"அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை 
  பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை''  என்கிறது வள்ளுவம். 

Advertisment

இந்த அருளையும், பொருளையும், நம் கரம் சேர்க்கும் தத்துவம் மகாலட்சுமி திருமால் தத்துவமாகும்.

Advertisment

இதன் அடிப்படையில் புவிசார் வாழ்வியலில் பொருள்களின் ஆளுமை பெரியது என்பது அனைவரும் அறிந்ததே. 

செல்வ செழிப்பின் ஆணிவேர் மகாலட்சுமி தாயார்தான். அந்த இயக்க சக்தியுடன் ஒத்திசைவாக செல்வது நம்மை செல்வ செழிப்பாக நிலை நிறுத்தும் என்பது உறுதி. ஆனால் மற்ற தெய்வங்களின் ஆற்றலை கையாள்வதுபோல் இந்த தாயாரின் ஆற்றலை கையாள்வது மிக கடினம். 

Advertisment

ஓரிடத்தில் தன்னை நிலை நிறுத்த முடியாத ஆற்றலின் ஓட்டமாகும் இந்த தாயாரின் சக்தி. அதனால்தான் ஒருவரிடமே செல்வம் தங்காமல் அடுத்தடுத்த இடங்களுக்கு தன்னை கடத்தி இணைத் துக் கொள்கின்றது. 

சரி; இந்த தன்மையை எவ்வாறு கையாள வேண்டும் நம்மிடமே அந்த அன்னையை எப்படி நிலை நிறுத்திக்கொள்வது என்பதை பற்றி காணலாம். 

மகாலட்சுமி தாயாருக்கு சாஸ்திரரீதியாக 18 புதல்வர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது நம்மில் பலருக்கு தெரியாத இந்த விஷயம் வடமாநிலத்தில் ஒரு தரப்பினருக்கு மட்டும் மிகத் தெளிவாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் செல்வ செழிப்புடன் நிலைத்திருக்க காரணமாகிறது.

அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு பொன்னும், பொருளும், குவிந்துகொண்டே இருக்கின்றது.

அப்படி என்ன? என்கின்ற ஆர்வத்திற்கு பதில் இதோ.ஒரு தாய்க்கு மகிழ்ச்சி எப்பொழுது சித்திக்கும்?

தான் சுமந்து ஈன்ற குழந்தைகளை மற்றவர்கள் போற்றும் பொழுது குழந்தைகள்மீது பரிவும், பாசமும், போற்றுகின்றவர்கள் மீது கருணையும், ஈர்ப்பும், பிறப்பது இயல்பு அல்லவா? இதைதான் வடமாநில சகோதரர்கள் உபயோகப்படுத்திக் கொள்கின்றார்கள்.

இதன் அடிப்படையில் தாயாரின் புதல்வர்களின் வழிபாடானது அன்னையின் அருள் மழையில் நம்மை இணைக் கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

 அவளிடம் இருந்து தேவையான வரங்களை பெற்றுக்கொள்ள இந்த 18 புதல்வர்களின் நாமத்தை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? இதோ பெயர்கள். 

1. ஓம் தேவசகாய நம 

2. ஓம் சிக்லிதாய நம 

3. ஓம் ஆனந்தாய நம

4. ஓம் கர்த்மாய நம 

5. ஓம் ஸ்ரீ ப்ராதாய நம

6. ஓம் ஜாத் வேதாய நம

7. ஓம் அனுராகாய நம

8. ஓம் சம்வாதாய நம 

9. ஓம் விஜயாய நம

10. ஓம் வல்லபாய நம 

11. ஓம் மதாய நம 

12. ஓம் ஹர்ஷாய நம

13. ஓம் பாலாய நம 

14. ஓம் தேஜஸ  நம 

15. ஓம் தம்காய நம 

16. ஓம் சலிலாய நம 

17. ஓம் குல்குலாய நம 

18. ஓம்  குருந்தகாய நம

என்கின்ற நாமங்களில் இந்த புதல்வர்களின் பெயர் நிறைந் துள்ளது.

இதை எப்படி உபயோகம் செய்வது என்பதைக் காணலாம். 

தினமும் இந்த 18 நாமங் களையும், ஒருமுறை காலை எழுந்த வுடன் பூஜையறையில் அமர்ந்து சொல்வது மிக சிறப்பு. 

காலையில் குளித்துவிட்டு இந்த நாமங்களை ஒருமுறை படித்தால் போதும் உங்களின் பணம் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களும் தீர்ந்துவிடும் என்பது உறுதி. 

தினமும் கூற முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையன்று பூஜையறையில் இந்த பெயர்களை உச்சரித்துவர செல்வ செழிப்பு மேலோங்கும். குறிப்பாக 21 வெள்ளிக்கிழமைகள் கட்டாயம் இந்த நாமங்களை ஏழு முறையாவது ஜெபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருவேளை உங்களின் ஜாதகரீதியாக 6, 8 பாவகங்களில் தொடர்பில் தசையில் இருக்கும் பொழுது கடன் சார்ந்த விஷயங் கள் அதிகரிக்கும் என்பது உறுதியல்லவா? அந்த சூழலில் இருந்தும் இந்த வழிபாடு உங்களை காப்பாற்றும். 

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன்+சனி நினைவு என்பது ஏதோ ஒரு வகையில் பணத்தை நிர்வகிக்கும் தன்மையை நமக்கு வழங்கிவிடும். இவர்களும் இந்த மந்திரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். 

உங்களின் நியாயமான பொருள் ஆசைகள் நிறைவேறுவதற்கு இந்த வழிபாடு நிச்சயம் வழிவகுக்கும் என்பது உறுதி. 

செல்: 80563 79988