மண்ணில் தோன்றிய உயிர்கள் பிறந்த நாள் முதல் இறுதிவரை மரணத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கிடைத்த வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாமல் சந்தோஷப்படத் தெரியாமல் அதில் உள்ள நல்ல விஷயங்களை காணத் தெரியாமல் எத்தனையோ பேர் காசுக்கும் பணத்துக்கும் சொத்து சுகங்களைத் தேடி அலைந்து தன்னுடைய வாழ்நாளை செலவழிக்கிறாங்க... மனித வாழ்வின் லட்சியம் தான் என்ன?
அதை அடைவது எப்படி?
கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு கேள்வியை ஒன்று சேர்த்து ஒரே கேள்வியா கேட்டிருக் கீங்க... மனித வாழ்க்கைக்கு இதுதான் லட்சியம்னு நிறைய பேர் நிறைய சொல்லி இருக்காங்க. இப்ப பாரதி "நமக்குத் தொழில் கவிதை'ன்னாரு, இதை நம்பி எல்லாரும் பாட்டு எழுத ஆரம்பிச்சா... கவிதை என்ன ஆகிறது? பத்துப் பேர் படிச்சா தான் நல்லா இருக்குமே ஒழிய, சரி நமக்கு தொழிலே கவிதைன்னு பாரதியே சொல்லிட்டாருன்னு எல்லாரும் பாட்டு எழுத ஆரம்பிச்சா எவன் கேட்கிறது? அதனால யாருக்குமேஒருவருடைய லட்சியம் இன்னொருவருடைய லட்சியம் அல்ல. இந்தப் புரிதல் ரொம்ப அவசியம். வாழ்க்கை என்பது ஒரு தோட்டத் துக்குள்ள போற மாதிரி... சிவப்பு கலர்ல ஒரு பூ இருக்கும். மஞ்சள் கலர்ல ஒரு பூ இருக்கும். பச்சை கலர்ல ஒரு பூ இருக்கும் எல்லாத்தையும் பார்த்து ரசிக்கணும். பச்ச தாங்க கலர். அது என்னங்க மஞ்சள் பூக்குறதுன்னா பைத்தியம்னு அர்த்தம்.
அதேமாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேலை இருக்கு. இந்த உலகத்துல இந்த வேலையைக்கூட நாம கற்பிச்சிக்கிட்டதுதான். இதுதான் வேலைன்னு நமக்கு யாரும் வெளியில் இருந்து திணிக்கல. நாம கற்பிச்சுக்கிறது தான். "இப்ப எனக்கு பேசுறது தொழில் அப்படின்னு நான் எடுத்தேன். மக்களுக்கு நல்லது சொல்றதுக்கு, ஊருக்கு நல்லது சொல்லணும் அப்படிங்கிறதுக்கு பேச்சுன்னு எடுத்தேன். சில்பின்னு ஓவியர் ஓவியத்த எடுத்தார். ஒரு நாடக நடிகரா நகைச்சுவைன்னு கிரேசி மோகன் எடுத்தார், சிவாஜி சீரியஸான ஒரு விசயத்த நடிக்கிறது அப்படின்னு... இப்படி ஒவ்வொருத்தர்... நாதஸ்வரம் அப்படின்னு ஒருத்தர் எடுத்திருப்பாங்க...
அதனால வாழ்க்கைக்கு இதுதான் அர்த்தம் என்றோ, இதை நோக்கிய பயணம் என்றோ, இது தான் வாழ்வின் பணி என்றோ யார் சொன்னாலும் அவர்கள் உளறுகிறார்கள் என்று பொருள். அவுங்கவுங்களா கற்பிச்சுக்கணும். என்னுடைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்கிறத நான் கற்பிச்சுக்கணும்.
