/idhalgal/general-knowledge/vallalar-200

மூக நீதியையும் ஆன்மிக வளர்ச்சியையும் செம்மையாக வடித்தெடுத்த வள்ளலாருக்குச் சிறப்பு செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து, சென்ற நிதி நிலை அறிவிப்பில் பல திட்டங்கள் அறிவித்தது. அதன்படி திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்புக் குழுவை

அமைத்தது. இதில் 2022 அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி 52 வாரங்களுக்கு “வள்ளலார் 200” என்ற தலைப்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்த முடிவு செய்தது. மேலும் அக்டோபர் 5 -ஆம் நாளை இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என்று கொண்டாடுவது, விழாவுக்கான இலச்சினையை (லோகோ) வெளியிடுவது, மாணவர்களுக்கு வள்ளலாரின் கருத்துக்களைக் கூற கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, வடலூரில் பல புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி!!” எனக் கருணையும் ஜீவகாருண்யமுமே மனிதக் குலத்துக்கு மாண்பைத் தரும் சிறந்த வழிபாடு என உரைத்தவர் வள்ளலார்.

ஆயிரக்கணக்கானோர் பசியைப் போக்கிட அன்னதானம் இடும் “சத்திய ஞான சபையை” வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவினார்.

இதன் காரணமாக மக்களால் “வள்ளலார்” என்று போற்றப்பட்டார்.

வள்ளலார் 200-வது பிறந்தநாளை தமிழக அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் கிராம கர்ணமாகவும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமையா. இவர் மனைவி பெயர் சின்னம்மையார், ராமையா - சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர். இராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதத்தில் தந்தை ராமைய்யா காலமானார். சின்னம்மையார், தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான பொ

மூக நீதியையும் ஆன்மிக வளர்ச்சியையும் செம்மையாக வடித்தெடுத்த வள்ளலாருக்குச் சிறப்பு செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து, சென்ற நிதி நிலை அறிவிப்பில் பல திட்டங்கள் அறிவித்தது. அதன்படி திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்புக் குழுவை

அமைத்தது. இதில் 2022 அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி 52 வாரங்களுக்கு “வள்ளலார் 200” என்ற தலைப்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்த முடிவு செய்தது. மேலும் அக்டோபர் 5 -ஆம் நாளை இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என்று கொண்டாடுவது, விழாவுக்கான இலச்சினையை (லோகோ) வெளியிடுவது, மாணவர்களுக்கு வள்ளலாரின் கருத்துக்களைக் கூற கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, வடலூரில் பல புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி!!” எனக் கருணையும் ஜீவகாருண்யமுமே மனிதக் குலத்துக்கு மாண்பைத் தரும் சிறந்த வழிபாடு என உரைத்தவர் வள்ளலார்.

ஆயிரக்கணக்கானோர் பசியைப் போக்கிட அன்னதானம் இடும் “சத்திய ஞான சபையை” வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவினார்.

இதன் காரணமாக மக்களால் “வள்ளலார்” என்று போற்றப்பட்டார்.

வள்ளலார் 200-வது பிறந்தநாளை தமிழக அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் கிராம கர்ணமாகவும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமையா. இவர் மனைவி பெயர் சின்னம்மையார், ராமையா - சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர். இராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதத்தில் தந்தை ராமைய்யா காலமானார். சின்னம்மையார், தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான பொன்னேரிக்கு அடுத்த சின்னக்காவனம் என்ற ஊருக்குச் சென்றார். சிலகாலம் சின்னக்காவனத் தில் வாழ்ந்த பின்பு, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

vv

1826-ஆம் ஆண்டு, சின்னம்மையார் தன் குடும்பத்துடன் சென்னையில் பெத்த நாயக்கன் பேட்டை ஏழு கிணறு, வீராசாமிபிள்ளைத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். மூத்த மகன் சபாபதி முறையாக ஒரு தமிழ் ஆசிரியரிடம் நன்கு தமிழ் பயின்றதின் விளைவாக ஒரு பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்ததுடன், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பெரியபுராண விரிவுரை நடத்துவதுமாக, வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திவந்தார் இளைய சகோதரரான இராமலிங்கத் திற்குப் படிப்பில் ஆர்வம் இல்லா திருந்தது. ஆனால் அவர் பல புலவர் களின் பாடல்களைப் படிக்காமலேயே பாடும் திறன் கொண்டிருந்தார். குடும்பத்தினரின் புரிதலுக்குப் பின்னர் முழுமையாக அருள் வாழ்க்கையைத் தொடங்கிய வள்ளலார். திருவொற்றியூர், பாடி, திருமுல்லைவாயல், திருவள்ளூர், திருத்தணி என்று பல ஸ்தலங்களுக்கும் சென்று அத்தல பெருமைகளை எழுதிப் பாடினார்.

வள்ளலார் கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருப்பது தாயாருக்கும், அண்ணன் சபாபதிக்கும் மிகுந்த கவலையை அளித்தது. அவருக்குத் திருமணம் செய்வித்தால் நிலைமை மாறும் என்று எண்ணி வள்ளலாருக்குத் திருமணம் ஏற்பாடுகள் செய்தனர்.

