மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் பட்ஜெட் காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
கடன் தவிர மொத்த வரவுகள் மற்றும் மொத்த செலவினங்கள் முறையே ரூ .34.96 லட்சம் கோடி மற்றும் ரூ .50.65 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிகர வரி வருவாய் ரூ.28.37 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த சந்தை கடன் ரூ 14.82 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டில் மூலதன செலவினம் ரூ.11.21 லட்சம் கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1%).
புதிய வரித் தொகுப்பில் சராசரி மாத வருவாய் ரூ.1 லட்சம் வரை வருமான வரி இல்லை; இதனால் நடுத்தர வகுப்பினரின் வீட்டு சேமிப்பு மற்றும் நுகர்வை அதிகரிக்கும்.
புதிய வரித் தொகுப்பில், நிரந்தர வரி கழிவு ரூ.75,000 இருப்பதால், ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
ரூ.12 லட்சத்துக்கு மேல் வரி எவ்வளவு?
ரூ.4 லட்சம் வரை - 0%
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5%
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை - 10%
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15%
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20%
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் - 25%
ரூ.24 லட்சத்துக்கு மேல் - 30%
குறைந்த அளவு வேளாண் உற்பத்தித் திறன் உள்ள 100 மாவட்டங்களை உள்ளடக்கிய ‘பிரதமரின் தன்-தானிய வேளாண் திட்டத்தில்’ 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் இதர பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இயக்கம் தொடங்கப்படும்.
திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்தின்கீழ் கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் களுக்கு உத்தரவாதத்துடனான கடன் ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவில் தயாரியுங்கள் (மேக் இன் இந்தியா”) திட்டத்தை மேலும் விரிவாக்க சிறு, நடுத்தர, பெருந்தொழில்களையும் உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
மொத்தம் ரூ. 500 கோடி முதலீட்டுடன் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்.
வங்கிகள் மூலம் பிரதமரின் ஸ்வாநிதி விரிவாக்கம் செய்யப்படும். ரூ.30,000 வரம்புடன் யுபிஐ-யுடன் இணைக்கப்பட்ட கடன் அட்டைகள் வழங்கப்படும்.
வளர்ச்சி மையங்களாக நகரங்கள் என்ற திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடியில் நகர்ப்புற சவால் நிதியம் உருவாக்கப்படும்.
ரூ. 20,000 கோடி முதலீட்டுடன் சிறிய வகை ஈனுலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அணுசக்தி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது..
120 புதிய இடங்களுக்கான விமான போக்குவரத்து இணைப்பை விரிவுப்படுத்த திருத்தியமைக்கப்பட்ட உடான் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமானத்தை வேகப்படுத்த ரூ.15,000 கோ

மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமானத்தை வேகப்படுத்த ரூ.15,000 கோடியில் ஸ்வாமிக் (குறைந்த செலவில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதி திட்டம் ) நிதியம் அமைக்கப்படவுள்ளது.
தனியார் துறை மூலமான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
1 கோடிக்கும் அதிகமான லப்பிரதிகளை(கையெழுத்துப்பிரதிகள்) உள்ளடக்கி மூலப்பிரதிகளை கணக்கிடவும், பாதுகாக்கவும் ஞான பாரத இயக்கம் தொடங்கப்படும்.
காப்பீட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பு.
பல்வேறு சட்டங்களில் உள்ள 100-க்கும் அதிகமான பிரிவுகளை குற்றமற்றதாக மாற்றுவதற்கு மக்கள் விஸ்வாச மசோதா 2.0 அறிமுகம் செய்யப்படும்.
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான காலவரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக அதிகரிப்பு.
வருவாயில் வரி பிடித்தம் செய்து செலுத்துவதில் கால தாமதம் குற்றமற்றதாக மாற்றப்பட்டுள்ளது.
வாடகை வருவாயில் வரிப்பிடித்தம் ரூ.2.4 லட்சத்தி-லிருந்து ரூ.6 லட்சமாக அதிகரிப்பு.
புற்றுநோய், அரிய மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 36 உயிர்காக்கும் மருந்துகள், மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையி-லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஐஎஃப்பிடி-க்கான (தட்டையான காட்சித் திரை) அடிப்படை சுங்கத் தீர்வை 20 சதவீதமாக அதிகரிப்பு, ஓபன் செல்களுக்கான(டிவியின் உட்கூறு) அடிப்படை சுங்கத்தீர்வை 5 சதவீதமாக குறைப்பு.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ஓபன் செல் பகுதிகள் மீதான அடிப்படை சுங்கத்தீர்வை விலக்கு.
மின்கல உற்பத்தி, மின்சார வாகனங் களுக்கு கூடுதலான மூலதனப் பொருட்கள், செல்பேசிகளுக்கான பேட்டரி தயாரிப்பு ஆகியவற்றை அதிகரிக்க வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
கப்பல் கட்டுமானத்திற்கான மூலதனப் பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையி-லிருந்து விலக்கு.
