புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இம்மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத் திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் மகளிர் சக்தி இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் இந்த மசோதா முழுமை அடையாது. பட்டிய-லின, பழங்குடியின மற்றும் ஒபிசி பெண்களுக் கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்று வ-லியுறுத்தினார்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டு, வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்த-லில் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று வலி-யுறுத்தினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி ரஞ்சீத் ரஞ்சன் கூறும்போது, "இந்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு தேவை என்பதை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி மாநிலங்களவையில் நாங்கள் நிறைவேற்றினோம். ஆனால், மக்களவையில் நிறைவேறாததால் மசோதா சட்டமாகவில்லை.

திமுக மக்களவை எம்.பி கனிமொழி பேசும்போது, “இந்த மசோதா அறிமுகப் படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக கொண்டு வந்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.

Advertisment

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அவர் பேசுகையில், "மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் நீண்ட காலம் நடந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின் போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா பல முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ww

Advertisment

ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை இல்லாததால் அந்த கனவு முழுமையடை யாமல் இருந்தது. அதனை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பை கடவுள் எனக்கு அளித்துள்ளார். இரு அவைகளிலும் பெண்களின் பங்கேற்பு குறித்த புதிய மசோதாவை எங்கள் அரசு இன்று கொண்டு வருகிறது.” என்று அறிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த மசோதாவின்படி, சுழற்சி முறையில் பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு, டிரா- முறை மூலம் முடிவு செய்யப்படும். தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே அதிகார மட்டத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களின்படி பெண்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களில் இருக்கும் வெவ்வேறு தொகுதிகளில் சுழற்சி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படலாம் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1996-இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச். டி. தேவகவுடா வின் ஆட்சிக் காலத்தில், இந்த மசோதா முதன்முதலி-ல் 81-வது சட்டத்திருத்த மசோதாவாக மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.

மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால், பார்-லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 1996-இல் சமர்ப்பித்தது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெறுவதற்கு முன்பே மக்களவை கலைக்கப்பட்டு மசோதா ரத்து செய்யப்பட்டது. பின்னர் 12-வது மக்களவையில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது.

அப்போதைய சட்ட அமைச்சர் எம். தம்பிதுரை நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தார், மேலும் ஆர்ஜேடி (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) எம்பி ஒருவர் மக்களவையின் அரங்கிற்கு வந்து மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார். அதே ஆண்டில், இந்த மசோதாவுக்கு எம்.பி.க்களின் ஆதரவைப் பெற முடியவில்லை.

அதன்பிறகு, 1999, 2002, 2003-இல், இந்த மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டாலும், ஒருமுறை கூட, இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. சுவாரஸ்யமாக, காங்கிரஸ், பாஜக மற்றும் பல இடதுசாரி உறுப்பினர்கள் ஆதரவு அளித்த போதிலும், இந்த மசோதாவை அங்கீகரிக்க முடியவில்லை.

2008-ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ராஜ்யசபாவில் மசோதாவை அறிமுகப்படுத்தியது, அது 186-க்கு 1 என்ற வாக்குகளில் 9 மார்ச் 2010 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஆனால் லோக்சபாவில் அறிமுகப் படுத்தப்படும் பட்டியலி-ல் இந்த மசோதா ஒருபோதும் எடுக்கப்படவில்லை, மேலும் 15-வது மக்களவை கலைக்கப் பட்டவுடன், இந்த மசோதாவும் காலாவதியானது.

அப்போது லாலு பிரசாத் யாதவின் தஓஉ, ஓஉம (ஓஹய்ஹற்ஹ உஹப் மய்ண்ற்ங்க்) மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை இந்த மசோதாவை பிரதானமாக எதிர்த்தன.

அப்போது ஜே.டி.யு தலைவர் ஷரத் யாதவ் கேட்ட கேள்வி மிகவும் பிரபலமான பேச்சுபொருளானது. கிராமங்களில் வாழும் எங்கள் மகளிரை இங்கே இருக்கும் உயர் சாதிப் பெண்கள் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என அவர் கேட்டிருந்தார்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலும் பெண்களுக்கு அரசியல் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் 1931-இல் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமருக்கு புதிய அரசியலமைப்பில் பெண்களின் நிலை குறித்து கடிதம் எழுதினர்.

அவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒரு பதவிக்கும் பெண்களை நியமிப்பது ஒரு வகையான அவமானமாக இருந்திருக்கும், எனவே பெண்களை நேரடியாக நியமிக்காமல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சினையும் வந்தது. ஆனால் இது பற்றிய விவாதம் தேவையற்றது என்று தவிர்க்கப்பட்டது.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகும் பெண்களுக்கு அரசியலி-ல் இடஒதுக்கீடு வழங்கப் படவில்லை.

எனவே, கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பெரிய விவாதங்கள் நடந்துள்ளன.

உதாரணமாக, 1971-இல் அமைக்கப்பட்ட ஒரு குழு, இந்தியாவில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து வரும் சூழ்நிலை மற்றும் சரிவு குறித்து கருத்து தெரிவித்தது. இந்தக் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்தனர், ஆனால் இந்த உறுப்பினர்களில் சிலர் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஆதரித்தனர். பின்னர் படிப்படியாக பல மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்கு இடஒதுக்கீட்டை அறிவிக்கத் தொடங்கின.

ww

உள்ளாட்சி அமைப்புகளில் 33% இடஒதுக்கீடு வழங்கிய நாட்டின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவானது.

