உலக அழகி 2018 : வனசா பொன்ஸ் டி லியோன்

/idhalgal/general-knowledge/world-beauty-2018-vanessa-ponce-de-leon

2018-ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது.

இதில் உலகம் முழுவதிலுமிருந்து 118 பேர் பங்கேற்றனர்.

இதில் 2018-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் மகுடம் சூட்டப்பட்டார். 108 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

இதையடுத்து 2017-ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவின் மானுஷி ஷில்லார் அவருக்கு மகுடம் சூட்டினார்.

worldbeauty

இந்த பிரம்மாண்டமான போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியை சேர்ந்த அனுகீர்த்தி கலந்துகொண்டார். இவர் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் சுற்றில் 30 பேரில் அனுகீர்த்தி இருந்தார். ஆனால் 12 பேர் கொண்ட இறுதிப்போட்டிக்கு அவர் தேர்வாகவில்லை.

உலக அழகிப் போட்டி, உலகின் நான

உலக அழகிப் போட்டி, உலகின் நான்கு பெரிய அழகிப் போட்டிகளுள் ஒன்றாகும். மிஸ் வேர்ல்டு மற்றும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி இரண்டுமே 1951-ஆம் ஆண்டு தொடங்கியவை.

உலக அழகிப் போட்டியை தொடங்கி வைத்தவர் எரிக் மோர்லி. 2000-இல் அவரது மறைவுக்குப்பின் அவரது மனைவியும் அமைப்பின் இணைத் தலைவருமான ஜூலியா மோர்லி அழகிப் போட்டியை நடத்தி வருகிறார்.

உலக அழகிப் பட்டம் வெல்பவர் அந்த ஓராண்டு முழுவதும் லண்டனில் தங்குவார். மேலும் அவர் உலகெங்கும் பயணம் செய்து அவ்வமைப்பைப் பற்றியும், அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும் பிரதிநிதித்துவம் செய்வார்.

இப்போட்டி ஆரம்பத்தில் அன்றைய நீச்சலுடையை அறிமுகம் செய்யும் நீச்சலுடைப் போட்டியாகவே தொடங்கியது. மேலும் அப்போது அது ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தவும் திட்டமிடப்படவில்லை. ஆனால் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியென ஒன்று தொடங்கவிருப்பதை அறிந்த மோர்லி, இதனை ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டார்.

1951-இல் நடந்த போட்டிக்குப் பின், வெற்றி பெற்றவர் நீச்சலுடை அணிந்து மகுடம் சூட்டுவது கைவிடப்பட்டது. 2013-இல் நீச்சலுடையுடன், பங்கேற்கும் அழகிகளின் தேச கலாச்சாரத் துக்குக்கேற்ப சராங் எனும் ஒருவகை ஆடையுடன் மகுடம் சூட்டிக்கொண்டனர்.

1980 முதல் பிபிசி இந்நிகழ்வை ஒளிப்பரப்பத் தொடங்கியது. 1960-1970களில் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்வாக மிஸ் வேர்ல்டு போட்டி திகழ்ந்தது.

ஆனால் 1970-இல் பெண் விடுதலை இயக்கத்தினர் தண்ணீர்த் துப்பாக்கி, துர்நாற்ற வெடிகுண்டுகள், மாவுக்குண்டுகளை எறிந்து இடையூறு செய்தனர்.

1980-இல் இப்போட்டி ஒரு நோக்கத்துடன் கூடிய அழகு எனும் வாசகத்துடன், போட்டியில் ஆளுமை, அறிவுக்கூர்மையை மதிப்பிடும் தேர்வுகள் சேர்க்கப்பட்டன. எனினும், அப்போது அப்போட்டிக்கு பிரிட்டனில் செல்வாக்கு குறைந்தது. எனவே, பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் அழகிப் போட்டியை ஒளிபரப்ப ஆர்வம் காட்டவில்லை.

தற்போது நடுவர்களின் மதிப்பெண்களுடன், போட்டியில் பங்கேற்கும் அழகிகளும், தொலைபேசி வழியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ என்னைத் தேர்ந்தெடுங்கள் எனக் கேட்டு மதிப்பெண்கள் பெறலாம்.

மிஸ் வேர்ல்டு அமைப்பு இறுதிப் போட்டியை மட்டுமே நடத்துகிறது. நூறு நாடுகளுக்கும் மேலாக அதன் கிளை அமைப்புகள் பரவியுள்ளன. இவ்வமைப்பு குழந்தைகளுக்கான நல நிதியாக 250 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக நிதி திரட்டியளித்துள்ளது. தவிரவும் மிஸ் வேர்ல்டு இறுதிப்போட்டி நடக்கும் நாடுகளில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைகிறது.

இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வுபெறுபவர்கள் அதற்கு முந்தைய வருடம் மிஸ் வேர்ல்டு கிளை அமைப்பு நடத்தும் போட்டிகளிலோ அல்லது சிறப்பு மிஸ் வேர்ல்டு தேசிய ஆரம்பச் சுற்றுப் போட்டிகளிலோ தேர்வு பெற்றிருக்க வேண்டியது அவசியம். இறுதிப் போட்டி கிட்டத்தட்ட ஒரு மாத காலம், பல்வேறு தகுதிப்போட்டிகள், விருந்துகள் என நடைபெறும் இறுதியில் 15 லிருந்து 20 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் ஒருவர் மிஸ் வேர்ல்டாக அறிவிக்கப்படுவார்.

மிஸ் போட்டோஜெனிக் விருதை வெனிசுலா நான்கு முறை வென்றுள்ளது. (1984, 1990, 1995, 1996)

மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றவர்களில் நான்கு பேர் மிஸ் போட்டோஜெனிக் விருதையும் பெற்றுள்ளனர். அவர்கள் ஆஸ்ட்ரிட் கரோலினா, ஐஸ்வர்யா ராய், ஜாக்குலின் அகியுலேரியா, டயானா ஹெய்டன் ஆவர்.

2018-ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் முதலிடத்தை மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் வென்றுள்ளார். இரண்டாம் இடத்தை தாய்லந்து நாட்டின் நிகோலெனே பிசபா லிம்ஸ்நுகன் மற்றும் மூன்றாவது இடத்தை பெலாரஸ் நாட்டின் மரியா வசைல்விச்சும் வென்றனர்.

gk010119
இதையும் படியுங்கள்
Subscribe