ன்னைப் பொறுத்தவரைக்கும் அனுபவமே சிறந்த ஆசான். உலகம் உருவான காலம்முதல் இன்றுவரை நவகிரகங்களே மனிதர்களை இயக்குகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்குமுன்பு வரை பிரிவினை விவாகரத்து லட்சத்தில் ஒன்று இருந்தது. அதன் விகிதாச்சாரம் தற்போது அதிகமாகி பத்திற்கு ஒரு விவாகரத்து என்ற நிலையில் வந்துவிட்டது. பிள்ளைகளின் விவாகரத்திற்கு பெரும்பான்மையாக பெற்றோர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். பெற்றோர்களின் ஊக்கம் ஊட்டச்சத்தாக இருப்பதால் அடுத்தடுத்த விவாகத்தில் விருப்பம் அதிகரிக்கிறது. பிரச்சினை என்றால் மனிதர்கள் முதலில் கும்பிடும் கடவுளை மாற்றுகிறார்கள். இரண்டாவதாக வாழ்க்கைத் துணையை மாற்றுகிறார்கள். ஜாதகரின் விதியை ஜோதிடர்கள் மாற்றி எழுத வேண்டுமென்று விரும்புகிறார்கள். மாற்றி எழுதித் தராத ஜோதிடரை மாற்றுகிறார்கள்.

Advertisment

தனது தலைவிதியே இதற்கு காரணம் என்று உணர மறுக்கிறார்கள். எத்தனை வருடம் வாழ்ந்தாலும் தாங்கள் மட்டும் மாறுவதில்லை. தங்களுடைய கொள்கைகள் லட்சியங்களில் பிடிவாதமாகவே இருக்கிறார்கள். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை நமது முன்னோர்கள் விட்டுக் கொடுத்தே வாழ்ந்திருக்கிறார்கள். எங்கோ பிறந்து வளர்ந்த இரு நபர்கள் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். ஆண்- பெண் இருவரும் சம்பாதித்து வாழவேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் அவர்கள் வாழ்க்கைத் துணையை புரிந்துகொள்ளக்கூடிய கால அளவும் குறைவாக இருக்கிறது.

Advertisment

 வேலைப்பளுவின் காரணமாக தங்களை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று விரும்பு கிறார்கள். ஜாதகம் பார்க்கவரும் பெற்றோர்கள் இந்த வரன் எனது பிள்ளையை அனுசரித்துச் செல்லுமா என்றே கேட்கிறார்கள்.

தற்போது ஈகோவும் விட்டுக்கொடுத்து வாழும் தன்மையும் குறைந்துவிட்டதால் விவாகரத்தும் பிரிவினையும் அதிகரிக்கிறது.

Advertisment

காலத்துக்கு ஏற்றபோல் வழக்குகளும் பிரிவினையும் தொடர்கதை ஆகிக்கொண்டே இருக்கிறது. விடிந்ததுமுதல் பொழுதுமுடியும் வரை நூற்றுக்கு மேற்பட்ட சீரியல்கள் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்படுகிறது. 100 சேனலிலும் ஏதாவது ஒரு கணவன்- மனைவி வழக்கு, பிரிவினை மாமியார் மருமகளை மகனுடன் வாழவிடாமல் பிரிப்பது, மருமகள் மாமியாரை மதிக்காமல் இருப்பது போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. இதுபோன்ற சீரியலை பார்க்கும்போது அந்த சம்பவம் சீரியல் பார்ப்பவர்களின் குடும்பத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மூன்றாமிடம் வலுத்தவர்கள் சீரியல் பார்த்து வாழ்க்கையை முடித்து விடுவார்கள்.

முதல் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களுக்கு வெகு சிலருக்கே இரண்டாவது வாழ்க்கை நிம்மதியைத் தருகிறது. முதல் வாழ்க்கையைவிட இரண்டாவது வாழ்க்கை இரண்டாம் தரமான வாழ்க்கையாகவே இருக்கிறது. 

நான் கடந்த இரண்டு வாரங்களாக எழுதிய விதியின் அடிப்படையில் இப்பொழுது ஒரு உதாரண ஜாதகத்தைப் பார்க்கலாம். கடந்த வாரங்களில் எழுதிய விதிகள் லக்னத்தை அடிப்படையாகக் கொண்டவைகள். இதில் மேலும் ஒருசில விதிகள் ஒத்துவருகிறது. அதாவது இந்த பிறவியில் ஒருவர் அனுபவிக்கும் நல்ல தீய சம்பவங்கள் உடல் காரணமாகிய சந்திரனில் பதிந்துள்ளது. 

ஆக, சந்திரனுக்கு 2, 7, 8-ஆமிடங்களும் திருமண வாழ்க்கையை தீர்மானிக்கிறது. 

அதற்கு அடுத்தபடியாக   தசாநாதனுக்கு 2, 7, 8-ஆமிடங்களும் திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. 

லக்னாதிபதி மற்றும் ஏழாம் அதிபதிக்கு ராகு சம்பந்தம் இருந்தால் விதவையை திருமணம் செய்வார்கள். அதாவது ஜாதகருக்கு முதல் திருமணம் வாழ்க்கைத் துணைக்கு இரண்டாவது திருமணம் நடக்கும்.

குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு 6, 8, 12-ஆம் பாவக சம்பந்தம் பிரிவினை அல்லது வழக்கினை தருகிறது.