பின்னர் இந்த வரம்பை 50% ஆக உயர்த்தியது. 1988-இல் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த பரிந்துரைகள் அரசியலமைப்பின் 73 மற்றும் 74-வது திருத்தங்களை வரலாற்று ரீதியாக செயல்படுத்த வழி வகுத்தன. இது அனைத்து மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அதிகார மட்டங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

ஊரக உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பட்டி-யலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் கேரளா போன்ற பல மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்ட விதிகளை உருவாக்கியுள்ளன.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைமை ஆண்களின் கையில் இருப்பதால், நாட்டில் பெண்களின் நிலையை மேம்படுத்த இந்த மசோதா அவசியம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெண்களின் நிலை குறித்து சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தாலும், இன்னும் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதே யதார்த்தம்.

எனவே, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், எப்போதும் புறக்கணிக்கப் படும் பிரச்னைகளை முன்னிலைப் படுத்தும் வ-லிமையான சக்தியை பெண்கள் உருவாக்குவார்கள் என்பதும் மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர் களின் கருத்தாக உள்ளது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் பா-ன சமத்துவம் மேம்படும் என இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பெண்கள் இடஒதுக்கீடு குறித்து சமூக ஆர்வலர் கிரண் மோகே பேசியபோது, ​​“இது பெண்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் குறித்த விஷயமாக இருக்கிறது. எனவே, பெண்கள் உரிமைக்காக, ஒவ்வொருவரும் தங்களின் அரசியல் சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க முயற்சிக்க வேண்டும்” என்றார்.

இன்று, இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. வேலைகளில் பெண்களின் பங்களிப்புக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. பெண்களின் உணவு கூட குறைந்த ஊட்டச்சத்து உள்ள உணவாகவே தொடர்கிறது. பா-லின ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் நீங்கவில்லை. அதனால் அதிகாரம் செலுத்தும் இடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முக்கியத் தேவையாக உள்ளது என ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சமத்துவக் கோட்பாட்டை மீறுவதாக இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், தகுதியின் அடிப்படையில் பெண்கள் போட்டியிட முடியாது என்றும், இறுதியில் அவர்களின் சமூக அந்தஸ்தை சீரழித்து விடுவார்கள் என்றும் மசோதாவை எதிர்ப்பவர்கள் கருதுகின்றனர்.

பெண்கள் ஒரு சாதிக் குழு அல்ல, எனவே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கான வாதங்களை இந்தக் கோரிக்கையில் பொருத்த முடியாது என சிலர் வாதிடுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதால், வாக்காளர்களுக்கு தாங்கள் விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்காது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால், அவர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

பெண்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் ஜாதி அடிப்படை யிலான இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பேசிய கிரண் மோகே, இதுபோன்ற புதிய கோரிக்கைகளால் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதில் புதிய சிக்கல்கள் உருவாகி வருகின்றன என்றார்.

அரசியலமைப்புச் சட்டம் சாதி அடிப்படையிலாக அளித்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சாதிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு தானாகவே இடஒதுக்கீடு வழங்கப்படும். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு இதிலும் கிடைக்கும். ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பொது இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.” மேலும் பேசிய அவர், "இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட (ஞஇஈ) பெண்களுக்கு இடஒதுக்கீடு கோருபவர்கள் அவர்களுக்கு அரசியல் இடஒதுக்கீட்டை நேரடியாகக் கோருவதில்லை. மகளிர் இடஒதுக்கீட்டில் மட்டும் இதைக் கோருவதால் செயல்முறை தாமதப் படுத்தப்படுகிறது” என்றார்.

1952-இல் அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இது காலப்போக்கில் ஏற்ற இறக்கத்துடனே தொடர்ந்தது. ஆனால் மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதத்திற்கு மேல் சென்றதில்லை.

தற்போதைய 17-வது மக்களவையில் பெண்களின் சதவீதம் 14 சதவீதம். நமது நாட்டில் கடந்த காலத்தில் 62 பெண் எம்பிக்கள் இருந்த நிலையில் தற்போது 78 பெண் எம்பிக்கள் உள்ளனர்.

வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை விட இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் சதவீதம் குறைவாக உள்ளது.

தற்போது மக்களவையில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது.

அவர்களில் 78 பேர் பெண் எம்பிக்கள். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர் அவர்களில் 11 பேர் பெண் எம்பிக்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ளது.

மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கினால், மக்களவையில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 179 ஆக உயரும் என்பதுடன், 81 பெண்களை மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கலாம்.

நாட்டின் சுமார் 140 கோடி மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும், தேர்தல் சமயங்களில் வாக்களிப்பதில் ஆண்களை விட பெண்கள் முன்னணி வகிப்பது உண்டு. பெரும்பாலும் பெண்கள் வாக்களிக்கும் அரசியல் கட்சிகளுக்கே வெற்றி எனும் நிலையும் உள்ளது. இதற்காக சமீப காலமாக அரசியல் கட்சிகள் பெண்களுக்கானப் பல திட்டங்களை தேர்தல் அறிவிப்பாக அளிக்கின்றனர். இதற்கு பெண்கள் தமது வாக்களிக்கும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவது காரணம் எனக் கருதப்படுகிறது.

காங்கிரஸ் அறிமுகப்படுத்தி அமலாக்க முடியாமல் போன பல திட்டங்களை பாஜக கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளது. இந்தவகையில், மகளிர் மசோதாவுக்காக முன்னெடுத்த காங்கிரஸால், பஞ்சாயத்துக்களில் மட்டுமே 1992-இல் அமலாக்க முடிந்தது.