பதப்படுத்தப்பட்ட மீன் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை 15 சதவீதத் தி-லிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப் பட்டுள்ளது.
விலை குறையும் பொருட்கள்: எல்இடி/எல்சிடி, கேன்சர் மருந்துகள், தங்கம், வெள்ளி, சார்ஜர், தோல் பொருட்கள், கடல் உணவு பொருள், பிளாட்டினம், மின்சார வாகனம்.
விலை அதிகரிக்கும் பொருட்கள்: தொலைத்தொடர்பு தயாரிப்புகள், பின்னலாடை ஜவுளிகள், பிளாஸ்டிக் பொருட்கள்.
ஒரு ரூபாயில் வரவு-செலவு
மத்திய அரசின் வருவாய்
கடன் 24 பைசா
வருமான வரி 22 பைசா
கலால் வரி 5 பைசா
ஜிஎஸ்டி & பிற வரிகள் 18 பைசா
கார்ப்பரேஷன் வரி 17 பைசா
வரி சாரா வருவாய் 9 பைசா
கஸ்டம்ஸ் 4 பைசா
கடன் சாரா சொத்து விற்பனை
வருவாய் 1 பைசா
மத்திய அரசின் செலவு
மாநிலங்களுக்கான வரி பகிர்வு 22 பைசா
வட்டி செலவினம் 20 பைசா
மத்திய துறை திட்டம் 16 பைசா
ஃபைனான்ஸ் கமிஷன் 8 பைசா
மத்திய துறை திட்டம் 16 பைசா
மத்திய நிதியுதவி திட்டம் 8 பைசா
இதர செலவினங்கள் 8 பைசா
முக்கிய மானியங்கள் 6 பைசா
பாதுகாப்பு 8 பைசா
ஓய்வூதியம் 4 பைசா
பட்ஜெட்டில் எந்தெந்த துறைகள், திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு
பாதுகாப்புத் துறை
2025-26-ஆம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6,81,210 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொகை ரூ.6,21,940 கோடியாக இருந்தது. வரும் நிதியாண்டில் பாதுகாப்புத்துறையின் வருவாய் செலவினம் ரூ.4,88,822 கோடியாக இருக்கும். இதில் பென்ஷனுக்கான பங்கு ரூ.1,60,795 கோடியும் அடங்கும். ரூ.48,614 கோடியில் விமானங்கள், விமான இன்ஜின்கள் வாங்குவதற்கும், ரூ.24,390 கோடி கடற்படைப் பிரிவுக்கும் ஒதுக்கப்படும். மேலும் ரூ.63,099 கோடி இதர கருவிகள் வாங்குவதற்கு செலவிடப்படும்.
சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை வரும் 2025-26 நிதியாண்டுக்கு சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இது நடப்பு நிதியாண்டின் ரூ. 2.8 லட்சம் கோடியைவிட 2.41 சதவீதம் அதிகம். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு (என்எச்ஏஐ) ரூ.1.87 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் என்எச்ஏஐ-யின் கடன் ரூ.3.35 லட்சம் கோடியாக இருந்தது. இது 3-வது காலாண்டு முடிவில் ரூ.2.76 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. வரும் நிதியாண்டில் கடன் அளவை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குடிநீர், சுகாதாரம்
வரும் நிதியாண்டில் ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.67,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் 15 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், இதில் நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை புனரமைப்புத் திட்டத்துக்காக ரூ.25,276 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நமாமி கங்கா மிஷன்-2 திட்டத்துக்கு ரூ.3,400 கோடி தரப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக ரூ.7,192 கோடியும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தேசிய குடிநீர், சுகாதார இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ. 89.53 கோடியும் ஒதுக்கப்படும். பழங்குடி மக்களுக்கு குடிநீர் வசதி அளிக்கும் பிரதமரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பிஎம்-ஜன்மன்) திட்டத்துக்கு ரூ. 341.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் நிர்வாகத் திட்டத்துக்காக ரூ.1,780 கோடியும், நிலத்தடி நீர் ஒழுங்கமைப்பு முயற்சிகளுக்காக ரூ. 509 கோடி ஒதுக்கப்பட்டுளளது.
பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கு பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக் காக அந்தத் துறை அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.26,889.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் இது சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அதிகமாகும்.
உள்துறை அமைச்சகத்துக்கு
2025-26-ஆம் நிதியண்டுக்கான பட்ஜெட்டில் உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2,33,210.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும் பங்கு அதாவது ரூ.1,60,391.06 கோடி மத்திய காவல் படைகளான சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப் போன்றவற்றுக்கு வழங்கப்பட உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு போன்ற பணிகளை இந்த காவல் அமைப்புகள்தான் மேற்கொண்டுள்ளன. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2,19,643.31 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது அதைவிட கூடுதலான தொகை உள்துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அணுமின் சக்தி திட்டங்களுக்கு
2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அணுமின் சக்தித் திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்காக தனியார் நிறுவனங் களுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப் படும். 2033-ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டில் 5 சிறிய ரக அணு உலைகள் (எஸ்எம்ஆர்) நிறுவப்படும். அணுமின்சக்தி தயாரிக்க உதவும் 25 முக்கிய கனிமங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும். இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.
