கால்பந்து வரலாற்றில் 1930-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். காலம் காலமாக கால்பந்து விளையாடப்பட்டு வந்தாலும் 1930-இல் தான் அறிமுக உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது என்பதால் அந்த ஆண்டு கால்பந்து வரலாற்றின் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது. தென் அமெரிக்க நாடான உருகுவேயின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையவிருந்ததை முன்னிட்டு முதல் உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பை அந்நாட்டுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வழங்கியது. 1930 ஜூலை 13 முதல் 30 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து 7 நாடுகள், ஐரோப்பாவில் இருந்து 4 நாடுகள், வடஅமெரிக்காவில் இருந்து 2 நாடுகள் என மொத்தம் 13 நாடுகள் பங்கேற்றன. உருகுவே தலைநகர் மாண்டிவிடியோவிலேயே உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன. முதல் உலகக் கோப்பையை உருகுவே வென்றது.
உருகுவேயில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்தன. 2-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1934-ஆம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை இத்தாலிலியில் நடைபெற்றது. இதுதான் ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆகும். ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்ததன் எதிரொலிலியாக 2-வது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க நடப்பு சாம்பியன் உருகுவே மறுத்துவிட்டது. இன்றளவிலும் நடப்பு சாம்பியன் விளையாடாத ஒரே உலகக் கோப்பை இத்தாலிலில் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பை தான். இந்த உலகக் கோப்பையில் தான் முத
கால்பந்து வரலாற்றில் 1930-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். காலம் காலமாக கால்பந்து விளையாடப்பட்டு வந்தாலும் 1930-இல் தான் அறிமுக உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது என்பதால் அந்த ஆண்டு கால்பந்து வரலாற்றின் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது. தென் அமெரிக்க நாடான உருகுவேயின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையவிருந்ததை முன்னிட்டு முதல் உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பை அந்நாட்டுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வழங்கியது. 1930 ஜூலை 13 முதல் 30 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து 7 நாடுகள், ஐரோப்பாவில் இருந்து 4 நாடுகள், வடஅமெரிக்காவில் இருந்து 2 நாடுகள் என மொத்தம் 13 நாடுகள் பங்கேற்றன. உருகுவே தலைநகர் மாண்டிவிடியோவிலேயே உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன. முதல் உலகக் கோப்பையை உருகுவே வென்றது.
உருகுவேயில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்தன. 2-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1934-ஆம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை இத்தாலிலியில் நடைபெற்றது. இதுதான் ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆகும். ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்ததன் எதிரொலிலியாக 2-வது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க நடப்பு சாம்பியன் உருகுவே மறுத்துவிட்டது. இன்றளவிலும் நடப்பு சாம்பியன் விளையாடாத ஒரே உலகக் கோப்பை இத்தாலிலில் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பை தான். இந்த உலகக் கோப்பையில் தான் முதல்முறையாக தகுதிச்சுற்று நடத்தப்பட்டது. இத்தாலிலி அணியும் தகுதிச்சுற்றில் விளையாடிய ஒரே உலகக் கோப்பை இதுதான்.
உலக கோப்பையின் முக்கிய அம்சங்கள்
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோலடித்தவர் பிரான்சின் லூசியன் லாரன்ட்.
முதல் உலகக் கோப்பையில் மொத்தம் 18 ஆட்டங்கள் நடந்தன.
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றவர் அமெரிக்காவின் பெர்ட் படேநாட் ஆவார்.
உலகக் கோப்பையில் அதிவேக ஹாட்ரிக்கோலடித்த சாதனை இன்றளவும் ஹங்கேரியின் லேஸ்லோ கிஸ்ஸிடம் உள்ளது.
1982 உலகக் கோப்பையில் சல்வடார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லேஸ்லோ 8 நிமிடத்தில் (69, 72, 76-வது நிமிடங்களில்) மூன்று கோல்களை அடித்து சாதனை படைத்தார்.
உலகக் கோப்பை வரலாற்றில் 4 பேர் இருமுறை ஹாட்ரிக் கோலடித்த சாதனை படைத்துள்ளனர். உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 40 பேர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இதுவரை 19 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவையனைத்திலும் விளையாடிய ஒரே அணி பிரேசில்.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் 1942, 1946-ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை.
12 ஆண்டுகளுக்குப் பிறகு 1950-இல் மீண்டும் உலகக் கோப்பை நடத்தப்பட்டது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிகமாக 140 கோல் அடிக்கப்பட்டது 1954-ஆம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 5-வது உலகக் கோப்பை போட்டியில்தான்.
