தமிழ்நாடு உலகத்தின் மிகவும் தொன்றுதொட்ட நிலைத்து செழித்து வரும் நிலப்பரப்பாகும். இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல சரித்திரப் புகழ்பெற்ற இடங்களும், இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்களும் உள்ளன. தமிழ்நாடு சுற்றுலா மனத்திற்கும், ஏங்கும் உள்ளத்திற்கும் இதமளிக்கும். தமிழ்நாட்டின் கலை வளங்களைப் பிரதிபலிக்கும் கதைகள் ஏராளம். அவை சோழ, பாண்டிய, சேர மற்றும் பல்லவ மன்னர்களின் சிறப்புக்குச் சான்றாக விளங்குகின்றன.
உலகளவில் தமிழ்நாடு ஒரு அற்புதமான பூமி. இங்குள்ள ஆறு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியமிக்க இடங்கள் ஒவ்வொன்றும் மிகச் செழிப்பான பாரம்பரியங்களை விளக்குவனவாக உள்ளன. மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களும், குகைக்கோயில்களும், மண்டபங்களும், தஞ்சாவூரிலுள்ள பிரமிக்க வைக்கும் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் அரியலூரிலுள்ள தொன்மையான கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்திலுள்ள அழகான ஐராவதேசுவரர் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற இன்றும் வாழும் சோழர் கோயில்கள் உள்ளிட்டவை இந்த பொக்கிஷங்களில் அடங்கும்.
இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியமிக்க வற்றில் மேற்கு தொடர்ச்சி மலைகளும், தென்னிந்தியாவின் ஒரே மலை ரயில் பாதையான நீலகிரி மலை ரயிலும் உள்ளன.
தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாக உள்ளது. அதன் மாநில அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
மற்ற மாநிலங்களை விட இங்கு நகர்ப்புறங்கள் அதிகமாக உள்ளன. மாநிலத்தின் பாதி மக்கள்தொகை நகர்ப்புறங்களிலேயே உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள சாலைகள், ரயில் பாதைகளின் நீளம் தேசிய சராசரி அளவை விடக் கூடுதலாகும். இது அல்லாமல், தமிழ்நாட்டில் செயல்படும் ஆறு விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் நான்கு பன்னாட்டு விமான நிலையங்களாகும். பயணிகள் கப்பலுக்கான இரண்டு துறைமுகங்களும், ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல ஏதுவான பல தளங்களும் உள்ளதால் இப்பகுதி முழுமைக்கும் இணைப்புகள் உள்ளன.
நாட்டிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை கொண்ட மாநிலமாக விளங்கு வதால் கடல் அலை சறுக்கல், மூழ்கிக் காணுதல் போன்ற வசதிகளும், அழகான பகுதிகளுக்கு கால்நடை சைக்கிள் பயணங்கள், மலைசார் மிதிவண்டிப் பயணங்கள் மற்றும் பலவகையான நிலப்பகுதிகளில் பயணங்கள் போன்ற பலவகையான துணிகரப் பொழுதுபோக்குகளும் உள்ளன. மாநிலத்தில் உள
தமிழ்நாடு உலகத்தின் மிகவும் தொன்றுதொட்ட நிலைத்து செழித்து வரும் நிலப்பரப்பாகும். இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல சரித்திரப் புகழ்பெற்ற இடங்களும், இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்களும் உள்ளன. தமிழ்நாடு சுற்றுலா மனத்திற்கும், ஏங்கும் உள்ளத்திற்கும் இதமளிக்கும். தமிழ்நாட்டின் கலை வளங்களைப் பிரதிபலிக்கும் கதைகள் ஏராளம். அவை சோழ, பாண்டிய, சேர மற்றும் பல்லவ மன்னர்களின் சிறப்புக்குச் சான்றாக விளங்குகின்றன.
உலகளவில் தமிழ்நாடு ஒரு அற்புதமான பூமி. இங்குள்ள ஆறு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியமிக்க இடங்கள் ஒவ்வொன்றும் மிகச் செழிப்பான பாரம்பரியங்களை விளக்குவனவாக உள்ளன. மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களும், குகைக்கோயில்களும், மண்டபங்களும், தஞ்சாவூரிலுள்ள பிரமிக்க வைக்கும் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் அரியலூரிலுள்ள தொன்மையான கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்திலுள்ள அழகான ஐராவதேசுவரர் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற இன்றும் வாழும் சோழர் கோயில்கள் உள்ளிட்டவை இந்த பொக்கிஷங்களில் அடங்கும்.
இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியமிக்க வற்றில் மேற்கு தொடர்ச்சி மலைகளும், தென்னிந்தியாவின் ஒரே மலை ரயில் பாதையான நீலகிரி மலை ரயிலும் உள்ளன.
தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாக உள்ளது. அதன் மாநில அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
மற்ற மாநிலங்களை விட இங்கு நகர்ப்புறங்கள் அதிகமாக உள்ளன. மாநிலத்தின் பாதி மக்கள்தொகை நகர்ப்புறங்களிலேயே உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள சாலைகள், ரயில் பாதைகளின் நீளம் தேசிய சராசரி அளவை விடக் கூடுதலாகும். இது அல்லாமல், தமிழ்நாட்டில் செயல்படும் ஆறு விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் நான்கு பன்னாட்டு விமான நிலையங்களாகும். பயணிகள் கப்பலுக்கான இரண்டு துறைமுகங்களும், ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல ஏதுவான பல தளங்களும் உள்ளதால் இப்பகுதி முழுமைக்கும் இணைப்புகள் உள்ளன.
நாட்டிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை கொண்ட மாநிலமாக விளங்கு வதால் கடல் அலை சறுக்கல், மூழ்கிக் காணுதல் போன்ற வசதிகளும், அழகான பகுதிகளுக்கு கால்நடை சைக்கிள் பயணங்கள், மலைசார் மிதிவண்டிப் பயணங்கள் மற்றும் பலவகையான நிலப்பகுதிகளில் பயணங்கள் போன்ற பலவகையான துணிகரப் பொழுதுபோக்குகளும் உள்ளன. மாநிலத்தில் உள்ள மிகுந்த சுற்றுலா வளத்தைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையை மையமாகக் கருதுகிறது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள எல்லா சுற்றுலாத் தளங்களையும் இணைத்து மேம்படுத்தி அங்குள்ள பொருட்களையும், சேவைகளையும் ஒருநிலைப்படுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையின் இந்த தொடர் முயற்சிகளால் தமிழ்நாடு தொடர்ந்து சுற்றுலாத் துறையில் முன்னிலை வகித்து பெருமளவிலான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கிறது. தமிழ்நாட்டை உலகளாவிய அளவில் ஒரு சுற்றுலா மையமாக உருவாக்க தமிழக அரசும் தனியார் துறையும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த மூன்று தூண்களும் கூட்டாகச் செயல்பட்டால்தான் மாநிலத்தின் சுற்றுலாத் திறன்களை நாம் பெற முடியும்.
முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023 மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் வளங்களைப் போற்ற ஒரு முக்கியமான மைல் கல்லாகக் காணப்படுகிறது. நீண்ட நாட்களாக பல பங்குதாரர்கள் சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில்துறைத் தகுதி சேவை என்று கூறியதை இந்த முனைவு நிறைவு செய்கிறது.
இதன் நோக்கம், தமிழ்நாட்டை ஆசியாவின் மிக ஈர்ப்புக் கொண்ட, மகிழ்வு தரும் சுற்றுலாத் தளமாக உருவாக்குவதாகும். சுற்றுலா வரும் பயணிகளுக்கு மிக சிறந்த மகிழ்வான அனுபவங்களை வழங்கிட, சுற்றுலாத் தளங்களின் மேம்பாடுகளையும் அவற்றின் சிறப்பான மேலாண்மையையும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பல தரப்பட்ட இயற்கை வளங்களையும் தொன்மையான பாரம்பரியங்களையும் உள்ளடக்கிய ஒரு இயற்கை தமிழகச் சுற்றுலாக் கொள்கை அமைந்துள்ளது. இதன் நோக்கம், துடிப்பான நிலைமைக்கு ஏற்ற சுற்றுலா சுற்றுச்சூழலை உருவாக்கி அதில் அனைத்து மக்களையும் உள்ளடக்கி நிலைத்து நிற்கும் வளர்ச்சியை அளித்து, மக்களின் வாழ்வாதார வாய்ப்புக்களைப் பெருக்குவதாகும்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியளவில் 12 சதவிகிதம் பங்களிக்க முற்படுகிறது. இந்தக் கொள்கையை வெற்றிகரமாகவும், வேகமாகவும் செயல்படுத்தும் வழிப் பாதையில் முன்னுரிமை அளிக்கப் பட்ட சுற்றுலா பிரிவுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலாத் துறையில் முதலீடுகளை ஊக்குவித்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், திறன் வளர்த்தல், மக்களின் முனைவால் வளர்ச்சி, பொறுப்பான சுற்றுலா, தமிழ்நாட்டு சுற்றுலாவுக்கு நல்ல பெயரை ஏற்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் எண்மை (உண்ஞ்ண்ற்ஹப்) முனைவுகள், ஆய்வுகள் ஆகியவற்றைக் கூறலாம்.