சிறைகளை நவீனமயமாக்க நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலை களை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் டிலும் இதே அளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. குற்ற நடவடிக்கை களில் இருந்து சமூகத்தை காக்க மாதிரி சிறைகள் சட்டத்தை கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் இறுதி செய்தது. கைதிகளுக்கு சட்ட உதவி, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு மேம்பாடு, நவீனமயமாக்கல், கைதிகளுக்கான தொழிற் பயிற்சி, அவர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.
குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு
குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.141.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் சம்பளம், இதர படிகள், ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கான சம்பளம், நிர்வாக செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.141.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.60 லட்சம் குடியரசுத் தலைவரின் சம்பளம், படிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் குடியரசுத் தலைவர் சம்பளத்துக்காக இதே தொகை ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.133.61 கோடியாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.8.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற கட்டமைப்பு
நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு, நகர்ப்புற சவால் நிதியம் என்ற பெயரில் ரூ. 1 லட்சம் கோடியில் நிதியம் உருவாக்கப்படும். ‘வளர்ச்சி மையங்களாக நகரங்கள்', 'நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவளர்ச்சி' மற்றும் ‘நீர் மற்றும் சுகாதாரம்' ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த திட்டங்களுக்கான செலவில் 25 சதவீதம் வரை புதிய நிதியம் மூலம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவீத செலவு பத்திரங்கள், வங்கி கடன்கள் மற்றும் அரசு-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மூலம் நிதியளிக்கப்படும். வரும் 2025-26 நிதியாண்டுக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். ம-லிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டுவசதிக்கான சிறப்பு சாளரத்தின் (நரஆஙஒஐ) கீழ், 50,000 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மேலும் 40,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும், இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக வாங்கிய கடன்களுக்கு ஈ.எம்.ஐ செலுத்தும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மேலும் உதவும்.
ரயில்வே
ரயில்வே துறைக்கு கடந்தாண்டைப் போலவே 2025-26 நிதியாண்டுக்கும் ரூ.2.55 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்வே விரிவாக்க திட்டங்கள் பரவலாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஒதுக்கீடு குறைவானது என்றும், அதன் வளர்ச்சி இலக்குகளை சந்திப்பதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இத்துறையைச் சேர்ந்தவரகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2,55,200 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இது, அதற்கு முந்தைய 2023-24 நிதியாண்டின் ஒதுக்கீடான ரூ.2,40,200 கோடியுடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகமாகும்.
விளையாட்டு
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ. 3,794 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டில் விளையாட்டுத்துறைக்கு கூடுதலாக ரூ. 351.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்துக்கு மட்டும் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக ரூ.3,794.30 கோடி தரப்பட்டுள்ளது. விரைவில் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரவுள்ளதால் கூடுதலாக விளையாட்டுத்துறைக்கு ரூ.351 கோடி தரப்பட்டுள்ளது. 2036-ஆம் ஆண்டு ஒ-லிம்பிக் போட்டியை நடத்துவதற்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது.
அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை
மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உயர் கல்வித்துறைக்கு ரூ.50,067 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.78,572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வியில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்காக புதிய சீர்மிகு மையம் ரூ.500 கோடியில் அமைக்கப்படவுள்ளது.
ஐஐடிக்களில் கட்டமைப்புகள்
மேம்படுத்தப்படவுள்ளன. 2014-ஆம் ஆண்டுக்குப்பின் 5 ஐஐடிக்களில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதால், கூடுதலாக 6,500 மாணவர்கள் படிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 65,000-லி-ருந்து ரூ.1.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐஐடிக்களுக்கு மட்டும் ரூ.11,349 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் பிராண்ட் பேண்ட் இணைப்பு
வழங்கப்படவுள்ளது. அரசு பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 அடல் டிங்கரிங் கூடங்கள் உருவாக்கப்படும். திறன்மேம்பாட்டுக்கு 5 தேசிய திறன் மையங்கள் அமைக்கப்படும். பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் இந்திய மொழி புத்தகங்களை வழங்க பாரதிய பாஷா புஷ்தக் திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
சிபிஐ
சிபிஐ விசாரணை அமைப்புக்கு பட்ஜெட்டில் ரூ.1,071 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பை பலப்படுத்தவும் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், சிபிஐக்கு ரூ.1,071 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட ரூ. 84.12 கோடி அதிகமாகும். அமைப்பு ரீதியான செலவினங்கள், சிபிஐயின் பயிற்சி மையங்களை நவீனமயமாக்கல், நிலம் வாங்குதல், அலுவலகம், குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்தல் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.