இன்னும் சரியா சொல்றதாயிருந்தா நம்ம பாஸ் ஜோக்அடிச்சா நாம சிரிப்போம். வேற வழி கிடையாது. சர்வீஸ்ல இருக்கிற வரைக்கும் நாம சிரிக்கணும், ரிட்டயர்டு ஆகிற அன்னைக்கு மட்டும் சிரிக்கவேண்டாம். போயா இன்னைக்கு நா ரிட்டயர்டு ஆகிறேன். சிரிக்காம போறேன்னு போயிடலாம். அதுமாதிரி நமக்கெல்லாம் பாஸ் கடவுள்னு வச்சுக்கோங்க, அல்லது பிரபஞ்சம்ன்னு வச்சுக்கோங்க... இதுக்கு நாம என்ன பண்ண வேண்டியிருக்கு நம்மள அது வச்சுருக்கிற வரைக்கும் நாம அதுக்கு ஏதாவது செய்யவேண்டியிருக்கு.
இந்தப் பூமியில் நாம இருக்கிற வரைக்கும் ஏதாவது செய்யணும். நாம செய்ற அந்த செயல், முடிஞ்சா மத்தவங்களுக்கு அது சந்தோஷத்தைத் தரணும். எந்தவிதமான, என்ன சொல்றது... நோ ழ்ங்ஞ்ழ்ங்ள்ள் அந்த மாதிரி.
இந்த பூமியை விட்டு வெளியே போகணும். அதனால வாழ்க்கைக்கென்று லட்சியம் கிடையாது.
ரெண்டு, இதுல என்னன்னு தேடுவது தான் அதோட லட்சியமாக இருக்க முடியும்.
ஒள் ற்ட்ங்ழ்ங் ஹய்ஹ் ம்ங்ஹய்ண்ய்ஞ் அப்டின்னு தேடுறோம். பார்த்திங்களா... அது வேணா வாழ்க்கையின் நோக்கமாயிருக்கலாம். அவங்கவங்க ஒரு அர்த்தம் கண்டுபிடிப்பாங்க. அதுக்கு ஒரே அர்த்தத்த யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது.
தளபதிகள், போர்வீரர்கள் வெற்றி முக்கியம். அவுங்களுக்கு அது தான் வாழ்க்கையின் அர்த்தம்பாங்க. ஜென் குருவ கேட்டா, அவரு வேற ஒரு அர்த்தம் சொல்வாரு. அதனால இன்னொருவருக்குப் பொருந்துவது உங்களுக்குப் பொருந்தாது.
அடுத்தவருடைய உள்ளாடைகள் நமக்குப் பொருந்தாது. இந்த உள்ளாடைகள் மாதிரி தான் இலட்சியம்.
அவங்களுக்குன்னு பொருந்து றது இன்னொருத்தருக்கு பொருந்த வாய்ப்பு இல்லை அதனால இது தான் வாழ்வின் நோக்கம்னு தேட வேண்டாம்.
அதேமாதிரி இன்னொன்னு... மரணத்துக்கான காத்திருத்தல் வாழ்க்கைனா போரடிச்சுப் போயிடும். என்னைக்கு சாவு வரும்... ஏழாம் தேதி வருமா, எட்டாம் தேதி வருமா, ஆறு மணிக்கு வருமா, எட்டு மணிக்கு வருமா அப்டினா லைஃப் போர் அடிச்சுப் போயிடும். அது எப்போ வருதோ, வந்துட்டு போவுது. அத பத்தி கவலைப்படறது அவசியமேயில்ல. வரும்... அதுபாட்டுக்கு அதுவும் வரும். அதனால அத ஒரு பொருட்டாக மதிக்கக் கூடாது. விலங்குகள் கூட மரணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் சந்தோஷமா வாழுது. அப்படித்தான் நாம வாழணும்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் ஆன்மிகத்த பத்தி முக்கியமா பேசும் போது, மனித வாழ்வை இறைவனுக்காக வாழனும்னு சொல்றாரு.
இதுல கடவுள்னு ஒருத்தர் உண்மையிலேயே இருக்கிறாரா? அப்படி இருக்கிறதா இருந்தா, சமுதாயத்தில் எதற்கு இவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது? முக்கியமா இந்த இன்பத்தோடு துன்பம் இருப்பது மட்டுமல்லாமல், அடுத்தவங்களுக்கு நல்லது நினைக்கக்கூடிய நல்லவங்களுக்குத்தான் அதிகமான துன்பம் வந்து சேருது. இத எப்படி நீங்க பார்க்கிறீங்க?
