ஐஸ்வர்யாராய் எப்பவுமே கொஞ்சம் தனித்துவமாவே இருந்து வந்துருக்காங்க.
அவங்களோட ஓபனிங்கே கொஞ்சம் அசத்தல்தான். அவங்க முதன் முதலா மிஸ் வேர்ல்டா தேர்வு செய்யப்பட்டபோதே எல்லாரையும், ஈக்வலா பார்க்கணும், ஏழை பணக்காரன் பாகுபாடு பாக்கக்கூடாது, நிறத்தால வேறு பாடு நேஷ்னாலிட்டிங்கிற பாகுபாடுன்லாம் பாக்கக்கூடாது. அந்தக் குவாலிட்டிதான் உண்மையான அழகுன்னு சொல்லித்தான் அவங்க மிஸ்வேர்ல்டுங
ஐஸ்வர்யாராய் எப்பவுமே கொஞ்சம் தனித்துவமாவே இருந்து வந்துருக்காங்க.
அவங்களோட ஓபனிங்கே கொஞ்சம் அசத்தல்தான். அவங்க முதன் முதலா மிஸ் வேர்ல்டா தேர்வு செய்யப்பட்டபோதே எல்லாரையும், ஈக்வலா பார்க்கணும், ஏழை பணக்காரன் பாகுபாடு பாக்கக்கூடாது, நிறத்தால வேறு பாடு நேஷ்னாலிட்டிங்கிற பாகுபாடுன்லாம் பாக்கக்கூடாது. அந்தக் குவாலிட்டிதான் உண்மையான அழகுன்னு சொல்லித்தான் அவங்க மிஸ்வேர்ல்டுங்கிற கப்ப இந்தியாவுக்கு அடிச்சிட்டு வந்தாங்க. சரி... இதான் தெரியுமே இப்ப எதுக்கு இந்த பழைய கதைலாம்னு கேக்குறீங்களா? இருக்கு...
இந்தப் பக்கம் நாம தமிழ் சினிமானு எடுத்துக்கிட்டாலும் ரொம்ப செலக்டிவ்வா தான் படம் பண்ணாங்க...
எல்லா மொழிகள்லயும் சேத்து ஒரு 50 படங்கள் பண்ணிருந்தா கூட தமிழ்ல ரொம்ப கம்மி.
ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், இருவர், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் இப்படி ரொம்ப செலக்டிவான படங்கள்.
இதுல நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி ரொம்பவே இஷ்டப் பட்டு ஐஸ்வர்யா கூட நடிச்சாரு.
அத அவரே ஒரு மேடைல கூட சொன்னாரு. ஆனா ஐஸ்வர்யாராய் கிட்டத்தட்ட ஒரு நாலு சூப்பர்ஸ்டார் படங்கள ரிஜெக்ட் பண்ணிருக்காங்க. அதாவது படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி இந்தப் படங்கள்ல ஹீரோயினா நடிக்க பர்ஸ்ட் சாய்ஸ்ல இருந்தவங்க ஐஸ்வர்யாதான். ஆனா அவங்க அந்தப் படங்கள்ல நடிக்கல... இந்த மாதிரிதான் அவங்களோட ட்ராவல்.
சரி; இதெல்லாம் ஓகே... என்னத்துக்கு இப்ப இதெல்லாம் அப்டினா...
லேட்டஸ்டா நம்ம பாரதப் பிரதமர் மோடிஜி கலந்துக்கிட்ட விழால நம்ம ஐஸூம் கலந்துக்கிட்டாங்க. அந்த விழால பிரதமர் முன்னாடி அவங்க பேசுனதுதான் இன்னிக்கு மீடியால ஹைலைட். சோஷியல் மீடியா, மெயின்ஸ்ட்ரீம் மீடியானு சுத்தே சுத்துனு சுத்துது.
அப்படி அவங்க என்ன பேசுனாங்கனா மனித குலத்துல ஒரே ஒரு சாதிதான் இருக்கு. ஒரே ஒரு மதம்தான் இருக்கு. அது அன்புதான். ஒரே ஒரு மொழிதான் இருக்கு. அது நாம நம்மோட இதயத்துல இருந்து பேசுறது.
ஒரே ஒரு கடவுள்தான் இருக்காரு.
அவரு எங்கும் நிறைஞ்சிருக்காரு அப்படினு ஆந்திரா புட்டபர்த்தில நடந்த சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழால நம்ம பிரதமர் முன்னாடி ஐஸ்வர்யா பேசுனதுதான் இன்னிக்கு மீடியால ரொம்ப ஹைலைட்!
-எஸ்.பி
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us