குரு பார்க்க கோடி நன்மை இது ஜோதிடப் பெருமக்கள் கூறும் பழமொழி. உண்மையில் குரு பார்க்க கோடி நன்மை என்பதைவிட, குரு பார்க்க கொடிய குற்றம் தீரும் என்பதே சரியான வாக்கியம் என்று முதிர்ந்த ஜோதிட பண்டிதர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கின்றேன்.
ஜோதிட சாஸ்திரங்களில் கூறப் படுகின்ற தீய பலன்களைத் தருகின்ற கிரக அமைப்புகள், மற்றும் அவ யோகங்களைத் தருகின்ற தீய அமைப்புக்கள் இவற்றையெல்லாம் விலகச்செய்வது குருபார்வை மட்டுமே. அத்தகைய தீமை தருகின்ற தீய கிரக அமைப்புக்களை வடமொழி நூல்களில் சொல்லும்போது "ந சௌம்ய திருஷ்டி' என்ற வாக்கியத்தை இறுதியாக சேர்த்திருப்பார்கள். அதாவது- இத்தகைய தீய பலன்கள் யாவும், சுபகிரகம் ஆகிய குரு பார்வை செய்யாதபோது மட்டுமே பலன் அளிக்கும் என்பதுதான் அதன் பொருள். சட்டநாத சுவாமிகள் ஜாதக அன்பாய் என்ற நூலில் லக்ன வீட்டுக்குடையவன் லக்னத்திற்கு இரண்டில் அமர்ந்து அவரை குரு பார்க
குரு பார்க்க கோடி நன்மை இது ஜோதிடப் பெருமக்கள் கூறும் பழமொழி. உண்மையில் குரு பார்க்க கோடி நன்மை என்பதைவிட, குரு பார்க்க கொடிய குற்றம் தீரும் என்பதே சரியான வாக்கியம் என்று முதிர்ந்த ஜோதிட பண்டிதர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கின்றேன்.
ஜோதிட சாஸ்திரங்களில் கூறப் படுகின்ற தீய பலன்களைத் தருகின்ற கிரக அமைப்புகள், மற்றும் அவ யோகங்களைத் தருகின்ற தீய அமைப்புக்கள் இவற்றையெல்லாம் விலகச்செய்வது குருபார்வை மட்டுமே. அத்தகைய தீமை தருகின்ற தீய கிரக அமைப்புக்களை வடமொழி நூல்களில் சொல்லும்போது "ந சௌம்ய திருஷ்டி' என்ற வாக்கியத்தை இறுதியாக சேர்த்திருப்பார்கள். அதாவது- இத்தகைய தீய பலன்கள் யாவும், சுபகிரகம் ஆகிய குரு பார்வை செய்யாதபோது மட்டுமே பலன் அளிக்கும் என்பதுதான் அதன் பொருள். சட்டநாத சுவாமிகள் ஜாதக அன்பாய் என்ற நூலில் லக்ன வீட்டுக்குடையவன் லக்னத்திற்கு இரண்டில் அமர்ந்து அவரை குரு பார்க்க புதையல், லாட்டரி இவற்றின் மூலம் செல்வம் பெற்றவனாக ஆவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆக புதையல் யோகம் பெறவேண்டும் என்றாலும்கூட குரு பார்வைவேண்டும் என்பதனை நாம் இதன்மூலம் உணர முடிகின்றது. இவ்வாறு குருபார்வையின் பெருமையை விளக்குவது என்றால் அது தொடர்கதை ஆகிவிடும். எனவே சுருக்கமாக பன்னிரு ராசிகளையும் குரு பகவான் பார்க்க அதன்மூலம் ஏற்படும் பலன்கள் குறித்து, சாரா வழி நூலிலிருந்து நாம் இங்கே காணலாம்.
மேஷ ராசியில் அமர்ந்த சந்திரனை குரு பகவான் பார்க்க அதிக வேலைக்காரர்களையும், பெருகிய செல்வத்திற்கு சொந்தக்காரனாகவும், மன்னனின் மந்திரியாகவோ, சேனை தலைவனாகவோ இருப்பான் என சொல்லப் பட்டுள்ளது.
அவ்வாறு ரிஷப ராசியில் அமர்ந்த சந்திர பகவானை குரு பார்க்க நிலைத்த புதல்வர்களோடும், மனைவியோடும், சுற்றத்தோடும் கூடியவனாகவும்.
