2023 -24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே இந்த பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. அம்ரித் கால் என்ற வார்த்தையை பிரதமர் மோடி தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார். அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் 'அம்ரித் கால்' இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கால் என்பதற்கு 'புதிய தொடக்கம்' என்று பொருள்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சம் என இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 11.74 கோடி வீடுகளுக்கு டாய்லெட், 9.6 கோடி உஜ்வாலா கேஸ் கனெக்‌ஷன், 47.5 கோடி ஜன்தன் வங்கிக் கணக்கு, 44.5 கோடி பேருக்கு காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவித்தொகை ரூ.2.2 லட்சம் கோடி செலுத்தப் பட்டது.

4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

Advertisment

விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும். மீனவர் நலனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். தோட்டகலைத்துறைக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்படும்.

Advertisment

மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் தேடலை மேம்படுத்த தேசிய டிஜிட்டல் லைப்ரரி திட்டமிடப்படும். படிப்பறிவு வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து லைப்ரரிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பார்மா துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவில் நண்ஸ்ரீந்ப்ங் ஸ்ரீங்ப்ப் ஹய்ங்ம்ண்ஹ ஒழிக்கும் மிஷன் திட்டமிடப்படும். மருந்து துறையில் ஆய்வுகளை அதிகரிக்க ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்.

பழங்குடியின குழந்தைகளுக்கு 'ஏகலைவா' கல்வித்திட்டம் தொடங்கப் படும். அனைத்து பழங்குடியின மக்களுக்கும் குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,800 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது.

அரசு நிர்வாக நடவடிக்கைகளை நம்பிக்கை அடிப்படையில் மேம்படுத்த, ஜன் விஷ்வாஸ் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டார்ட் அப்களுக்கான தேசிய தரவுகள் நிர்வாக கொள்கை கொண்டுவரப்படும்.

dd

டிஜிட்டல் தொடர்பான சேவைகளுக்கு பான் கார்ட் பொதுவான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.

அரசு ஊழியர்கள் தங்களின் திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.

புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறவும் முடியும். எதிர்பார்க்கப்பட்டபடியே, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கான நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய முன்னுரிமை அடிப்படையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலி-பேட்கள், நீர்வழி விமான தடங்கள் புத்துயிரூட்டப்படும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தொலைநோக்கு அடிப்படையில் 3 நகரங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் சால் மையம் உருவாக்கப்படும்.

ரயில்வேக்கு மூலதன செலவாக 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நகரங்கள், பேரூராட்சிகளில் கழிவறைத் தொட்டி, சாக்கடைகளை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யும் நிலை உருவாக்கப்படும்.

மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.

மத்திய அரசின் மூலதன முதலீடு 33 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி.யில் 3.3. சதவீதமாகும்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் அதிகரித்து ரூ.79,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 740 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊராட்சிகள், வார்டுகள் வாரியாக நூலகம் உருவாக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும். அந்த நூலகங்களை தேசிய டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்க தேவையான கட்டமைப்புகள் செய்யப்படும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நாடு முழுவதும் தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். அனைத்து தரப்பினர், மொழிகள், துறைகள், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் அது இருக்கும்.

2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 செவிலி-யர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு: மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து புதிய திட்டம் - இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும், வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும்.

இந்தியாவின் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 4-4.5 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது 6.4 சதவிகிதமாக உள்ளது.

அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதாவது ஏற்றுமதியில் இருந்து அரசாங்கம் ஈட்டும் வருவாய்க்கும் இறக்குமதியில் செலவழிக்கும் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், மற்றொரு சவாலாக உள்ளது.

பணப் பற்றாக்குறையை சிறப்பாக சமாளிக்க பட்ஜெட் அறிவிப்புகளைத் தாண்டி, தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

துறைகளும் செலவினங்களும்

2023-24 -ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 2022-23 ஆம் ஆண்டிற் கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 41,87,232 கோடி ரூபாயில் இருந்து, 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்த செலவினம் 45,03,097 கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது 2023-24-ஆம் ஆண்டிற்கான செலவினங் களின் பட்ஜெட் மதிப்பீடுகள் 2022-23 -ஆம் ஆண்டிற்கான திருத்தப் பட்ட மதிப்பீட்டை விட 3,15,865 கோடி ரூபாய் அதிகமாக உள்ளது.

வட்டி செலுத்துதல் மற்றும் சேவைச் செலவு அதிகரிப்பு: ரூ 1,39,320 கோடி காரணம் : சந்தைக் கடன்களுக்கான வட்டி, கருவூலப் பில்கள் மீதான தள்ளுபடி, தேசிய சிறுசேமிப்பு நிதி மற்றும் மாநில வருங்கால வைப்பு நிதி மூலம் வழங்கப்படும் மத்திய அரசுப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கான அதிகத் தேவைகள் உள்ளது.