ஒன்று... பகவான் ராமகிருஷ்ணர் வாழ்க்கை. ஞானம்னா என்ன, இறைனா என்னான்ற தேடுதல்ல அதிலேயே போன வாழ்க்கை. ரமணருடைய வாழ்க்கை, ராமகிருஷ்ணருடைய வாழ்க்கை அதை எல்லாம் நாம விமர்சனமே பண்ணமுடியாது. அவங்க ஒரு தனி நிலை; ஒன்று நாம புரிஞ்சுக்கணும். அதாவது இது கடவுள் அப்படின்னு ஒரு முடிவு! முடிவு வச்சுக்கிட்டு நாம தேட ஆரம்பிச்சோம்னு வெச்சுக்கோங்க அது சரியா இருக்காது. இப்போ நமக்கு ஆரம்பத்தில் எல்லாம் பள்ளிக்கூடத்துல பாடத்துல பாத்தீங்கன்னா பாதியில கணக்கு கொஸ்டின் இருக்கும். இந்த இந்த கணக்குக்கான ஆன்சர் லாஸ்ட் பேஜ்ல ஒரு பத்து பக்கத்தில் இருக்கும். நீங்க எடுத்தவுடனே விடைய பாத்துட்டு அப்புறம் இந்த கணக்க போட்டா நீங்க நியாயமானவன் இல்ல. அதுமாதிரி தான் எல்லாருமே பண்றாங்க... எப்படின்னு கேட்டா ஒரு கடவுள் அப்படின்னு முடிவு பண்ணிக்கவேண்டியது. அதுக்கப்புறம் அத நோக்கி கணக்க போட்டுட்டே போறது. என்ன கேட்டா அது சரின்னு தோணல.
ராமகிருஷ்ணர்னு நீங்க சொன்னீங்க. நான் விவேகானந்தர்னு சொல்றேன்.
அவர் தேடினார் கடவுள்னு உண்டா?
நீ பார்த்திருக்கியா? அத எனக்கு காட்டுவியா? அது காளியா? கிருஷ்ணனா? இல்ல அதையும் தாண்டி வேற ஏதாவது இருக்கா? அதனால ராமகிருஷ்ணருடைய மாடல் வந்து ராமகிருஷ்ணருக்குத் தான் கரெக்ட். நமக்கெல்லாம் ஓரளவு பொருந்தக்கூடியது. விவேகா னந்தர் மாடல் தான்.
தேடுதல்தான். அதனால ராமன் கடவுள், முருகன் கடவுள், சிவன் கடவுள், அல்லா கடவுள், இயேசு கடவுள்னு ஆன்சர பார்த்துட்டு கணக்கு போடறான் பாருங்க... அவன் எல்லாம் அறிவு ரொம்ப குறைஞ்சவன் என்று அர்த்தம். அறிவு தேடுகிறவன் ஒருபோதும் அந்த அயோக்கித்தனத்த பண்ணமாட்டான்... விடைய வச்சிக்கிட்டு கணக்கபோடுற திருட்டுத்தனமான வேலைய ஒருபோதும் அவன் செய்யமாட்டான். தேடணும். விவேகானந்தர் மாதிரி தேடணும். தேடும்போது அவுங்கவுங்களுக்கு ஒன்னு கிடைக்கும். கடவுள்ங்கிற தன்மை என்ன? அப்புறம் எல்லாரும் கேக்குற கேள்விய நீங்க கேக்குறீங்க? கடவுள்னு ஒன்னு உண்டானு. நீங்க எதைக் கடவுள்னு நினைச்சிருங்கீங்கன்னே எனக்குத் தெரியாது. ஏன்னா அவுங்கவுங்க ஒன்னு ஹள்ள்ன்ம்ங் பண்ணிக்குவாங்க. அப்புறம் அது உண்டா இல்லையான்னு...