துருக்கியின் ஹகன் சுகுர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆட்டம் தொடங்கிய உடனேயே அதிவேகமாக கோலடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி இதுவரை அதிகபட்சமாக 7 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் பிரேசிலின் ரொனால்டோ. அவர் 3 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 15 கோல்களை அடித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) 1904-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டாலும், சர்வதேச அளவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த சுமார் 30 ஆண்டுகள் ஆனது.
1970 உலகக் கோப்பை போட்டியில் தான் வீரர்களை எச்சரிப்பதற்காக மஞ்சள் அட்டையும், அவர்களை வெளியேற்று வதற்காக சிவப்பு அட்டையும் காண்பிக்கும் முறையை பிபா அறிமுகப்படுத்தியது.
1906-இல் 8-வது உலகக் கோப்பையை நடத்திய இங்கிலாந்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
1974 முதல் இப்போதுவரை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட்டு வரும் கோப்பை 1974-இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கோப்பைக்கு பிபா உலகக் கோப்பை என்று பெயரிடப்பட்டது.
உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெருமையை (மேற்கு) ஜெர்மனி பெற்றுள்ளது. அந்த அணி 117 கோல்களை அடித்துள்ளது.
1978-இல் அர்ஜென்டினாவில் நடந்த 11-வது உலகக் கோப்பையில் தான் பெனால்டி ஷீட் அவுட் முறையை பிபா முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.
21-வது உலகக் கோப்பை கால்பந்து 2018
* 2018 பிபா உலகக் கோப்பை ((2018 FIFA World Cup)பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஒரு பன்னாட்டு கால்பந்தாட்டப் போட்டியாகும்.
* 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் ஜூன் 14, 2018 முதல் ஜூலை 15, 2018 வரை நடைபெற்றது
* இந்தப் போட்டியை ரஷ்யா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
* 2010 டிசம்பர் 2-இல் இப்போட்டிகளை ரஷ்யா நடத்தும் என அறிவிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெற்ற முதலாவது கால்பந்து உலகக் கோப்பை இதுவாகும். கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இதுவாகும். ஒரு ஆட்டம் தவிர ஏனையவை ரஷ்யாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெற்றன.
* உலகக் கோப்பை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி உதவி நடுவர்கள் பணியாற்றினார்கள்.
* உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. இவற்றில் 31 அணிகள் தகுதிநிலைப் போட்டிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டன.
* ரஷ்யா போட்டிகளை நடத்தும் நாடாக தகுதி பெற்றது. 32 அணிகளில், ஐஸ்லாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன்முதலாக உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றன.
* இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற மிகச் சிறிய நாடு ஐஸ்லாந்து ஆகும்.
* ரஷ்யாவின் 11 நகரங்களில் 12 அரங்குகளில் மொத்தம் 64 ஆட்டங்கள் இடம்பெற்றன.
* நடப்பு உலகக் கோப்பை சாம்பியனான ஜெர்மனி குழுநிலை ஆட்டங்களில் தோல்வியடைந்து வெளியேறியது.
* 1938-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக ஜெர்மனி அணி இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறவில்லை.
* கடந்த ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் நடப்பு சாம்பியன்கள் இவ்வாறு குழுநிலை ஆட்டத்திலேயே வெளியேறியது இது நான்காவது முறையாகும்.
* முன்னதாக பிரான்ஸ் 2002-இலும், இத்தாலி 2010-இலும், ஸ்பெயின் 2014-இலும் வெளியேறின.
* பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்பட்ட ஸ்பெயின், போர்ச்சுகல், அர்ஜென்டினா அணிகள் 16 அணிகளின் சுற்றின் முடிவில் வெளியேற்றப்பட்டன.
* பலம் குன்றியதாகக் கருதப்பட்ட போட்டி நடத்தும் நாடு காலிறுதிக்கு முன்னேறியது. 1934, 1966, 1982, 2006 -க்குப் பின்னர் முதல் தடவையாக காலிறுதிகளில் ஐரோப்பிய அணிகள் மட்டும் விளையாடின.
* உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
* சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்தது.
* ஏற்கனவே, கடந்த 1998-ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது தடவையாக உலக கோப்பையை பிரான்ஸ் வென்றுள்ளது.
* தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வென்றுள்ளது. 2006-இல் இத்தாலி, 2010-இல் ஸ்பெயின், 2014-இல் ஜெர்மனி கோப்பையை வென்றன.
* உலகக் கோப்பையில் மொத்தம் 169 கோல்கள் அடிக்கப்பட்டன. இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்து தங்க ஷூவை பெற்றார்.
* 22-வது கால்பந்து போட்டி 2022-ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெறுகிறது.
* 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2026-ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கூட்டாக நடத்த உள்ளன.