சந்திரனுக்கு இரண்டாமிடத்து அதிபதிக்கு 6, 8, 12-ஆம் அதிபதிகள் தொடர்பு குடும்ப வாழ்க்கையை வெறுக்கச் செய்கிறது.

நான் இங்கே பதிது செய்துள்ள ஜாதகம் நமது "பாலஜோதிடம்' புத்தகத்தை ல்க்ச் மூலம் ஆன்லைனில் படிக்கும் வாசகி. எனக்கும் "பாலஜோதிடம்' புத்தகம் பலமுறை ரட்ஹற்ள் ஹல்ல் மற்றும் ஆன்லைனில் ல்க்ச் ஆக வந்துள்ளது. இந்த வேலையை செய்பவர் யார் என்று இதுவரை யாரும் கண்டுபிடிக்க முயலவில்லை. இந்த ஜாதகி பாண்டிச்சேரியில் வாழ்கிறார். 

பிறந்த தேதி    : 29-7-1980

பிறந்த நேரம்    : 3.15

பிறந்த ஊர்    : ஓசூர்

ஜென்ம லக்னம்    : விருச்சிகம்

ஜென்ம ராசி    : மகரம்

ஜென்ம நட்சத்திரம்    : அவிட்டம், 4-ஆம்  பாதம்

நடப்பு தசா    : சனி 17-10-2034 வரை

நடப்பு புக்தி    : சூரியன் 20-9-2026 வரை

எனது அனுபவ ஜோதிட கருத்து களின்படி இந்த ஜாதகியின் விருச்சிக லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதி செவ்வாய்க்கு 7-ஆம் அதிபதி சுக்கிரனுக்கும் நேரடி சம்பந்தமில்லை. ஆனால் பாகை முறை அடிப்படையில் ஏழாம் அதிபதி சுக்கிரன் எட்டாம் இடத்தில் மிகக் குறைந்த பாகையான 34-ல் இருக்கிறார். பாகை முறையில் 7-ஆமிடத்திற்கு சம்பந்தம் பெறுகிறது. 

லக்னம் லக்னாதிபதிக்கும் மறைமுக சம்பந்தம் உள்ளதால் காலதாமதமாக  விவாகரத்து ஏற்பட்டுள்ளது.

 ஏழாம் அதிபதி சுக்கிரன் லக்னாதிபதி செவ்வாயின் சாரம் பெற்றுள்ளார். குடும்பஸ்தான அதிபதி குருபகவான் 10-ஆமிடத்தில் 8-ல் நிற்கும் சுக்கிரனின் சாரத்தில் உள்ளார்.

தசாநாதன் சனிபகவான் மறு விவாகத்தை குறிக்கக்கூடிய 11-ஆமிடத்தில் மிகக்குறைந்த பாகையிலுள்ளது. 7-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் நிற்கும் செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிக்கிறார். கிரகச் சேர்க்கை யின் அடிப்படையில் தசாநாதன் சனியின் பத்தாம் பார்வை சுக்கிரனுக்கு உள்ளது. 11-ஆமிடத்தில் செவ்வாய், சனி சேர்க்கை உள்ளது. ஜாதகிக்கு லக்னப்புள்ளி அஷ்டமாதிபதி ஆகிய புதனின் சாரத்தில் உள்ளது. இந்த லக்ன புள்ளி ஜாதகியின் வாழ்க்கை வருத்தம், போராட்டம் நிறைந்ததாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. முதல் திருமணம் 33 வயதில் நடந்தது.

தற்போது தசா நடத்தும் கிரகமான சனிபகவான் ஒன்பதாம் இடமான பாதக ஸ்தானத்தில் நிற்கும் சூரியனின் சாரம் பெற்றுள்ளார். புக்திநாதன் சூரியன் 11-ஆமிடத்திற்கும் சனியின் சாரத்தில் இருக்கி றார். அதாவது சனியும் சூரியனும் சாரப் பரிவர்த்தனையில் இருக்கிறார்கள். இவருக்கு பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். எட்டு ஆண்டுகளாக கணவனுடன் பிரிந்து வாழ்ந்த இவருக்கு சட்டப்படியான விவாகரத்து ஐந்து மாதத்திற்குமுன்பு ஏற்பட்டுள்ளது. அதாவது  செவ்வாயுடன் இணைந்து தசை நடத்தும் கிரகமான சனி பகவானை கோட்சார சனிபகவான் தொடர்பு கொண்டதால் சட்டப்படி பிரிவினை வந்துள்ளது. இதே கோட்சார சனிபகவான் செவ்வாயைப் பார்ப்பதால் மறு விவாகம் ஜனவரியில் நடக்கவுள்ளது. வயது என்ற ஒரு கருத்து இருந்தாலும் இவருடைய ஆயுள் காலம் முழுவதும் இவருக்கு ஒரு துணை வேண்டும். 3, 7, 11 பாவக சம்பந்தம் வலுவான தார தோஷம். தசை நடத்தும் கிரகமான சனிபகவான் விருச்சிக லக்னத் திற்கு 3, 4-ஆம் பாவகத்திற்கு அதிபதி. அவர் 11-ஆமிடத்தில் நின்று ஏழாம் அதிபதி சுக்கிரனை பத்தாம் பார்வையால் பார்க்கிறார். நவாம்சத்தில் ஏழாம் அதிபதி சூரியன் நீசம். கிரகங்கள் தன் கடமையை செய்யும். யாரையும் விட்டு வைக்காது. இனி அடுத்த வாரம் பார்க்கலாம். 

செல்: 98652 20406