உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றிபெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் அடுத்த சுற்றில் டிங் லிரென் வெற்று பெற்று குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 13-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றிபெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் அடுத்த சுற்றில் டிங் லிரென் வெற்று பெற்று குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 13-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இந்நிலையில் இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர். இந்த சுற்று பெரும்பாலும் டிராவை நோக்கி செல்வது போன்றே தெரிந்தது. ஆனால் 58-வது நகர்த்தலி-ன் போது குகேஷ், டிங் லிரெனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
55-வது நகர்த்தலின்போது டிங் லிரென், ரூக்கை (யானை) எஃப் 2-க்கு நகர்த்தி பெரிய தவறை மேற்கொண்டார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட குகேஷ் அடுத்தடுத்த நகர்வுகளை அற்புதமாக மேற்கொண்டு டிங் லிரெனை ராஜா மற்றும் சிப்பாய் உடன் மட்டும் விளையாடும் நிலைக்கு கொண்டு வந்தார். அந்த சூழலில் டிங் லிரென் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதன் மூலம் 7.5 - 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். உலக சாம்பியன் பட்டம் வென்ற 18-வது வீரர் குகேஷ்.
தமிழக வீரர் சாதனை
சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இளம் உலக செஸ் சாம்பியன் ஆன முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார் சென்னையை சேர்ந்த குகேஷ். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 22 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.
சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் 2024 பட்டத்தை வெல்பவருக்கு மொத்த பரிசுத் தொகை 2.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 20 கோடியே 75 லட்சம் ஆகும். சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிகளின் படி வீரர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 2 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 68 லட்சம் வழங்கப்படும்.
இதை தவிர்த்த மீதித் தொகை இரு வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். 2024 செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் குகேஷ் மூன்று (3-வது, 11-வது மற்றும் 14-வது) போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 6 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 கோடியே 04 லட்சம் பெறுவார்.
இவரை எதிர்த்து விளையாடிய டிங் 1 மற்றும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 36 லட்சம் வென்றுள்ளார்.
அந்த வகையில் மீதமுள்ள 1.5 மில்லியன் டாலர்கள் குகேஷ் மற்றும் டிங் இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதில் குகேஷ் 1.35 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 கோடியே 34 லட்சமும், டிங் 1.15 மில்லியன் இந்திய மதிப்பில் ரூ. 9 கோடியே 66 லட்சமும் பெற்றனர்.
தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு முதல்முறையாக, சென்னை திரும்பிய குகேஷ்க்கு தமிழக அரசு தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியனான குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குகேஷை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 5 கோடியை ஊக்கத் தொகையாக வழங்கினார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.ஏல்.ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் குகேஷ், உலக சாம்பியன்ஷிப்பில் பெற்ற வெற்றி கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக வாலாஜா சாலையில் அமைந்துள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்பிருந்து திறந்தவெளி வாகனத்தில் குகேஷ் ஊர்வலமாக கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா திரும்பிய தமிழகத்தை சேர்ந்த செஸ் சாம்பியன் டி.குகேஷுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் இட்லி இனியவன் ஏற்பாட்டில் 60 கிலோ அரிசி, 12 கிலோ உளுத்தம் பருப்பு மாவு சேர்த்து அரைத்து ஆறடி நீளம், ஆறடி அகலம் கொண்ட 100 கிலோ பிரம்மாண்ட இட்லியை தயாரித்து அதில் செஸ் போர்டு செய்து குகேஷ் உருவத்தை காட்சிப்படுத்தி வைத்தனர்.