உலக பாரா தடகளம் - 2024

/idhalgal/general-knowledge/world-para-athletics-2024

மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்றது.

9 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர்

மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்றது.

9 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்து இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, தீப்தி ஜீவன்ஜி 2024 பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பெண்கள் 400 மீட்டர் பிரிவில் 56.18 வினாடிகளில் 400 மீட்டர் எட்டி ஆசிய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ss

ஆண்களுக்கான குண்டு எறிதலில் எப்46 பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

இதற்கு முன்பு அவர் கடந்த ஆண்டு பாரீசில் நடந்த உலக பாரா தடகளத்தில் 16.21 மீட்டர் தூரம் வீசியதே ஆசிய சாதனையாக இருந்தது.

போட்டியின் கடைசி நாளன்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் டி12 பிரிவில் (பார்வை குறைபாடு உடையவர்கள்) இந்திய வீராங்கனை சிம்ரன் ஷர்மா 24.95 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் 6-வது இடம் பிடித்தது.

உலக பாரா தடகள போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.

இதற்கு முன்பு 2023-ஆம் ஆண்டு இந்தியா 10 பதக்கங்கள் (3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

ss

சீனா 33 தங்கம், 30 வெள்ளி, 24 வெண்கலம் என 87 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

பிரேசில் 19 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், 7 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பெற்றன.

gk010724
இதையும் படியுங்கள்
Subscribe