாக இருக்கக் கூடாது.
கடந்த மூன்று வாரங்களாக வெளிவந்த இந்த கட்டுரைக்கு வழக்கம் போல் ஆதரவு கொடுத்த அனைத்து வாசக நல் உள்ளங்களுக்கும் நன்றிகள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. இன்னாருக்கு இன்னாரென்று விதிக்கப்பட்டது. இதை விதியே நினைத்தாலும் மாற்றமுடியாது. முதல் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் பெரும் பான்மையாக அடுத்த வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தே வாழவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. திருமண வாழ்க்கையில் ஒருவர் படும் கஷ்டம் ஜாதகரால் மட்டுமே உணரமுடியும். எளிதில் அனுசரித்து வாழுங்கள் என்று கூறும் இலவச ஆலோசனை இன்றைய சமுதாய சூழலுக்கு பொருந்தாது.
ஆனாலும் கஷ்டமோ- நஷ்டமோ இயன்றவரை சேர்ந்துவாழ்வது அவர்களின் குழந்தை களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள உதவும். விதி வ-யது. யாரையும் விட்டு வைக்காது. திருமண வாழ்க்கையில் சிரமத்தை சந்திப்பவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சங்கரன்கோவில் கோமதி அம்மன் சன்னதியிலுள்ள ஸ்ரீ சக்கர தியான பீடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்துவர வேண்டும்.
அனைவரின் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக அமைய பிரபஞ்ச சக்தியிடம் மண்டியிட்டு பிரார்த்திக்கிறேன்.
செல்: 98652 20406
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us