நீங்க ஹள்ள்ன்ம்ங் பண்ண விஷயம் உண்டா? இல்லையா? என்று எனக்கு எப்படித் தெரியும்...
நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக் கான்னா... அவுங்க எந்தக் குடும்பத்தில் பிறக்கிறாங்களோ, அந்தக் குடும்பத்தில் ஒரு கடவுளை சொல்லிக் கொடுத்துடுவாங்க. எப்பா நீ வந்து ஜீசஸ் தான் கடவுள்னு பிரேயர் பண்ணு. அல்லாதான் கடவுள்னு தொழுகை பண்ணு... சிவபெருமான் தான் கடவுள் நீ கோவிலுக்கு போயிட்டு வா. ராமர் தான் கடவுள் நீ பஜனை பண்ணு. கிருஷ்ணர் தான் கடவுள்னு... இவை அனைத்தும் சொல்லிக் கொடுக்கப்பட்ட கடவுள். இவைகளால் உங்களுக்கு ஒரு துரும்பும் பயனில்லை. நீங்களாக கடவுள் தன்மை என்பதை கண்டு பிடித்தால், நீங்கள் ஒரு மலர் போல் மலர முடியும். ஞான ஒளி வீச முடியும்.
நானும் ஆரம்பத்துல எனக்கு சொல்லிக்கொடுக் கப்பட்ட கடவுளைத்தான் உலகத்துக்கு சொல்லிக்கிட்டிருந்தேன்.
வாரியார் சொல்லிக் கொடுத்த கடவுள், எங்கப்பா சொல்லிக் கொடுத்த கடவுள், எங்கம்மா சொல்லிக் கொடுத்த கடவுள், எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்த கடவுள், என்னுடைய சமய குருநாதர்கள் சொல்லிக்கொடுத்த கடவுள்னு... அப்புறமா ஒரு ஸ்டேஜ்ல கண்டுபுடிச்சிட்டேன். இதெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்ட இரவல் சரக்கு. ஏட்டுச் சுரக்காய். உண்மையான கடவுள் என்பதற்கு பிரேயர் கிடையாது. வடிவம் கிடையாது. அது ஒரு ஆற்றல். அது ஒரு சக்தி நிலை. அது ஒரு பேராற்றல். ஆனால் அது கருணை உடையது. அன்புடையது. அது விதவிதமான விளைவுகளை ஏற்படுத் தக்கூடிய வலிமை உடையது. நீங்கள் நினைத்த மாத்திரத்தில் அதோடு தொடர்பு கொள்ள முடியும். வேறு வகையான மந்திர சோதனைகள் போன்றவை எல்லாம் உங்களை நீங்களே வற்புறுத்திக் கொள்கிற, என்னுடைய அபிப்ராயத்தில் வேண்டாத வேலை... நான் நினைத்த மாத்திரத்தில் அந்த மூலப் பொருளோடு தொடர்பு கொள்ள முடியும்.
எண்ணம் தான். ஏன்னா நினைப்பவர் மனமே கோயிலாகக் கொண்டான்னு சொன்னாரு திருநாவுக்கரசர்.
வேதாத்ரி மகரிஷி அருட்பேராற்றல்னு சொன்னாரு. வள்ளலார் அருட் பெருஞ்ஜோதி அப்படின்னாரு. இருந்தாலும் நம்ம கதைகளில் சொல்கிற கடவுள்களெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
பாரதியே ஒரு ஸ்டேஜ்ல சொல்லிட்டான் பாருங்க. ராமாயணம் டுபாக்கூர்னு... இங்க இப்படி சொன்னா, உங்க எல்லாருக்கும் கோபம் வரும். நான் சொல்லல... பாரதி சொல்றான் கடலினை தாவும் குரங்குனு ஒரு பாட்டு இருக்குது. அந்தப் பாட்டுல பாரதி சொன்னான் இவை அனைத்தும் கதை எனக் கண்டோம்.
இப்ப பாரதியே கதைன்னு தானே சொல்லிருக்காரு. பாரதிய போயி இன்னைக்கு வம்பி ழுக்க முடியுமா?
-இன்னும் பேசுவோம்