இந்தக் கொள்கை, இந்தத் துறை 12 முதன்மைச் சுற்றுலாப் பிரிவுகளுக்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்வதற்கு உறுதியளிக்கிறது. அவையாவன: சாகசச் செயல்கள், பொழுதுபோக்கு, குடும்பத்தோடு வாகனப் பயணங்கள், கிராமப்புற மற்றும் தோட்டக்கலைப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், பண்பாட்டு இடங்கள், மருத்துவம் மற்றும் உடல்நலம், மத வழிபாட்டு இடங்கள், சுற்றுச்சூழல் மாநாடுகள், கூட்டங்கள், காட்சியமைப்புகள் சார்ந்த சுற்றுலாப் பாரம்பரிய இடங்கள் மற்றும் திரைப்படம்சார் சுற்றுலா ஆகியவையாகும்.
தனியார் பங்களிப்போடு சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்த இந்த கொள்கை முற்படுகிறது. சுற்றுலாத் துறையில் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும், ஏற்கனவே உள்ள திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். குறிப்பிட்ட சுற்றுலா இடங்கள் மற்றும் குறிப்பிட்ட சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றை அடையாளம் கொள்வதை இவை எளிமைப்படுத்தியுள்ள இந்தக் கொள்கைத் திட்டம் அங்கு மானியங்களையும், ஊக்குவிப்புகளையும் வழங்குகின்றது. இத்துறை சார்ந்த வணிகச் செயல்பாடுகளை எளிமையாக்க சீரமைக்கப்பட்டத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க இந்தக் கொள்கை ஒற்றைச் சாளரச் செயல்பாட்டு முறையைக் கடைபிடிக்கிறது. இந்த முனைவுகளின் மூலம் சுற்றுலாத் துறையின் 13 பிரிவுகளில் தகுதியுள்ள சுற்றுலாத் திட்டங்களுக்கு தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அப்பிரிவுகளாவன: பொழுதுபோக்குப் பூங்காக்கள், பாரம்பரியமிக்க தங்கும் விடுதிகள், சுற்றுச்சூழல் விடுதிகள், தொங்கு பயணங்கள், நலம் தரும் தங்கும் விடுதிகள், மீன் காட்சியகங்கள், கோல்ஃ விளையாட்டுத் திடல்கள், தோட்டக்கலை விவசாயம் சார்ந்த சுற்றுலாத் திட்டங்கள், அருங்காட்சியகங்கள், துணிகரச் சுற்றுலாத் திட்டங்கள், படகு கப்பல் போக்குவரத்துத் திட்டங்கள், குடும்ப வாகனச் சுற்றுலாத் திட்டங்கள் ஆகியன.
சுற்றுலாத் துறையில் எளிதாக வணிகம் செய்யவும் இத்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் சுற்றுலா வசதி உருவாக்குக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. சுற்றுலாத் துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்தல், புதிய சுற்றுலாத் திட்டங்களை மேற்கொள்ளுதல், ஏற்கனவே உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை தனியார் கூட்டுத் திட்டங் களைக் கண்காணித்தல், சுற்றுலாப் பயணிகள் மற்றும் புதிய சுற்றுலாச் சந்தைகள் ஆகியவற்றை ஈர்க்க புதிய வணிகம் மற்றும் ஊக்குவிப்பு முயற்சிகளை மேற்கொள்ளல், தனியார் முதலீட்டாளர்களுக்கு தொழில் துவக்க செயல் உதவிகளை அளித்தல், பலதரப்பட்ட அரசு அமைப்புகளிட மிருந்து ஒப்புதல்களைப் பெற்றுத்தர ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்கல், தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மேம்பாட்டைச் சார்ந்த அறிக்கைகளை அவ்வப்போது சமர்ப்பித்தல் ஆகியன இதனுள் அடங்கும்.