அவரோ திருமணம் வேண்டாம் என்று மறுத்தார். அவர்களால் முடிந்தவரை எவ்வளவோ அறிவுரைகள் கூறிப் பார்த்தனர். அவர்கள் வள்ளலார் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நந்தி ஆசிரமத் தலைவராகிய சிவயோகியாரிடம் சென்று எப்படியாவது இராமலிங்கரைத் திருமணத்திற்கு இசைய வைக்கவேண்டும் என்று வேண்டினர். சிவயோகியாரும் அவர்கள் கேட்டுக் கொண்டபடி வள்ளலாரைத் திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தினார். “நீ பக்தி உள்ளவன்தானே. எல்லாம் அவன் செயல் என்பதை நம்புகிறாயா இல்லையா? நீ திருமணம் செய்து கொள்வது ஆண்டவனுக்குச் சம்மதம் இல்லை எனில், தடுக்கப்படும். நீ தடுப்பதில் நியாயம் இல்லை” என்றார். வள்ளலார் இதற்கு என்ன சொல்வது என்று தயங்கினார். ஆண்டவன் தடுத்துவிடுவார் என்று நம்பிக்கையில் பதில் பேசவில்லை. மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு தமக்கையார் உண்ணாமுலை அம்மாளின் மகளான தனக்கோட்டியை வள்ளலாருக்குத் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் நடந்தபோது வள்ளலாருக்கு வயது இருபத்தேழு. திருமணம் செய்து கொண்ட அன்றிரவு தனக்கோட்டியிடம் திருவாசகம் கொடுத்துப் படிக்கச் சொல்லிவிட்டு மனைவியை ஏறிட்டும் பாராது சிவ தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரை அன்றே புரிந்து கொண்டுவிட்ட தனக்கோட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்தி, அவருடன் பக்தி மார்க்க நெறிமுறை தவறாமல் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

தமிழ் வித்துவான், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், நூல் ஆசிரியர், நூல் பதிப்பாளர் என்று சென்னையில் பல பரிமாணங்களைக் காட்டிய வள்ளலார் 1858-இல் சென்னையை விட்டுப் புறப்பட்டு, போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் மயிலாப்பூர், அச்சிறுப்பாக்கம், புதுச்சேரி வழியாக நடந்து சென்று சிதம்பரத்தை அடைந்தார். அங்கிருந்து அவருடைய பிறந்த ஊரான மருதூருக்குப் பக்கத்தில் உள்ள கருங்குழிக்கு சென்றார். சில நாட்களாக அங்கு நோய்வாய்ப் பட்டிருந்த அவருடைய சகோதரர் பரசுராமபிள்ளை காலமானார் .

இராமலிங்கனார்அவரது சகோதரரின் ஈமக் கடன்களைச் செய்தார். பின்பு அவர் கடலூர், மஞ்சக்குப்பம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு, பிறகு கருங்குழி வந்து அங்கு நிலையாகத் தங்கினார். கற்றறிந்த துறவிகளும், தமிழாசிரியர்களும் உரையாடி மகிழவும், தங்கள் ஐயங்களைத் தெளிவு செய்து கொள்ளவும் இராமலிங்கரை நாடி வந்தனர் . அவர் அவர்களுக்குத் தகுந்த விளக்கங்களை வழங்கினார்.

எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத இறைவனை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளலாரால் ஏற்படுத்தப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865 -ஆம் ஆண்டு வள்ளலார் “சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.

பிற்காலத்தில் அந்தப் பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.

மனிதனைத் துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழியில் நடத்தி மனிதனைத் தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

சாதி, மதங்களில் பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேயத்தை உணர்த்தினார். எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வைக் கொள்ளுதல் வேண்டும். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்கச் சிதம்பரம், அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகைய உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடைய தாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய கொள்கைகள் புரிந்து கொள்ளப்பட்டுப் பின்பற்றி வரப்படுகின்றன.

வள்ளலார் 1851-ஆம் ஆண்டு ஒழுவில் ஒடுக்கம் என்ற நூலையும், 1855-இல் தொண்டமண்டல சதகம் என்ற நூலையும், 1857-இல் சின்மய தீபிகை என்ற மூன்று நூல்களைப் பதிப்பித்துள்ளார். மேலும், அவர் ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட திருவருட்பாவையும், மனுமுறைகண்ட வாசகம் மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற மூன்று நூல்களை இயற்றி வெளியிட்டுள்ளார்.

ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட திருவருட்பாவானது ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்தும் இறை அருளால் அருள்நிலையில் பாடப்பட்ட வையாகும். எனவே திருவருட்பா என பெயர்பெற்றது. இப்பாடல்கள் அனைத்தும் ஒன்பது வகையான இலக்கணங்களைக் கொண்டுள்ளது.

அவை, எண்ணிலக்கணம், எழுத்திலக் கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம், உரையிலக்கணம், புணர்ச்சியிலக்கணம் மற்றும் ஒற்றிலக்கணம் என்பனவாகும்.

திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களும், சித்துகளையும் உள்ளடக்கிப் பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்படையாகப் பகிரங்கமாக எடுத்துரைக்காத விஷயங்களை எல்லாம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பா வாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டன.

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ் ஜோதியானவர். புலால் உணவு உண்ணக் கூடாது. எந்த உயிரையும் கொல்லக் கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். தெய்வ வழிபாடு பெயரால் பலி- இடுதலும் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக் கூடாது. மத வெறி கூடாது. எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867-ஆம் ஆண்டு அங்குச் சமரச வேத தர்ம சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை எனப் பெயர் மாற்றம் செய்தார்.

1874-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி மறைந்தார்.

வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156-ஆம் ஆண்டு விழா, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152-ஆம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அருள்ஜோதி அன்ன ஆலயம் அமைப்பின் தலைவர் தனலட்சுமி அம்மையார் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் இலச்சினையும், வள்ளலார் சிறப்பு நினைவுப் புத்தகமும் இதில் வெளியிடப்பட்டது. வள்ளலார் வழியில் சிறப்பாகத் தொண்டாற்றிய 10 சேவை நிறுவனங்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் வள்ளலார் பக்தர்களும், அவரது வழியில் சேவை ஆற்றும் தொண்டர்களும் பெரும் திரளாகப் பங்கு கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

gk011123
இதையும் படியுங்கள்
Subscribe