பிரகலாதனனின் பேரனாகிய மகாபலி சக்ரவர்த்தி மலையாள தேசத்தை ஆண்ட மாமன்னன் ஆவான்.

Advertisment

சகல லோகங்களை வென்று வாகைசூடிய மகாபலி சக்ரவர்த்தி 100 அஸ்வமேத யாகங்கள் செய்தால் இந்திர லோகத்தையும் தன்வசப்படுத்தி விடலாம் என்று தீர்மானித்து யாகங்கள் செய்ய ஆரம்பித்தான். மாவலியாரின் யாகங்கள் வெற்றிகரமாக முழுமையடைந்து விட்டாôல் இந்திரலோகம் அவன் கைக்கு போய்விடும் என்று அஞ்சினர் தேவர்கள் அனைவரும்.

தேவர்களும் தேவர்களின் தலைவனான இந்திரனும் மகாவிஷ்ணுவிடம் சென்று இந்திரலோகம் மகாபலி வசம் போய்விடாமல் தடுத்து எங்களுக்குப் பெற்றுத்தர வேண்டுமென்று கோரினார்கள்.

மகாபலி பிரகலாதனின் பேரன் என்பதால் போரிட்டு அவனை வெல்லக்கூடாது என்று தீர்மானித்த திருமால் பிரம்மச்சாரியாக சென்று யாசித்து இந்திரனின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்தார். அதற்காக அவர் எடுத்த அவதாரம் தான் "வாமன அவதாரம்' ஆகும்.

Advertisment

குள்ளமான வாமன ரூபத்தோடு மாவலியாரிடம் சென்று மகாவிஷ்ணு நின்றார். யாசிக்கிறார். அவனிடம்-வாமனனிடம் மாவலியார் "என்ன வேண்டும்?' என்று வினவுகிறார்! "எனக்கு இந்த உலகில் மூன்றடி மண் வேண்டும் என்று கேட்கிறார்' வாமனன்!

"குள்ளச்சிறுவன்... மூன்றடி மண்தானே கேட்கிறான்... 
தந்தால் என்ன ஆகிவிடப்போகிறது...'' என்று எண்ணி 
தானம் தர சம்மதிக்கிறான் மகாபலி மன்னன்.

மூன்றடி மண் பெற்றதும் வாமன ரூபத்தில் இருந்த மகாவிஷ்ணு திரிவிக்கிரமனாகி ஓங்கி உலகளந்தானாய்... மாவலியாரின் சிரசில் பாதம் வைத்து அழுத்துகிறார்...

மாவலியாரோ பாதள லோகத்திற்குள் சென்றுவிடுகிறார்.

Advertisment

பாதாள லோகம் சென்ற மகாபலி சக்ரவர்த்தி பகவான் மகாவிஷ்ணுவிடம் "ஆண்டுக்கு ஒருமுறை என் தேசத்து மக்களை சந்தித்துவிட்டு வரவேண்டும்'' என்று வரம் கோருகிறான்! அவனது விருப்பப்படி பகவானும் மாவலியாருக்கு வரம் தந்து அருளுகிறார்...!

பகவானின் வரத்தின் பயனாக மாவலியார் ஆண்டுதோறும் தான் ஆண்ட மலையாள தேசம் வந்து மகிழ்வுடன் மக்களை சந்தித்து ஆசி கூறும் நன்னாளே "திரு ஓணம்' திருநாளாகும்.

திருஓணம் "திருநாளன்று மக்களை சந்திக்க வரும் மாவலியாரை வரவேற்கும் வண்ணம் மலையாள தேசத்தில் "ஓணம்' பண்டிகை மகா உற்சாகத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது! பகவானின் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான சிறப்புமிகு, வலிமைமிகு "வாமன அவதாரம்' நிகழக் காரணமாக இருந்தது மாவலியாரின வரலாற்றுச் சிறப்பு ஆகும்!

அத்தப்பூ கோலம்தனை கேரள மக்கள் தத்தம் வீட்டு வாசல்களில் அழகழகாய்ப் போட்டு அறுபத்து நான்கு வகையான "ஓணம் சத்யா' என்றும் உணவு வகை படைத்து பகவான் திருமாலின் அருள் பெற்ற மாவலியாரை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டாடுகின்ற உன்னத்திருநாள் தான் "திருஓணம்' திருநாளாகும்! மாவலியாரைப் போற்றும் மகிழ்ச்சித் திருநாளாகிய "ஓணம்' பண்டிகையன்று மலையாள தேசத்து மக்கள் மட்டுமல்ல... நாமும் மாவலியாரை வரவேற்று மகா விஷ்ணுவை வணங்கி வளம்பெறுவோம்; வாழ்வில் நலம் பெறுவோம்!