அடையாளம் காணப்பட்ட மூன்று வகையான நிறுவனங்கள் சார்ந்த திட்டங்களுக்கு ஊக்குவிப்புத் தொகுப்பு வழங்க சுற்றுலாத் துறையின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஊக்குவிப்புத் தொகுப்பில், முதலாவதாக 50 கோடி ரூபாய்க்கும் குறைவான திட்டங்களில மூலதன மானியமாக 25 சதவிகிதம் வழங்கப்படும். இந்தத் தொகை ரூ. 1.5 கோடி வரை வழங்கப்படும்.
இது அல்லாமல் மகளிர், பட்டியலின வகுப்பினர், பட்டியலினப் பழங்குடி மக்கள், மாற்றுப் பாலினத்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குக் கூடுதலாக மூலதன மானியமாக 5 சதவிகிதம் அளிக்கப்படும். இது ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும், சுற்றுலா தொழில் நிறுவனத்தை உயர்த்த 5 சதவிகிதம் ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.
குறு தொழில்முனைவோருக்கு, மேலும் 10 சதவிகிதம் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். இது அல்லாமல் முதல் மூன்று வருடங்களுக்குப் பணியாளர்களை அமர்த்துவதில், பணியாளர் ஒருவருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.24,000 என்ற அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கு ரூ.5 கோடி வரை கடன் வாங்கியிருப்பவருக்கு அவர்கள் செலுத்தும் வட்டியில் 5 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இது ரூ.25 லட்சம் வரை கிடைக்கும். குறு, சிறு தொழில் முனைவுகளுக்கான கடன் உத்திரவாத நிதியிலிருந்து ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு கடனிலிருந்து 5 சதவிகிதம் வட்டி மானியம் ரூ. 20 லட்சம் வரை வழங்கப் படும். தேசிய தரச் சான்றிதழ் வாங்கு வதற்கான செலவில் ரூ.2 லட்சம் வரையிலும் பன்னாட்டுத் தரச் சான்றிதழ் பெறும் செலவில் ரூ.10 லட்சம் வரையும், 100 சதவிகிதம் பணம் திரும்ப அளிக்கப்படும். இரண்டாவதாக, ரூ.50 கோடி முதல் 200 கோடி வரை முதலீடு உள்ள சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒரு முழுமையான ஊக்கத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு 5 சதவிகிதம் மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இது ரூ.3 கோடி வரை வழங்கப்படும். கூடுதலாக மூன்று வருடங்களுக்குப் பணியாளர்கள் ஊதியத்தில் ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.24,000 ஊக்கத்தொகை உண்டு. இது அல்லாமல், உள்நாட்டுத் தரச் சான்றிதழ் ரூ.2 லட்சம் வரை முழுமையாகவும் பன்னாட்டுத் தரச் சான்றிதழுக்கு ரூ.10 லட்சம் வரை ஆன செலவு முழுவதுமாகத் திருப்பியளிக்கப்படும். இறுதியில் பசுமைத் தொழிலை ஊக்குவிக்கும் வண்ணம் 25 சதவிகிதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் உச்சவரம்பு ரூ.25 லட்சம்.
மூன்றாவதாக 200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட முதலீடுகள் உள்ள திட்டங் களுக்கு ஒவ்வொரு திட்டத்திற்கும் தகுந்தவாறு ஊக்குவிப்புக்கான தொகுப்பு ஒன்று வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில் புதிய தங்கும் விடுதிகளைக் கட்டுபவர்களுக்கு அவர்கள் செலுத்தும் மின்சாரக் கட்டணத்தில் வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண விகித வித்தியாசத்தை மானியமாகப் பெறலாம். ஆனால், இது அசையாச் சொத்துக்கள் முதலீடுகளின் மதிப்பீட்டில் 10 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. கூடுதலாக இந்த மூன்றாவது வகைத் திட்டங்களின் கீழ் புதிய தங்கும் விடுதிகளைக் கட்டுபவர்கள், குறைந்தது 50 பேருக்காவது வேலைவாய்ப்பு அளித்திருக்க வேண்டும். இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகளுக்கான மூன்றாண்டு சான்றிதழ்களை பரிசீலித்து வழங்கப்படும்.
இந்தக் கொள்கையின் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023, சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்து, அதன் வழியாகப் புதிய வருவாய்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முனைகிறது. இது, தமிழ்நாடு செழிப்பையும், மேம்பாட்டையும் நோக்கிப் பயணிப்பதில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும்.
- ஸ்வாதி ரெட்டி,
ஆலோசகர்,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை