தமிழக முதல்வர் ஸ்டாலி-ன் அறிமுகப் படுத்திய ‘நான் முதல்வன்’ திட்டம் தொழில்நுட்ப யுகத்தில், தமிழக மாணவர்களின் அதிநவீனத் திறன்களை வளர்த்தெடுக்கும் லட்சியத்தில் உருவான திட்டம்.
இதன் நோக்கம் ஸ்டா-லின் வார்த்தைகளில் சொல்வ தென்றால், “தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் நான் முதல்வன்.”
பொதுத்துறையும், தனியார் துறையும் ஒன்றுசேர்ந்து வியூகங்களை உருவாக்கி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகின்றன. தொடக்கத்தில் உதவி பெற்று வளர்ந்து ஒருநிலையில் தன்னைத்தானே தொடர்ந்து இயக்கிக் கொள்ளும் விதமாக திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்படுவது ஐஏஎஸ் அதிகாரி ஜெ. இன்னசன்ட் திவ்யாவின் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்தான்.
‘நான் முதல்வன்’ எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? ஒரு திறன் மேம்பாட்டுக் களத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வகுப்புகள் இணையம்வழி நடத்தப்படுகின்றன. எந்தெந்த அறிவுத் துறைகளில் மாணவர்களின் திறன்கள் குறைவு என்பதை மதிப்பீடு செய்யும் அலகுகள் மாணவர்கள் தங்கள் குறைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவி செய்கின்றன. அடுத்த நிலையில் பொறியியல், கலைகள், விஞ்ஞானம், பா-லிடெக்னிக், ஐடிஐ, மருந்தகத் துறை மற்றும் மருத்துவ அறிவியல் ஆகிய துறைகளில் உருவாகி வரும் புதிய திறன்களிலும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகின்றன.
பயிற்சி பெற்ற மாணவர்கள் தரமும் தகுதியும் பெற்று பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும் அதிசிறந்த நிறுவனங்களையும் (மைக்ரோசாஃப்ட், டிசிஎஸ், ஆரக்கிள், எச்.சி.எல்), திறன் மேம்பாட்டு நிறுவனங்களையும் (மசை, எடுரேக்கா, எல்அண்ட்டி எடுடெக், கோர்சேரா) ‘நான் முதல்வன்’ திட்டத்தை வளர்த்தெடுக்க கொண்டு வந்திருக்கிறார் தமிழக முதல்வர்.
ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில் ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm_69.jpg)
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களை உருவாக்குவதாகும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் தனது திறமையை அடையாளம் காண முடியும். மேலும் இந்த மறைக்கப்பட்ட திறமை அவருக்கு நிலையான வாழ்க்கையை வாழ உதவும்.
நேர்காணல் குழுவை எதிர்கொள்ள உதவும் ஆங்கிலம் பேசும் வகுப்புகள் போன்ற பல வகையான திட்டங்கள் மாணவர்களுக்காக தொடங்கப்படும். மேலும் பிற திட்டங்களுக்கு வெவ்வேறு படிப்புகள் சேர்க்கப்படும்.
இதற்கான தகுதிகள்
திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பிட்ட தகுதி அளவுகோல்கள் உள்ளன.
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
மாணவரின் சரியான அடையாளம்.
மாணவர் பள்ளி அல்லது கல்லூரியில் இருந்திருக்கலாம்.
தேவையான அனைத்து கல்வி ஆவணங்கள்.
போனஃபைட் சான்றிதழ்
உள்நுழைவு ஐடிக்கான மொபைல் எண்.
இந்தத் திட்டத்தின்கீழ் தகவல் தொழில்நுட்பம் முதல் புதிய தொழில்நுட்பம் வரையிலான களங்களில் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் பட்டியலையும், திறன்களின் பட்டியலையும் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணைய முகவரியில் Training Partners in Naan Mudhalvan என்ற பிரிவில் காணலாம்.
பல்வேறு துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றிய தகவல்களை ‘நான் முதல்வன்’ இணையதளம் வழியாக அறியலாம். இவற்றைப் பயன்படுத்தி புதியவர்கள் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி நிலை வேலைகளுக்கும், நிரந்தர வேலைகளுக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்த இணையதள முகவரிகள் பின்வருமாறு: Industry Connect in Naan Mudhalvan (tn.gov.in); Jobs
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/cm-t.jpg)