மாநில அரசுகளுக்கான மானியங்கள் மற்றும் கடன்கள் செலவு உயர்வு: ரூ.1,01,828 கோடி காரணம் : ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதிக்கு மாற்றுவதற்கான அதிக ஒதுக்கீடு மற்றும் மூலதனச் செலவினங்களுக்கான கடனாக சிறப்பு உதவி வழங்கப்படுகிறது.

ரயில்வேயின் மூலதன செலவு செலவு அதிகரிப்பு: ரூ.80,900 கோடி காரணம் : புதிய வழித்தடங்கள், இரட்டிப்பு, ரோலிங் ஸ்டாக் மற்றும் ரயில்வே பொதுத்துறை நிறுவனங் களில் முதலீடு செய்வதற்கான அதிக ஒதுக்கீடுகள் பெட்ரோ-லியத்தின் மூலதனச் செலவு செலவு உயர்வு: ரூ.35,468 கோடி காரணம் : எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான அதிக ஒதுக்கீடு.

பாதுகாப்பு சேவைகள் செலவு உயர்வு: ரூ.23,220 கோடி காரணம் : இராணுவம், கடற்படை மற்றும் இராணுவம் மற்றும் விமானப் படையின் மூலதனச் செலவினங்களுக்கு அதிக வருவாய் தேவை.

நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் செலவு உயர்வு: ரூ.13,539 கோடி காரணம் : ஜல் ஜீவன் மிஷன்/தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு அதிக ஒதுக்கீடு.

காவல் செலவு அதிகரிப்பு: ரூ.6,999 கோடி காரணம் : எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை/மத்திய ஆயுதப் படைகளின் மூலதனச் செலவினங் களுக்கு அதிக தேவை.

கிராமம் மற்றும் சிறு தொழில்கள் செலவு அதிகரிப்பு: ரூ.6,268 கோடி காரணம் : தகுதியுள்ள ஙநஙஊ கடன் வாங்குபவர்களுக்கு உத்தரவாத அவசரக் கடன் வரி வசதிக்கான அதிக ஒதுக்கீடுகள்.

பிற அறிவியல் ஆராய்ச்சி செலவு அதிகரிப்பு: ரூ.3,232 கோடி காரணம் : முக்கியமாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுவதற்கு செலவு அதிகரித்துள்ளது.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் நலன் செலவு அதிகரிப்பு: ரூ.3,229 கோடி காரணம் : ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளுக்கான உயர் ஒதுக்கீடு நீர்ப்பாசனம் செலவு அதிகரிப்பு: ரூ.2,400 கோடி காரணம் : கென்-பெட்வா நதி திட்டத்தை இணைக்க அதிக ஒதுக்கீடு.

பட்ஜெட்டின் மூன்று முக்கிய அம்சங்கள் மத்திய பட்ஜெட் 2023-இல் மத்திய அரசு மூலதனச் செலவினங்களை உயர்த்தியுள்ளது, நிதி நிர்வாகத்தையும் காட்டியுள்ளது. தனிநபர் புதிய வருமான வரியை இயல்பான வருமான வரி என அறிவித்துள்ளது. 2023-24-இல் மத்திய பட்ஜெட்டை மூன்று பெரிய எடுத்துக்காட்டில் சுருக்கமாகக் கூறலாம். சாராம்சத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20-ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் பரந்த வளர்ச்சி உத்தியில் உறுதியாக உள்ளார்.

இந்த வளர்ச்சி உத்தி இரண்டு முனைகளைக் கொண்டது.

ஒன்று பொருளாதாரத்தில் தனியார் துறையை உற்பத்தித் திறனில் முதலீடு செய்ய ஊக்குவித்து, அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சிய ஊக்குவிப்பது.

இரண்டாவது பகுதி பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கு பற்றியது. இங்கே, குறைந்தபட்ச அரசாங்கம் என்பதுதான் மந்திரம். இது ஒருபுறம் மூலதனச் செலவினத்தை அதிகரிப்பதையும் மறுபுறம் பங்கு விலக்கல் மூலம் அதிக வருவாயை உயர்த்துவதையும் குறிக்கிறது. சாராம்சத்தில், அரசாங்கம் நிதி நிர்வாகத்தைக் கடைபிடிப்பதையும் புகழ்பெற்ற திட்டங்களுக்குப் பணத்தைத் வாரி இறைக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இது செய்யப்பட்டது.

சமீபத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் மீண்டும் அதே உத்தியை கடைபிடித் துள்ளார்.

அரசாங்கம் மூலதனச் செலவினங்களை உயர்த்துதல் மூலதனச் செலவு என்பது சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் போன்ற உற்பத்திச் சொத்துக்களைக் கட்டுவதற்கு செலவிடப்படும் பணமாகும். இது பொருளாதாரத்திற்கு அதிக வருவாயைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ரூ.100 செலவழித்தால், பொருளாதாரத்திற்கு ரூ.250 லாபம் கிடைக்கும். மறுபுறம் வருவாய் செலவினம் 100 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கும்.

சமீபத்திய பட்ஜெட்டில் அரசாங்கத்தின் மூலதனச் செலவினம் ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது – இது 2020-21ஆம் ஆண்டை ஒப்பிடும்போது அப்போது ஒதுக்கப்பட்ட ரூ. 4.39 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

நிதி நிர்வாகம்

நிதிப்பற்றாக்குறை (அரசாங்கத்தால் சந்தை கடன் வாங்குதல்) ஜி.டி.பி-யில் 5.9% ஆக குறையும் என்று நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார். இது பரந்த பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், இது தனியார் தொழில்முனைவோர் கடன் வாங்குவதற்கு பணம் கிடைக்கும் என்று கூறுகிறது.

புதிய தனிநபர் வருமான வரி இப்போது இயல்பான வருமான வரி புதிய தனிநபர் வருமான வரி பட்ஜெட்டில் அதிகம் பேசப்படும் முடிவாக இருக்கிறது. சம்பளம் வாங்கும் இந்தியர்கள் வருமான வரித்துறையில் சில நிவாரணங்களை எதிர்பார்த்தனர்.

நிதியமைச்சர் அதை வழங்கியதாகத் தெரிகிறது. ஆனால், புதிய தனிநபர் வருமான வரி ஆட்சி என்று அழைக்கப்படும், வருமான வரி, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், நிறைய பேர் ஏற்கவில்லை. வருமான வரியைப் பிரபலப்படுத்த நிதியமைச்சர் ஊக்கம் அளிக்கிறார். அதே நேரத்தில் இது இப்போது இயல்புநிலை திட்டமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு வரை, நீங்கள் இதை ஏற்றுக்கொண்டிருந்தால், பழைய வருமான வரி முறைக்கு மீண்டும் செல்ல முடியாது என்ற நிபந்தனையுடன் மக்களுக்கு விருப்பத் தேர்வாக உள்ளது.

பட்ஜெட்டில் நாட்டின் 7 முன்னுரிமைகள்

இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் 2047 வரையிலான 25 ஆண்டு காலத்தைக் குறிக்கும் வகையில் மோடி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சொல் அம்ரித் கால். இது அடுத்த 25 ஆண்டுகளுக்கான அரசின் வழிகாட்டியாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, 2023-24-க்கான பட்ஜெட், முந்தைய பட்ஜெட்டின் கட்டமைப்பையும், இந்தியா அ100க்கான வரைபடத்தையும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியின் இறுதி முழுமையான பட்ஜெட் இதுவாகும்.

2019 ஜூலையில் சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்றதில் இருந்து 5 முழு பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், இந்த பட்ஜெட் அம்ரித் கா-லின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கா-ல் என்பது இந்தியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டுக்கு வழிவகுக்கும் அடுத்த 25 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த காலகட்டத்தை நரேந்திர மோடி அரசு, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பாடுபடும் காலகட்டமாக முன்னிறுத்தியுள்ளது.

பொருளாதாரத்திற்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டிய நிதியமைச்சர் சீதாராமன், அரசாங்கத்தை வழிநடத்த 'சப்தரிஷி' என்று குறிப்பிட்ட ஏழு முக்கிய முன்னுரிமைகளை பட்டியலிட்டுள்ளார்.

1. உள்ளடக்கிய வளர்ச்சி

2. கடைசி மைல் அடைவது

3. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு

4. திறனை கட்டவிழ்த்து விடுதல்

5. பசுமை வளர்ச்சி

6. இளைஞர் சக்தி

7. நிதித்துறை

அம்ரித் கால் என்பது உள்கட்டமைப்பு, உற்பத்தி, டிஜிட்டல் மற்றும் சமூக வளர்ச்சியை உள்ளடக்கிய ஒரு பிடிமானமாகும். இது நாட்டை தன்னிறைவுபடுத்துகிறது மற்றும் வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல. அதன் பொருளாதாரத்தையும் உலகளவில் மூன்றாவது இடத்தில் வைக்கிறது என்றும் அத்தகைய வளர்ச்சியை அடைவதற்கான முக்கிய கருவிகள் புதுமை மற்றும் சீர்திருத்தம் ஆகும் என்று நிதியமைச்சர் நிர்மலா கூறியுள்ளார். இதனையடுத்து, 2023-24 பட்ஜெட் அமிர்த கால் ஆனது இந்தியாவின் லட்சிய இலக்கை அடைய உதவும் உத்திகளை திறம்பட கோடிட்டுக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.