கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி-யில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், "பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmscheme_1.jpg)
திட்டத்தில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் குரு-சீடன் பாரம்பரியம், கைவினைக்கலைஞர் களின் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப் படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, சர்வதேச விற்பனை சங்கி-லியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் ஆகியோர் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம்” என்று தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌசல் சம்மன் யோஜனா பொருந்தக்கூடிய தகுதியின் காரணமாக, பல்வேறு துறைகளில் பணிபுரியும் தச்சர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள், சிற்பிகள் மற்றும் குயவர்கள் போன்றவர்கள் அதிக அளவில் பயனடைவார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmscheme1_0.jpg)
நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் விஸ்வகர்மா சமூகங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும், சுயசார்பு இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக இருக்கும்.
பிரதான் மந்திரி விஸ்வகர்மா கவுஷல் சம்மன் யோஜனா மூலம், இந்தியாவில் பாரம்பரிய முறைகளில் பணிபுரியும் கைவினைஞர்கள் இந்த கண்டுபிடிப்பின் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். இந்த தனித்துவமான திட்டத்தின் கீழ், நிதி பற்றாக்குறை உள்ள கைவினைஞர்களுக்கு உதவி கிடைக்கும், மேலும் கடன் வரி மூலம் அரசாங்கத்தால் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன் பொருளாதார நிலையும் மேம்படும். பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மன் யோஜனா என்பது தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் ஒரு வழியாக அரசாங்கத்தால் கருதப்படுகிறது.
பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மன் யோஜனாவிற்கு தேவையான ஆவணங்கள் :
ஆதார் அட்டையின் புகைப்பட நகல், பான் கார்டின் புகைப்பட நகல், பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், சாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ் 30 லட்சம் கைவினைஞர்களுக்கு வசதிகள் செய்யப்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/pmscheme-t.jpg)