Advertisment

இதயத் திருவிழா!

dd

புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை, பேராசிரியரகப் பணியாற்றியவர் எஸ். சுந்தரமூர்த்தி. ஏராளமானவர்களின் இதயத்தைக் கொள்ளையடித்து,அவர்களின் கனவு நாயகராகத் திகழும், அவர் ஓய்வு பெறும் நாளை,இன்றைய மாணவர்களும் முன்னாள் மாணவர்களுமாக ஒன்றுகூடி, இதயத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். 

Advertisment


உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கும் அவரது முன்னாள் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகை

புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை, பேராசிரியரகப் பணியாற்றியவர் எஸ். சுந்தரமூர்த்தி. ஏராளமானவர்களின் இதயத்தைக் கொள்ளையடித்து,அவர்களின் கனவு நாயகராகத் திகழும், அவர் ஓய்வு பெறும் நாளை,இன்றைய மாணவர்களும் முன்னாள் மாணவர்களுமாக ஒன்றுகூடி, இதயத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். 

Advertisment


உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கும் அவரது முன்னாள் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகையில், யூ டியூப் மூலம் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்கள்.பேராசிரியர் சுந்தரமூர்த்தியும் மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், யூ டியூப்பில் தோன்றி கரும்பலகையில் சிறப்பு வகுப்பை நடத்தினார். 

Advertisment


இந்த நிகழ்ச்சி யூ டியூப் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதால், இங்கேயுள்ள மங்களூர், புனே, திருவனந்தபுரம் தொடங்கி, சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரே-யா மற்றும் வளைகுடா நாடுகள் வரை, உலகம் முழுவதும் உள்ள முன்னாள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு, தங்கள் பேராசிரியருக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.
சில முன்னாள் மாணவர்கள் நேரில் பங்கேற்று, 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பயன்படுத்திய அதே குறிப்பேடுகளைக் கொண்டு வந்து, அதிலேயே புதிய குறிப்புகளை பதிவுசெய்தனர்.

ஒரு முன்னாள் மாணவர் பகிர்ந்த உணர்ச்சிப் பதிவு இது:“அந்த தருணம் எங்களை 20 ஆண்டுகள் முன் கொண்டு சென்றுவிட்டது போல உணரவைத்தது. அப்போது பயன்படுத்திய குறிப்புப் புத்தகத்தை மீண்டும் திறந்து, அதிலேயே புதிய குறிப்புகளை எழுதும் அனுபவம் எங்கள் மனதில் என்றும் நிற்கும் நினைவாக மாறிவிட்டது. அவருடைய பாடங்கள்,  எங்கள் வாழ்வில் இன்று வரை வழிகாட்டும் விளக்காக இருந்து வருகின்றன.”


மேனாள் மாணவர்கள் தொடங்கிய புதிய முயற்சி, கல்வி உலகில் புதிய போக்கை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கற்பித்த-ன் பெருமையை உணர்த்தி, ஆசிரியர் சமூகத்தில் பெருமிதத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.


25 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட இரசாயன பொறியியல் துறை, உலகத் தரம் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்கியதன் விளைவாக, அதைக் கற்ற மாணவர்கள் பலர் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைகளில் சிறப்பிடம் பெற்று வருகிறார்கள். இந்த நிகழ்வு அந்த துறையின் சாதனைகளுக்கும், பேராசிரியர் சுந்தரமூர்த்தியின் கல்விச் சேவைக்கும் ஒரு சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.


-பார்த்தீபன்

uday011125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe