மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 7-வது பட்ஜெட் ஆகும். இதன் மூலம் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த மத்திய பட்ஜெட் உரையில் 'தமிழ்', 'தமிழ்நாடு' என்ற வார்த்தைகள் ஒரு முறை கூட இடம் பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் உடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும், இம்முறை அதுவும் இடம்பெறவில்லை.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன், கல்வியை வழங்க ரூ.1.48 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் துவங்கப்படும்.
நாடு முழுவதும் இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.
4.1 கோடி இளைஞர்கள் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்.
வேளாண் ஆய்வு மையங்கள்
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எம்.எஸ்.பி உறுதி செய்யப்பட்டது.
அடக்கவிலையை காட்டிலும் எம்எஸ்பி 20 சதவீதம் அதிகம் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
நாடு முழுவதும் 10 ஆயிரம் இயற்கை வேளாண் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
இந்தியாவில் வேளாண் உற்பத்தியை பெருக்க புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
புதிய வகை பயிர்கள் அறிமுகம்
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத புதிய 102 வகை பயிர்களை அறிமுகம் செய்ய திட்டம்.
விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் காரீஃப் பயிர்கள் குறித்து டிஜிட்டல் சர்வே நடத்தப்படும்.
இயற்கை விவசாயம் குறித்து நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்படும்.
வேளாண் துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு .வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்பு களை வழங்கும் வகையில் ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் ஆயிரம் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.
வட்டி ரத்து
நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர் களின் கல்விக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படும்.
மாணவர்களை ஊக்குவிக்க உயர்க்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும்.
பீகார் மாநிலத்தில் புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
ஆந்திரா மறுசீரமைப்புக்கு சிறப்பு திட்டம் வகுக்கப்படும்.
ஆந்திரா, இரண்டாக பிரிக்கப்பட்ட போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
ஹைதராபாத் - பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம் அமைக்கப்படும்
ஊரக வளர்ச்சி
அமிர்தசரஸ் - கயா இடையே புதிதாக பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
பீகார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களை மேம்படுத்தி சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.
400 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் பயிர் ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யப்படும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஓதுக்கீடு.
ஊரக வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நகர்புறம் மற்றும் வீட்டுவசதித் துறைக்கு ரூ.9.23 லட்சம் கோடி நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த துறைக்கு ரூ.0.76 லட்சம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
ஒரு கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும்.
பத்திரப் பதிவு கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.
அதிக பத்திரப் பதிவு கட்டணங்கள் வசூலிக்கும் மாநிலங்கள் கட்டணங் களைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்கள் வாங்கும் சொத்துகளூக்குக் கூடுதல் கட்டணக் குறைப்பு திட்டங்களும் வகுக்கப்படும்.
புதிய வரி முறையில் புதிய வரி வரம்புகள்
0-3 லட்சம் - 0%
3-7 லட்சம் - 5%
7-10 லட்சம் - 10%
10-12 லட்சம் - 15%
12-15 லட்சம் - 20%
15 லட்சத்துக்கு மேல் - 30%
இந்தப் புதிய வரம்புகள் மூலம் தனிநபர் வருமான வரியில் ரூ. 17,500 மிச்சமாகும்.
பழைய வருமான வரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் இல்லை. அப்படியே தொடரும். புதிய வருமான வரி முறையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய வருமான வரி முறையில் ரூ.2.5 லட்சம் வரை வரி கிடையாது. புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது.
மூன்றில் இரண்டு பங்கு பேர் பழைய வரி செலுத்தும் முறையில் இருந்து புதிய வரி செலுத்தும் முறைக்கு மாறியிருக்கிறார்கள்.
வருமான வரி தாக்கல் செய்வது தாமதம் ஆனால், அது குற்றமல்ல'.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான 'ஏஞ்சல் வரி' ரத்து.
குறிப்பிட்ட முதலீடுகளுக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைப்பு.
தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிப்பு.
இ-காமர்ஸ் ஆப்ரேட்டர்களுக்கு பஉந 1 சதவிகிதத்திலிருந்து 0.1 சதவிகிதமாகக் குறைப்பு.
குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-இல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள்.
கல்வி
2024-25-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங் களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும்.
புதிதாக பணியில் சேரும் இளைஞர் களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும்.
இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும்.
இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர்.
வரிச் சலுகைகள்
புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.
வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறைகிறது.
தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
வரிகள் சார்ந்த அறிவிப்புகள்: பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 மடங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.
டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்படுகிறது.
பட்ஜெட்டின் பிற முக்கிய அம்சங்கள் நாட்டின் 500 முன்னணி நிறுவனங் களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.
நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட 14 பெருநகரங் களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்கள் உருவாக்கப்படும்.
பிரதமரின் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா (டங நன்ழ்ஹ்ஹ ஏட்ஹழ் ஙன்ச்ற் இண்த்ப்ண் ) திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் சூரிய மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
அசாம் மாநிலத்தில் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனத் திட்டங் களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு.
பிரதமரின் கிராம சாலை திட்டம் 4-ன் கீழ் எல்லா காலநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 25,000 கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்.
விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1,000 கோடி மூலதன நிதியாக வைக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர்.
முத்ரா கடன் திட்டத்தின் மூலம் வழங்கும் கடன் தொகையின் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
நியாய விலைக் கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதமர் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கப்படும்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத் தையும், அவர்களுக்கான முக்கியத்து வத்தையும் அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள 63,000 கிராமங்களை சேர்ந்த 5 கோடி பழங்குடியின மக்கள் பயன்படக் கூடிய ‘ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியான்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.
இந்தியாவிலுள்ள 100 பெருநகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங் களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை - விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு சாலை அமைக்கப்படும்.
மொபைல் பிசிடிஏ (பிரிண்டட் சர்க்யூட் டிசைன் அசெம்பிளி) மற்றும் மொபைல் சார்ஜர்களுக்கான அடிப்படை சுங்க வரி (பிசிடி) 15% ஆக குறைக்கப்படுகிறது.
மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் விலை அதன் மூலப்பொருளான அம்மோனியம் நைட்ரேட்டின் சுங்க வரி 10-இல் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் தொலைத்தொடர்பு சாதனங்களின் விலை உயரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
அன்னிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 35% ஆக குறைக்கப்படும்.
பிற மாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் அரசு-தனியார் பங்களிப்பில் தங்குமிடம் அமைத்து தரப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரம் ஐந்து மடங்காக விரிவுபடுத்தப்படுகிறது. இந்த இலக்கை அடைய, ரூ.1,000 கோடி மூலதன நிதி நிறுவப்படும்.
காலநிலை மாற்றம் மற்றும் தணிப்பு (Climate change and mitigation) திட்டங்களுக்கு சிறப்பு கொள்கை உருவாக்கப்படும்.
நிதியாண்டு 2026-இல் வருவாய் பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துறைக்கு 4,54,773 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25
கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது.
மொத்த செலவினத் தொகை ரூ.48.21 லட்சம் கோடி.
நிகர வரிவருவாய் ரூ.25.83 லட்சம் கோடி.
நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.