அன்னை மற்றும் தந்தையிடம் பக்தி கொண்டவனாகவும், அதிக நிபுணத்தன்மை கொண்டவனாகவும், மிகவும் பிரபலமானவராகவும் விளங்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
மிதுன ராசியில் அமர்ந்த சந்திர பகவானை குரு பார்க்க எல்லாவிதமான வித்தைகளையும் கற்றவனாகவும், சாஸ்திரங்களை உபதேசிப்பவனாகவும், பிரசித்தி பெற்றவனாகவும், உண்மையை பேசுகின்றவனாகவும், அழகு உடையவனாகவும், எல்லாவற்றிலும் கௌரவிக்கப்பட்டவனாக வும், யோக்கியனாகவும், நல்ல வாக்கு வன்மை கொண்டவனாக வும் விளங்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
கற்கடக ராசியில் இருக்கும் சந்திர பகவானை குரு பகவான் பார்க்க மன்னனாகவோ, மன்னனுக்கு சமமான குணங்களைக் கொண்டவனாகவும், பணிவு, பராக்கிரமம், நயம் இவற்றோடு கூடியவனாகவும், நல்ல மனைவியோடு சுகம் அனுபவிப்பவனாக வும் இருப்பான் என்று சொல்லப் பட்டுள்ளது.
சிம்ம ராசியில் அமர்ந்த சந்திரனை குருபகவான் பார்க்க சிறந்த வம்ச பாரம்பரியத்தை கொண்டவனாகவும், அதிக சாஸ்திரங்களில் பயிற்சி செய்தவனாகவும், புகழ் பெற்றவனாகவும், அதிக நற்குணங்களை கொண்டவனாகவும், மன்னனுக்கு சமமானவராகவும் இருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.
கன்னி ராசியில் இருக்கும் சந்திரனை குரு பகவான் பார்க்க சுற்றத்தினர், நண்பர் இவர்களோடு கூடியவனாகவும், சுகம் அனுபவிப்பவனாகவும், மன்னனின் காரியங்களைச் செய்பவனாக வும், வாக்கியங்களை உணர்ந்தவன் ஆகவும், செல்வந்தனாகவும் இருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.
துலா ராசி சந்திரனை குரு பார்க்க எங்கும் போற்றப்படுபவன் ஆகவும், கிரைய, விக்ரகங்களில் திறமை கொண்டவனாகவும், ரத்தினம் முதலிய கற்களாலும், பாத்திரங்கள் இவற்றின் வியாபாரத்தில் சிறந்தவனாகவும் இருப்பான் என சொல்லப்பட்டுள்ளது.
விருச்சிக ராசி சந்திரனை குருபகவான் பார்க்க செயல்களில் சக்தி பொருந்தியவனாகவும், ஜனங்களால் விலக்கப்பட்டவனாகவும், செல்வந்தனாகவும், அழகுடையவன் ஆகவும் இருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.
தனுசு ராசி சந்திரனை குரு பகவான் பார்க்க இணையிலா உடல்வாகு கொண்டவனாகவும், மன்னனின் மந்திரியாகவும், தனம், தர்மம், சுகம் இவற்றோடு கூடியவனாகவும் இருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.
சந்திரன் குருவின் பார்வையோடு மகர ராசியில் அமர்ந்திருக்க அதிக புகழ் கொண்டவனாகவும், மன்னனாகவும், மன்னனுக்கு துல்லியமான குணங்கள் கொண்டவனாகவும், அதிக மனைவி, புத்திரர்கள், சுற்றம் இவற்றோடு விளங்குபவனும் ஆவாள்.
கும்ப ராசிச் சந்திரனை குருபகவான் பார்க்க, கிராமங்கள், ஆலயங்கள், மரங்கள், உயர்ந்த வீடுகள் இவற்றில் இருந்து செல்வத்தையும், உத்தம பெண்கள் மூலம் சுகத்தையும் அனுபவிப்பவனாகவும். போற்றுதலுக் குரியவனாகவும் இருப்பான் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மீன ராசியில் சந்திரனை குருபகவான் பார்க்க அன்பு நிறைந்த குணங்கள் கொண்டவனும், மண்டலத்தின் அதிபதியாக வும், மிகப் பெரிய பிரபுவாகவும், அதிக அழகை கொண்டவனாகவும், அதிக பெண் களோடு கூடியவனாகவும் இருப்பான் எனக் கூறப்பட்டுள்ளது.
செல்: 94438 08596
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us